Tuesday, July 14, 2015

ஆல்ஃபிரட் வடிவமைத்த நியூயார்க் நகரின் பாதாள ரயில் திட்டம் !!!!!!!!

CMRL (Chennai Metro Rail Ltd) project director R Ramanathansaid claimed explaining that the CMRL structures are designed to last for 30 years, have been designed to last for 120 years
Chennai Metro
சமீபத்தில் அன்னை மாநகரில், ன்னிக்க சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் ஒரு வழியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சென்னையின் அதீத டிராஃபிக்கைப் போக்க இது உதவும் என்ற நம்பிக்கையில் மக்கள் மகிழ்ந்து போற்ற, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் போன்றோர் பயணமும் செய்து பார்த்தனர்.  இரு பெரும் க(ல)ழகங்களும் சொந்தம் கொண்டாட, பாகவும் தன் பங்குக்கு துண்டைப் போட்டு ஒரு இடம் பிடித்தது. 
New Train
தி.மு.க அரசால் திட்டமிடப்பட்டு, காங்கிரஸ் அரசால் ஒப்புதல் கொடுக்கப்பட்ட இந்த திட்டம் செயல்படத் துவங்கும்போது,  இந்த 2 கட்சிகளும் ஆட்சியில் இல்லை என்பது அவர்களின் சோகம்.
அரசியல்வியாதிகள் தலையையும் காலையும் பெரும்பாலான சயத்தில் கையையும் விடாமல் இருந்தால் இந்த மாதிரி திட்டமெல்லாம் எப்போதோ வந்திருக்கும். இருந்தாலும் இப்போதாவது சென்னைக்கு வந்தது எனக்குப் பெருமையாக இருந்தது.  
அதே சமயத்தில் நான் வாழ்கின்ற நியூயார்க் நகரத்தில் உள்ள சப்வே சிஸ்டத்தைப் பற்றி அறிந்து கொண்ட போது அந்தக் கொஞ்சம் பெருமையும் கரைந்து போனது. இந்த நியூயார்க் சப்வே சிஸ்டத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய 3 காரணங்கள் இருக்கின்றன. அதை கடைசியில் சொல்கிறேன்.
E Train- NY Subway
வழக்கம்போல படிக்க வசதியாக புல்லட் குறிப்புகளாகக் கொடுக்கிறேன்.  
1.    நியூயார்க் சிட்டி சப்வே, உலகத்தின் மிகப்பழமையான மெட்ரோ திட்டம். அது மட்டுமின்றி உலகிலேயே அதிகம்பேர் பயன்படுத்தும் திட்டமும் ஆகும்.
2.    இது 24 மணி நேரமும் 365 நாட்களும் இயங்கும் சேவை. 
3.    468 ஸ்டேஷன்களை கொண்டிருக்கும் இந்தச் சேவை உலகத்திலேயே மிகப் பெரியதாகும்.
4.    இது நியூயார்க் சிட்டியின் நான்கு பகுதிகளான (Boroughs) மேன்ஹாட்டன், புரூக்ளின், குயின்ஸ் மற்றும் பிராங்க்சை இணைக்கிறது. ஐந்தாவது பகுதியான ஸ்டேட்டன்  ஐலண்ட்க்கு  தனி ரயில்வே சேவை உள்ளது.
5.    656 மைல் (1056 கி.மீ) டிராக்குகளைக் கொண்ட இது 232 மைல் அதாவது 373 கி.மீட்டரை இணைப்பதால், உலகத்தின் மிக நீளமான மெட்ரோ ஆகும்.

6.    ஆண்டு முழுவதும் பயணம் செய்யும் மொத்தப்பயணிகளை கணக்கிட்டால் மேற்கத்திய நாடுகளில் முதலிடம் பெறுகிறது, உலக அளவில் இதற்கு ஏழாவது இடம்.
7.    பெய்ஜிங், சியோல், ஷங்காய், மாஸ்கோ, டோக்கியோ, குவாங்ஜோ ஆகிய மற்றவைதான் அந்த ஆறு முதலிடம் பிடித்தவை.
8.    2014-ன் புள்ளிவிவரப்படி ஒரு நாளில் குறைந்த பட்சம் 6.1 மில்லியன் அதாவது 61 லட்சம் பேர் இதில் பயணம் செய்கின்றனர்.
9.    மொத்த டிராக்குகளில் 60 சதவீதம் பூமிக்கடியில் இருக்கிறது (Underground)
10. இந்த அண்டர்கிரவுண்ட் திட்டத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் ஆல்ஃபிரட் தியாகராஜன் மன்னிக்க ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது, ஆல்ஃபிரட் ஈலை  பீச் என்பவர் (Alfred Ely Beach), 1869-ஆம் ஆண்டில்.  
11. இந்த அண்டர்கிரவுண்ட் வழித்தடங்கள் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது 1904-ல். அம்மாடியோய் ஏற்கனவே 110 ஆண்டுகளுக்கு மேல் ஆயிப்போச்சு. முதல் நாளிலேயே 1 லட்சத்து 50 ஆயிரம்பேர் இதில் பயணம் செய்தார்களாம். கட்டணம் அப்போது வெறும் 5 சென்ட் மட்டுமே.  
12. நியூயார்க் மாநகர அரசு நடத்தும் இந்த சப்வேயில் மொத்தம் 6384 வண்டிகள் ஓடுகின்றன.
13. இப்போது கட்டணம் $2.75. ஆனால் வெளியே வராமல் உள்ளேயே வண்டிகள் மாறி ,எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போய்க்கொள்ளலாம். வெளியே வந்து MTA பஸ்ஸில் ஏறினால் இலவச டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். ஐடியா என்னவென்றால் நியூயார்க் சிட்டியின் எந்த மூலைக்கும் வேலைக்குச் செல்பவர்கள் ஒரு பயணத்திற்கு $2.75க்கு மேல் செலவு செய்யவேண்டியதில்லை என்பதே.
அந்த மூன்று காரணங்கள் இப்போது
1.    முதற் காரணம் : வடிவமைத்தவர் பெயர் ஆல்ஃபிரட்.
2.    இரண்டாவது காரணம்: சப்வேயில் புதிதாக ஓடும் அல்ட்ரா மாடல் வண்டிகளை தயாரித்த "கவாசாக்கி ரெயில் கார்" என்ற கம்பெனியின் போர்ட்டலை பராமரிப்பது எங்கள் கம்பெனியான ஓபன்வேவ் கம்ப்யூட்டிங்.

3.    மூன்றாவது காரணம் : இதில் அனுதினமும் பயணம் செய்துதானே வேலைக்குச் செல்கிறேன்.
110 வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் நியூயார்க் சப்வே சிஸ்டத்தைப் பார்க்கும் போது, நம்நாடு எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்று தெரிவது மனதுக்கு மிகவும் வேதனையான விஷயம்.
இதற்குக்காரணம் இந்தியா ஏழைநாடு என்பதோ, மூன்றாம் உலக நாடு என்பதோ  அல்ல.
தொலைநோக்குப் பார்வையில்லாத சுயநலம் பிடித்த நமது அரசியல் வியாதிகள்தான்.

முற்றும்.

11 comments:

  1. அருமை ஐயா.

    வடிவமைத்த ஆப்ஃரெட் அவர்களுக்கும், நல்ல கட்டுரையை படிக்க கொடுத்த ஆல்ஃப்ரெட்டுக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி கிங் விஸ்வா .

      Delete
  2. இப்போதாவது வந்ததே என்கிற வகையில் சந்தோசம் தான்...

    புல்லட் குறிப்புகள் ப்ஷுஷுஷு... (பெருமூச்சு...!)

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. தகவல்களுக்கு நன்றி!!!
    அது உங்கள் போன ஜென்மம்'ஆக இருக்கும்.. மறுபிறவி எடுத்து நீங்கள் வடிவமைத்ததை அனுபவித்து பதிவு போட்டுவிட்டிர்கள்.. :)

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ இப்படி ஒரு கதை இருக்கா , அப்படி ஒண்ணும் ஞாபகம் இல்லையே நண்பா.

      Delete
  4. Super...
    Sir, Write more about 911, why that system is best in the world....
    please write..

    ReplyDelete
  5. Super...
    Sir, Write more about 911, why that system is best in the world....
    please write..

    ReplyDelete
    Replies
    1. Billa , I have written about 911 in this article sometime back. Pls click the following link

      http://paradesiatnewyork.blogspot.com/2013/04/nypd.html

      Delete
  6. ஐயா !! அந்த மூன்று காரணங்களில் உங்கள் பஞ்ச் உள்ளது !! :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஐயா , நீங்க சொன்னா சரிதான் ஐயா ஆரூர் பாஸ்கர் ஐயா .

      Delete