வைரமுத்து மதுரைக்காரர்,அதுவும்
நான் வளர்ந்த ஊராகிய தேவதானப்பட்டியின் மிக அருகில் உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர். என்னுடைய,
இள வயதில் அவருடைய புதுக்கவிதைகள் மற்றும் திரைப்படப்பாடல்கள் மூலம் என்னுள் தாக்கத்தை
ஏற்படுத்தியவர்.எனவே அவருடைய படைப்புகளை விரும்பிப்படிப்பது என் வழக்கம்.வைகை அணை கட்டும்
போது இடம் மாற வேண்டிய கட்டாயத்தால் வீடிழந்து, ஊரிழந்து எல்லாவற்றையும் இழந்த மக்களின் வாழ்வைப்படம்
பிடித்துக்காட்டிய
அவரின்
“கள்ளிக்காட்டு இதிகாசம்” எனக்குப்பிடித்த கதை. கருவாச்சி காவியமும் நன்றாகவே இருந்தது.

மூன்றாம்
உலகப்போரில் எனக்குப்பிடித்தவை.
1. கதைக்களம் நடக்கும் அட்டணம் பட்டி, அதன்
அருகில் வரும் புல்லாக்காபட்டி, தேவதானப்பட்டி ஆகியவை என் சிறுவயதில் சுற்றித்திரிந்த
ஊர்கள் என்பதால், ஒரு பெரிய நாஸ்டால்ஜியாவை என்னுள் உருவாக்கியது.
2.விவசாய விளை நிலங்கள்,நீரின்றியும், பராமரிக்க ஆட்களின்றியும், வீட்டு மனைகளாகவும் மற்றும் தொழிற்சாலைகளாய் மாறுவதாலும், ஒரு நாள், சாப்பிடும் உணவையும் நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியகொடுமை நேர்ந்து விடும் என எச்சரிக்கும் விதத்தில் கதையின் போக்கு அமைந்துள்ளது.
3.எந்த ஒரு நன்மை பயக்கும் முயற்சியையும், அரசியல் மற்றும் பண முதலைகள் தடுக்கின்ற வழிவழியாய் வரும் கொடூரங்கள்.
4.குடும்பத்தினுள்ளே,சிறு காரணங்களால் வீம்பும்,வீராப்பும் வெட்டி ஈகோவும் எப்படி உறவுகளைச்சிதைக்கின்றன என உணர்த்தும் கதை மாந்தர்கள்.

5.மாறுகின்ற
உலகில் மாற முயற்சித்து தோற்கின்ற நம் குக்கிராமங்களின் பரிதாப நிலை.
6.உலகமயம் மற்றும் உலக வெப்பமய மாக்குதலைக் குறித்து கிராமத்திலிருந்து வரும் குரல்,
7.கவிஞர் என்றாலும் கூட கவிதை, உவமை உவமேயத்தில் பக்கங்களை நிரப்பாத எச்சரிக்கை உணர்ச்சி.
8. ஆனாலும் உள்ளிருந்து எட்டிப்பார்கும் கவிஞனின் ஆழ் மனம்,மற்றும் பழைய விடலைத்தன குசும்பும் (தன் நாக்கால்,மற்றொரு பெண்ணின் நாக்கில் உள்ள வெற்றிலையை தள்ளி மனைவியிடம் மாட்டிக்கொள்ளும் இடம்).
9.மதுரை மொழியிலிருந்து சற்றே வேறுபட்ட வட்டார வழக்கு நடை.

பிடிக்காதவை
1.பல
இடங்களில் உலக வெப்பமயமாக்குதலை எழுதும் இடங்களில் கட்டுரை போல ஒலிப்பது.
2. வெளிநாட்டுக்காரர்கள் சொல்லிக்கொடுத்து நாம் கேட்க வேண்டிய நிலை. (அமெரிக்கப்பெண் எமிலி மற்றும் ஜப்பானியப் பையன் இஷிமுரா ஆகியோரின் பாத்திர அமைப்புகள்).
3. கொஞ்சம் படித்தாலும்,உண்மை நிலை மறந்து,வெள்ளைத்தோலில் மயங்குவது.(சின்னப்பாண்டி, எமிலி மேல் காதல் கொள்வது)
4. பெரிதான வாய்ப்புகளின் மூலம் வருங்காலத்தில் ஊரை முன்னேற்ற வாய்ப்புக்கள் வந்தாலும்,தன்னுடைய சிறு நிலத்தில் உழன்று காணாமல் போகும் எதிர்காலம்,
5.எந்த ஒரு நம்பிக்கை ஒளியையும் தராது போவதால் கடைசியில் எழும் வெறுமை.

No comments:
Post a Comment