எழுபதுகளில் இளையராஜா-
பாடல் எண் 22 வெள்ளி நிலாவினிலே
MSV with Ilayaraja |
1978ல் வெளிவந்த 'சொன்னது நீதானா' என்ற படத்திற்காக இளையராஜா அவர்களால் இசையமைத்து வெளிவந்த
பாடல் இது. பாடலைக் கேட்போம்.
பாடலின்
சூழல்:
தந்தையின் கண்டிப்பால் கோபித்துக் கொண்டிருக்கும் குழந்தையை நோக்கி தந்தை
கொஞ்சிப் பாடுவது போல் அமைந்த பாடல் இது.
இசையும்
மெட்டும்:
மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் MS.விஸ்வநாதன் உச்சத்தில் இருந்த சமயம்,
என்றும் மனதைவிட்டு நீங்காத பல மெலடிகளைத் தொடர்ந்து கொடுத்துக்
கொண்டிருக்கும் போது, இன்னொருவர் நுழைவது மட்டுமல்லாமல் தமிழ்த் திரையிசையை
அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார். அவர்தான் இளையராஜா,
கிராமிய மெட்டுகளில் ஆரம்பித்து,
மெல்லிசை, வெஸ்டர்ன், மற்றும் கர்நாடக இசை ஆகியவற்றில் முத்திரை பதிக்கிறார். மெட்டில் மட்டுமல்ல,
இசைக்கருவிகளை அமைத்து Prelude Interlude
அமைத்து (Orchestration) பாடல்களின் தரத்தை உயர்த்துகிறார். பாடல் வரிகளில் அவர்
அவ்வளவாய் கவனம் செலுத்தாதது ஒன்றுதான் குறை. அப்படி ஒரு அழகான மெட்டில்
அமைந்ததுதான் இந்தப்பாடல். என்றாலும்
இளையராஜா தன் குருவை மிஞ்சிய சிஷ்யனா? என்று கேட்டால், குருவைப்பெருமைப்படுத்திய சிஷ்யன் என்று சொல்லலாம்.
இந்தப்பாடலில்இளையராஜாவின் வழக்கமான இசைக்கருவிகளான,
புல்லாங்குழல், வயலின் குழுமம், தபேலா தவிர அக்கார்டினும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாடல் வரிகள்:
வெள்ளி நிலாவினிலே
தமீழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ
ராஜா
வெள்ளி நிலாவினிலே
தமீழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ
ராஜா
வெள்ளி நிலாவினிலே
விழியோ கார்த்திகை தீபம்
ஒளி நான் வா வா
என்றது
உனக்கா என்னிடம் கோபம்
அதுதான் ஏன் ஏன் வந்தது
அடிக்கும் போது மிருகமடா
அணைக்கும் போது மனிதனடா
தெய்வம் நீயடா
மனத் தேரில் ஏறி வா
ராஜா
வெள்ளி நிலாவினிலே
தமீழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ
ராஜா
வெள்ளி நிலாவினிலே
உனக்கேன் வாய்மொழி ஒன்று
அதுதான் நான் நான்
அல்லவோ
மடிமேல் தூங்கடா வந்து
மனத்தால் தாய் நான் அல்லவோ
விரலில் என்ன அபிநயமோ
விழியில் என்ன கவி நயமா
அன்பின் தீபமே
இன்னும் ஆணடு நூறு நீ
வாழ்க
வெள்ளி நிலாவினிலே
தமீழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ
ராஜா
வெள்ளி நிலாவினிலே
புலமைப்பித்தன் |
வரிகளை எழுதியுள்ளவர் புலமைப்பித்தன். மெட்டை உறுத்தாத, மெட்டில் இணைந்திருக்கும் வரிகளை எழுதியுள்ளார். ஆனாலும்
இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இளையராஜாவின் இசையமைப்பில்
பெரும்பாலும் மெட்டுக்குத்தான் வரிகள் எழுத வேண்டும் என்பதால் கவிஞர்களுக்கு,
மெட்டுக்குள் நுழையும் வரிகளை எழுத வேண்டிய கட்டுப்பாடு இருக்கிறது. இருந்தாலும்
அதிலும் சிறப்பினை வெளிப்படுத்தினால் மட்டுமே அவர்கள் பேசப்படுவார்கள்.
இந்தப் பாடலின் இரண்டாவது பல்லவியில் “விரலில் என்ன அபிநயமோ, விழியில் என்ன
கவிநயமோ” என்ற வரிகளில் பாடலாசிரியரின்
கவிநயம் வெளிப்படுகிறது. மற்றபடி சூழலுக்கு ஏற்ற வரிகள் என்பதில்
சந்தேகமில்லை.
பாடலின் குரல்:
Jayachandran |
பாடலைப் பாடியுள்ளவர் ஜெயச்சந்திரன் அவர்கள்.இவருக்கு மென்மையான குரல் இளையராஜா இவரை பல பாடல்களுக்கு பயன்படுத்தியிருந்தாலும், இன்னும் அதிகமாய் பயன் படுத்தியிருக்கலாம் என்ற குறை எனக்குண்டு. பாடலுக் கேற்ற விதத்தில், சூழலை உணர்த்தும் பாசத்தை தன் குரலில் குழைத்து பாடியிருக்கிறார். பிள்ளையை அடித்துவிட்டு பின்னர் வருந்தும் தந்தை எப்படிப்பட்ட மனநிலையில் இருந்து குழந்தையை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி இருப்பாரோ, அதே மனப்பான்மையும், மன்னித்துவிடும்படி சொல்லாமல் சொல்கின்ற விதத்தில் பாடி அசத்தியிருக்கிறார். இவரில் எனக்கு மேலும் பிடித்த அம்சம் அவரது தெளிவான பிழையில்லாத உச்சரிப்பு.
அதிகமான அறியப்படாத படம், அதிகமாக கேட்கப்படாத பாடல், ஆனால் அந்தக் கால
கட்டத்தில் சிலோன் ரேடியோ கேட்டவர்கள் இந்தப்பாடலை நிச்சயம் பலதடவை
கேட்டிருப்பார்கள். பல பாடல்களின் தரத்தை அறிந்து அதனை எடுத்து ஒலிபரப்பியதில்
இலங்கை வானொலி நிலையம் நிச்சயம் தமிழ்த் தொண்டாற்றியிருக்கிறது. இளையராஜாவின் இந்த
மெலடி கேட்கும்தோறும் காதில் இனிக்கும் மெட்டு.
தொடரும்
நண்பர் ஆல்ஃபி,
ReplyDeleteஅருமையான பாடல்.எனக்குப் பிடித்த பாடல்.
தலைப்பைப் பார்த்ததும் இவருமா என்று தோன்றியது. இரா குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று நிறைய இசை ஞானம் உள்ளதாக நினைக்கப்படுபவர்களே உளறிக் கொட்டும்போது நீங்கள் கூறியிருக்கும் குருவை பெருமைப் படுத்திய சிஷ்யன் இதுவரை யாருக்கும் தோன்றாதது. அதுதான் உண்மை. பாராட்டுக்கள்.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி காரிகன்.
Delete// அடிக்கும் போது மிருகமடா
ReplyDeleteஅணைக்கும் போது மனிதனடா //
அருமையான பாடல்...
தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteஅருமை சார்!
ReplyDeleteஆம், பல்லவி என்னை கவர வில்லை. அதனால் தான் என்னவோ, அதிகம் அறியப்படவில்லை போல..
ஒரு வேளை உங்களைப்போன்ற இளம் கவிஞர்களுக்கு தெரியாத/கேட்காத பாடலாக இருக்கலாம் பாஸ்கர்
Delete//இன்னும் அதிகமாய் பயன் படுத்தியிருக்கலாம் என்ற குறை எனக்குண்டு.//
ReplyDeleteme too!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தருமி.
Deleteஅருமையான பாடல் மீண்டும் நம்வானொலியை சேவையை நினைவுபடுத்திட்டீர்கள் இந்தப்பாடல்களை இ.ஒ.கூ ஒலிக்கவிட்ட அறிவிப்பாளர்/ளிகள் பட்டியல் அதிகம் சகோ!
ReplyDeleteஅந்தப்பட்டியலையும் இங்கே குறிப்பிட்டால் நலமாய் இருக்கும் , நன்றி தனிமரம்
Deleteஅருமையான பாடல்.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி கீதா ரவி .
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteஎழுத்துரு நல்லாயிருக்கு
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி செந்தில்குமார்.
Delete