Thursday, March 19, 2015

என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா?

NYC Subway R160A 9237 on the E.jpg        
நியூயார்க் சப்வேயில் அனுதினம் குயின்சிலிருந்து மேன்ஹாட்டன் வரை குறைந்தபட்சம் 11/2 மணி நேரப்பயணத்தில், நான் சந்தித்த விதவிதமான பெண்களிடம் நான் பேசிய, சொன்ன மற்றும் கேட்ட விவரங்களை இங்கு உங்களுக்குத் தொகுத்து தந்துள்ளேன்.
o   இந்த ஸ்னீக்கர் எங்க வாங்குனீங்க? கலர்புல்லா ரொம்ப ஸ்டைலிஷா இருக்கு
o   இந்த  புத்தகம் எங்கு கிடைக்கும்? Historical Fiction போல தெரியுது?
o   இந்தப் பேப்பரை படிச்சுட்டா தர்ரீங்களா?
o    ஏம்மா ரெண்டு ஆள் இடத்தை ஒரே ஆளே பிடிச்சுட்டா எப்படி?  
o   உங்க தூண் போல இருக்கிற தொடைகளை கொஞ்சம் சுருக்கி உட்கார முடியுமா?
o   தூங்கி தூங்கி என்மேல விழாதீங்க தாங்க முடியல? ஏற்கனவே என் தோள்ள தோல் மட்டும்தான் இருக்கு .
o   ஏம்மா அந்தப்புறம் திரும்பு, காலைல பல்லை விளக்காம வந்துட்டபோல?
o   ஏம்மா உன்கண்ணு ஒரிஜினலா இந்தக் கலர்தானா, இல்லை காண்டாக்ட் லென்சா?

o   ங்க என்ன பர்ஃபியூம் இது? சும்மா ஜம்முனு இருக்கு.
o   ஏங்க என்ன பர்ஃபியூம் இது, ஒரே நாத்தமா இருக்கு.
o   எம்மா என்னாது சாப்பிட்டிட்டு இருக்க, நாத்தம் குடலைபுடுங்குது.
o   ஆஹா என்ன அது மணக்கும் சிப்ஸ், எனக்குக் கொஞ்சம் தர்ரீங்களா?
o   பெண்ணே உனக்கு லிப்ஸ்டிக் சூப்பரா இருக்கு
o   பெண்ணே, கண்ணை சும்மா கசக்காத, பார் உன் கண்மை இளிப்பிக்கிச்சு,
o   ஏம்மா நீ illegally blond -ஆ இல்லை legally blond -ஆ?  
o   ஏம்மா காலை எடும்மா, உன்  ஹைஹீல் ஷூ  இருக்கிறது என் கால் மேலே. என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா?
o   ஏங்க உங்க விரல்ல போட்டு இருக்கிறது நெஜ வைரமா? என்ன இவ்வளவு பெரிசா இருக்கு?
o   ஏம்மா மாட்டுச்சங்கிலி மாதிரி இத்தனை பெரிசா போட்டிருக்கே. மஞ்சக்கலர்ல இருக்கு ஆனா தங்கம் மாதிரி தெரியலயே ?.
o   ஏம்மா நீ எந்தூரு, வெண்ணெயில ரோசாப் பூவைத்தூவுன மாதிரி ஒரு கலரு.
o   ஏம்மா உன் கன்னக்கதுப்புகள் ரொம்ப சிவப்பா  இருக்கே, அது இயற்கையா செயற்கையா?
o   ஏம்மா இப்படி பண்றீங்களேம்மா? இப்படி அறைகுறையா டிரஸ் பண்ணி உயிரை வாங்கிறீங்களே ?.

o   ஏம்மா இருமி இருமி என்மேல விடுற, உடம்பு சரியில்லைன்னா வீட்டில இருக்க வேண்டியது தானே?
o    ஏம்மா உன் நெயில் பாலிஸ் கலர் உனக்கு மேட்சா இல்லை.
o   ஏம்மா இந்த கூலிங் கிளாஸ் உனக்கு சூப்பரா இருக்கு.
o   சாரிம்மா உனக்கு என் இடத்தைத் தரமுடியாது, அவசரமா ஒரு blog  எழுதனும்.
o    இந்தியப் பெண்கள்தான் அழகுன்னு நீ மறுபடியும் நிரூபிச்சிட்ட?
o   ஏம்மா உன்னைப்பாத்தா தமிழ்ப் பொண்ணு மாதிரி இருக்கு, நானும் தமிழ்தான்.
connor-paolo-adelaide-kane

o   ஏம்மா காலங் காத்தால ஆபிஸ் போகும்போது நீங்க ரெண்டு பேரும் பச்சு பச்சுன்னு முத்தம் கொடுத்துக்கிறீங்களே, நாங்க ஆபிஸ் போய் வேலை செய்ய வேண்டாமா?
o    ஏம்மா ஷார்ட்ஸ்டை ஜட்டி  மாதிரி இவ்வளவு சின்னதா போட்டுட்டு ஏம்பக்கத்துல உட்காரியே, இதெல்லாம் நல்லதுக்கில்லை ஆமா சொல்லிட்டேன்.
o   ஏம்மா என்ன பாட்டு கேட்கிற ? ஒரே கெட்ட  வார்த்தையா வருது? ஐபாடை   இவ்வளவு சத்தமா வச்சு ,உங்காதுக்குள்ள போகவேண்டியது என் காதுக்குள்ள கேட்குது.
o   ஏம்மா என்னை அப்படி முறைச்சு முறைச்சு பார்க்கிற, எல்லாம் சரியாத்தானே இருக்கு?
o   ஏம்மா உன் ஏறு நெத்திக்கு, முடியை தூக்கி வாரக் கூடாது, சிறு வகிடு எடுத்து ரெண்டு பக்கம் விடு சூப்பரா இருக்கும்.
o   ஏம்மா உதட்டுல போய் வளையத்தை மாட்டி வச்சிருக்க, இதெல்லாம் இடைஞ்சலா இருக்காதா?.
o   என்னம்மா நீ இவ்வளவு உயரமா இருக்க, உனக்கு பையன் எப்படித்தான் கிடைப்பானோ?
o   ஏம்மா, என் முன்னால நின்னுக்கிட்டே தூங்கிறியேமா, மேலே  கீழே விழுந்து வைக்காதே.
o   கறுப்பா களையா இருக்கியே, உம்பேரு என்ன கிளியோபாட்ராவா?
o   ஏம்மா ப்ளீஸ் பாடாதே, பாட்டைக் கேட்கிறதோடு நிறுத்திக்கம்மா, தகரத்தில ஆணியை வச்சு கீர்ற மாதிரி இருக்கு?
o   ஏம்மா இந்த கண்ணாடி ஃபிரேம் யார் சூஸ் பண்ணது? நல்லாயில்லை உனக்கு.
o   ஏம்மா, ஊத்தவாயி மீனாட்சி, மூஞ்சி கழுவி நாளாச்சா?
o   ஏம்மா தயவு செய்து என் பக்கத்தில் உட்கார்ந்து மூக்கை நோண்டாதே?
o   எதுக்கும்மா காம்பேக்டை முகத்தில அப்புற, நீ தான் கலரா நல்லா இருக்கியே.
o   என் பக்கத்தில உட்கார்ந்து மேக்கப் போடாதம்மா, உனக்கு கோடி புண்ணியம்.
o   உன் லிப்கிளாஸ் தாடை வரை ஒழுகுது பார், ஒருவேளை ஜொள்ளோ?
o   ஏம்மா ரகசியமாச் சொல்லிரு, நீ தலையில் வைச்சிருக்கிறது விக் தானே?
o   ஏம்மா ஏன் இப்படி தலையில பச்சைக்கலர் ஜிங்குச்சான்னு டை அடிச்சு வச்சிருக்க ?.
o   ஏம்மா கருகருன்னு மீசை வருதே, கவனிக்கலயா?

நண்பர்களே, இந்தப்பதிவின் ஆரம்பத்தில் வரும் முதல் பாராவில் ஒரு சிறிய பிழை இருக்கிறது. அதனை கீழே உள்ளபடி மாற்றிப்படிக்கவும்
    சப்வேயில் அனுதினம் குயின்சிலிருந்து, மேன்ஹாட்டன் வரை குறைந்தபட்சம் 11/2 மணி நேர பயணத்தில், நான் சந்தித்த விதவிதமான பெண்களிடம் நான் பேச நினைத்த, சொல்ல நினைத்த கேட்க நினைத்த விவரங்களை இங்கு உங்களுக்குத் தொகுத்துத் தந்துள்ளேன்.

    இதே மாதிரி ஆண்களிடம் நான் கேட்ட கேள்விகளை, - என்ன மகேந்திரா, வேணாமா, உறுதியா வேணாமா சரி விடு.

முற்றும்

16 comments:

 1. மகேந்திரன் சொன்னதைக் கேட்காதீங்க ............

  ReplyDelete
  Replies
  1. மகேந்திரன் சொன்னதையும் கேட்கமாட்டேன்
   தருமேந்திரன் சொன்னதையும் கேட்கமாட்டேன்.
   யார் சொல்றதையும் கேட்கமாட்டேன்.
   ஏன் நான் சொல்றதை நானே கேட்கமாட்டேன்.

   Delete
 2. கட்ட கடைசில கட்டக்கறுப்ப வைச்சீறு பாரும் ஒரு டுவிஸ்ட்
  அங்கதான் நிக்கீங்னா தம +1 = 2

  ReplyDelete
  Replies
  1. வந்ததுக்கும் பாராட்டுக்கும் ,ஓட்டுக்கும் நன்றிங்க்னா .

   Delete
 3. நான் படிக்க ஆரம்பிக்கும் போதே..தப்ப கண்டு பிடிச்சிட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. தப்பு கண்டுபிடிக்கும் நண்பேண்டா.

   Delete
 4. நீங்க பேச நினைத்த, சொல்ல நினைத்த கேட்க நினைத்த நிறைய விவரங்களை எடிட் பண்ணி இங்கு நல்ல பிள்ளையாட்டம் எங்களுக்குத் தொகுத்துத் தந்து இருக்கிறிர்கள் என்பதுதான் உண்மை எங்களுக்கு அன் எடிட் விஷயம்தான் முதலில் வேண்டும் அதற்கு அப்புறம் ஆண்களிடம் கேள்வி கேட்க போங்கள்

  ReplyDelete
  Replies
  1. அத போன்ல சொல்றேனே

   Delete
 5. தங்கள் வலைப்பக்கத்திற்கு முதல் முறையாக வருகிறேன். அமெரிக்கப் பெண்களிடம் இப்படியெல்லாம் பேசலாம்போல என்று நம்பி ஏமாந்தேன். நல்ல மன அனுபவங்கள்.
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார் .நேரம் கிடைக்கும்போது மீண்டும் வாருங்கள் .

   Delete
 6. உங்களுக்கு புண்ணியமே கிடைக்காது போங்க....! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ மனசால நினைச்சாலுமா இது ரொம்ப அநிநாயம் .

   Delete
 7. Replies
  1. I understand your view Peppin, Just take it as humor point of view ONLY.Thanks for coming though.

   Delete
 8. நீங்க இவ்ளோ காலம் நியு யாக்ல இருந்தும் இன்னும் உங்க சிந்தனைகளளெல்லாம் நம்மூர்ல டீ கடையில் உக்காந்து பேசுற என் நண்பர்கள் சிந்தனையை ஒத்தே இருக்குங்க!

  "அழகும் ஆபாசமும் ட்ரெஸ் ல இல்லை அங்கிள். பார்க்கிறவங்க கண்கள்தான் இருக்கு"னு நம் "அம்மா" பட்டிக்காடா பட்டணமாவிலேயே சொல்லியும் நீங்க இன்னும் திருந்தல பாருங்க!

  ReplyDelete
  Replies
  1. "அழகும் ஆபாசமும் ட்ரெஸ் ல இல்லை . பார்க்கிறவங்க கண்கள்தான் இருக்கு",கரெக்ட். நல்லாத்தான் பேசுற வருண் .உன்னைப்போல் சீரியஸ் ஆட்களை எனக்கு ரொம்பப்பிடிக்கும்.
   நானும் ரொம்ப நாளா திருந்தத்தான் முயற்சி பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஆமா யார் சொன்னா நியூயார்க் வந்தா மாறிருவாங்கன்னு.

   Delete