அவர் தன் டிரேட் மார்க் புன்னகையுடன் வெள்ளைப்பற்கள்
பளிச்சிட ," வாங்க தம்பி நல்லா இருக்கீகளா? " என்றார், தன் மதுரை வட்டார
வழக்கில்."ஐயா, நான் தமிழ் இலக்கியம்
படிக்க விரும்புகிறேன்" என்றேன் . அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டாது, என்னென்ன
பாடங்கள் படிக்கவேண்டும் என்ற அட்டவணையைக் காட்டச் சொன்னார். ஏன் அவர் அவ்வளவு சிரத்தை
காட்டவில்லை என குழப்பமாக இருந்தது.
சௌபா அழைத்துச்சென்று காட்டிய சிலபஸ்லும்,
சில புத்தகங்களிலும், எழுத்துக்கள் தமிழில் இருந்தாலும் ஒண்ணும் விளங்கல. அதுல ஒண்ணு “நன்னூல் சூத்திரம்”. இந்த கணக்கு, சூத்திரம் எல்லாம்
வேணாமுன்னு இங்கே வந்தா இங்கேயும் சூத்திரமா?
என்று நெனச்சி ஆத்திர ஆத்திரமா வந்துச்சு.
அப்புறம் மிஞ்சியிருந்தது ஆங்கில இலக்கியம்
மட்டும்தான். அதைப்பற்றி என் ஹாஸ்டல் நண்பன் கம்பம் சையதுட்ட விசாரித்தபோது அவன் சொன்னான்.
“டே பேசாமா வாடா, இங்க நல்லாயிருக்கு”. “உனக்குப் பிடிச்ச பொயட்ரி, அப்புறம் நாவல்,
டிராமா எல்லாம்
இருக்குன்னு சொல்லவும், சரியின்னு மனசைத்தேத்திக்கிட்டு
ஆங்கில இலக்கியம் படிக்கலாம்னு முடிவு செஞ்சேன்.
எங்க சொந்தக்காரர்தான் அங்கே ஹெட் கிளர்க்.
அவர்ட்ட போய்ச்சொன்னதும், "மேத்ஸ் நல்ல சப்ஜக்ட். ரொம்ப கஷ்டப்பட்டு உனக்கு இடம்
வாங்கினேன்னு" சொன்னார். "இல்ல மாமா நான் ஆங்கில இலக்கியமே படிக்கிறேன்னு"
சொன்னேன். “அப்பாட்ட கேட்டுட்டியான்னு”? சொன்னார். அதெல்லாம் கேட்டாச்சுன்னு ஒரு பொய்யைச்
சொன்னேன். இப்ப ரெண்டு வாரம் ஆனதால மியூசுவல்
எக்ஸ்சேஜ்தான் பண்ணமுடியும். ஆங்கில இலக்கியம் படிக்கும் யாராவது ஒருவர் மேத்ஸுக்கு
வரவிருப்பப்பட்டால், மாறிக் கொள்ளலாம்னு சொன்னார்.
இதென்ன புதுக்கதைன்னு குழம்பி சையதுட்ட சொன்னேன்.
அவன், “இன்டர்வல் டைம்ல வா, இதை கிளாஸ்ல அநெளன்ஸ் பண்ணுவோம்”னு சொன்னான். அப்படியே
தயங்கி தயங்கி போய்ச்சொன்னபோது, எதிர்பாராத விதமா ஏகப்பட்ட பேர், நான் நீன்னு போட்டி
போட்டாய்ங்க. ஸ்பெஷல் மாத்ஸ், அப்படியென்ன ஸ்பெஷல்னு நெனைச்சேன். நிறையப்பேர் மேத்ஸ்,
சயின்ஸ் கிடைக்காம அங்க சேர்ந்திருந்தாய்ங்க.
அவர்களையெல்லாம் சாயந்திரம் என் ரூமுக்கு வரச்சொல்லி,
ஒரு இன்டர்வியூ வச்சு, கடைசியா தங்கராம்னு ஒருத்தனை செலக்ட் செய்தேன். ஒரு நூறுதடவை
அவன் தேங்ஸ் சொன்னான். அப்புறம் அவன்ட்டயே ஒரு லெட்டர் எழுதச்சொல்லி, நாங்க ரெண்டு
பேரும் கையெழுத்துப் போட்டு மாமாட்ட கொடுத்தோம். அவரும் மாத்திவிட்டார். அதனால
81MAT01 என்பது 81ENG35 ஆயிப்போச்சு.
நானும் கிளாஸ்க்கு பெருமையா போனேன். அங்க பூரா
வெள்ளைக்காரன் மற்றும் வெளிநாட்டுக்காரன்தான் இருந்தாய்ங்க. பேரைச்சொன்னா உங்களுக்கே தெரியும்.
Glen Chatlier
,Mehzerd Poostchi , Lazares ,Jude Gonsolvez
இன்னும் எல்லாம் பணக்காரப்பசங்க.
துறைத்தலைவர் பால் லவ்வுன்னு (Paul Love) ஒரு
அமெரிக்கன். எல்லாரும் இங்கிலிஸ்ல பிச்சு உதறினாய்ங்க. எனக்கு, என்னடாது சோதனை, நம்ம
என்ன எந்த சப்ஜக்டுக்கும் லாயக்கில்லையானு நெனைச்சேன். அப்புறம் கம்பம் சையதும் சுபாஸ்
ஜெயனும் (இப்ப ஹிண்டுவில சப் எடிட்டர்) தான் தேத்திவிட்டாய்ங்க. ஒரு வழியா அரியர்ஸ்
இல்லாம தேறி வந்துட்டேன்.
பரவால்லியே சேகர்,
அமெரிக்கன் கல்லூரியில ஆங்கில இலக்கியம் படிச்சுட்டு, அமெரிக்காவுக்கே வந்துட்டியே.
வெரிகுட். ஆமாம் அந்த தங்கராம் அப்புறம் என்ன ஆனாரு?
வெளியே சொல்லாதே, மூனு வருஷத்தில முப்பது அரியர்ஸ்
வச்சு இன்னும் முடிக்கமுடியாம, என்னைத்தேடறானு
கேள்விப்பட்டேன். அவன்ட்டருந்து தப்பத்தான் அமெரிக்காவிக்கு ஓடி வந்தேன்.
ஓஹோ அதான் விஷயமா ? சரி அதை விடு “சாலமன் பாப்பையா
செய்த சதின்னு கதை விட்டியே அது என்னான்னு
சொல்றா சீக்கிரம்” .
“யார்டயும் சொல்லாதே
மகேந்திரா? என் முகத்தைப்பார்த்தவுடன் அதில் நிரம்பி வழிந்த அறிவுச்சுடரைப்பார்த்து,எங்கே தமக்குப் போட்டியா
வந்துருவான்னு நெனைச்சு தமிழ் இலக்கியம் படிக்க விடாம பாப்பையா சதி செஞ்சுட்டார்”.
தொடர் முடிந்தது,ஆனால்
லொள்ளு தொடரும்.
பின் குறிப்பு :
நண்பர்களே வரும் அக்டோபர் 20, 2013 அன்று நியூ ஜெர்சியில் நடக்கும் பட்டிமன்றத்தில் அடியேன் பேசுகிறேன் .பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும் இந்த "கல்யாணமாலை" பட்டிமன்றத்தில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் அணித்தலைவர்களாக பங்கு கொள்கிறரர்கள்.இந்த நிகழ்ச்சி பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பப்படும் . அருகில் வசிப்பவர்கள் வாங்க பழகலாம் . விவரங்களுக்கு சொடுக்கவும் www.njtamilsangam.net .
சன் டிவி-யில் பார்க்கிறோம்... தகவலுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்.
ReplyDeleteஅடடா... சாலமன் ஐயா இப்படி சதி செஞ்ச்சுப்புட்டாகளே...
ReplyDeleteஅப்புறம் அவுகளை பழி வாங்கினீகளா இல்லையா?
(சன் ட்டீ.வி.இல பேசப்போறதை பதிவு செஞ்சு இந்தப்
பக்கத்திலே போடுங்க...)
மேடையில் ஏறி அவரை மொக்கை போடப்போறேன் .
Deleteநன்றி NIZAMUDEEN.
அட போங்கண்ணே. ஒரு வாரம்மா பாப்பையா என்னா சதி பண்ணாருன்னு காத்திருந்தா....? மணி ரத்தினம் படம் போல பில்ட் அப் நல்லா கொடுத்து இப்படி புஸுன்னு பண்ணிடிங்களே.
ReplyDeleteஎன்னாவோ தெரியலை தம்பி, நம்ம பில்ட் அப் எல்லாமே புஸுன்னு போயிருது .
Deleteஅண்ணே உங்க அனுமதியுடன் பாப்பையா அய்யா அவர்களின் பட்டிமன்றத்தில் அடியேன் பேச்சை இங்கே பதிவு செய்கிறேன்.
Deletehttp://www.youtube.com/watch?v=IEcnEX0yj6Y
தாரளமாக ,. வாங்க பேசலாம் , பழகலாம் .
Deleteநல்லா தலைப்பைப் போட்டு எங்களை எல்லாம் படிக்க வச்சிட்டீங்களே சூப்பர் ஐடியா தான் நல்லாவே எழுதியிருக்கீங்க
ReplyDeleteநன்றி Viya Pathy.
Delete“அப்பாட்ட கேட்டுட்டியான்னு”? சொன்னார். அதெல்லாம் கேட்டாச்சுன்னு ஒரு பொய்யைச் சொன்னேன்.
ReplyDeleteintha mathiri oru poi solla therriyama poi mattik kittanae
காலம் கடந்து போச்சே தருமி ஐயா.
Deleteஅண்ணே .. இந்த சதிக்கு வர்ற 20 தேதி சாலமன் ஐயா நமக்கு பதில் சொல்லியே தீரனும் ..விடாதிங்க
ReplyDeleteமேடையில் ஏறி அவரை ஒரு பிடி பாத்திரவேண்டியதுதான்
ReplyDeleteநன்றி ANaND
ஆல்ஃபி, போன மாசம் சென்னை போனப்ப அவன பாத்தேன்.....இன்னும் உன்னை தேடிக்கிட்டுருக்கான்....எங்க இருக்கன்னு கேட்டான்....நான் சொல்லல....அடிச்சுக்கேட்டாலும் சொல்ல மாட்டேன்.....அன்புடன் - கம்பம் சையது
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ் சையது.
Delete