வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -5
திருமண
வாழ்க்கை :
ஒரு
ஆண்: டாக்டர், நீண்ட நாள் வாழ்வதற்கு
என்ன வழி?
டாக்டர்:
திருமணம் செய்யுங்கள்.
ஆண்:
உண்மையாகவா? அது உதவி செய்யுமா?
டாக்டர்:
இல்லை, ஆனால் நீண்ட நாட்கள் வாழும் ஆசை போய்விடும்.
###########################################
மனைவி:
ஏங்க நான் உள்ள வந்ததும் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கற?
கணவன்:
டாக்டர்தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.
·
திருமணம்
என்ற உறவில் ஒருவர் செய்வது எப்போதுமே சரியானவை, மற்றொருவர் கணவன்.
·
நாம் பேசும்
மொழி நமது தாய்மொழி என்று சொல்லப்படுகிறது, ஏனென்றால் தந்தைக்குத்தான் பேசுவதற்கு வாய்ப்பு
கிடைப்பதேயில்லையே.
·
கல்யாணத்துக்கும்
ஜல்லிக்கட்டுக்கும் என்ன ஒரு ஒற்றுமைனா, வளர்த்தவன் எஸ்கேப் ஆகிடுவான், அடக்க வர்றவன்
மாட்டிக்குவான்.
·
பெண்கள் நீண்ட,
மகிழ்ச்சியான, சமாதானமான வாழ்க்கை வாழ்கிறார்கள்,எப்படி? என்று கேட்டபோது ஒரு நொந்து
போன ஆண் சொன்னான், "ஏனென்றால் பெண்களுக்கு மனைவி கிடையாது", என்று.
மனைவி:-
ஏங்க இன்னக்கி நம்ம கல்யாண நாள், நாம என்ன செய்யலாம்?.
கணவன்:
எழுந்து நின்று ஒரு ரெண்டு நிமிஷம் மெளனமாக இருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
கணவனும்
மனைவியும் விவாகரத்து வாங்க நீதிபதியிடம் சென்றனர். நீதிபதி கேட்டார், "உங்களுக்கு
மூன்று பிள்ளைகள் இருக்கிறதே, எப்படி பிரித்துக் கொள்வீர்கள்”, என்று.
கணவனும்
மனைவியும் சென்றுவிட்டு நீண்ட நேரம் கழித்து மறுபடியும் வந்து, நாங்கள் “இன்னொரு பிள்ளையைப்
பெற்றுக் கொண்டு திரும்ப வருகிறோம்”, என்றார்கள்.
கதை
அதோடு முடிவதில்லை.
9 மாதங்கள்
கழித்து அவர்களுக்குப் பிறந்தது இரட்டைப் பிள்ளைகள்.
அட
மக்குப்புருஷா:
இரவு நேரம் மனைவியின் செல்போனில் பீப் என ஓசை வருகிறது
எடுத்துப் பார்த்த கணவன் கோபமாகி விட்டான்.” யாருடி இந்நேரத்திற்கு உனக்கு பியூட்டிபுல்னு
மெசேஜ் அனுப்பி இருக்கிறது?”, என்றான். அதற்கு மனைவி, “அட மக்குப்புருஷா அது பியூட்டிபுல்
இல்ல பேட்டரிபுல் “,என்றாள் மனைவி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இரவு டூட்டி முடித்து வீட்டுக்கு லேட்டாக
வந்தாள் மனைவி. மெதுவாக பூனை போல் வந்ததில், பெட்ருமில் இரண்டு கால்களுக்குப்பதிலாக
நான்கு கால்களைப் பார்த்ததும் மிகுந்த கோபப்பட்டு வெளியில வந்து ஒரு கிரிக்கெட் பேட்டை
எடுத்துச்சென்று இருவரையும் வாங்கு வாங்குன்னு வாங்கிவிட்டாள். டயர்டாகி வெளியே வந்து
பார்த்தால் கணவன் சோஃபாவில் படுத்திருந்தான். அவளைப் பார்த்து புன்னகைத்து, “ டார்லிங்
இரவு உன் அப்பா அம்மா வந்தார்கள், அவர்கள் வசதியாகத் தூங்க நம் பெட்ருமை கொடுத்துவிட்டு
நான் இங்கே படுத்தேன். அவர்களைப் பாத்து ஹலோ சொன்னாயா”, என்றான்.
அரசியல் :
தாத்தாவும்
ஆத்தாவும்:
மாட்டாம தப்பு பண்றது எப்படின்னு தாத்தாகிட்டயும், மாட்டினாலும்
தப்பிக்கிறது எப்படின்னு ஆத்தாகிட்டயும் கத்துக்கணும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வைகோ: செப்டம்பர் 15-க்குப்பிறகு மதிமுக விஸ்வரூபம் எடுக்கும்.
விஜய்காந்த்: மதிமுக விஸ்வரூபம் 2 எடுத்தால், தேமுதிக நரசிம்மா2 எடுக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மோடி
அரசு: தேர்தலுக்குமுன்:
Anti corruption
தேர்தலுக்குப்
பின் : Aunty
corruption
(வசுந்துரா, சுஸ்மா, ஸ்மிர்த்தி, ராணி, முண்டா)
கண்ணதாசனின்
அனுபவ மொழிகள் :
குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு
ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு
செய்கிறது.
கோர்ட்டுக்கு
வெளியே:
சல்மானோட
காரைச்சுத்தி பத்திரிக்கைக்காரர்கள் சூழ்ந்து கொண்டார்களாம். போவதற்கு வழி கிடைக்கவில்லை.
உடனே சல்மான்கான் டிரைவர் சீட்டுக்கு மாற, எல்லோரும் தெறித்து ஓடினார்களாம்.
வாட்ஸ்
அப் தத்துவங்கள்
·
நீங்கள்
நேற்றைய தினத்தை துரத்திக் கொண்டு இருந்தால் நாளைய தினத்தை தொலைத்து விடுவீர்கள்.
·
நீ
பறக்க விரும்பினால், உன்னை கீழே அழுத்தும் சுமைகளைத் துறந்து விடு.
·
துன்பங்கள்
நிலைப்பதில்லை, உங்க்களுடைய அனுபவப்புத்தகத்தில் கையெழுத்துவிட்டு அவை நகர்ந்து போகும்.
·
உங்களுக்குத்துன்பம்
வருகையில் உங்கள் சொந்தங்களும் நண்பர்களும் உங்களுக்குப் பின் நிற்பார்கள். சந்தேகம்
இருந்தால் உங்கள் திருமண ஆல்பத்தைப் பாருங்கள்.
·
உங்களுக்கு
எப்போது உண்மையிலேயே வயதாகிறது என்றால், எப்போது செய்வதை நிறுத்திவிட்டு நடந்தவைகளை
அசை போடுகிறீர்களோ அப்போது.
·
ஒரு
அழகான பெண் தினமும் வாக்கிங் போனால், குறைந்தபட்சம் 10 ஆண்களின் ஹெல்த் இம்ப்புரூவ்
ஆகும்.
·
அடிக்கடி
குட்டித் துக்கம் போடுவது முதிர்வயதாவதைத் தடுக்கும் குறிப்பாக கார் ஓட்டிச் செல்லும்
போது.
இன்னும் வரும்
>>>>>>>>>>>>>>>>
ஒரு முக்கிய அறிவிப்பு :
நண்பர்களே,
பன்னாட்டுத் தமிழ் மன்றமும் , உலகத்தமிழ் அறக்கட்டளையும்( www.worldtamiltrust.org ) இணைந்து நடத்தும் " உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு" வரும் ஜூலை மாதம் 25 . 26 தேதிகளில் , மேரிலாண்டில் இருக்கும் ஹோவர்ட் கவுண்டியில் உள்ள ஹாலிடே இன் கொலம்பியாவில் நடக்க இருக்கிறது .பெருங்கவிக்கோ வாமு சேதுராமன், அவர்கள் தலைமையில் உலகமெங்கிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்
ள்கிறார்கள் .இவ்விழாவில் பட்டிமன்றம் மட்டும் கவியரங்கத்தில் அடியேன் கலந்து கொள்கிறேன்.அருகில் வசிக்கும் ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் .
ReplyDeleteஅரசியல் ஜோக்கள் மிக அருமை
பட்டிமன்றத்தில் கலந்து கொள்வதற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழன்
Deleteஅந்த கூட்டம் அறிஞர்கள் கலந்து கொள்வதற்கான கூட்டம் அதனால் எனக்கு அங்கு இடமில்லை என அறிந்து கொண்டேண்
ReplyDeleteஇவ்வளவு தைரியமாக நானே போகும்போது , நீங்கள் வருவதற்கு என்ன ?
Deleteஐயா நீங்கள் பல பட்டம் பெற்ற அறிஞர். நானோ பல பூரிக்கட்டையால் அடிவாங்கும் சாதாரணமானவன்.
Deleteவிசு என்றால் இந்தியாவுக்கும் போகிறீர்கள் , நான் என்றால் உள்ளூருக்கும் வரமாட்டீர்கள் அப்படித்தானே .
Deleteஏற்கனவே எனக்கும் வாட்சப்பில் வந்தது நிறைய இருந்தாலும் இங்கே படிக்கும்போது... ஹா ஹா....
ReplyDeleteபட்டிமன்றத்தில் கலக்க வாழ்த்துக்கள் சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கார்த்திக் சரவணன்.
Deleteஅன்றைக்கு மட்டும் ஏன் மெளனமாக இருக்க வேண்டும்...? ஹா.... ஹா....
ReplyDeleteபட்டி மன்றம் சிறக்க வாழ்த்துகள்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteஆல்ஃபி. சார், பட்டிமன்றம் பற்றி தெரிந்தது, மகிழ்ச்சி. பட்டிமன்றம் சிறக்க வாழ்த்துகள்!!
ReplyDeleteபட்டிமன்றம் மட்டுமல்ல , கவியரங்கத்திலும் இருக்கிறேன் , நீங்களும் வாருங்களேன் பாஸ்கர்.
Delete