நியூயார்க்
,மேன்ஹாட்டன் மறுபடியும் நம்பர் 1 என்று
நிரூபித்திருக்கிறது.
இந்தத்தடவைகமர்ஷியல் ரியல் எஸ்டேட் மதிப்பில்.
மேன்ஹாட்டன் என்பது ஒரு தீவு.
பெரும்பாலும் கமெர்சியல் பில்டிங்ஸ் அதிகமுள்ள இங்கு அபார்ட்மென்ட்களும்
இருக்கின்றன. ஆனால் விலையோ அல்லது வாடகையோ நான் வசிக்கும் ,குயின்சை ( Queens) விட குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகம்.
குயின்சைவிட பிராங்க்ஸ் –லிலும் ( Bronx) புரூக்ளினில் சில
பகுதிகளிலும் இன்னும் குறைவாகக் கிடைக்கும். ஆனால் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் இல்லை.
என்னுடைய அலுவலகம் மிட் டவுன் (Mid Town) மேன்ஹாட்டனில்
இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மேன்ஹாட்டனில்
அலுவலகம் அமைவது எல்லா பெரிய கம்பெனிகளுக்கும் ஒரு பிரஸ்டீஜ்தான். அதனால் தான்
குயின்சில் அல்லது ஜெர்சி சிட்டியில் அலுவலகம் அமைத்தால் இதைவிட பாதி செலவுதான்
ஆகும் என்றாலும் என்னுடைய பாஸ் 'முகமது சதக்' மேன்ஹாட்டனில் அலுவலகம் இருப்பதை மாற்ற மறுக்கிறார். ஒருவேளை அது
அவருடைய கனவாக இருக்கலாம். ஏனென்றால் அவருடைய அப்பா வைர பிஸினசில்
கொடிகட்டிப்பறந்த போது, இவர்களுடைய குடும்பத்துக்கு
மேன்ஹாட்டனில் ஒரு 'பென்ட் ஹவுஸ்' இருந்தது. பின்னர் இவர் தலையெடுக்கும் முன்னதாக விற்றுவிட்டதாகவும்
கேள்விப்பட்டேன். இன்றைக்கெல்லாம் இருந்தால் அதன் மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் இருக்கும்.
சரி
விஷயத்திற்கு வருவோம்.
சமீபத்தில் 'Trans
western' என்ற பிஸினஸ் குரூப்பும் 'Real Capital
Analytics' என்ற பிராப்பர்ட்டீஸ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து
நடத்திய சர்வேயில், மேன்ஹாட்டனில் ஆஃபிஸ் இடம் ஒரு சதுர
அடிக்கு $770 டாலருக்கு விலை போகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் இந்தியமதிப்பில் இது 46200 ரூபாய். இது
தலைநகர் வாஷிங்டன் DC-ஐ விட 40
சதவீதம் அதிகம். அதோடு மேன்ஹாட்டன் ரியல் எஸ்டேட் மொத்த
வால்யூமிலும் 11.2 பில்லியன் டாலர்களுக்கு
விற்றிருக்கிறது. அதுவும் இந்த ஆண்டில் ஜூலை 31 வரை உள்ள கணக்கு இது. இது
லாஸ் ஏஞ்சலஸ் நகரை விட $6.1 பில்லியன் அதிகம்.
Michael Slattery |
நியூயார்க் ரியல் எஸ்டேட் போர்டின்
மூத்த துணைத்தலைவர் மைக்கேல் சிலேட்டெரி (Michael Slattery,
Senior Vice President) சொல்லுகிறார். மார்க்கெட் நிலவரம்
திருப்தியாய் இருப்பதால் மிகப்பெரிய நிறுவனங்கள் மீண்டும் மேன்ஹாட்டனுக்கு
வருவதற்கு விரும்புகின்றனவாம். இரட்டைக்கோபுர சோக நிகழ்வுக்குப் பின் விழுந்துபோன
பொருளாதாரச் சிக்கலில், சில நிறுவனங்கள் இங்கிருந்து காலி
பண்ணி நியூஜெர்சி போனார்கள்.
இப்போது எப்படி நியூயார்க்
முன்னிலையில் இருக்கிறது என்ற புள்ளி விவரத்தைக் கீழே தருகிறேன்.
கமர்ஷியல்
ரியல் எஸ்டேட்டில் இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரைக்கும் ஆன மொத்த விற்பனை :
நியூயார்க் - $
11,221 – மில்லியன்கள்
லாஸ் ஏஞ்சலஸ் - $
5121 - மில்லியன்கள்
சேன் ஃபிரான்சிஸ்கோ - $
5033 - மில்லியன்கள்
பாஸ்டன் - $
4106 - மில்லியன்கள்
சிக்காகோ - $
2903 - மில்லியன்கள்
வாஷிங்டன் DC
- $ 2120 - மில்லியன்கள்
டாலஸ் - $
1726 - மில்லியன்கள்
சேன் யோசே - $
1593 - மில்லியன்கள்
ஃபிலடெல்பியா -$
1410 - மில்லியன்கள்
கமர்ஷியல்
ரியல் எஸ்டேட் சேல் கணக்கு ஒரு சதுர அடிக்கு
மேன்ஹாட்டன் - $770
வாஷிங்டன் DC
- $ 545
சேன்
ஃபிரான்சிஸ்கோ - $ 464
சேன் யோசே - $ 412
பாஸ்டன் - $
332
சால்ட் லேக்
சிட்டி - $ 292
ஆஸ்டின் - $
262
சியாட்டல் - $
231
இதையெல்லாம் படித்தவுடன்
இந்தியாவில் இருக்கும் என் பாஸுக்குக்கு ஒரு போன்
செய்தேன்.
"ஹலோ முகமட்?”
"சொல்லுங்க
ஆல்ஃபி"
"யு ஹேவ் எ
மினிட்
?"
"ஸ்யூர் கோ
எகட்"
"மார்க்கெட்
நிலவரம் நன்றாக இருக்கிறதாம்."
"குட்"
"ரியல்
எஸ்டேட் பீக்கில் இருக்கிறதாம்."
"வெரிகுட்"
"நம்ம
பிஸினசும் இன்னும் முன்னேற வாய்ப்பிருக்கிறது ".
" சௌண்ட்ஸ் கிரேட்."
"அதனால?”
"அதனால ?"
"சம்பளம்
கொஞ்சம் கூட்டினால்?”
"ஹலோ ஹலோ"
"ஹலோ முகமட்
கேக்குதா?”
"ஹலோ ஹலோ".
நீங்கள் தொடர்பு
கொள்ளும் வாடிக்கையாளர், தொடர்பு
எல்லைக்கு அப்பால் இருக்கிறார்.
முற்றும்
உங்க ஊர் நல்ல இருக்குன்னு மார் தட்டி கொள்ளுங்கள், பரதேசி அண்ணே, அதற்காக எங்க ஊர் பெயரை (லாஸ் அன்ஜெல்ஸ்) போட்டு அது கம்முன்னு குதி காட்டனுமா? நல்ல பதிவு. இருங்க, நானும் எங்க பாசுக்கு ஒரு போனை போடறேன்.
ReplyDeleteபுள்ளி விவரம் சொல்லுது , அதனால நீங்க கொஞ்சம் தள்ளி இருங்க தம்பி விசு
DeleteIthuku thaan manhattan appadiye "alleaka" thoooki jersey city ku pinnadi vaikanum nu solrean..yaar kekura?
ReplyDeleteஅதுக்கு ஹனுமன்தான் மறுபிறவி எடுத்து வரணும் முருகேஷ்
Deleteஎங்க பக்கத்து ஊர் "வாஷிங்டன் DC" "OC"யா தந்ததுக்கு மிக நன்றி!!! :)
ReplyDeleteஆஹா பரதேசிக்கு ஒரு நக்கீர "நண்பா" கிடைத்துவிட்டார்.வருகைக்கும் திருத்தத்துக்கும் நன்றி .
Delete