Thursday, January 16, 2014

வெள்ளைமாளிகையில் பொங்கல் விழா !!!!!!!!!!!!!!!!!!!!!!

காணும் பொங்கல் சிறப்பு பதிவு
 
       “அத்தான் இங்க வந்து பாருங்க இந்த அதிசயத்தை”
       “என்ன இது காலங்காத்தால, குளிர்தான் அவ்வளவா இல்லையே, நீயே போய்க்கக் கூடாதா?”
       “அதில்லை இங்க வாங்களேன்”
       “என்னவோ ஏதோ என்று அடித்துப்புரண்டு எழுந்து வந்து பார்த்தால், அதிசயம்தான்.
           CNN –ல் லைவ் நிகழ்ச்சி. முகப்பில் “பொங்கல் திருநாள் கொண்டாட்டம்” என்று தமிழில் எழுதப்பட்ட வெள்ளை மாளிகை முகப்பு, காலைக்கதிரவன் ஒளியில் இன்னும் வெள்ளையாக மின்னியது. (பொங்கலுக்கு வெள்ளையடித்திருப்பார்களோ என்னவோ !!!.) இதோ பார்ரா,  நம்முடைய விஜய் டிவி புகழ் வாயாDD நின்று வரவேற்க, அட நம்ம AR ரகுமான் உள்ளே நுழைகிறார். “வெள்ளை மாளிகையில் முதல் முதலாக  பொங்கல் விழா நடப்பதைக் குறித்து உங்கள் கருத்தென்ன”, என்ற கேள்விக்கு, நம்பாள் புன்சிரிப்புடன் “எல்லாப்புகழும் இறைவனுக்கே,” என்று சொல்லி உள்ளே நுழைந்தார். (இன்னும் ஒருவாட்டி இதைச்சொன்னா, நடக்குறதே வேற).
     சிறப்பு அழைப்பாளராக, கொலம்பியாவுக்கு ஒரு கெஸ்ட் லெக்சருக்கு வந்த அப்துல் கலாம், ஒரு மந்தகாச சிரிப்புடன் உள்ளே நுழைய, DD தான் பேச வேண்டியதை மறந்து வணக்கம் சொல்ல, உள்ளே நுழைந்தார். (என்ன முடி ரொம்ப தொங்குது? , அதுவா வெட்டி மூணு வருஷமாச்சாம்)

       “தமிழினத் தலைவர் வாழ்க, டாக்டர் கலைஞர் வாழ்க”, என்று திடீரென்று சத்தம் கேட்க, அல்லக்கைகள் இங்கயும் வந்துட்டாய்ங்களா  என்று நான் நினைத்த வேளையில் உருண்டு வந்தது ஒரு வீல் வீலென்று சத்தமிட்ட வீல் சேர். (இத மாத்துங்கப்பா சீக்கிரம்,ரொம்ப பழசாயிருச்சு).  கருத்துக்கேட்காமலேயே,பராக் ஒபாமா அவர்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்திலே பிறந்த மூத்த தமிழ்க்குடியின்,என்று ஆரம்பிக்க “ஐயா போதும் தயவு செய்து  உள்ளே போங்க”, என்று தள்ளி விட்டனர். வீல் சேரை தள்ளிக்கொண்டே உள்ளே செல்ல முயன்ற TR பாலுவை செக்யூரிட்டி ஆட்கள் வெளியே தள்ளிக்கொண்டு சென்றனர். என்ன ஸ்டாலினைக்கானோம்? அவர் இங்க  வந்த சமயத்தில்,  அழகிரி தலைவர் பதவியை ஆட்டயப்போட்டிரக்கூடாதுன்னு அங்கேயே தங்கிட்டாராம்.
       பாமா தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் ஜெயலலிதாவை அழைத்ததாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டன் அல்லது கொட நாடில் விழா வைத்தால் மட்டுமே வரமுடியும் என்றும் மற்றபடி காணொளிக் காட்சி மூலம் கலந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டதாகவும் கேள்வி. அதோடு கருணாநிதியை கூப்பிடக்கூடாதுன்னும் கண்டிஷன் போட்டாராம். 

“அட நம்ம பன்னீர்செல்வத்தை   அனுப்பியிருக்கலாம்ல”.
“அதை ஏன்  கேட்கற? ஹிலாரியின் தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று  பன்னீர்செல்வத்தையாவது அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்க வந்த பன்னீர், ஜெயலலிதாவுக்கு குனிந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கையில் அல்லையில்   பிடித்துக்கொண்டதால் அப்போல்லோவில் அட்மிட் ஆயிருக்கிறாராம்”.

       “அமெரிக்காவில் மதுக்கடைகளை மூடினால் மட்டுமே நான் கலந்து கொள்வேன்”, என ராமதாஸ் அறிக்கை விட, “24 மணிநேரமும் மதுக்கடைகள் திறந்திருந்தால்தான் நான் வருவேனென்று”, விஜயகாந்த் மெசேஜ் அனுப்ப  , “நாங்கதான் கூப்பிடவேயில்லயே நீங்க ஏன் கூவுறீங்க”, என்று சென்னை, அமெரிக்க கான்சுலேட்டில் இருந்து பதிலறிக்கை வந்ததாம்.
Add caption
       அழைப்பு அனுப்பாததை கண்டித்து நம்ம வைகோ “நீதிகேட்டு நெடும்பயணம்” அறிவிக்க, “வாங்குன கேன்வாஸ் எல்லாம் நடந்து நடந்து கிழிஞ்சு போச்சு. இப்படியே நடந்துட்டிருந்தா கேன்வாஸ் வாங்க “நிதிகேட்டு நெடும்பயணம்” போகவேண்டியிருக்கும்”, என்று கட்சிப் பொருளாளர் காதைக்கடித்ததும் அமைதியாகி டென்னிஸ் பார்க்கப்போய்ட்டாராம்
       அழைப்பு வராத நம்ம சீயான் சீமான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்தும், இலங்கைத்தமிழர்களையும் அழைக்கவேண்டும் என்றும் சொல்லி சென்னையில் அமெரிக்க கான்சுலேட் முன்னால் தொடர் முழக்கப் போராட்டம் ஒன்றை அறிவித்தார்.
       பொங்கல் திருவிழாவுக்கு அழைப்பு அனுப்புவதில் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றாததை கண்டித்து வீறு கொண்ட நம்ம விடுதலைச்சிறுத்தை மாவளவன் உண்ணாவிரதம் அறிவித்தார். (சீறிய சிறுத்தை நம்ம கருணாநிதியின் தடவலில் சிறு பூனையானதால் தன் உருவை இழந்ததோடு, தன் திருவையும் இழந்ததால் இனிமேல் அவர் மாவளவன் என்று அழைக்கப்படுவார்.)
        முள்ளி வாய்க்காலில் இரவும் பகலும் வாட்ச்மேன் வேலை பார்ப்பதால், நான் போகமுடியவில்லை என்று நெடுமாறன் புலம்பியதாக கேள்வி. 
       உள்ளே நின்றவர்கள் எல்லாம் மறைக்க, ஒன்றும் தெரியாமல் எட்டி எட்டிப்பார்த்து தவித்த கருணாநிதி,   நிறை குறை மறை என்று கவிதை முயற்சியில் கரகரக் குரலில் கத்த “தொண்டைதான் சரியில்ல இந்தாளுக்கு, ஆனா  மண்டை அப்படியேதான் இருக்கு”, என்று சொன்னபடி நம்ம ஏடாகூட   இளங்கோவன் அவரை மேலும் மறைத்து நின்றார்.
          

       அப்போது, நம்ம முதற்பெண் (அதாங்க First Lady) மிச்செல் தளையத்தளைய காஞ்சிபுரம் சேலை சரசரக்க வந்தார். நெற்றியில் வைத்திருந்த   குங்குமம் அவ்வளவாகத் தெரியவில்லை(?). நடுஹாலில் பொங்கல் கொதித்துக் கொண்டிருக்க, எல்லாத் தூண்களிலும் ஹவாயிலிருந்து வந்திருந்த கரும்புகளும், போர்ட்டரிக்கோவிலிருந்து வந்திருந்த மாவிலைகளும் கட்டப்பட்டிருந்தன. அவரோடு அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் பாவாடை தாவணியில் புன்னகைத்தபடி வந்தார்கள்.

       சட்டென எல்லோரும் அப்போது அமைதியாக, ஒபாமா வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி அணிந்து பரபரவென்று வந்தார். நம் பாரம்பரிய உடை அவருக்கு பாந்தமாகவே இருக்க, கருப்பு நெற்றியில் திருநீறும் சந்தனமும்  பளீரென்று தெரிந்தன.
உடனே சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த அனுராதா ஸ்ரீராம் " கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்று பாடி அசத்தினார்.
       அட, நம் மிச்செல், ஒபாமா காலில் விழ   , எங்கே என்று தேடி, US மரைன் கொண்டு வந்த பாதுகாக்கப்பட்ட குங்குமத்தை எடுத்து மிச்சலின் நேர் வகிடில் வைத்து உச்சி முகர்ந்து முகம் சுளித்தார். (எண்ணெய் ஸ்நானம் எடுத்து எட்டு மாசம் ஆகிவிட்டதாம்.)
      கலைஞர் தமிழ்மொழியை அமெரிக்காவின் ஆட்சி மொழியாக ஆக்கச்சொல்லி கத்திக்கொண்டிருந்ததை பார்த்து US மரைன் பக்கத்தில் வந்ததும் அமைதியானார்.
       அதற்குள் பொங்கல் பானையிலிருந்து வழிந்த சுடுநீர், ஒபாமாவின் காலைச் சுட்டுவிட, அவர் ஆ என்று சொல்லி காலை உதற, அவரின் பெர்சனல் கார்டுகள் சட்டென்று அவரை வளைத்து நின்றனர். பிறகு அவர் தீயென சுட்டது சுடு நீர்தான் தீவிரவாதியல்ல என்று தெரிந்து வழி விட்டனர்  .
       “ஆஹா ஆஹா என்னே ஒபாமாவின் வீரம், தமிழர் சார்பாக அவருக்கு “கரிகால் பெருவளத்தான்” என்ற வீரவிருதை வழங்குகிறேன்”  என்று கரகர கருணாநிதி சொல்ல. அதை Black Leg என்று ஒருவர் மொழி பெயர்க்க, டென்ஷன் ஆன ஒபாமா, அவரை வெளியே தள்ளச்சொன்னார்.
       அதற்குள் பொங்கல் பொங்கிவழிய, பொங்கலோ பொங்கல் என்று யாரோ சத்தமிட “பெங்காஜி” என்று காதில் விழுந்த ஹிலாரி முகம் சுளித்தார்.
       ஒபாமா பேசுவதற்கு முன்னால் வர, உலகத் தொலைக்காட்சி நிருபர்கள் உஷாராகினர். “வணக்கம் உங்கள் அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.இனிமேல் நம் அமெரிக்கப்பள்ளிகளில் வழங்கும் உணவில் சர்க்கரைப் பொங்கலும் சேர்க்கப்படும். இந்த விழா முடிந்து, காபிடல் ஹாலில் நம்ம நியூயார்க் பரதேசி தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்துக்கு>>>>>>>>>>>>>>>>>>

       யோவ் என்ன ஆபிசுக்குப் போலயா மணி ஏழரை ஆகுது, என்று எழுப்ப முழித்துக்கொண்டே எழுந்தேன். அத்தனையும் கனவா என்று ஆயாசம் வந்தது. காணும் பொங்கல் அல்லவா இன்று. காணும் பொங்கல் எனக்கு “கனவு காணும் பொங்கலாய்” அமைந்ததை நினைத்து சிரிப்பதா அழுவதா? நீங்களே சொல்லுங்க.

நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்........!!!!!!!

21 comments:

  1. காணும் பொங்கலை விட “கனவு பொங்கல்" சுவை அதிகம்

    ReplyDelete
  2. 'cooked story' என்று சொல்வார்கள். 'cooked pongal' என்பது இதுதானா? நன்றாகவே சுவைக்கிறது... தொடர்ந்து சமைக்கவும் நண்பரே!

    ReplyDelete
  3. கற்பனை நன்றாகத்தான் பொங்குகிறது

    இலந்தை

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஐயா.
      கொஞ்சம் ஓவரா தெரிஞ்சா மன்னிச்சுக்கங்க ஐயா.

      Delete
  4. அண்ணே, எனக்கும் வந்தது கனவு. ஏற்கனவெ ஆம்புர்காரன் சொன்னத உங்ககிட்ட சொல்லி வாங்கி கட்டிகினென். அதனாலே வாயை பொத்திக்குன்னு வாழ்த்துக்களோட விடை பெறுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கனவு காணும் வாழ்க்கை யாவும்
      கலைந்து போகும் கோலங்கள் !!!!!!!!!!!!!

      Delete
    2. நன்றி பேராசிரியரே.

      Delete
  5. Alfy

    you missed our pastor in the invite . may be you invited him and he gave the reason stating he have to pick new pastor or musician or Christian education or someone to our koil visa is landing ;)

    2) may be if you want real pongal in tamil style he is having one in the basement with all the Hindu organization in NY participating


    ReplyDelete
  6. இது தான் சூப்பர் திருவிழா...!

    ஹா... ஹா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அட்டகாசமான பதிவு கலக்கிட்டீங்க பாஸ் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாயால் கிடைக்கும் பாராட்டு,எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்தும் டானிக். நன்றி .

      Delete
  8. நகைச்சுவை உங்களிடம் நன்றாகவே வருகிறது...உங்களின் பயணப்பதிவுகளில் படங்கள் அருமையாக இருக்கும்.பதிவு படிக்கும் போது பள்ளிப்பாடங்ககளை படிப்பது போல இருக்கும். ஆனால் இதுபோல உள்ள பதிவுகள் மனதை துள்ளிக் குதிக்க வைக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும்.நகைச்சுவை எல்லோருக்கும் பிடிக்கும் .எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்யவே ஆசைப்படுகிறேன்.

      Delete
  9. "THOGAI' NINAIVUGAL VARUKIRATHU NANBA! THULLAL OK .. MULITHUKKONDU SIRAPPU" ZHA" PODUNGAL VERY NICE SATIRE!

    ReplyDelete
  10. "THOGAI' NINAIVUGAL VARUKIRATHU NANBA! THULLAL OK .. MULITHUKKONDU SIRAPPU" ZHA" PODUNGAL VERY NICE SATIRE!

    ReplyDelete
  11. அருமையான கனவு.... ஒபாமா - வேட்டி சட்டையில் - யோசித்துப் பார்த்தேன்! :)

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete