Tuesday, April 11, 2017

நிஜாம் நாட்டில் தமிழர் வாழ்வு !!!!!!!!!! ( மீள் பதிவு )

அசோகமித்திரன் நினைவு பதிவு ( மீள் பதிவு )
படித்ததில் பிடித்தது
அசோகமித்திரனின் 18ஆவது அட்சக் கோடு.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வரும்நவீன தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் ஒன்றாக வெளியிடப்பட்ட நாவல் இது.
இந்த நாவல் ஒரு பீரியட் வகையைச் சார்ந்த வரலாற்று நாவல் என்று சொல்லலாம். இரட்டை நகரம் (Twin city) என்று அழைக்கப்படும் ஹைதராபாத்செகந்திராபாத் பகுதிகளில் நிஜாம் மன்னரின் ஆட்சிக்காலம்தான் கதையின் காலம்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்இந்திய சுதந்திரத்திற்கு சற்றுப்பின்னர்நிஜாமின் சமஸ்தானம் இந்திய யூனியனில் இணைவதற்கு முன்னால் ஆரம்பித்துஇணைந்த சமயத்தில் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகளையும் உள்ளிட்ட கதைக்களம்.
ஆனால் இது நிஜாமுக்கும் இந்திய அரசுக்கும் நிகழ்ந்த போராட்டத்தை விளக்கும் கதையல்லஅந்தச் சூழலில் அங்கு வசித்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் சமூக, பொருளாதாரஅரசியல் ரீதியான சங்கடங்கள், பாடுகள்ஈடுபாடுகள்தவிப்பு ஆகியவற்றை அருமையாக வெளிப்படுத்தும் கதை இது. இது ஒரு மாறுபட்ட வரலாற்று சிந்தனை.
அசோகமித்திரன்
நாவலை எழுதியவர் தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஒரு உன்னத இடத்தை அடைந்து தக்க வைத்துக் கொண்ட அசோகமித்திரன் அவர்கள். இவர் சுஜாதா, ஆதவன்நாஞ்சில் நாடன் போன்ற பல எழுத்தாளர்களுக்கு முன்னோடி ஆவார்.
அசோகமித்திரன் செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். நாவலின் கால கட்டத்தில் வாழ்ந்தவர் என்பதால் சந்திரசேகரன் என்ற கதாபாத்திரம்தான் அசோகமித்திரன் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
1996ல் “அப்பாவின் சிநேகிதர்” என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற அசோகமித்திரன், முதலில் ஜெமினி ஸ்டுடியாவிலும் அதன் பின்னர் கணையாழியின் ஆசிரியராகவும் வெகுகாலம் பணியாற்றினார். சுஜாதா கணையாழியின் ஆசிரியரானது இவருக்குப் பின்னர் என்று நினைக்கிறேன்.

யார் சொன்னது அசோகமித்திரன் எழுத்துக்கள் கடின வகை வரட்டு எழுத்து என்று?.நாவல் முழுதும் ஒரு சிறு நையாண்டி இயல்பாகவே அமைந்துள்ளது. அதில் அசோகமித்திரனின் குறும்பு வெகுவாகவே தெரிகிறது. (குறிப்பாக இதன் நாவல்தேசிய புத்தக டிரஸ்ட்டின் (ன்பட்) ஆதான் பிரதான் திட்டத்தின்கீழ்இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளிலும் மொழிபெயர்க்கத் தேர்வு செய்யப்பெற்ற நாவல் இது.
நாவலில் எனக்குப் பிடித்த அம்சங்களை கீழே புல்லட் பாயிண்டில் தருகிறேன்.

1.    விடலைப்பையன்களின் டீனேஜ் அவஸ்தைகளை மிகச்சிறப்பாக விளக்குகிறார் ஆசிரியர். அந்த சமயத்தில் ஒருங்கே வரும் பயம், கூச்சம், எதிர்பார்ப்பு, திருட்டுத்தனம், வெட்கம், மகிழ்ச்சி கிளர்ச்சி, ஆவல் என்ற பல உணர்ச்சிகளை கதையோடு பிண்னி இருக்கிறார். குறிப்பாக பெண்கள் மேல் வரும் ஒருவித இனக்கவர்ச்சி.
2.    அங்கு வாழ்ந்து வந்த சட்டைக்காரர்கள் (Anglo Indians) கலாச்சாரத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
3.    வேலை தேடிச்சென்ற தமிழர்கள் ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் ஒரு அந்நிய நாட்டில் வாழ்வது போலவே இருந்தனர்.பெரும்பாலும் ரயில்வே துறையில் இருந்தனர்.
4.    ஒருவருக்கொருவர் வழக்கம்போல் ஒற்றுமை இல்லாததால் தனித்தனியாகவே இருந்தனர்.
5.    ஆந்திரா மற்றும் தெலுங்கானா  இணைந்த பெரிய நிலப்பரப்பாக நிஜாம் நாடு இருந்தது.
6.    நிஜாம் நாட்டில் மதவெறி கொண்ட ரஜாக்கர்கள் வைத்ததுதான் சட்டம். பிற மதத்தினரை ஏராளமாகக் கொன்று குவித்தனர். ரஜாக்கர்கள் நிஜாமின் கொலைப்படை.
7.    காங்கிரஸ்காரர்கள் தேசத்துரோகிகளாகக் காணப்பட்டனர்.
8.    நிஜாம் பதவியில் இருந்தாலும் பெரும்பாலான ஆட்சி அதிகாரம் நியமிக்கப்பட்ட பிரதம மந்திரிகள் கையில்தான் இருந்தன.
9.    நிஜாம் நடத்திய பள்ளி கல்லூரிகளில் தமிழர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். இவர்கள் வெகுகாலம் அங்கு வாழ்வதால் தமிழுணர்வற்று இருந்தனர். பாரதியார் பற்றிக் கூட இவர்களுக்கு தெரியவில்லை.
10. சில தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்அங்கு வாழ்ந்ததால் நிஜாமுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாகவும் இந்திய யூனியனுக்கு எதிராகவும் இருந்தனர்.
11. நிஜாமின் ஆட்சி, டெல்லி வரை பரவப்போகிறது என்ற நப்பாசை ரஜாக்கர்களுக்கு இருந்தது.
12. இந்திய விடுதலைக்குப்பின் நடந்த இந்து முஸ்லிம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிறபகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம் மக்கள்  அகதிகளாக வந்து வாழ்ந்து வந்தனர்.
13. இந்திய விடுதலைக்குப் பின் நிஜாம் நாட்டில் வந்த நெருக்கடியால்பெரிய உணவுப்பஞ்சம் வந்தது. தண்ணீர் அரிசிஎண்ணெய் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால்சோள ரொட்டியைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தனர்.
14. நிஜாம் அரசின் பஸ்கள் கடலை எண்ணெய்  ஊற்றி ஓடியதால்சாலை முழுவதும் பஜ்ஜி சுட்டதுபோல் வாசனை வந்ததாம்.
15. அங்கிருந்த ஒரே ஒரு தியேட்டரில் புதுத்தமிழ்ப்படம் வந்தால் ஒரு வாரம் ஓடுமாம்.
16. பள்ளி கல்லூரிகளில் கிரிக்கெட் தலையாய விளையாட்டாக இருந்தது.
17. ஹைதராபாத்தில்காந்தி இறந்துபோனது வெகுவான பாதிப்பை உண்டுபண்ணியதாம். ஜின்னா இறந்துபோன போது அவ்வளவாக பாதிப்பில்லை.
18. இந்திய அரசுப்படைகள் ஹைதராபாத்தில் நுழையும் போது எதிர்ப்பென்று அவ்வளவாக இல்லை. வரும் வழியில் தான் சில சிறு சண்டைகள். இந்தியப்படையைப் பார்த்ததும் நிஜாம் படைகள் ஒன்று ஓடி ஒழிந்தன அல்லது சரணடைந்தன.
19. இந்தியப்படை ஹைதராபாத்தில் நுழைவதற்கு முன்னமே ரேடியாவில் பேசிய நிஜாம்இந்திய அரசில் இணைய சம்மதம் தெரிவிக்கிறார். அதன் பின்னர் நடந்தது தான் கொடுமை.
20. இந்துக்கள் முஸ்லீம்களை தாக்குவதும்வீடுகளை எரிப்பதும்பொருட்களை அழிப்பதும் நாடெங்கிலும் நடக்கிறது. குறிப்பாக ஹைதராபாத் செகந்திராபாத்தில்.
மொத்தத்தில் அந்தக் காலகட்டத்தின் சமூக வரலாற்று நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டும் அசோகமித்திரனின் இந்த நாவல் படிக்க வேண்டிய ஒன்று.
அசோகமித்திரன் நினைவு  தமிழ் வாசகர்களின் மனதில் நீண்ட நாள் நிலைத்திருக்கும் .
முற்றும்.  

9 comments:

  1. இதுவரை படித்ததில்லை. படிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜம்புலிங்கம் .

      Delete
  2. ஆம், தமிழர்கள் தவறாமல் படிக்கவேண்டிய நாவல் இது. ஹைதராபாத்தில் மூன்றாண்டுகள் வங்கிப் பணியில் இருந்ததால், இந்த நாவலில் சொல்லப்பட்ட சில அம்சங்களை என் வாழ்விலும் நான் அனுபவித்திருக்கிறேன். எனவே இது என்னை மிகவும் பாதித்த நூலாகும்.

    - இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்

    ReplyDelete
    Replies
    1. இந்தப்புத்தகம் உங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை , நன்றி செல்லப்பா .

      Delete
  3. மீள்பதிவுக்கு நன்றி. படிக்க ஆர்வம்தான். புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் சார்!.

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் தப்பிக்கலாமோ பாஸ்கர் .

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நண்பர் ஆல்ஃபி,

    அசோகமித்திரன் ஒரு அதிசயம். இந்தக் கதையை நான் கல்லூரியின் இரண்டாம் வருடத்தில் படித்திருக்கிறேன். அப்போதுதான் ஆல்பெர் காம்யூ வின் அந்நியன் கதையையும் தேடிப் பிடித்தேன். அதனால் இது நினைவிருக்கிறது.

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    அதுசரி. இவருடைய புலிக்கலைஞன் கதை படித்ததுண்டா? கிடைத்தால் படியுங்கள்.

    ReplyDelete