ஆஃபிஸ் மீட்டிங் ஒன்றிற்காக டெளன் டவுனில்
உள்ள ஃபுல்டன் தெருவிற்கு போனவாரம் சென்றிருந்தேன். சப்வேயை விட்டு மேலே வந்து, பிராட்வேயில்
திரும்பினால், அங்கே கம்பீரமான புதிய வேர்ல்ட் டிரேட் சென்டர் நிமிர்ந்து நின்றது.
"ஃப்ரீடம் டவர்" என்று முதலில் அழைக்கப்பட்ட இது, இப்போது “ஒன் வேர்ல்ட்
டிரேட் சென்டர்” (One World Trade center) என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில்
மக்களுக்குத் திறந்துவிடப்படும் இது, முழுதும்
கண்ணாடி சுவர்களில் அமைக்கப்பட்டு, சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று கண் கூசியது.
புதிய வேர்ல்ட் டிரேட் டவரின் சிறப்பம்சங்கள்:
1. மொத்தம் 1776 அடி உயரம் கொண்டஇந்தக்கட்டிடம்
மேற்கத்திய நாடுகளிலேயே மிகவும் உயரமானது.
2. 18 பகுதிகளாகப்பிரிக்கப்பட்டிருக்கும் இந்தக்
கட்டடத்தின் மொத்த எடை 800 டன்.
3. 104 மாடிகள் கொண்ட இந்த சென்டர்,
நியூயார்க்கின்
மிக உயரமான கட்டடமும் கூட.
4. இங்கு அமைக்கப்படவிருக்கும் “அப்சர்வேஷன்
டவர்” கடல் மட்டத்திலிருந்து 1250 அடி உயரத்தில் இருக்கும்.
5. ஆண்டுக்கு 3.8 மில்லியன் பார்வையாளர்கள் வருவார்கள்
என எதிர்பார்க்கப்படும் இந்த சென்டரின் உத்தேச வருமானம் ஆண்டிற்கு 875 மில்லியன் டாலர்கள்.
கிட்டப்போய்ப்பார்த்தேன். என்னதான் சிறப்பம்சங்கள்
இருந்தாலும், அதே இடத்தில் இருந்த ட்வின் டவரை கம்பேர் செய்து பார்க்கும்போது, ஒற்றைப்பனைமரமாய்
நிற்கின்ற "ஃப்ரீடம் டவர்" எனக்கு
அவ்வளவாகப்பிடிக்கவில்லை. ட்வின் டவருக்கும்
எனக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.
Twin Tower |
ஆமாம், ஜுலை மாதம் 2000-ல் நியூயார்க் வந்த
எனக்கு முதல் வேலை ட்வின் டவரில்தான். அங்கிருந்த ஒரு ஹியூமன் ரிசோர்சஸ் கன்சல்டிங்
நிறுவனத்தை லாஞ்ச் செய்வதற்காக நான் வரவழைக்கப்பட்டிருந்தேன். அதன் அலுவலகம் 45-ஆவது
மாடியில் இருந்தது. என்னுடைய கேபின், சுவர் ஓரத்தில் இருந்தது. முழுவதும் கண்ணாடி சுவர். கீழே அதள பாதாளத்தில்
பொம்மைகள் போல் வாகனங்களும் எறும்புகள் போல மனிதர்கள் ஊர்வது அதிசயக்காட்சி. சில சமயங்களில்
தவழ்ந்து வரும் மேகம் அல்லது ஃபாக் அப்படியே தழுவிக்கொள்ள, நான் லைட்டை போட வேண்டியதிருக்கும்.
45-ஆவது மாடிக்கே இப்படியென்றால், மேலே மேலே 110 ஆவது மாடிக்கு மேல் உள்ள அப்சர்வேஷன்
டவரிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொள்வேன். அதன் பெயர்
"டாப் ஆஃப் தி வேர்ல்ட்" என்பதாகும். பாதி நேரம் அதன் உச்சி மேகங்களால்
மூடப்பட்டிருக்கும்.
நான் அங்கு சேர்ந்தது சம்மர் டைம் என்பதால்
லஞ்ச் டைமில் கிழிறங்கி வரும்போது, அங்கு அமைக்கப்படும் “சென்ட்டர் ஸ்டேஜில்” ஏதாவது
நிகழ்ச்சி நடக்கும். கோடை காலம் முழுவதும், மதியம் 12-2, மாலை 4-6. இந்த நிகழ்ச்சிகள்
நடக்கும். பல நாட்டு, பலவகை இசை ,நடன நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கும். ரெண்டு ஸ்லைஸ் பிரட், ரெண்டு பீச் பழங்களை கொறித்துக் கொண்டே ஊற்றைச்சுற்றியிருக்கும் சிமென்ட்
பெஞ்ச்களில் அமர்ந்து, இசையை ரசித்தபடி, நான் செலவு செய்த நிமிடங்கள் "கோல்டன்
மோமென்ட்ஸ் ".
அன்றைய கருப்பு நாள் இன்னும் நன்றாக நினைவில்
இருக்கிறது. என்றுமே மறக்கமுடியாத, செப்டம்பர் 11, 2001 செவ்வாய்க்கிழமை வழக்கம் போல்
விடிந்தது.
செப்டம்பர் 11, 2013 -
ல் அடுத்த பகுதி.
வியக்க வைக்கும் தகவல்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் .
ReplyDelete"கோல்டன் மோமென்ட்ஸ் ". நினைவலைகள் அருமை..!
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி
Deleteதமிழில் முதல் முறையாக இந்த தகவலையும் படத்தையும் நான் முதன் முதலாக உங்கள் தளத்தில் தான் பார்க்கிறேன். பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழன் .
Delete2007-ல் நான் சுற்றி பார்கவந்த போது கட்டுமானப் பணிக்காண பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது, இன்று கட்டிடம் கண்கொள்ளாக் காட்சியாக நிற்கிறது. பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி அரசூரான்.
Deleteமீண்டும் இங்கு வரும்போது தொடர்பு கொள்ளுங்கள் .
Deleteஅரிய தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்... கடைசியில் ஒரு சஸ்பென்ஸ்... தொடருங்கள்....
ReplyDeleteநன்றி,ஸ்கூல் பையன்.
Deleteமுதல் வருகை! முதற்கண் வணக்கம்! பதிவும் படமும் அருமை
ReplyDeleteநன்றி கவிஞரே ,
Delete