இலங்கையில்
பரதேசி - பகுதி -8
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_28.html
![]() |
Simmalakka Mantap |
"அடுத்து எங்கே" என்று அம்ரியிடம் கேட்டேன்.
"சார் சாயந்திரம் ஆயிருச்சு, அப்படியே போய்
எங்கேயாவது சாப்பிட்டுட்டு ரூமுக்கு போயிரலாம்".
“மணி
ஐந்து தானே போற வழியில வேறு எங்காவது போகலாமே" என்றேன்.
"சார் ஒரு முஸ்லீம் கட்டிய புத்தர் கோயில் இருக்கு, ஆனா நீங்க கிறிஸ்தவர்
ஆச்சே அங்கே வருவீங்களா?”
"என்ன அம்ரி அப்படிச் சொல்லிட்ட, கோவில்கள் கலைகளின்
இருப்பிடம், கலாச்சாரங்களின் பிறப்பிடம் அல்லவா. நான்
தமிழ்நாட்டில் வளரும் போது, என் அப்பா தமிழ்நாடு
மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா
என்று எல்லாக் கோவில்களுக்கும் கூப்பிட்டுப் போயிருக்கிறார். எல்லா புராணங்களும்
இதிகாசங்களும் எனக்கு அத்துபடி. அதுமட்டுமல்ல பள்ளிவாசல்களுக்கு தர்ஹாக்களுக்கும்
கூடப் போயிருக்கிறேன்."
“என்ன
தர்ஹா கூடப் போயிருக்கீங்களா?”
“ஆமாம்,
நாகூர் தர்ஹா, ஏர்வாடி தர்ஹா, போயிருக்கிறேன். எங்கள் ஊர் பள்ளி வாசலில் கூட போயிருக்கிறேன்”.
![]() |
Nagoor Dargha |
“நாகூர்
தர்ஹா சரி ஏர்வாடிக்கு எதுக்குப் போனீங்க? அங்க
பைத்தியக் காரங்களைத்தான் கூப்பிட்டுபோவாங்க”.
"அம்ரி, என்ன கலாய்க்கிறதா நினைப்பா".
“அதுசரி
தர்ஹா கான்செப்டை நம்புறீங்களா?”
“இல்லை,
இறந்தவர்களை மதிக்க வேண்டும், பின்பற்றலாம்.
ஆனால் கடவுளுக்குச் சமமாக வணங்குதலில் நபிக்கையில்லை. அல்லா ஒருவனே வணங்குவதற்கு உரியவன்”.
“சார்
என்ன ஆச்சரியமாக இருக்கு, நீங்க இயேசு நாதரை கும்பிடுபவர்தானே,
அல்லாவையும் ஏத்துக்கிறுவீங்களா"
"அல்லான்னா
என்ன அர்த்தம் ?"
"கடவுள்னு,
படைத்தவன்னு அர்த்தம்?"
“கடவுளுக்கு பேர்
ஏதாவது இருக்கா?”
“இல்லை உருவம்
இல்லா அரூபம் அவன்”.
“எல்லா மதத்தினரும்
இதை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். கடவுள் அல்லது படைத்தவன் ஒருவனே. அவனுக்கு உருவமில்லை
பெயருமில்லை. அல்லா என்பது கடவுளின் பெயர் அல்ல, கடவுளுக்கு அந்த மொழியில் உள்ள பெயர்,
அதனால கடவுளை அல்லான்னு சொல்றதுல எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை.ஏன் இந்து மதத்தில்
கூட உருவ வழிபாடு கிடையாது அது பின்னர் தான் புகுத்தப்பட்டது”.
“சார் நீங்க சொல்றது.
ஆச்சரியமாயிருக்கு, ஆனா உண்மைதான்”.
“அதோட இதையும்
தெரிஞ்சிக்க, ‘யாவே’ அல்லது ‘ஜெகோவா’ என்று ஹீப்ரு மொழியில் அழைக்கப்படும் கடவுளின்
அரபி மொழியாக்கம்தான் அல்லா என்பது. அது மட்டுமல்ல
பைபிளிலும் அல்லா என்று போட்டிருக்கு."
“என்ன சார் சொல்றீங்க
?”
“ஆமா, அரபு மொழியில்
இருக்கும் பைபிளில் கடவுள் என்று வரும் இடங்களில் எல்லாம் 'அல்லா' என்றுதான் போடப்பட்டிருக்கு.
"அப்ப ஏசு
நாதர்"
“கடவுளின் மனித
உருவாக வந்த இறைமகன் தான் இயேசு , அவரும்அல்லாவும் ஒன்றே “.
“ரொம்ப ஆச்சரியமா
இருக்கு”.
“அதுமட்டுமல்ல இந்து மதத்தத்துவங்களுக்கும் கிறிஸ்துவ
மத தத்துவங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அத இன்னொரு நாளைக்கு சொல்றேன்”.
“அப்ப உங்களுக்கு
எம்மதமும் சம்மதமா?”
“அத நான் இப்படிச்
சொல்வேன். எல்லா மதங்களும் ஒரே கடவுளைத்தான் குறிக்கின்றன. அந்த ஒரு கடவுள்தான், இந்த
உலகத்தைப் படைத்தவர். ஏன் உன்னையும் என்னையும் படைத்து பராமரிப்பவர் அவர் ஒருவரே. அதனால
உலகின் மனிதகுலம் எல்லாரும் சகோதர சகோதரிகளே”.
“ஹும் இப்படி
எல்லாரும் நினைச்சா எவ்வளவு நல்லாருக்கும் சார்”.
“சரி அதவிடு முஸ்லீம்
கட்டிய புத்தர் கோயில்னு சொன்னியே அது எங்கிருக்கு?”.
“அங்கதான் சார்
போயிட்டிருக்கோம்”.
“அந்தக் கோவிலின்
பெயர் ‘கங்கராமய்யா கோவில்’,"
இந்தக் கோவில்
இலங்கை, தாய்லாந்து, இந்திய மற்றும் சீனக் கட்டிடக் கலையின் கலவை என்று சொல்லலாம்.
ஜின ரத்தனா சாலையில்
அமைந்திருக்கும் இது பழசா புதுசா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது.
19ஆவது நூற்றாண்டில் கடல் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த ‘டி சில்வா ஜெயசூரிய கோனவர்த்தனே
முதலியார்’, என்பவர் மட்டாரா ஸ்ரீ தர்மராம தேரோ என்ற குருவுக்கு கோவில் எழுப்புவதற்காக
மூர் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் இந்த அழகிய இடத்தை வாங்கிக் கட்ட ஆரம்பித்தாராம்.
மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட இதற்கு "கங்கராமயா விகாரியா" என்ற பெயர்
சூட்டப்பட்டது.
அழகான தோரண வாயிலின்
உள்ளே மிக அழகிய கட்டிடங்கள் அடங்கிய பல பகுதிகள் இருந்தன. விகாரா என்று சொல்லக்கூடிய
கோயில், பகடா என்று சொல்லக்கூடிய போதிமரம், புத்த பிச்சுகள் கூடும் பெரிய அரங்கம் ஆகியவை
இருக்கின்றன.
![]() |
அதுதவிர புத்தரின்
ரெலிக் என்று சொல்லப்படும் உடற்பகுதிகள் வைத்திருக்கப்பட்டிருக்கும் இடம் உள்ளது. மேலும்
ஒரு மியூசியம், நூலகம், கல்வி நிலையங்கள்,
தங்குமிடங்கள் என்று பெரிய வளாகம் இது. இதில் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றையும் தங்குமிடமாகக்
கட்டியதும் முதலியார்தான்.
இங்கு புத்தமதத்
தலைவர்களான ‘ரத்மலான ஸ்ரீ தர்மராமா தேரோ’, ‘வாங்கடுவா ஸ்ரீ சுபுட்டி தேரோ, வெலிக்கமா
ஸ்ரீ சுமங்கல தேரோ, வெளிவிட்டியே தம்மரத்ன தேரோ மற்றும் பண்டிட் பட்டு வண்டுபாவே ஆகியோரும்
இருந்திருக்கின்றனர்.
![]() |
இதுல இன்னொரு
முக்கிய தகவல் என்னன்னா நியூயார்க் ஸ்டேட்டன் ஐலண்டில் இருக்கும் புத்த ஆலயம், மன்
ஹாட்டனில் இருக்கும் புத்த மையம், டான் ஜானியாவில் இருக்கும் மையம் ஆகியவற்றையும் இவர்கள்தான்
உருவாக்கியிருக்கிறார்கள்.
இங்குள்ள போதிமரம்
சிறுசெடியாக, அனுராத புரத்திலுள்ள ஸ்ரீ மகா பொதியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு நடப்பட்டிருக்கிறது. நட்டவர் வேறயாரு நம்ம முதலியார்தான்.
Bodhi Tree |
சரி எல்லாம் சரி
முஸ்லீம் கட்டியது என்ன என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
Relic Chamber |
இந்த வளாகத்திலேயே
மிக முக்கியமான சிம்மமலாக்கா சந்நிதானத்தைக் கட்டுவதற்கு பெருமளவில் ஒரு முஸ்லிம் உதவியிருக்கிறார். அதனை
உருவமைத்தது ஜாப்ரி பாவாதான். பல கட்டடங்களை இவர்தான் வடிவமைத்தார் என்பதைத்தான் முன்னமே
பார்த்தோமே. இந்த மண்டபம் அருகில் உள்ள பெய்ரா என்ற ஏரியில் நடுவே உள்ள தீவில் அமைந்துள்ளது.
இதுல இன்னொரு
முக்கிய தகவல் இங்குள்ள புத்தர் சிலை முழுவதுமாக ஜேட் என்று சொல்லப்பட்ட சிறப்பான விலைமதிப்புள்ள
கல்லால் செய்யப்பட்டது. நம்மூர் மரகத விநாயகர் மாதிரி .பார்த்து முடித்து வெளியே வந்தோம்.
Jade Budha |
“என்ன சார் சாப்பிட
சரவணபவன் போலாமா?”
“அம்ரி நிஜமாவா
சொல்ற இங்க சரவணா பவன் இருக்கா?”
- தொடரும்.
நல்ல பயணக் கட்டுரை. தொடருங்கள்.
ReplyDeleteஅந்தக் காலத்தில், வழிபாட்டுத்தலங்களை நிர்மாநிக்கும்போது மதவேற்றுமை இல்லாமல் எல்லாரும் தங்களால் இயன்றவகையில் பங்களித்தார்கள் என்பது தெரிகிறது.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
அது இப்பொழுது எப்படியெல்லாம் மாறிவிட்டது என்று நினைத்தால் உள்ளம் கசக்கிறது .
Delete//இறைவன் ஒருவனே// நல்ல கருத்து
ReplyDeleteஅதுதானே உண்மை பாஸ்கர்.
Delete