Monday, October 21, 2013

நியூயார்க் நகரம்: நம்பர் ஒன்


       
   பிக் ஆப்பிள் (Big Apple) என்று அழைக்கப்படும் நியூயார்க் நகரம், மறுபடியும் உலகத்தில் நம்பர் ஒன்  என்று சாதித்துக்காட்டியிருக்கிறது.
        இப்சோஸ் மோரி (IPSOS MORI) என்ற நிறுவனம் 24 நாடுகளில் 18 ஆயிரம் மக்களிடம் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் இது வெளிப்பட்டிருக்கிறது.
        பல நாட்டினர் வசிப்பதால் "உலகத்தின் வீடு" என்றும் அழைக்கப்படும் நியூயார்க் நகரம், இந்த சர்வேயின் படி, உலகத்தின் மிக விரும்பப்படும் நகரம் (Worlds Favorite city) என அறிவிக்கப்பட்டுள்ளது.
World”s Favorite city
1) நியூயார்க்
2) லண்டன்
3) பாரிஸ்
4) அபுதாபி
5) சிட்னி
அதுமட்டுமல்லாமல் வியாபாரம் செய்வதற்கும் பெஸ்ட் சிட்டி என தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
Best City to do Business
1) நியூயார்க்
2) அபுதாபி
3) ஹாங்காங்
4) டோக்கியோ
5) லண்டன்

பார்ப்பதற்கு சிறந்த நகரம் என்ற கேள்விக்கு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

Best city to Visit
1) பாரிஸ்
2) நியூயார்க்
3) ரோம்
4) லண்டன்
5) சிட்னி
தங்குவதற்கு சிறந்த நகரம் என்ற வகையில் சிறந்த ஐந்து இடங்களில் நியூயார்க் வருகிறது.

Best City to  Live
1)ஜுரிச்
2) சிட்னி
3) லண்டன்
4) பாரிஸ்
5) நியூயார்க்

ஐந்தாவது இடத்திற்கு காரணம் இங்கு வாழ்வதற்கு ஆகும் செலவு அதிகம் (Cost  of  Living ) என்று நினைக்கிறேன்.
        மேயர் புளும்பர்க் அலுவலக செய்தியின்படி, கடந்த வருடம்
 2012-ல் 52 மில்லியன் சுற்றுலா பயணிகள் நியூயார்க் நகரத்திற்கு வந்தனர். அவர்கள் நகரில் மட்டும் செலவழித்தது 55.3 பில்லியன் டாலர்கள். அதோடு 2012-ல் நியூயார்க் நகரில் நடைபெறும் குற்றங்கள் வெகுவாக குறைந்ததால், இது ஒரு பாதுகாப்பான நகரமென்றும் மேயர் அலுவலகக்குறிப்பு சொல்கிறது.

 
நியூயார்க் நகரின் மற்ற  சில சிறப்புகள்
1.  ஒன்  வேர்ல்ட் சென்டர் கட்டடம் - மேற்கத்திய நாடுகளில் உயரமானது.
2.  8.25 மில்லியன் வாழும் உலகத்தின் மிகப்பெரிய நகரம்.
3.  சுமார் 800 மொழிகள் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
4.  உலகத்தின் அனைத்து வகை உணவுகளும் இங்கு கிடைக்கும்.
5.  மிகச்சிறிய அப்பார்ட்மெண்ட் 78 சதுர அடி.
6.  மிகப்பெரிய சாண்ட்விச் (லான்ஸ்கி டெலி) 126.95 விலையுள்ள இது 4 பவுண்ட் எடையுள்ளது.
7.  நீண்ட நாள் ஓடக்கூடிய பிராட்வே ஷோ,  “ஃபேண்டம் ஆஃப் தி ஆப்ரா” (1988 முதல்)
8.  உலகின் மிகப்பெரிய ஸ்டோர் - (2 மில்லியன் சதுர அடி- (10 மாடிகள்) 34 ஆவது தெரு “மேசிஸ்”.

9.  உலகின் மிகப்பெரிய பாதாள ரயில் அமைப்பு (468 ஸ்டேஷன்கள்).
10.              உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை (பிராங்ஸ் ஜூ)
11.              உலகின் பொருளாதாரத் தலைநகரம் - வால் ஸ்டிரீட் மற்றும் நாஸ்டாக் இங்கேதான் உள்ளது.
12.              பல நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய தங்க ரிசர்வ் இங்கேதான் உள்ளது.
        இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.
        முக்கியமானதை மறந்திட்டேனே, 32 நாடுகளில் படிக்கப்படும், ஆரம்பித்த ஆறு மாதத்திற்குள் 26000 ஹிட்ஸ் பெற்று சாதனை படைத்திருக்கும், உலகின் தலைசிறந்த பதிவர் (Blogger) இங்குதான் வாழ்கிறார். யாருன்னு புரியலை? அட நாந்தேன் பாஸ், பரதேசி.
(சேகரு உனக்கிருக்கு பாரு போங்கு, தாங்க  முடியலடா,
 *சரி சரி விட்றா விட்றா மகேந்திரா, எங்கேடா போயிருந்த இத்தனை நாளும், நீ இருப்பது தெரியாம சொல்லிட்டேன்டா)

பின்குறிப்பு
நேற்றைய தினம் "கல்யாண மாலை" வழங்கிய சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில்நியூஜெர்சியில் நடந்த பட்டிமன்றத்தில் , ராஜா அவர்கள் தலைமையில்,"குடும்ப வாழ்வு சுவைப்பது அமெரிக்காவில்தான்"என்றி அடியேன் பேசினேன்.பட்டிமன்றம் மிக சிறப்பாக அரங்கு   நிறைந்து கலகலப்பாக நடந்தது.நேரில் வந்திருந்தும், தொலைபேசி, ஈமெயில், நம் ப்ளாக் மற்றும் Facebook மூலமாகவும்   வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சன் தொலைக்காட்சியில் வரும் நாளை முன்னரே அறிவிக்கிறேன்.   

19 comments:

  1. பல வியக்க வைக்கும் தகவல்கள்... நியூயார்க்கின் சிறப்புகள் அறிந்தேன்... நன்றி...

    பட்டிமன்றம் என்றைக்கு ஒளிபரப்பை காண ஆவலுடன் உள்ளேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. இந்த நிகழ்ச்சி எனது வீட்டில் இருந்து முன்றாவது சிக்னலில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. நான் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. எனது மனைவியும் எனது நண்பர்கள்தான் கலந்து கொள்வார்கள் நேற்று மாலை எனது மனைவிக்கு வேலை இருந்ததால் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை .நேற்று காலை எனது டவுன் சீப்பில் உள்ள பார்க்கில் டாக்கிற்கான வாக்கத்தான் நடைபெற்றது அதில் பங்கு கொள்ள நாங்கள் எங்கள் டாக்கையும் அழைத்து சென்று இருந்தோம்.


    நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி சன் டிவியில் வரும் நாளை எனக்கு தெரிவிக்கவும் நன்றி

    நீயூயாரக் பற்றிய தகவல்கள் அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்திக்க ஆவலாய் இருந்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.

      Delete
  3. இன்னாது? உலகத்தின் மிக விரும்பப்படும் நகரம் (Worlds Favorite city) நியூயார்க் என அறிவிக்கப்பட்டுள்ளதா? அண்ணே, எங்க வயித்திலே அமிலத்த கொட்டுறேலே...இவ்வளவு நாளா நாங்க கிருஷ்ணகிரிதான் உலகத்தின் மிக விரும்பப்படும் நகரம் என்று நினைத்தோமே.எல்லாம் நாசமா போச்சே...

    ReplyDelete
    Replies
    1. என்ன தம்பி, பர்கூரை மறந்திட்டீங்களே ?

      Delete
    2. 1990 வரை பர்கூராதான் இருந்தது. அப்புறம் நம்ப JJ அங்க தேர்தலில் நின்றதால் பர்கூர் மதிப்பு குறைந்து விட்டது.

      Delete
    3. அதோட நீங்க வேற இங்க வந்திட்டீங்களே
      மதிப்பு குறையாம என்ன செய்யும்?

      Delete
    4. அண்ணே. சும்மா தமாஸ் பண்ணாதிங்க அண்ணே. கிருஷ்ணகிரிதான் உலகத்தின் மிக விரும்பப்படும் நகரம் என்று புரோக்கர் ஆறுமுகம் சொன்னான்னு ஓசூர் ரோட்டில எட்டரை ஏக்கர் வாங்கி போட்டு இருக்கேன் அண்ணே. ஊர மாத்தி சொல்லாதிங்க அண்ணே. அப்புறம் நெஞ்சு வலி அந்த வலின்னு வரப்போது.

      Delete
    5. அப்ப அம்மாட்ட சொல்லி நில அபகரிப்பு புகார்ல உள்ளே தள்ளவேண்டியதுதான். அப்புறம் முட்டிக்கு மேல தட்டினா நெஞ்சு வலி வராது .............

      Delete
    6. அண்ணே, நிலா அகபறிப்பா? அதுவும் அம்மா விடம் சொல்லியா? நொங்கு தின்னவன் எல்லாம் இருக்கும்போது நோன்டின்னு இருந்தவனை கைது பண்ண கதை ஆச்சே. என்ஜின் திருடினவன் இருக்கும் பொது கரி பொருக்குன்னவன உள்ள தள்ளுரிங்கலே ....

      Delete
    7. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !!!!!!!!!!!

      Delete
    8. யாருன்னா இந்த "பங்கஜம்" ..சாரி சகஜம்"..

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. அண்ணே. சும்மா தமாஸ் பண்ணாதிங்க அண்ணே. கிருஷ்ணகிரிதான் உலகத்தின் மிக விரும்பப்படும் நகரம் என்று புரோக்கர் ஆறுமுகம் சொன்னான்னு ஓசூர் ரோட்டில எட்டரை ஏக்கர் வாங்கி போட்டு இருக்கேன் அண்ணே. ஊர மாத்தி சொல்லாதிங்க அண்ணே. அப்புறம் நெஞ்சு வலி அந்த வலின்னு வரப்போது.

    ReplyDelete
  6. நியூயார்க் நகரம் பற்றிய தவல்களுக்கு நன்றி. சன் டிவி பட்டி மன்றம் அநேகமாக தீபவளியன்று இருக்குமென எண்ணுகிறேன். முன் கூட்டியே தெரிவிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலாஜி,கண்டிப்பாய் சொல்லுவேன் .

      Delete
  7. தங்களை சந்திக்க ஆவலாய் இருந்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.

    அவர் கழுவுற மீன்ல நழுவுற மீன்ங்கோ.

    ReplyDelete
    Replies
    1. அப்ப இலங்கை கப்பல் படையை கூப்பிடவேண்டியதுதான்.

      Delete