GaneshTemple, Queens New York |
"என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க", என்றாள் என் மனைவி.
"நம்ம ஊரை ரொம்ப மிஸ் பண்றேன்"
"என்ன இது திடிர்னு"
"இல்ல, பொங்கல் பண்டிகை வந்துருச்சு. என்னமோ தெரியல, இந்த வருஷம் ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருக்கு"
"சரிசரி வேலையைப் பாருங்க"
ஜனவரி 11, சனிக்கிழமை சேப்பல் சர்வீசுக்கு காரை எடுக்கும்போது, எதிரே கண்ணே தெரியாத அளவுக்கு ஃபாகி (Fog)யாக இருந்தது. ஆஹா ஃபாகியுடன் போகி பண்டிகை களை கட்டிருச்சு
என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் மனைவி போன் செய்து, “சர்வீஸ்
முடித்து சீக்கிரமாக வீடுவந்து சேரு, ரொம்ப ஹெவி மழை வருது”, என்றாள். 11
மணிக்கெல்லாம் வீடு திரும்பி எங்கும் வெளியே
முடியாமல் அடை காத்தேன். பேய் மழை நாள் முழுவதும் தொடர்ந்தது.
ஜனவரி-12 ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்குச்
சென்று விட்டு, “ஹிண்டு டெம்பிள்
போகலாமா”, என்றேன்.
ஒரு மாதிரியாய் பார்த்த என் மனைவியிடம், “இல்லல்ல,
கேன்டீன் போனா பொங்கல் சிறப்பு சாப்பாடு கிடைக்கும்ல,”
என்றேன். “அதெல்லாம் வேணா. பட்ஜெட்
இல்ல .வீட்டுல எல்லாம்
இருக்கு, காரை வீட்டுக்கு விடு”, என்றாள். ஒரு சர்க்கரைப்பொங்கல் செய்து தர
முடியுமா”, என்றேன். “சுகரை வெச்சுட்டு சும்மாறு”, என்று சொல்லி வாயை அடைத்து விட்டாள். சோகம் நெஞ்சைப்பிழிந்தது.
வீட்டில சாப்பிடுற மாதிரி கொறித்து விட்டு,
என் மனைவி தூங்குவதற்கு, பெட்ரூமுக்குள் முடங்க, பிள்ளைகள் தங்கள்
ரூமுக்குள் அடங்க, மெதுவாக காரை எடுத்தேன். ஃபிளஷிங்கில்
உள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, மிகச் சிரமப்பட்டு அரைமணி நேரம் அலைந்தபின்
பார்க்கிங் செய்துவிட்டு கேன்டீனுக்குப் போனேன்.
Ganesh Temple, Canteen. |
நீண்ட வரிசையில் காத்திருந்து என் முறை
வந்ததும், “ஒரு சர்க்கரைப் பொங்கலும், ஒரு ஸ்பெஷல் மீல்ஸ்சும் வேணும்”, என்றேன்
எச்சிலை முழுங்கிக்கொண்டே.
“இன்னிக்கு மீல்ஸ் இல்லையே” என்றாள் ஒரு கத்துக்குட்டி வாலன்டியர்.
“சரி ஒரு சர்க்கரைப் பொங்கல் தாங்க”,
“அதும் இல்லையே”.
“உள்ளே கேட்டுப்பாருங்க ப்ளீஸ்”
“சர்க்கரைப்பொங்கல்
இன்னிக்கு இல்லையே, சாரி”.
அடச்சே இவ்வுளவு நேரம் லைனில் நின்னது இந்தப்
பதிலுக்குத்தானா ? என்னது இந்த ஊரில எல்லாப் பண்டிகையையும், பிறந்த நாளையும்
வீக்கென்டில தானே கொண்டாடுவாய்ங்க என்று யோசித்தபடி வெளியே வந்தேன்.
Dosa Hutt in Queens, New York. |
“தோசா ஹட்” கோயிலின் வெளியே இருந்தது.
அங்கு போய், “ஒரு சர்க்கரைப் பொங்கல் கொடுங்க”, என்றேன்.
“இன்னிக்கு இல்லையே, நேத்து இருந்துச்சு”
என்றார்கள்.
என்னடா இது ஒரு சர்க்கரைப்பொங்கலுக்கு
இந்தப்பாடா. ஊரில எந்த ரெஸ்டாரன்ட்டுக்குப் போனாலும் கிடைக்குமே என்று ஏங்கினேன்.
அங்க நம்ம நண்பர் ராஜாவைப் பார்த்தேன். NRI
Today யில மார்க்கெட்டிங் டைரக்டர். டிரவிடியன்
டி வி மூலம்
பழக்கம்.
“பொங்கல் வாழ்த்துக்கள் ராஜா “
“உங்களுக்கும் உரித்தாகுக”
“என்ன இந்தப்பக்கம்”
“சர்க்கரைப் பொங்கலும் ஸ்பெஷல் மீல்ஸ்சும்
சாப்பிடலாம்னு வந்தேன். ஒன்னும் இல்லைங்கிறாங்க”
”கோயில்ல சங்கராந்தி பண்டிகையும்,
சிறப்புப் பூஜையும் புதன் கிழமை தான். ஆனா ஸ்பெஷல் மீல்ஸ் இருக்கான்னு தெரியல”
புதன் கிழமை லீவைப்போட்டு, பொங்கலை கொண்டாடிரனும்னு என்று
நினைத்த போதுதான் ஞாபகம் வந்தது அன்று ஒரு முக்கியமான கிளைண்ட்
மீட்டிங் என்று. அட ராஜா வீட்டில பொங்கல் இருக்குமே என்று நினைத்துக்கொண்டு,
“அப்புறம் பொங்கலுக்கு உங்க வீட்டுல என்ன விசேஷம்”, என்றேன்.
“இந்த வருஷம் எங்க வீட்ல எங்கம்மா
தவறிட்டதால பொங்கல் இல்லை”, என்றார். ம்ஹூம் ஒரு இடத்திலயும் பேராது போலருக்கு.
“பொங்கலுக்கு
சர்க்கரைப் பொங்கலும் இல்ல. ஒரு கரும்பு
கூட சாப்பிடாம ஊரை ரொம்ப மிஸ் பண்றேன் ராஜா”.
“கரும்பு இங்க
கிடைக்குதே”
“அந்த வெள்ளை
கரும்பு வேணாம். பல் ஒடைஞ்சு போகும்”
“இல்ல இல்ல கருப்புக் கரும்பு
தான்”
“எங்க எங்க
எங்க”
Add caption |
“ பக்கத்தில் கோல்டு
சிட்டி என்ற கொரியன் கடையில் கிடைக்கும்”, என்று சொல்லி வழி சொன்னார். அங்கே போனேன். அட என்ன அதிசயம், அழகாய்த்
துண்டுகள் போட்டு ஒரு பவுண்ட் 1.49 டாலர். மூன்று பெரிய துண்டுகளை
வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.
அதற்குள் முழித்துவிட்ட என் மனைவி, “எங்க போன”, என்றவள் அப்படியே கரும்பையும் பார்த்து விட்டு, “கரும்பெல்லாம்
வேணாம். சுகர் கூடிவிடும்”, என்றாள்.
வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “சரி
வடையாவது செஞ்சு கொடு” என்றேன்.
மனது இறங்கியதோ என்னவோ, மெதுவடைகளை மொறு
மொறுவென்று சுட்டுக்கொடுத்தாள். சூப்பராக இருந்தது. பசியும் அடங்கியது.
இரவில் அவள் தூங்கப்போனபின், கரும்பைச் சாப்பிடலாம்
என்று காத்திருந்தேன். அவள் சிரிப்பு டிவியில் உட்கார்ந்து சிரிப்பே வராத மொக்க ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.கொட்டாவி கொட்டாவியாய் வந்து நான் முதலில் தூங்கப்போனேன். கொட்டாவி விடும்போது தாடையில் லேசாக வலித்தது.
ரெண்டு நாளாகவே வலிக்கிறது என்னவென்று தெரியவில்லை.
ஜனவரி 13, திங்கள் காலை, என் மனைவியை பஸ் ஸ்டாப்பில்
நானே விடறேன்னு சொன்னேன். “என்ன புதுசா அக்கறைன்னு”, கேட்டாள். விட்டு விட்டு தங்கமணி
என்ஜாய்ன்னுட்டு வேகமாக வந்து கரும்பை எடுத்துக்கடித்தால் பல்வலி உயிரே போய்
விட்டது. பார்த்தால் ஏதோ விஸ்டம் டூத் போலத் தெரிந்தது. மறுபடியும் லேசாக முயன்று
பார்த்தேன். வாயைத்திறக்கவே முடியல. கைக்கெட்டியது வாய்க்கு எட்டலைன்னு சொல்வாங்க.
வாய்க்கும் எட்டியது. ஆனால் கடிக்க முடியலயேயேயேயே.... வீட்டுக்கு
வந்து யாராவது இந்த கரும்பை எடுத்திட்டுப்போங்க.
“தை பிறந்தா வழி பிறக்கும்”னு சொல்வாங்க எனக்கு தைபிறந்தா வலி
பிறக்கும்னு ஆயிப்போச்சு.
நாளை வருகிறது காணும் பொங்கல் சிறப்புப்பதிவு
"கனவு காணும் வாழ்க்கை யாவும் !!!!!!!!!!!!!!"
அண்ணே, உங்களுக்காவது சக்கரை பொங்கல் இல்லன்னு சொன்னான். எனக்கு நடந்த கதையை கேட்டீங்கனா அழுதே போய் விடுவீங்கோ. ஆம்பூர் சலாம் ஹோடேலில் ஆசையா போய் "மூளை இருக்கானு கேட்டேன்"? உனக்கு முன்னால வந்தவங்களுக்கு இருந்துச்சி, ஆனா உனக்கு இல்லன்னு சொல்லிட்டான். ரொம்ப பீல் ஆயிட்டேன்.
ReplyDeleteஅருமையான எழுத்துக்கள். வாழ்த்துக்கள்.
ஒருத்தன் உண்மையை சொல்லிடக்கூடாதே
Deleteபீல் ஆயிடுவீங்களே!!!!!!
அப்படி போடுன்னே அருவாள. "ஏரி மேல போற ஆத்தா என் மேல வந்து ஏறு ஆத்தான்னு " உங்கள்ட்ட சொன்னன் பாருங்கோ. அந்த ஆம்பூர்காரனே தேவல.
Deleteஅருமை மகள் சொன்னால் ஒத்துக்கொள்வீர்கள் ஆம்பூர்க்காரன் சொன்னா ஒததுக்கொள்ளமாட்டீரா ????????????
Deleteஅண்ணே, இப்பதான் திரும்பவும் படிச்சன். கண்டிப்பா விஸ்டம் பல் ஆகா இருக்காது. நமக்குதான் கல்யாணம் ஆச்சே. கல்யாணம் ஆனா அம்பளிக்கு ஏது விஸ்டம் பல்? நம்ம தான் பல் புடுங்கிய பாம்பு ஆச்சே.
Deleteதம்பி நான் சொன்ன விஸ்டம்க்கு ஸ்பெல்லிங் வேற .
Deletewisdumb .
அண்ணே, தெரியாம சொல்லிப்புட்டன், பெரிய மனசு வச்சி சாரி பண்ணிக்குங்கோ. படையப்பாவில் செந்தில் சொன்னத போல " இந்த விஷயத்த இத்தோட மறந்துடுன்கோ.
ReplyDeleteஇதோ வந்துட்டேன்... எடுத்து வைங்க... ஹிஹி...
ReplyDeleteநீங்கள் எப்போதும் வரலாம் , நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசொந்த மண்ணை விட்டுப் போனவைங்க கதி இது தா(ன்டா)னா!?
ReplyDeleteபாத்தியாடா நண்பா என் பொழைப்பை ?
Deleteஎன்ன ரொம்ப நாளா காணோம்?
என்ன பொங்கல் வந்துட்டு போயிடுச்சா?
ReplyDeleteநல்லவேளை இந்தியாவிட்டு வந்துட்டேன். பொங்கலுக்கு மட்டும் மதுரையில் இருந்தா அது மிகப் பெரிய கொடுமைங்க பக்கத்து வீடுகளில் இருந்து நாங்க பொங்கல் பண்ணினோம் என்று சொல்லி ஆளு ஆளுக்கு கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. நல்லா இருந்தாவலாவது வைச்சு சாப்பிடலாம். ஆனா? ஹூம்...என்னத்த சொல்ல....
இது வேறயா உங்களுக்கெல்லாம் கொண்டு வந்து கொடுக்கிறாங்க பாரு ?
Deleteஉமக்கு பல் வலி மட்டுமல்ல வயித்து வலியும் வருமுல்ல... 5 வடையையும் தனியே திண்னா கண்டிப்பாக வரும் அது மட்டுமல்ல நானும் கண் திருஷ்டி போட்டுட்டேன்ல
ReplyDeleteஅட எண்ணி வேற பாத்திட்டீங்களா ?
Deleteதலை வலி போய் திருகு வலி வந்தா மாதிரி , இப்ப பல் வலி போய் வயித்து வலி வந்துருச்சு .
சுகர் வச்சிக்கிட்டு உங்களுக்கு சர்க்கரைப் பொங்கலும் கரும்பும் கேக்குதா....
ReplyDeleteஇத பார்றா சுகர் வந்து பிகர் போனதற்கு, ஸ்கூல் பையன் கூட திட்டறான் .
Deleteகரும்பு - இங்கே கூட வெள்ளைக் கரும்பு தான்.... கருப்பு கரும்புக்கு ரொம்ப அலைய வேண்டியதா இருக்கு! :)
ReplyDeleteபொங்கல் சிறப்புப்பதிவு - அருமை. ரசித்தேன்.
அப்ப டெல்லியிலும் அதே கதைதானா?
Delete