ஆஸ்டின் ,டெக்சஸ்
பயணம் -பகுதி-1
நானும் சதக்கும் அவசர அவசரமாக செக்யூரிட்டி
செக் முடித்து ஓடிப்போய் விமானத்தில் ஏறி உட்கார்ந்தோம். விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு,
சேஃப்டி இன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பித்த பின்பும் பாஸ்டர் ஜான்சனைக் காணோம். என்னாச்சு அவருக்கு?
என்னது முதலிலிருந்து சொல்லவா ? சரி இந்தா சொல்றேன்.
முகமது
சதக் குழுமத்தின் மென்பொருள் தொகுதியான “ஓபன்வேவ் கம்ப்யூட்டிங்” என்ற
நிறுவனத்தில் நான் சில வருடங்களாக வேலை செய்வது
உங்களில் பலருக்கு
தெரிந்திருக்கும். முகமது சதக் குழுமத்தில் மொத்தம் 17
கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. பல தொழில்கள், நிறுவனங்கள்(மொத்த டெர்ன் ஓவர்
பில்லியன் டாலர்கள் ) இருந்தாலும் ஒன்றுக்கொன்று எந்த தொடர்பும்
இல்லாமலே இருந்தது. மனிதவள மேம்பாட்டுத் துறையின் துணைத்தலைவராக நான் இருப்பதனால்,
முகமது சதக் கல்வி நிறுவனங்களின் மூலம் ஏதாவது பயன்பெற முடியுமா என்று யோசித்தேன்.
அப்போது
வந்த திட்டம்தான் "Student Exchange" திட்டம். அதாவது முகமது சதக் இஞ்சினியரிங் கல்லூரியில் கம்யூட்டர்
பிரிவை எடுத்துப்படிக்கும் மாணவர்கள் தங்கள் BE பட்டப்படிப்பை முடித்துவிட்டு
MS கம்யூட்டர் சயின்ஸ் படிக்க இங்கு வருவது. அவர்கள் MS முடித்த பிறகு, ஓபன்
வேவ் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும்.
இதன் மூலம் எல்லோரும் பயன் பெறுவர்.
1)
முகமது சதக்
இஞ்சினியரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி ஆரம்பிக்கும்.
2)
இத்திட்டத்தின்
மூலம் படிக்கும் மாணவர்கள், அமெரிக்காவில்
முதுகலை கிடைப்பதோடு, படித்துமுடித்தவுடன் வேலையும் கிடைத்துவிடும்.
3)
அமெரிக்காவில்
உள்ள கல்லூரிக்கு தொடர்ந்து மாணவர்கள் கிடைப்பார்கள்.
4)
ஓபன்வேவ்-க்கு தேவையான
மென்பொருள் பொறியாளர்கள் கிடைப்பார்கள்
எப்படி என்
திட்டம்? என்னுடைய பிரசிடன்ட் முகமது சதக்கிடம் இதைத் தெரிவித்த
போது, "ஆஹா இதை இதை இதைத்தான் நான்
எதிர்ப்பார்த்தேன்", என்று சொன்னார். அதோடு நல்ல கல்லூரிகள், பல்கலைக் கழகங்களோடு தொடர்பு கொள்ளச் சொன்னார்.
இதனைக்குறித்து
என்னுடைய ஆலயத்தின் ஆயர் (இம்மானுவேல் லுத்தரன் திருச்சபை, ஒயிட்ஸ்டோன்,
நியூயார்க்) The Rev. Dr. ஜான்சன் ரத்தினசாமியிடம்
பேசும்போது, அவர் உடனடியாகச் சொன்னார். "நாம வேற
எங்கயும் போகவேணாம். நம்ம லுத்தரன் யுனிவர் சிட்டி, ஆஸ்டின்,
டெக்சாஸில் உள்ளது. நான் பேசுகிறேன்", என்றார். அதன் பெயர் கன்கார்டியா
பல்கலைக்கழகம்.
Pastor Johnson |
பேசி
முடித்து,
எல்லோரும் விரும்பி வரவேற்று, ஆஸ்டினில்
உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு திட்டமிட்டு
டிக்கட்டுகள் புக் செய்தோம். முகமது சதக் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்தார்.
நான் பாஸ்டர் ஜான்சன், சதக் மூவரும் பயணம் செய்ய
வேண்டியதாக இருந்தது.
என்
வீடு, ஜான் கென்னடி ஏர்போர்ட்டுக்கு பக்கம் என்பதால் மற்ற இருவரும் என்வீட்டுக்கு
வந்து என் டிரைவ்வேயில் வாகனங்களை விட்டுவிட்டு அங்கிருந்து ஒரு கேப் எடுத்து
ஏர்போர்ட் செல்ல திட்டம்.
வெளியே
சரியான உறைபனி பெய்து கொண்டிருந்தது. மாலை ஆறு மணிக்கு விமானம். டொமஸ்டிக் என்பதால் ஒரு 2 மணிநேரம்
முன்னால் போனால் போதும். மதிய உணவுக்குப் பின்னர் நான் அலுவலகத்திலிருந்து கிளம்பி
வீட்டுக்கு வந்து பேக்கிங் முடித்து ரெடியாகும் போது மணி 3.00.
4.00 மணிக்கு சதக் வந்து சேர்ந்தார். சரியான டிராஃபிக் என்று சொன்னார்.
பாஸ்டர் ஜான்சனுக்கு போன் செய்தேன். "வேன்விக் எக்ஸ்பிரஸ்வேயில் (Vanwyk
express way) முழுதாக ஜாம் ஆகிவிட்டது, பம்ப்பர் டு பம்ப்பர்
டிராஃபிக்", என்று சொன்னார்.
4.20 வரை பார்த்துவிட்டு, சதக் சொன்னார்,"ஜான்சனுக்கு
வெய்ட் பண்ண வேண்டாம். நாம் முதலில் போய் விடலாம்.
விமானத்தை தவறவிட்டுவிடக் கூடாது",என்றார்.
நாங்கள்
இருவரும் கேப் (Cab) எடுத்து,
அவசர அவசரமாக உள்ளே நுழைந்தோம். சதக்குக்கு மட்டும் ஒரு செக்கின்
லக்கேஜ் இருந்தது. ஹோல்ட் ஆல் போல மிகப்பெரியது. வீலும்
இல்லை. அதனை தரத்தரவேன்று இழுத்துக் கொண்டு வந்தார். உள்ளே நுழையும்போது மணி 5.20 ஆகிவிட்டது.
செக்கின் செய்வதற்கு லேட் ஆகிவிட்டது, ஹேண்ட் லக்கேஜ் ஆகத்தான் எடுத்துச் செல்ல
வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். போர்டிங் பாஸ் மட்டும் வாங்கிவிட்டு
செக்யூரிட்டி செக் முடிக்கும் போது மணி 5.45. கேட் எண் 1 என்று சொன்னார்கள்.
1 என்றால் முதலில் இருக்கும் என்று நினைத்தால் அதுதான் கடைசியாக
இருந்தது.
இருவரும்
ஓடு ஓடென்று ஓடி கேட்டிற்குள் போனால், சீக்கிரம் போங்கள் மூடப்போகிறார்கள் என்றார்கள்.
என்
இதயத்துடிப்பு வெளியே கேட்கும் அளவுக்கு படபடவென்று அடித்தது. எங்களை இழுத்து
கிட்டத்தட்ட உள்ளே போட்டார்கள். மணி 6.05 எல்லோரும் எங்களையே
பார்த்தனர். விமானத்திலும் கடைசி இருக்கைகள் எங்களுக்கு.
சதக்கின் ஹோல்ட் ஆல் வேறு மேலே உள்ள கேபினில் நுழைய மாட்டேன் என்று அடம் பிடித்து.
ஒருவழியாக வேறு ஒரு இடம்பிடித்து உள்ளே நுழைந்து உட்கார்ந்தோம்.
“லாஸ்ட் கால்
ஃபார் ரேட் ஹினா சமி”, என்ற அறிவிப்பு தொடர்ந்து வந்தது. சதக்தான் கண்டுபிடித்தார்,
“ஆல்ஃபி உங்க ஆளைத்தான் கூப்பிடுறாங்க”, என்று.
பாஸ்டர் ஜான்சனின்
முழுப்பெயர் ஜான்சன் ரத்தினசாமி. இங்கே லாஸ்ட் நேம்தானே பயன்படுத்துறார்கள் என்பதால்
Rathinasamy என்பதைத்தான் Rat Hina samy என்று
அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர் பெயரை
இப்படிக் கொலை செய்வதை நினைத்து சிரிப்பதா
இல்லை ஃபிளைட்டை மிஸ் பண்ணிடுவாரோ ?, நாளை
மீட்டிங் நடக்குமா? என்ற வருத்தத்தில் அழுவதா என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்.
கேட்டிற்கு ஓடி வந்து கொண்டிருப்பதாக பாஸ்டர்
ஜான்சனிடமிருந்து டெக்ஸ்ட் வந்தது. ஓடிக்கொண்டே எப்படித்தான்
டெக்ஸ்ட் அனுப்பினாரோ என்று வியந்துகொண்டே
நானும்
ஓடிப்போய் அவர் வந்து கொண்டிருக்கிறார் என்று ஹோஸ்டசிடம் சொன்னேன்.
தொடரும் >>>>>>>>
All bread அப்புறம் Rat Hina samy வந்து சேர்ந்தாரா இல்லையா?
ReplyDeleteவர்ற திங்க கிழமை சொல்லிருவோம்ல , மருதைத்தமிலா ?
Deleteமுகமது சதக் குழுமம் தமிழக்கத்தின் கீழக்கரைகாரர் உடையதுதானே?
ReplyDeleteஎன்னது வீடு jfk பக்கதிலேயா இருக்கு? அப்ப ஏர்போட் டிரிப் வரும் போது சாப்பாட்டுக்கு அங்க வந்துட வேண்டியதுதான்
ReplyDeleteதாராளமா வாங்க மதுரைத்தமிழன். உங்களுக்குன்னு தனியாவா செய்யப்போறோம். அதே பழைய மீன் குழம்புதான்
DeleteJFK பக்கத்துலே வீடு Manhattan லேOffice, வண்டிய எட்றா பெருசு
ReplyDeleteஎட்றா பூட்டை சாத்ரா கேட்டை
Deleteஅப்படின்னு சொல்ல மாட்டேன் ,
தாராளமா வா பெரிசு
இன்னாது ... "ரேட் ஹினா சாமின்னு" கூப்பிடாங்கலா ? என் பெற கூட இப்படி தான் கொஞ்சம் சொதப்பி கூப்பிடுவாங்க, இருந்தாலும் அதை நான் கொஞ்சம் என்சாய் பண்ணுவேன். ஒன்னும் இல்ல ... விசுவாசம் என்ற பெயர அழகா விசு Awesomeன்னு கூப்பிடுவாங்க! எங்க போனார் அந்த பாஸ்டர் ""ரேட் ஹினா சாமி:?
ReplyDeleteஎன்னாது விசு ஆசமா ? விசு மோசம்னு கூப்பிடரதாவில்ல கேள்விப்பட்டேன்.
Deleteஆஹா, இதைத்தான் "துன்பம் வருங்கால் நகுக" என்று வள்ளுவர் சொல்லி வைத்துப் போனாரோ?
ReplyDeleteஏதோ பிறர் துன்பம் பார்த்து நம்ம சிரிக்கவேண்டும்கிற மாதிரி சொல்றீங்க ?
DeleteRat Hina Samy.... ஹா ஹா.... நம் பெயர் படும் பாடு! :)
ReplyDeleteபெரும்பாடுதான் வெங்கட்
Deleteஹா... ஹா... ஹா...
ReplyDeleteஹி ஹி ஹி
Deleteஆல்பி சார், அருமை. என்னுடைய LAST NAME பத்தி ஒரு நாவலே எழுதலாம்
ReplyDeleteஎழுதுங்க கவிஞரே உடனே .
Deleteரட் ஹின சமி... ஹா ஹா... தமிழ்க்கொலை....
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன் .
ReplyDelete