நியூயார்க்குக்கு பரதேசம் வந்து
சுமார் 15 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் நியூயார்க் எனக்கு ஓல்ட் யார்க்காக
மாறவில்லை. நியூயார்க்கில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் மற்றும் அதிசயங்கள்
இன்னும் ஏராளமாக இருக்கின்றன. எஞ்சியிருக்கிற என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும்
என்னுடைய தேடல் தொடரும். நடுநடுவில் வெளிநாடுகளுக்கும் போய் வர வேண்டும். உஷ்
அப்பாடா, இப்பவே கண்ணைக் கட்டுதே.
நியூயார்க்கின் நாளைய வரவு ஒபாமா என்று படித்தேன். ஆம்
ஜனவரி 2017ல் அவரது பிரசிடன்ட் பதவியின் இரண்டாவது டெர்ம் முடியும்போது, நியூயார்க்கில்
வந்து வாழ்வதாக முடிவெடுத்திருக்கிறாராம். நியூயார்க் மக்களுக்கு அதிக நிச்சயமாக மகிழ்ச்சி
அளிக்கக்கூடிய செய்திதான்.
ஒபாமாவுக்கும் எனக்கும் பத்துப்பொருத்தங்கள்
உண்டு.
1)
அவரும் நியூயார்க்கில் படித்தவர்.
2)
அவரும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
3)
அவரும் என் நிறம்தான்.
4)
அவரும் கிறிஸ்தவர்.
5)
அவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள்.
6)
அவருக்கும் சால்ட் பெப்பர் முடிதான்.
7)
அவரும் ஒருமுறை மட்டும் மணமுடித்தவர்.( ஹி ஹி இதுவரை)
8)
அவரும் சிறந்த பேச்சாளர்தான். (சரிசரி விடு ஒரு ஃ ப்ளோவில் வந்துருச்சு. நான் சுமாரான
பேச்சாளன்தான்.)
9) அவர் மனைவியும் என்
மனைவியும் முதல் பெண்மணிதான் (First Lady) அவர் நாட்டுக்கு, என் மனைவி வீட்டுக்கு (சின்ன
வித்தியாசம் தான்).
10)
அவர் பிரசிடன்ட், நான் வைஸ் பிரசிடன்ட் அவர் நாட்டுக்கு, நான் என் கம்பெனிக்கு, அவ்வளவுதான்.
அமெரிக்க அதிபர்கள் நியூயார்க்
வந்து தங்குவதும், இங்கேயே தங்கள் எஞ்சிய வாழ்க்கையைக் கழிப்பதும் புதிதல்ல.
1)
ஐந்தாவது அதிபர், ஜேம்ஸ்
மன்ரோ 1830ல் நியூயார்க் வந்து கடைசிவரை இங்குதான்
வாழ்ந்தார்.
2)
பதினெட்டாவது அதிபர், யுலிசஸ் கிராண்ட்
இங்குதான் இருந்தார். அவரது நினைவகம் ரிவர்சைட் டிரைவில் இருக்கிறது.
3)
21-ஆவது அதிபர், செஸ்டர் ஆர்தர் 1885ல்
நியூயார்க் வந்து இங்கு வாழ்ந்து மறைந்தார்.
4)
31-ஆவது பிரசிடன்ட், ஹெர்பர்ட்
ஹீவர் 1944ல் நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்து
இங்கு சுமார் 20 வருடங்கள் வாழ்ந்தார்.
5)
37-ஆவது பிரசிடன்ட், ரிச்சர்ட் நிக்ச ன்
1979ல் வந்து 18 மாதங்கள்
இருந்தார்.
Bill Clinton |
6)
42ஆவது பிரசிடன்ட், பில் கிளின்ட்டன் 2001ல் வந்து, இன்று வரை இங்குதான் வாழ்கிறார்.(என்னது மோனிகா எங்க இருக்கிறாரா ? இந்த குசும்புதான வேணாம்கறது)
Monica |
அடுத்த பிரெசிடெண்டாக வரப்போகும் ஹிலாரி கிளிண்டனும் இங்குதான் வாழ்கிறார்.
Hilary Clinton |
இப்போது 44-ஆவது பிரசிடன்ட் ஒபாமாவும் வரப்போகிறார். அதோடு குறைந்த வயதிலேயே
ரிட்டயர்டு ஆவதால், அவர் நீண்ட நாட்கள் நியூயார்க்கில் வாழப்போவது உறுதி.
அமெரிக்க அதிபர்கள் தங்களுடைய
பதவிக்காலத்தை விட அதை முடித்தபின் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். உலகமெங்கும்
சென்று நடத்தும் சொற்பொழிவுகளுக்கு மில்லியன் கணக்கில் கொடுக்க நாடுகள் தயாராகவே
இருக்கின்றன.
பழைய பிரசிடன்ட்களைப்பற்றி
கேள்விப்பட்ட போது, சிலர் வீடு வாங்குவதற்கும் சிலர் வாடகைக்கு வீடு
கிடைப்பதற்கும் கஷ்டப்பட்டார்களாம். ஏனென்றால் "கோஆப் "
அல்லது "காண்டோமினியம்" என்று அழைக்கப்படுகிற அபார்ட்மென்ட்களில் அந்த ஓனர்களின் போர்ட் நினைத்தால் யாருக்கும் இல்லையென்று சொல்கிற
உரிமை இருக்கிறது. காரணத்தையும் சொல்லத்
தேவையில்லை.
பழைய பிரசிடன்ட்கள் வந்தால்
செக்யூரிட்டி பிரச்சனைகள் வரும், அது
பெருந்தொல்லை என்று நினைத்து அவர்கள் கொடுக்க மறுத்திருக்கலாம்.
ஒபாமாவுக்கு அதுமாதிரி ஏதும்
பிரச்சனை வந்தால், அவருக்கு என்னுடைய ஓபன் ஸ்டேட்மென்ட்,
எதற்கும் கவலைப்பட வேண்டாம். என் வீட்டில் குடியிருக்கும்
ஆந்திரா பார்ட்டியை அனுப்பிவிட்டு, உங்களுக்கு என்
வீட்டைக் கொடுக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். அட்வான்ஸ், ஆணியடித்தல்,
முறை
வாசல் (ஸ்னோ தள்ளுவது) என்பதனைப் பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம்.
ஏன் என்றால்
,உசிலம்பட்டியில் நிரூபிக்கப்பட்ட DNA படி
ஒபாமா என் இனமடா.
பத்துப்பொருத்தங்கள் சூப்பர். முறை வாசல் அங்கேயும் இருக்கா???
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா.முறை வாசல் என்று நான் சொன்னது ஸ்னோ தள்ளுவதை.
Deleteஆஹா.... உங்கள் வீட்டிலே தங்க வைக்கலாம்...
ReplyDeleteமுறை வாசல் - அது பத்தி இப்போ என்ன கவலை! :)
உங்களுக்குபுரிந்த மாதிரி அவருக்கும் புரியும் என நினைக்கிறேன்.
Deleteபதிவின் இடையிடயே வெளிப்பட்ட தங்களது குறும்புகளை ரசித்தேன்....
ReplyDeleteஸ்கூல் பையனுக்கு மட்டும்தான் குறும்பு செய்ய வருமா ?
Deleteஎங்களுக்கும் கொஞ்சம் வரும்ல !!!!!!!!
anna ,
ReplyDeleteHa ha a
Nalla writing . ..
Nalla sense of humor ungalluku..
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி kalil.
Delete