Thursday, October 24, 2013

தமிழா தமிழா நாடும் உன் நாடே !!!!!!!!!!!!

பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்




        "பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்" என்ற தேவநேயப்பாவாணர் இயற்றிய அரிய புத்ததத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய ஆலயத்தின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் முனைவர் சுந்தரமணி லூயிஸ் சைமன் அவர்கள் கொடுத்தார்.
        "மொழி ஞாயிறு" என்ற பட்டம்பெற்ற தேவநேயப் பாவாணர் கி.பி.1902ல் சங்கரன் கோவிலில் பிறந்து 1981ல் மறைந்தவர். 35 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கும் இவரை "தனித்தமிழ் இயக்க"த்தின் தந்தை எனலாம். பல தமிழ் வார்த்தைகளின் மூலத்தையும் வேரையும் ஆராய்ந்து சொல்லகராதி அமைத்தவர். தமிழ், உலகின் மிகப்பழைய "இயல் மொழி" என்பதோடு "தொல்மொழி" என்று தன் ஆராய்ச்சியால் நிரூபித்தவர். அவர் எழுதிய "இசைக்கலம்பகம் " மற்றும் வெண்பாக்கள் அவருக்கு "செந்தமிழ்ச்செல்வர்" என்ற பட்டத்தை வாங்கித்தந்தது (1979 - தமிழ்நாடு அரசு)
        சென்னையிலுள்ள மாவட்ட தலைமை நூலகத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அந்தப்புத்தகத்தில்  நான் தெரிந்து கொண்ட வியக்க வைக்கும் உண்மைகள்.
இந்திய நாகரிகம் தமிழர் நாகரிகமே !
        வேத ஆரியர், மேலை ஆசியாவினின்று இந்தியாவுக்கு வந்த காலம் கி.மு.2000-1500. அவர்கள் ஆடுமாடு மேய்க்கும் நாடோடிகளாய் இருந்தனர். அவருக்கு இலக்கியமோ, எழுத்தோ இல்லை. பேசிய மொழி கிரேக்க மொழிக்கு இணையாகவும், பழம் பாரசீகத்திற்கு நெருங்கியதாகவும் சொல்வளமற்று இருந்தது. இந்தியாவுக்கு வந்தபின்தான் அவர்கள் “இருக்கு” வேதத்தை படைத்தனர். அவ்வேத மொழி வட இந்திய பிராகிருதத்தையும் திராவிடத்தையும் தழுவியது.
        இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரோடு தொடர்பு கொண்டு பண்டைத்தமிழ் நூல்களையெல்லாம் மொழி பெயர்த்துக் கொண்டனர் அதோடு பண்டைத்தமிழ் நூல்களையும் வரலாற்றையும் அழித்ததும் அவர்களே.

தமிழர் தோற்றம்
        முழுகிப்போன குமரிக்கண்டத்தில் 50,000 ஆண்டுகட்கு முன்னரே தமிழ் தோன்றியது.    தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்கு முன். தமிழ் இலக்கணம் தோன்றியது கி.மு.10000 ஆண்டுகட்கு முன்.
தமிழர் நாகரிகம்
        கி.மு.3000 லேயே ஆடை நெய்து உலகத்தவர்க்கு ஏற்றுமதி செய்தவர் தமிழர். (Mohenjo - Daro and the Indus civilization by Sir John Marshal)
பொருள் இலக்கணம்
       தமிழன் பொருள் இலக்கணம் ஆரிய வருகைக்கு 8000 வருடங்கள் முற்பட்டது.
உதட்டுச்சாயம்
        உதட்டுக்குச் செஞ்சாயம் ஊட்டியது முதன்முதலில் தமிழ்ப்பெண்களே.
        இலவிதழ்ச் செவ்வாய் (சிலப்பதிகாரம் 14:136)
        கொவ்வைச் செவ்வாய் (திருவாசகம் 6:2)
        துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவகசிந்தாமணி-550)

பரிசம் (Dowry)
        மணமகன் அல்லது அவன் வீட்டார் மணமகளுக்கு பரிசம் கொடுப்பது பண்டைய தமிழர் வழக்கம்.மணமகள் மணமகனுக்கு பரிசும் கொடுப்பது பிற்காலத்தில் வந்த அநாகரிக மானங்கெட்ட ஆரியர் வழக்கம்.

இந்தி மொழியின் மூலம் தமிழ்
        வடநாட்டுப் பழந்திரவிடமாகிய திரிமொழியே பிராகிருதமென்றும் சூரசேனிப்பிராகிருத வழிவந்த சிதை மொழியே இந்தி என்பதை ஆதாரங்களுடனும் விளக்குகிறார் ஆசிரியர். பல சமஸ்கிருத சொற்களின் மூலமும் தமிழே என் விளக்குகிறார்.

சிவன் வந்த கதை
ஐந்திணைத் தெய்வங்கள்
        குறிஞ்சி - சேயோன்
        முல்லை - மாயோன்
        பாலை - காளி
        மருதம் - வேந்தன்
        நெய்தல் – வாரணன்

        சேயோன் என்றால்  சிவந்தவன் என்று பொருள். முருகன், வேலன் குமரன் என்ற பெயர்களும் இவனுக்குண்டு. சிவன் என்பது சேயோன் என்பதன் திரிபு. பிற்காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கி தந்தையும் மகனுமாக ஆக்கிவிட்டனர். சிவன் என்று ஆரியத்தெய்வம் எதுவுமில்லை.

தமிழில் இருந்த வந்த ஆங்கிலப் பெயர்கள்.
நாவாய் - Navy
சீலை - Sail
கட்டுமரம் - Catamaran
அரிசி - Rice
நங்கூரம்  - Anchor
இஞ்சி - Ginger
திப்பிலி - Pepper
பருத்திக்கொட்டை - Cotton
நாரத்தம் - Narange - Orange
தேக்கு - Teak
கோழிக்கோடு துணி - Calico
காசு - Cash
அம்மே - Mummy
அப்பா - Pappa
அரசன்/ராயன்/ராயலு/அரையன் - Royal

தமிழரின் வான நூல் திறமை (Astrology)
        ஏழு கோள்களின் பெயரால் ஏழு நாட்கிழமைகளை முதன் முதலில் பயன்படுத்தியவர் தமிழரே.
      
        பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்
        பாவாணர் தமிழ்க்களஞ்சியம்-26
        வெளியீடு -      தமிழ்மண் அறக்கட்டளை
                        பெரியார் குடில்
                        பி-11 குல்மோகர் குடியிருப்பு
                        35 செவாலிய சிவாஜி கணேசன் சாலை
                        தியாகராயர் நகர் சென்னை -600017.

                        www.tamilmann.in.

4 comments:

  1. நல்லதொரு நூல் அறிமுகம் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐயா..

    ReplyDelete
  3. தமிழ்க் குறித்த தேவநேயப் பாவாணரின் புத்தகங்களை வாசித்தது உண்டு. அவர் பல மேனாட்டு புத்தகங்களை வாசித்தும், இந்திய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தமையும் விளங்கும். ஆனால் அவரின் குமரிக் கண்டம், தமிழ் இலக்கணம் 10,000 ஆண்டு என்பது எல்லாம் நிரூபணம் இல்லாத செவி வழிச் செய்திகளை ஒட்டி எழுதியவை. பிராகிருதம் என்பது திராவிடம் உட்பட உள்ளூர் மொழிகள் இணைவாலும், இரானிய மொழி இணைவாலும் எழுந்த ஆரிய மொழி. அதனை சீர்படுத்தியே ஆரியர் சமற்கிருதம் படைத்தனர். அவரது பல தகவல்கள் வியக்க வைத்தாலும் சில ஆதாரமற்றவை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி விவரணன் நீலவண்ணன்.
      ஆதாரங்களை விட்டுச்செல்வதிலும்,இலக்கியங்களை பாதுகாப்பதிலும் ,தமிழர்
      என்றுமே பின்தங்கித்தான் இருந்தனர் எனபது வெட்ட வெளிச்சம்.குமரிக்கண்ட வரலாற்றை ஒட்டியே , தமிழ் மொழி வரலாறை இணைத்து பாவாணர் சொல்கிறார்.

      Delete