எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண்:
33
ஆகாய கங்கை
![]() |
Add caption |
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/blog-post_16.html
ரஜினிகாந்த் நடித்து,
எழுபதுகளில் வெளிவந்த "தர்மயுத்தம்" என்ற படத்திற்காக
இளையராஜா இசையமைத்து வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல் இது. பாடலைக் கேட்போம்.
பாடலின் சூழல்:
திருமணத்திற்கு ஆயத்தமாகும் காதலனும்
காதலியும் களிப்புடன் பாடும் இளமை ததும்பும் பாடல் இது.
இசையமைப்பு:
இளையராஜாவின் மெருகேறிய காதல்
ததும்பும் பாடல் இது. அந்தச் சமயத்தில், என்
இந்தச் சமயத்தில் கூட எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத மெட்டும் இசையமைப்பும்
குளிர்விக்கின்றன.
கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில்
பெண் குரலின் ஹம்மிங்கோடும் காங்கோ டிரம்ஸ் கலவையோடும் ஒன்று சேர்ந்து சடுதியில்
பாடல் ஆரம்பிக்கிறது. ஹம்மிங் முடிந்து ஒரு லீட் வந்து முடிய,
ஆண்குரலில் ‘ஆகாய கங்கை’ என்று ஆரம்பிக்கிறது. ஆண்குரல் ஒலித்து
முடிய பெண்குரல் அதற்குப்பதில் சொல்லி முடிய, சரணம் முடிய முதல் BGM ஆரம்பிக்கிறது. கீபோர்டு, புல்லாங்குழல், வயலின் கோரஸ் போன்ற இசைக் கலவை இசைத்து முடிய வயலின் சோலா உருகிமுடிக்க
மீண்டும் ஆண் குரலில் "காதல் நெஞ்சில்" என்று சரணம் ஆரம்பிக்கிறது.
இரண்டாவது BGM-ல் பெண்குரல் ஹம்மிங் ஒலித்து வயலின் சோலோ முடித்து
2-ஆவது சரணம் பெண்குரலில் ஆரம்பித்து ஆண்குரலில் முடிகிறது.
டிரம்ஸ், காங்கோ, கீபோர்டு, பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார், வயலின்கள், வயலின் சோலோ, காங்கோ
போன்ற பலவித இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட அருமையான பாடலிது.
பாடல் வரிகள்:
ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
காதல் நெஞ்சில்..ஹேஏஏஎ
மேள தாளம்..ஹோஓஒ (2)
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ
(குங்கும தேரில்)
தேவை யாவும் ஹேஏஏஏ
தீர்ந்த பின்னும் ஹோஓஒ (2)
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன்
மோகம்
(ஆகாய கங்கை)
![]() |
MG Vallabhan |
பாடல் வரிகளை எழுதியவர் M.G.
வல்லவன் அவர்கள். இளையராஜாவுக்கு சுமார் 200
பாடல்களை எழுதியிருந்தாலும் இவரை அவ்வளவாய் நமக்குத் தெரியாது. கரும்புவில் என்ற
திரைப் படத்தில் வரும், 'மீன் கொடித்தேரில் மன்மத ராஜன்'
மண் வாசனையில் வரும் "அரிசி குத்தும் அக்காமார்களே"
பொண்ணு ஊருக்குப்புதுசு படத்தில் அமைந்த" சோலைக்குயிலே பாடும் மயிலே",
மலர்களே மலர்களே படத்தில் உள்ள "இசைக்கவோ உன்
கல்யாணிராகம்" போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார். மேலும் உதயகீதம், இதயக்கோயில் போன்ற சில படங்களுக்கு திரைக்கதை வசனம் இவரே. அது மட்டுமல்ல,
பிலிமாலயா, பேசும்படம், பெண்மணி
போன்ற பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். 2003ல் இறந்துபோனார். இந்தப் பாடலில் மெட்டுக்குத் தகுந்த கச்சிதமான வரிகளை
எழுதியுள்ளார்.
பாடலின் குரல்கள்:
![]() |
பாடலைப் பாடியவர்கள் மலேசியா
வாசுதேவன், மர்றும் ஜானகி. SPB வராததால் "பதினாறு வயதினிலே படத்தில்" ஆட்டுக்குட்டி
முட்டையிட்டு என்று பாட ஆரம்பித்து அது சூப்பர் ஹிட் ஆகிவிட எல்லோரும் அவரைத்
திரும்பிப் பார்க்க வைத்தது. தர்மயுத்தம் படத்தில் ரஜினிக்குப் பாடிய இந்தப் பாடல்
சூப்பர் ஹிட் ஆகியதோடு குரலும் ரஜினிக்குப் பொருத்தமாக இருந்ததால் ரஜினிக்கு நிறைய
பாடல்களை மலேசியா பாடினார். SPB இளையராஜாவின் பழைய
ஆர்க்கெஸ்ட்ராவில் TMS திருச்சி லோகநாதன் குரலில் அருமையாக பாடுபவராம். “ஆனந்தத் தேன் காற்று
தாலாட்டுதே”, “பூங்காற்று திரும்புமா” என்ற பாடல்கள்
திருச்சி லோகநாதனையும் TMS-யையும் நினைவு படுத்தும்.
ஜானகி குரலில் சொல்லவே
வேண்டாம். அவ்வளவு இளமை, காதல், சென்சுவாலிட்டியை எப்படித்தான் பாடலில் கொண்டுவருகிறாரோ. குறிப்பாக
சரணத்தில் வரும் ஒரு சிறு சிரிப்பு, இருவரும் இந்தப் பாடலின்
வெற்றிக்கு முக்கிய பங்காளர்கள் ஆவார்கள்.
இளையராஜாவின் மணிமகுடத்தில்
மின்னும் இன்னுமொரு வைரம் இது.
தொடரும்
என்ன ஒரு பாடல். என்ன ஒரு குரல்கள்..
ReplyDeleteஎப்போது கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல் ..
ஜானகி "தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்", அந்த வரிகளை பல உணர்வுகளை கொண்டு வந்து இருப்பார். அந்த ஒரு வரியை பல தடவை கேட்டு இருக்கிரேன்..
ஒரே ஒரு திருத்தம் ??
மேளம் கொட்டி மேடை கட்டி ---> மேடை கட்டி மேளம் தட்டி
நினைச்சேன் நினைச்சேன் நக்கீர நண்பா வருவார்ன்னு .அப்படியே வந்தார்.ஆனால் அவர் தவறை தட்டிக்கேட்பவர் இல்லை ஆனால் சுட்டிக்காண்பிப்பவர் ,(நல்ல வேளை) நன்றி நண்பா .
Deleteஅருமையான பதிவு ...
ReplyDeleteநன்றி அஜய்.
Deleteஎழுபதுகளில் ராஜா இளையராஜா, அதை எழுதுவதில் நீங்கள் ஒருவரே ராஜா !!! வாழ்க என்றும்.
ReplyDeleteஉங்களுக்கு பெயரிலே ராஜா சார்! :)
எனக்கு பெயரில் மட்டும்தான் ராஜா பாஸ்கர்.
Deleteஷ்ரிதேவிக்கு கால்முறிவு ஏற்பட்டு இருந்ததாம் இந்தப் பாடலை படமாக்கும்போது. அதான் உக்காந்தே இருப்பாருனு எங்கேயோ படிச்ச ஞாபகம்.
ReplyDeleteஇந்தப்படம் இயக்க்கியது ஆர் சி ஷக்தி. ஆனால் ரஜினிக்கும் ஆர்சி ஷக்திக்கும் இதிலிருந்து நல்ல உறவு இருந்தமாதிரி தெரியவில்லை. படம் சூப்பர் ஹிட் ஆனதால் மேலே போனத்உ ரஜினியும் ஷ்ரிதேவியும், இளையராஜாவும். ஆர்சி சக்தி அப்படி ஒண்ணும் பெரிய்யாளா ஆக முடியவில்லை
கூடுதல் தகவல்களுக்கு நன்றி வருண்.
Deleteநண்பர் ஆல்ஃபி,
ReplyDeleteஇந்தப் படம்தான் ரஜினியை பெரிய அளவில் கொண்டுபோய் நிறுத்தியது. மேலும் இந்தப் பட ஷூட்டிங்கில்தான் ரஜினி மனநலம் பாதிக்கப்பட்டார். படத்திலேயே ரஜினி ஒரு பயித்தியக்காரனாகத்தான் நடித்திருப்பார். கமல் ரசிகர்கள் 'டேய் மெண்டல் வந்துருச்சுடா" என்று நக்கல் அடிப்பதுண்டு.
ஆகாய கங்கை பாடல் அப்போது ரேடியோக்களில் தினமும் பீறிட்டுவந்த இசை. எதோ ஒரு நிலையத்தில் அந்தப் பாடல் ஒலிபரப்பாகி விடும். அத்தனை பிரசித்தம் பெற்ற பாடல். எனக்குத்தான் அதை கேட்கும்போதெல்லாம் இது எதோ ஒரு சோகப் பாடல் போல என்ற நினைப்பு வரும். இரா வயலினை வைத்துக்கொண்டு எதோ நோயில் படுத்திருக்கும் காதலியை கண்டு துக்கத்தில் புலம்பும் காதலன் ரேஞ்சுக்கு இசை அமைத்திருப்பார். காதலின் துள்ளலோ உற்சாகமோ சிறிதும் இல்லாத காதல் பாடல். இரா இந்த வகை பாடல்களில் உண்மையிலேயே ஒரு ரா தான்.
ஜானகியின் அந்த சிணுங்கல் சிரிப்பு பாடலுக்கு பெரிய அலங்காரம் சேர்த்தது. பின்னாட்களில் பலவிதமான சிணுங்கல்களுக்கு ஜானகியை பாட வைத்ததற்கான முதல் பரிசோதனை முயற்சியாக இது இருக்கலாம்.
எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடில்லை காரிகன், But we agree to disagree.
Delete