Thursday, July 23, 2015

ஈரானுக்கு ஒபாமா வைத்த செக் !!!!!!!!!!!!

ஈரான் ஒப்பந்தம் 

உலகத்தில் சில நாடுகள் எப்போது என்ன செய்யும் என்று யூகிக்கவே முடியாது. அவற்றுள் சீனா, வட கொரியா,பாக்கிஸ்தான், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவை தலையானவை. இந்த நாடுகளையும் அதன் தலைவர்கள் அல்லது ராணுவத்தையும் நம்பவே முடியாது.
கடந்த வாரத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா அவர்களிடமிருந்து எனக்கு ஈமெயில் வந்தது. ஏதாவது முக்கிய நிகழ்வுகள் இருந்தால் அவ்வப்போது அவர்களிடமிருந்து ஈமெயில் வரும் இப்போது வந்தது ஈரான் ஒப்பந்தம் பற்றி. இதனைப்பற்றி கடந்த சனியன்று வானொலியிலும் உரையாற்றினார். ஒவ்வொரு சனியன்றும் வானொலி மூலம் நேரடியாக மக்களிடம் பேசும் வழக்கத்தை தாம் முதல் முறை பதவியேற்றதிலிருந்து  வழக்கமாக வைத்துள்ளார்.
நான் அறிந்து கொண்ட அந்த ஈரான் ஒப்பந்தத்தைப்பற்றி இதோ சில குறிப்புகள் உங்களுக்காக.
1.    இனிமேல் ஈரான் செறியூட்டப்பட்ட யுரேனியத்தையோ, அணுகுண்டு தயாரிக்க உதவும் புளூட்டோனியத்தையோ தயாரிக்க முடியாது.
2.    தன்னிடமுள்ள மொத்த சேமிப்பில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 98 சதவீதம் குறைக்க வேண்டும்.
3.    யுரேனியம் தயாரிக்கப் பயன்படுத்தும் இயந்திரங்களில் மூன்றில் இரண்டு பகுதியைப் பிரித்து தனியே வைத்து விட வேண்டும். அது உலக நாட்டாரின் கண்காணிப்பில் இருக்கும்.
4.    ஈரான் 'அரக்' என்னுமிடத்தில் உள்ள தன் நியூக்ளியர் ரியாக்டரை, இனிமேல் அணு ஆயுதம் தயாரிக்க முடியாதபடி மாறுதல் செய்யும்.
தன்னிடமுள்ள மொத்த யுரேனியத்தின் மூலம் ஈரான் குறைந்தபச்சம் 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியுமாம். ஆனால் தற்போது ஒப்பந்தம் அமுல் படுத்தியபின் ஒரு ஆயுதம் தயாரிக்கக்கூட அவர்களிடம் மூலப் பொருள்கள் இருக்காது.
மேலும் இந்த மின்னஞ்சல் சொல்கிறது, இது பரஸ்பர நம்பிக்கையின் மூலம் ஒத்துக்கொண்ட ஒப்பந்தமில்லை. ஒவ்வொரு படியிலும் நடக்கும் பரிசோதனையின் அடிப்படையில் ஊர்ஜிதம் செய்யப்படும் வகையில் அமைந்ததாகும்.
முதன்முறையாக, அமெரிக்கா இந்த ஒப்பந்த நடைமுறையை மேற்பார்வை இடும். அகில உலக சோதனையாளர்களும், ஈரானின் நியூக்ளியர் திட்டத்தை கண்காணிப்பார்கள்.
ஈரான், ஒப்பந்தத்தை மீறி ரகசியமாகச் செயல்பட்டால் இந்த உலக சோதனையாளர்கள் அதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்களாம்.  
ஈரான் இதனை முழுமையாகக் கடைப்பிடிக்கத்துவங்கும்போது, அதன் மீது தற்போதுள்ள  பொருளாதாரத்தடைகள் படிப்படியாக விலக்கிக்  கொள்ளப்படும் .
அதுமட்டுமல்லாமல், இதனை செயல்படுத்த தடையாக அமெரிக்க சட்டங்கள் இருக்குமென்றால், அதிபர் தன்வீட்டோ பவரை பயன்படுத்துவேன் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
ஒபாவின் பதவி காலத்தில் இது ஒரு சாதனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.


எல்லாம் சரிதான், ஆனால் ஈரானை நம்ப முடியுமா?
 “என்னது ஒபாமா உனக்கு  ஈமெயில் அனுப்பினாரா  என்னடா கதைவிடுற ?. “
“டேய் மகேந்திரா, வந்துட்டியா , சம்மன் இல்லாம ஆஜர் ஆகிறது நீ ஒருத்தன் தாண்டா. சொல்றேன் கேளு, அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடும்போது அந்த கேம்பெய்னில் நானும் இணைய வழி மூலமாக இணைந்தேன். அதிலிருந்து அவருடைய ஈமெயில் லிஸ்ட்டிலும் ,வெள்ளைமாளிகையின் ஈமெயில் லிஸ்ட்டிலும் நான் இருக்கிறேன்.
“சரிடா என்னவோ சொல்ற ஒண்ணும் விளங்கல”.

முற்றும்.

Email proof is given below

9 comments:

  1. ஒபாமா எனக்கு மட்டும்தான் கடிதாசி அனுப்புவார்ன்னு அன்புமணி பீலா விட்டாரே:)

    ReplyDelete
    Replies
    1. அவர் வேற விட்டாரா ?அய்யய்யோ .

      Delete
  2. ஸ்டாலினும் தனக்கு மெயில் வந்ததாக சொல்லி இருக்கின்றார்! ஆனாலும் பகிர்வு அருமை ஐயா[[[[[[[[[[[[[[[[

    ReplyDelete
  3. " வசதியானவன் வுட்டா ........ காற்று பிரியுது!!!!!!!!!! ஏழை வுட்டா ?..... நம்மளும் சேர்ந்து என்ன சொல்லுவோம் என்று தான் தெரியுமே !!!!!!!! "

    " மாமியா ஒடச்சா மண் பானை, மருமகள் ஒடச்சா பொன் பானை."

    இதாங்க அய்யா எனக்கு சொல்ல தோணுது !!!!!!

    ReplyDelete
  4. ஈமெயில் லிஸ்ட்டில்...? ரைட்டு...

    ReplyDelete
    Replies

    1. மேலே ஈமெயில் ப்ரூஃ ப் இணைத்துள்ளேன்

      Delete
  5. //ஈரானுக்கு ஒபாமா வைத்த செக் !!!!!!!!!!!! //

    தலைப்பிலே 'செக்'னு போட்ருக்கீங்க...

    அந்த 'காசோலை' (cheque) பற்றி ஒன்னுமே குறிப்பிடலியே நீங்க?

    ReplyDelete
    Replies
    1. வைத்த செக்னு தானே எழுதியுள்ளேன் , கொடுத்த செக்னு எழுதலையே.

      Delete