துப்பறியும்
பரதேசி - கதை 1
என்னுடைய வீட்டில் குடியிருந்த பின்னியின் மனைவி
கிஃப்டாவுக்கு பிறந்த நாள் என்று எங்களை ஒரு மதிய விருந்துக்கு அழைத்தார்கள். நான்
பலவித வேலைகளில் மிகுந்த பிஸியாக இருந்தாலும் (ஓசினா ஓடுவியேடா பரதேசி எதுக்கு, இந்த வெட்டி பில்ட்
அப் : வாடா மகேந்திரா லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டா வந்துருவியே )
லாங் ஐலண்ட் பகுதியில் உள்ள ஜப்பானிய ரெஸ்டாரண்ட்தான்,
பென்னிஹானா (Benihana) என்ற உணவகம். இது ஒரு புகழ்பெற்ற செய்ன் ரெஸ்டாரண்ட்.
டேபிள் எல்லாம் முதலியேயே புக் செய்திருந்ததால் எங்களை எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார்கள். நாங்கள் மொத்தம்
10 பேர் போய் மேஜையைச் சுற்றி அமர்ந்தோம்.
இந்த உணவகத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால், நாம் உட்காரும்
பெரிய டேபிளின் ஒரு பகுதி எலக்ட்ரிக் ஹாட்
ஸ்டவ். நாம் ஆர்டர் செய்யும் உணவுகளை நம் கண் முன்னாலேயே சமைத்துக் கொடுப்பார்கள். அதனை
வேடிக்கை பார்த்துக் கொண்டே சாப்பிடலாம்.
எங்களை வாசலில் வரவேற்ற ஒரு சப்பை மூக்கு ஜப்பானியப் பெண்,
ஒரு ஆளை அழைத்துக்கொண்டு எங்கள் டேபிளுக்கு வந்தது. அவர்
வெள்ளை வெளேரென்று உடை அணிந்து தலையில் "செஃப்" தொப்பியணிந்து
இருந்தார். “இவர்தான் எங்கள் ஜப்பான் செஃப் "செள"”, என்று அறிமுகப்
படுத்தினாள். அவரும்
குனிந்து ஜப்பானிய முறைப்படி வணக்கம் செலுத்தினர். நானும் எழுந்து அதே போல்
குனிவதற்குள், என் மனைவி என் சட்டையைப்
பிடித்து இழுத்தாள். "பேசாம உட்காரு, ஏற்கனவே முதுகு வலி, எங்கயாவது பிடிச்சிக்கப் போறது", என்றாள். அதுவும்
சரிதான் என்று நான் உட்கார்ந்து கொண்டேன்.
“செள"வை மறுபடியும்
பார்த்தேன் 'chow' என்று எழுதிய பேட்ஜை அணிந்திருந்தார். ஆனால் மூக்கு சப்பையாகவோ ஆள்
குட்டையாகவோ இல்லை.
ஆர்டரை எடுத்துக் கொண்டு, உள்ளே சென்று ஒரு குண்டானில் பொருள்களை எடுத்து வந்து
மடமடவென்று வேலையை ஆரம்பித்தார். சிறு கத்தியை எடுத்து மேலே தூக்கிப்போட்டு,
பிள்ளைகளுக்கு விளையாட்டுக் காண்பித்து விட்டு
வெங்காயத்தை குறுக்கும் நெடுக்குமாக
வெட்டி முடித்து கலைத்ததில் வெங்காயம் ஸ்டார் ஸ்டாராக வந்தது. “இது என்ன ஷேப்”, என்று கேட்டவுடன், நான் “ஸ்டார்”, என்று கத்தினேன்.
என் மனைவி உடனே, “உங்களையா கேட்கிறார் ?. பிள்ளைகளைத்தானே கேட்கிறார்”, என்று அமட்டியதும்
வாய்க்கு ஜிப் போட்டேன். அதன்பின் இன்னொரு வெங்காயம் எடுத்து வெட்டி
முடித்ததும், ஒரு சிறு குன்றுபோல் வந்தது. இன்னொரு இடத்தில் வெட்டிய ஸ்டாரை வைத்து
அதில் சிறிது எண்ணையை ஊற்றி பத்தவைத்தவுடன் அதிலிருந்து புகை
வர ஆரம்பித்தது. உடனே அந்த சிறு வெங்காயக் குன்றை அதன் மேல் கவிழ்க்க,
அந்த குன்றிலிருந்து லேசாக புகை வந்தது. “இது என்ன ?”, என்று கேட்டார். நான் கம்மென்று
இருந்து விட்டேன். பிள்ளைகள் உடனே வல்கேனோ (volcano) என்று
சொன்னார்கள்.
விளையாட்டுக்காட்டியது முடித்து, ஒவ்வொரு ஐட்டமாக செய்துவர நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம்.
மிகவும் சுவையாக இருந்தன. கண்முன் சமைப்பதால் எங்களுக்கு எப்படி வேண்டுமோ அவ்வாறே
கேட்டுப் பெற்றுக் கொண்டோம். உ-ம் 'இன்னும் கொஞ்சம் வேகட்டும்'.
ஜப்பானிய முறைப்படி செய்த பதார்த்தங்கள் அப்படியே இருந்தன.
சொன்ன பெயர்களும் அவ்வளவாய் தெரியவில்லை. ஆனாலும் எனக்கொரு சந்தேகம். இந்தாள் “செள”,
ஜப்பான் செஃப்தானா? என்று. என் சந்தேகத்தை என் மனைவியின் காதில் சொல்ல,
அவள் முறைத்ததில் வாளா இருந்து விட்டேன். ஆனாலும் இதனை
எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தேன். நான் எதிர் பார்த்த சந்தர்ப்பமும் விரைவில் வந்தது.
செள மேலும்
சில பொருட்களை எடுக்க உள்ளே நகர்ந்த போது, நைஸாக நானும் நழுவி பின் சென்றேன். செள தனியாக கிடைத்தபோது,
"கியா ஹாலாஜி" என்று
முதுகின் பின் தோளைத் தொட்டு சொன்னேன். "டீக்கேஜி",
என்று சொன்ன செள, திரும்பி என்னைப் பார்த்து நாக்கைக் கடித்துக்
கொண்டான்.
.
அதுக்கப்புறம் நான் வெற்றிப் புன்னகையுடன்
விசாரிக்க,நான் தெரிந்து கொண்டது என்னவென்றால்,
·
அவன் ஜப்பானியன் அல்ல.
·
அவன் ஜப்பானில் பயிற்சி பெறவுமில்லை.
·
அவன் ஒரு இந்தியன்
·
அவன் ஒரு பெங்காலி
·
அவன் பெயர் செளத்ரி.
மக்களே
யாரிடமும் சொல்லவேண்டாம்னு சொன்னான்.
முற்றும்
இங்க சில ஹோட்டல்களில் சைனீஸ் ரெஸ்டாரென்ட்னு போர்டு போட்டிருப்பாங்க... ஆனா சமைக்கிறது என்னவோ வடகிழக்கு மாநில சமையல்காரர்கள்... அவர்களைப் பார்த்து நாம் சைநீஸ்னு நினைத்துவிடுவோம்....
ReplyDeleteஹா ஹா... அங்கயும் ஏமாத்தறாங்களா?
அங்கேயும் இங்கேயும் எங்கேயும் இதுதான் நடக்குது கார்த்திக் சரவணன்.தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteஅட...! கண்டு பிடித்து விட்டீர்கள்...!
ReplyDeleteஆமா யார்ட்ட , எந்த ஊர் நாங்க ?
Deleteதங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.
பெங்காலின்ன உடனேயே “ কেমন আছেন আপনি?" கேட்டிருக்க வேண்டியதுதானே ???
ReplyDeleteஇது என்னா எழுத்து , கொடியில துணி காயப்போடற மாதிரி ?
DeleteSuperG.
ReplyDeleteThank you G
Deleteவழக்கம் போல் அலட்டல் இல்லாத நடை, அருமை சார்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பாஸ்கரன் சிவா .
Deleteஅருமை
ReplyDelete