ஒரு கையில் கட்டுடன் அங்குமிங்கும்
அலையும் போது முடிந்த அளவுக்கு வலியைப் பொறுத்துக் கொண்டு பல இடத்தில் செய்த நகைச்சுவை(?)
சமாளிப்புகள் கீழே. உடைந்துபோன கையோடு சில இடங்களில் மூக்கும் உடைந்தது தனிக்கதை.
வீட்டுக்கு பார்க்க வந்த ரங்கா : என்னாச்சு?
நான்: பொற்கைப்பாண்டியன் தெரியுமில்ல , இது ஒற்கைப்பாண்டியன்
!!!!!!!!!!
*********************************************************************************
ஆலயத்தில் பேசச் சொன்ன போது:
ஒரு கை ஓசை எழுப்பாது, ஆனால் ஒரு வாய் ஓசை எழுப்பும் என்பதால் பாஸ்டர் என்னைப்
பேசக் கூப்பிட்டுள்ளார்.
சேப்பல் சர்வீசில் முதல் தடவை:
எனக்கு இன்று ஒரு கைதான்
இருக்கிறது, ஆனால் வழக்கத்திற்கு மாறாக உதவி செய்ய பல கைகள் வந்திருக்கின்றன. (உடை
மாற்ற மனைவியும் காரை ஓட்ட மகளும் வந்திருந்தனர்.)
***************************************************
சேப்பல் சர்வீசில் 2-ஆவது வாரம்:
எனக்கு ஒரு கை இன்று வேலை
செய்யாமல் இருக்கலாம், ஆனால் ஆண்டவனுக்கு நன்றி எனக்கு இன்னொரு கை நன்றாக வேலை செய்கிறது.
**************************************************
சேப்பல் சர்வீசில் 3-ஆவது வாரம்:
இன்றும் ஒரு கையில் கட்டு
இருக்கிறது. ஆனால் ஆண்டவனுக்கு நன்றி அது என்னுடைய இடது கைதான். நல்ல வேளை அது என்
வலது கையில்லை.
******************************************
ஒரு தமிழர் கூட்டத்தில் :
என் மனைவியை எப்போதும்
என் வலதுகை என்றுதான் இதுகாறும் நினைத்தேன்.
ஆனால் இப்போதுதான் தெரிகிறது அவள் என் இடது கை என்று.
*************************************************************
கவிஞர் சிவபாலன் கொடுத்த விருந்தில்:
சிவா உங்கள் விருந்தை
'ஒரு கை' பார்க்க வந்திருக்கிறேன்.
***************************************************
நண்பரின் மனைவி: ஏன் கையில் கட்டு?
நான்: 23 வருடத்துக்கு முன்னால் எனக்கு கால் கட்டுப் போட்டார்கள்,
23 நாட்களுக்கு முன்னால் எனக்கு கைக்கட்டுப் போட்டிருக்கிறார்கள்.
என் மனைவி: இவருக்கு ஒரு வாய்க்கட்டும் போட்டால் நலமாயிருக்கும்.
நான்: பேசாமலிரு, கைக்கட்டு நிரந்தமில்லை, கால்கட்டை இதுவரை நிரந்தரம்
என்றுதான் நினைத்திருக்கிறேன்.
என் மனைவி: !!!!!!!!!!!!!!!!!!!!!!
*************************************************************
தெருவில்: என்னாச்சு கைக்கு?
நான்: மனைவியுடன் சின்ன தகறாறு.
தெருவில்: ஓ கேர்ல் ஃபிரண்ட் இருக்கிற பிரச்சனையா?
நான்: இல்லை இல்லை கேர்ல் ஃபிரண்ட் இல்லாத பிரச்சனை.
*****************************************************************
தெருவில் கண்ணாடி விற்பவர்: Handle her carefully next time.
நான்: Sure sure, I just realized I am fragile.
******************************************************************
தெருவில் : தலையில் கட்டுப்போட்டவர் - கெட் வெல் சூன்
நான்: யு டூ.
**********************************************************************
ஆலயத்தில் ஒருவர்: என்னங்க நல்ல அடிபட்டிருக்கு போல இருக்கு.
நான்: நல்ல அடியா இல்லைங்க கெட்ட அடி
***************************************************************
தெருவில்: You had a good Fall?
நான்: No No I had a bad Fall.
*********************************************************
நண்பர்: அடுத்த தடவை பேசித்தீர்த்துக்கங்க.
நான்: பேசித்தான் தீர்த்தோம், நான் வாயாலும் அவள் கையாலும்.
**************************************************
சேஸ் பாங்கில் :
Teller: what happened to your
hand?
Me: I was trying to break the ice
using my shoulder; in turn the ice broke my shoulder.
Teller: Oh this is what called “
Icebreaking” ?
****************************************************
கைக்கட்டை டாக்டர் கழற்றும்போது
என் மனைவியிடம்: உஷ் அப்பாடா ஒரு வழியாக கைக்கட்டை கழட்டியாச்சு, இந்த கால்கட்டைத்தான்
எப்படி கழட்டுறதுன்னு தெரியல?
மனைவி: இத்தனை நாள் நான் உங்க இடதுகைன்னு சொன்னீங்கல்ல, வலது கையாவும்
கொஞ்ச நாள் இருக்க ஆசை சம்மதமா ?, அப்புறம் கால்கட்டைப் பத்தி யோசிக்கலாம்.
**********************************************************************
தெருவில் ஒருவர்: What are you trying to smuggle in your sling?
நான்: only pain
அவர்: There is no pain, no gain.
தெரபிஸ்ட் : தொடர்ந்து இந்த பயிற்சியெல்லாம் செய்யுங்க , நீங்க சீக்கிரமா
நார்மல் ஆயிறலாம் .
நான் : அப்ப அடுத்த வருஷம் ஒலிம்பிக்ஸ் போயிருவேனா ?
****************************************************************
நான்: என் அல்லைக்கையை
கூப்பிடுங்க
நண்பர்: அது யாரு உங்க அல்லக்கை ?
நான்: அதாங்க என் மனைவி
மனைவி:( காதில் விழுந்துவிட்டதால்) ஒரு கை நொள்ளக்கையா இருக்கும்போதே இவ்வளவு பேச்சா?
நான்: கோவிச்சுக்காதே நான் என்னா தப்பாவா சொல்லிட்டேன் , அல்லக்கைனா அருகில் இருக்கும் கைன்னு அர்த்தம் , அது நீதானே
மனைவி : இந்த வாய் மட்டும் உனக்கு இல்லன்னா ?
*******************************************************************
Add caption |
நீதி:
அடேயப்பா இடது கை வேலை செய்யலன்னா, இவ்வளவு
காரியம் செய்ய முடியாதா? நான் ஒன்னே ஒண்ணுதான் செய்ய முடியாதுன்னு நெனைச்சேன்.
- முற்றும்.
நீர் ஒரு நகைச்சுவை ராஜா !!
ReplyDelete//சிவா உங்கள் விருந்தை 'ஒரு கை' பார்க்க வந்திருக்கிறேன்.// அனுபவித்தது .. :)
நன்றி கவிஞர் ஆரூரார் அவர்களே .
Deleteநூற்றியெட்டு குசும்பு என்பது இதுதானா பிரதர்
ReplyDelete108 குசும்பா , அய்யய்யோ எண்ணிப்பார்க்கலையே பிரதர் , நான் கணக்குல கொஞ்சம் குமாரசாமி .
DeleteVery witty indeed! Get well soon!
ReplyDeleteThanks Peppin, thanks for visiting.
Deleteஒரு கை பார்த்துட்டீங்க...!
ReplyDeleteஆமாம் ஆமாம் ஒரு கை பாத்துட்டேன்
Delete