"இந்தியன் அமெரிக்கன் கம்யூனிட்டி ஃபெளன்டேஷன் " என்ற
அமைப்பு நரேந்திர மோடி அவர்கள் ஐ.நா சபையில் உரையாற்ற வருவதை ஒட்டி ஒரு மாபெரும்
வரவேற்பு விழாவை நிகழ்த்த திட்டமிட்டனர்.
மூன்று மாதத்திற்கு முன்னால் திட்டமிட்டு PMvisit.org என்ற இணைய தளத்தை நிறுவி, நியூயார்க், நியுஜெர்சி,
கனக்டிக்கட் போன்ற மூன்று மாநிலங்களில் வசிக்கும் இந்தியரை திரட்டினர்.
இந்த வெப்சைட்டில் பல்வேறு இந்திய அமைப்புகள் தங்களை ரிஜிஸ்டர் செய்துகொண்டு,
தங்களது உறுப்பினர்களுக்கு தெரிவிக்கலாம். அதன்
நிலைத்தன்மையை உறுதி செய்தபின் ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு Code கொடுக்கப்பட்டது. அந்த கோடைப் பெற்றுக்கொண்டு உறுப்பினர்கள் நேரடியாக வெப்சைட் சென்று
விண்ணப்பித்தால், ரேன்டம் செலக்சனில்
தேர்ந்தெடுக்கப்பட்டு, உங்கள் அமைப்பின் தலைவரிடம் அனுப்பப்படும். தலைவர்
அவர்களுடைய உறுப்பினர்களை அடையாளம் காட்டி உறுதி செய்தபின் நுழைவுச்சீட்டுகள்
தலைவருக்கு அனுப்பப்பட, உறுப்பினர்கள் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வப்போது உங்களுக்கு ஈமெயில்கள் மூலம் தகவல் வந்துகொண்டே இருக்கும்.
இப்படி ஒரு முழுமையான கட்டுக்கோப்புடன் நிகழ்ந்த ரிஜிஸ்ட்டிரேஷன் பிராசஸ் மூலம்,
“நியூயார்க் தமிழ்ச்சங்கம்”,
ஒப்புதல் பெற்று, அதன் மூலம் அப்ளை செய்த எனக்கு அனுமதிச்சீட்டு கிடைத்து,
செப்டம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை காலை தலைவர் விஜய்குமார் அவர்கள் தலைமையில் ,சக தமிழ்ச்சங்க
நண்பர்களோடு ஒன்று சேர்ந்து “மேடிசன் ஸ்கொயர் கார்டன்”, அரங்கிற்கு 10 மணிக்கு வந்து சேர்ந்தோம். நியூயார்க் மிட்டவுனில் 32-ஆவது தெருவும் 7ஆவது அவென்யூவும் சந்திக்கும் முனையில் உள்ள Penn
Station பக்கத்தில்
இருந்த Madison
Square Garden அரங்கு
விழாக்கோலம் பூண்டிருந்தது.கூட வந்த
தமிழ்ச்சங்க சகோதரிகள் அனைவரும் சேலை உடுத்தியிருந்தனர்.
அதில் ஒரு சகோதரி "எங்களை மட்டும் சேலையை உடுத்தச் சொல்லிவிட்டீர்களே" நீங்களும் வேஷ்டி உடுத்தி வந்திருக்கலாமே, என்றார்கள்
"ஐயையோ நீங்கள் சேலை கட்டி வந்திருப்பது “கலாச்சாரம்”, நாங்கள் வேஷ்டி கட்டி தப்பித்தவறி
அவிழ்ந்துவிட்டால் அது அநாசாரம் ஆகிவிடும்",
என்றேன்.
பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த,
பல்வேறு அமைப்புகள் நன்கு
உடையுடுத்தி குதூகல கொண்டாட்டத்துடன் காணப்பட்டனர். மேளங்களை முழக்கியபடி சில
ஆடவர் சூழ்ந்திருக்க ஜொலிக்கும் ஆடையணிந்த பெண்கள் கும்மியாட்டம் போன்ற ஒன்றை சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தனர்.
திபெத்தைச் சேர்ந்த இரு குழுக்கள்,
தங்கள் பேனரைப் பிடித்தபடி நின்றிருந்தனர். வட அமெரிக்க தெலுங்கு
கூட்டமைப்பு அதனருகில் தங்கள் பேனருடன் நிற்க, ஆஹா பக்கத்து மாநிலம் என்ற பாசத்தில் நம் தமிழ் மக்கள்
சிலர் அவர்கள் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டனர்.
Tibet Group |
அரங்கின் வெளியே NDTV, TV Asia போன்ற நிறைய டெலிவிஷன் மீடியாக்கள் ஆட்களை பேட்டி எடுத்து லைவ்வாக ஒளிபரப்பிக்
கொண்டிருந்தனர்.
வரவேற்க திரளாக மக்கள் கூடியிருந்த அதே சமயத்தில் அவருடைய
வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களும் தனியிடம் ஒதுக்கப்பட்டு தனித்தனி
நேரங்கள் ஒதுக்கப்பட்டு பதாகைகள் தாங்கி கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
ஏற்கனவே சமூக அமைப்புகளின் மூலம் சரி
பார்க்கப்பட்டுவிட்டதால், செக்யூரிட்டி செக்கில் ID கார்டு கேட்கப்படவில்லை. வழக்கம்போல் செக்கிங் முடித்து நேராக உள்ளே சென்று மேலே மேலே
ஏறிச்சென்று அரங்கினுள் நுழைந்தோம். செல்லும் வழியெங்கும் மோடி டி ஷர்ட் போன்ற பல
இலவசங்கள் கிடைத்தன. பத்திரிகைகளின் சிறப்பு வெளியீடுகளும் போஸ்டர்களும்
விநியோகிக்கப் பட்டன.
Madison Square Garden |
18200 பேர் அமரக்கூடிய அரங்கு 10.30 மணிக்குள் முழுவதுமாக நிரம்பிவிட்டது. அவ்வப்போது “பாரத்
மாதா கி ஜே”, மற்றும் “மோடி மோடி”, என்ற கோஷங்களும் எழுந்து அடங்கின.
சரியாக 11 மணிக்கு கடவுள் வாழ்த்துடன், கலை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாக அமைந்தன. சக்தே இந்தியா, ரங்கோலா, ஜெயஹோ
ஆகியவற்றை ஃப்ளூரெசன்ட் உடை உடுத்தி ஆடினர்.
பத்மஸ்ரீ கவிதா கிருஷ்ணமூர்த்தி, தமது கணவர் L.சுப்ரமணியமும் அவரது மகனும் வயலின் வாசிக்க, “ஐ லவ் இந்தியா”,
“வைஷ்ணவ ஜனதோ” ஆகிய
பாடல்களைப்பாடினார்.
இதற்கிடையில் ஜோ ஹென்ரி என்ற ஆர்டிஸ்ட் மேஜிக் போல் சில
ஸ்ட்ரோக்குகளை வரைந்து தலைகீழாக திருப்பினால் மோடி வெள்ளைத்தாடியில் சிரித்தார்.
Joe Henry |
நிகழ்ச்சிகளை PBS ஆன்க்கர் ஹரி ஸ்ரீனிவாசனும் மிஸ் அமெரிக்கா 2014-நீனாவும்
தொகுத்து வழங்கினார்கள்.
அதன்பின் வந்திருந்த ஏராளமான கவர்னர்கள்,
செனட்டர்கள், காங்கிரஸ்மேன், காங்கிரஸ்வுமன்கள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு
அறிமுகப்படுத்தி முடிக்க, “மோடி மோடி” என்ற மக்களின் ஆரவாரத்தோடு செக்யூரிட்டிகள் புடை
சூழ கூப்பிய கரத்துடன் நரேந்திர மோடி உள்ளே வந்தார். மேடை ஏறி வணங்கிவிட்டு
மெதுவாக சுழலும் மேடையில் நின்று பேச ஆரம்பித்தார்.
மோடியின் எழுச்சி மிகு உரையிலிருந்து சில குறிப்புகள் :
1.
அமெரிக்கா ஓல்டஸ்ட் ஜனநாயக நாடு இந்தியா லார்ஜஸ்ட் ஜனநாயக நாடு.
2.
அமெரிக்காவில் உலகமெங்கிலும் இருந்து வந்து மக்கள் வாழ்கின்றனர். இந்தியர்
உலகமெங்கிலும் பரவி வாழ்கிறார்கள்.
3.
அகமதாபாதில் ஆட்டோ ரிக்சாவில் ஒரு கிலோ மீட்டருக்கு 30 ரூபாய் ஆகிறது. ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு ஏழு ரூபாய்
மட்டும் செலவழித்து மங்கல்யானை வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்துக்கு
அனுப்பியுள்ளோம்.
4.
முப்பது வருடத்துக்குப்பின் சிங்கிள் மெஜாரிட்டியுடன் ஆட்சி அதிகாரத்தை
கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அது சும்மா உட்கார அல்ல.
5.
உங்களின் எதிர்பார்ப்புகள் அதிகம். ஆனால் உங்களை தலைகுனிய விடமாட்டேன். 100 சதவீதம் உழைப்போம்.
6.
பாம்பாட்டிகளின் நாடு என்று வெளிநாடுகள் நம்மை நினைத்துக் கொண்டிருக்கும்போது
பாம்புகளை விட்டுவிட்டு இப்போது மெளசைப் பிடித்து உலகத்தை வழி நடத்திக்
கொண்டிருக்கிறோம்.
7.
பதவியேற்றதிலிருந்து 15 நிமிட ஓய்வும் இதுவரை எடுக்கவில்லை.
8.
21ஆவது நூற்றாண்டு ஆசியாவின் காலம். குறிப்பாக இந்தியாவின்
காலம். ஏனென்றால் எந்த நாட்டிலும் இல்லாதபடி 65 சதவீதம் இளைஞர்களைக் கொண்ட நாடு நம்நாடு.
9.
கம்யூட்டர் என்ஜினியர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் என்று உலகத்துக்கு சப்ளை செய்வது இந்திய நாடு.
10. சிறிய விஷயங்களிலிருந்து பெரிய காரியங்களை செய்ய
விரும்புகிறேன். நான் “டீ” விற்றுப்பிழைத்த சாதாரண ஆள்தானே.
11. “ஜன்தன் யோஜனா திட்டம்”, மூலம் 15 மில்லியன் புது பேங்க் கணக்குகள்
ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
12. Make
India - திட்டம் மூலம்
உங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறோம். இனிமேல் உங்களுக்கு ரெட்டேப் இல்லை,
ரெட் கார்பட் தான்.
13. 2022ல் நம் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது எல்லோருக்கும் வீடு
இருக்கத்திட்டமிட்டுள்ளோம்.
14. NRI
களுக்கு தலைவலியாக இருக்கும் PIO மற்றும் OCI இரண்டும் ஒன்றாக்கப்படும்.
15. PIO
கார்டு உள்ளவர்களுக்கு ஆயுட் கால விசா வழங்கப்படும்.
16. இந்தியாவில் வாழும் இந்திய வம்சாவளி அமெரிக்க குடிமகன்கள்
போலிஸ் ஸ்டேஷன் போய் கையெழுத்திடும் வழக்கம் நீக்கப்படும்.
17. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல்
வழங்கப்படும்.
18. மூன்று பெரிய அட்வான்டேஜ் நமக்கு இருகிறது.
Democracy
Demography
Distribution - 65% youth
Demand - Market
இதை வைத்து பொருளாதார முன்னேற்றம் பெறுவோம்.
19. தேவையில்லாத பழைய சட்டங்கள் நீக்கப்படும் கங்கை நதி
சுத்தப்படுத்தப்படும். இந்தியா முழுதும் சுத்தம் சுகாதாரம் பேணப்படும்.
20. எந்த ஒரு இந்தியத் தலைவருக்கும் கொடுக்காத மாபெரும் வரவேற்பை
எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் என்மேல் பேரன்பு வைத்திருக்கிறீர்கள்.
அதற்கு நான் கடன்பட்டிருக்கிறேன். அந்தக்கடனை நிச்சயமாக
திரும்பிச் செலுத்துவேன். பாரத்மாதாகி ஜே.
என்று முடிக்க
லட்சக்கணக்கான மூவண்ண பலூன்கள் மேலிருந்து மிதந்து வந்து பிரமிக்க வைக்க,
விழா இனிதே முடிந்தது.
மோடி சிறந்த பேச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார் .அவர் சொன்னதில்
பாதியை அவர் நடத்திக்காண்பித்தால் நீண்ட காலம் ஆள்வதற்கு வாய்ப்பிருக்கிறது
நிறைகள்:
1.
கட்சி அரசியல் அல்லது மதசார்புள்ள விழாவாக நடத்தாமல் ஒரு இந்தியத்தலைவரின்
வருகையை கொண்டாடும் விழாவாக நடத்தியது.
2.
மிக அருமையான முன்னேற்பாடுகள், விவரங்கள், கம்யூனிகேசன், நேரக்கட்டுப்பாடு ஆகியவை.
3.
மேடிசன் ஸ்கொயர் கார்டன் போன்ற ஒப்பற்ற அரங்கில் நடத்தியது.
4.
வளவளவென்று பலபேர் பேசாமல், நேரடியாக மோடி பேசியது.
5.
முஸ்லிம் அமைப்புகள் உட்பட எல்லா அமைப்புகளுக்கும் மாநிலங்களுக்கும்
பிரதிநிதித்துவம் கொடுத்தது.
6.
இந்தியில் பேசினாலும் சிறப்பான இடறல்கள் இல்லாத பேச்சு.
7.
TV ஸ்கிரீன்களில் அவ்வப்போது டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டது.
8.
NRI -களுக்கு தேவைப்படும் சில அறிவிப்புகளை வெளியிட்டது.
குறைகள்:
1.
அனுபவம் இல்லாத மொழிபெயர்ப்பவர் தவறாக டைப் செய்த சப்ஹெட்டிங்ஸ்.
2.
தவறுதலாக மோடி வருமுன் அமெரிக்க தேசிய கீதம்
இசைத்துவிட்டு பின்னர் மோடி வந்தபின் மறுபடியும் இசைத்தது.
3.
திரளாக வந்திருந்த கவர்னர்கள், செனட்டர்களுக்கு மோடி ஒரு நன்றிகூட சொல்லவில்லை, கண்டு கொள்ளவும் இல்லை.
நல்ல பதிவு. அங்கேயே சென்று அமர்ந்து பார்த்ததை போல் இருந்தது. எனக்கு என்னமோ இது எல்லாம் "Vulgar display of few's wealth" என்பது போல் தான் காட்சி அளித்தது. நாயகர் சொன்னது போல் நாலு பேர் நல்லா இருந்தா எதுவுமே தப்பு இல்லை. இவர் சொன்னது போல் முழு மஜாரிட்டி கொடுத்து மக்கள் உட்கார வைத்துள்ளனர். ஏதாவது நல்ல காரியம் செய்தால் புண்ணியம். இல்லாவிடில்... இவர் பேச்சும் ஏட்டு சுரைக்காய் போல் ஆகிவிடும்.
ReplyDeleteஎன்னையும் நண்பன் ஒருவன் லித்து கொண்டே இருந்தான். நான் இவர் 5 வருடம் ஆட்சி நடத்தட்டும், அதில் ஏதாவது நல்ல காரியம் அமைந்தால் 5 வருடம் கழித்து வருவார் அல்லவா, அப்போது கண்டிப்பாக வருகின்றேன் என்றேன். பதிவிற்கு நன்றி, வாழ்த்துக்கள்.
www.visuawesome.com
நல்லதே நடக்கும் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம் தம்பி .
Deleteநான் நீயூஜெர்ஸியில் உள்ள பலபேரிடம் குஜராத்திகளிடம் கூட கேட்டுவிட்டேன் யாராவது போகிறீர்களா என்று நான் பல பேரும் வேற வேலை இல்லையா என்று சொல்லிவிட்டார்கள் நீயூயார்கராண உங்களிடம் இமெயில் அனுப்பி என்ன நடந்தது என்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன். நான் கேட்பதற்கு முன்பாகவே மிக விளக்கமாக அருமையான பதிவுகள் போட்டு அசத்திவிட்டீர்கள்
ReplyDeleteஉங்கள் வஞ்சப்புகழ்ச்சிக்கு நன்றி .
Deleteசர்ச்சுக்கு போகாமல் இங்கு போனதற்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
18,200 இருக்கைகளும் எந்த குஜராத்தியும் போகததால் மற்றவர்களுக்கு இடம் கிடைத்தது.இதில் இருந்து அவர் குஜராத்திகளுக்கு மட்டும் தலைவர் இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தலைவர் என்று தெரிகிறது. (ஜனநாயகத்தின் படி நீங்கள் எதிர் கட்சிக்கு ஓட்டு அளித்தாலும் தேரிந்து எடுக்க பட்ட தேச தலைவர் தான் உங்களுக்கும்)
Deleteகுஜராத்திகள் வரவில்லை என்று சொல்லமுடியாது.ஆனால் அவர்தான் நம் அனைவருக்கும் தலைவர் என்பது நூற்றுக்கு நூறு உண்மை .தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Delete