கமல்ஹாசனுக்கு
அரசியலுக்கு வர உள்ள தகுதிகள்.
1.
அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா போலவே திரைத்துறையைச் சேர்ந்தவர். (இது மிக முக்கியம் !)
2.
எம்ஜியார், ஜெயலலிதா வரிசையில் இன்னுமொரு நடிகர். 229க்கும் மேல் படங்கள் நடித்தவர்.
3.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் முதலமைச்சர் ஆசையில் இருக்கும் ஆயிரத்தில் ஒருவர்.
4.
காமராசர், கருணாநிதி, எம்ஜியார், வரிசையில் பள்ளிப்படிப்பு கூட முடிக்காதவர் .
5.
கருணாநிதி, எம்ஜியார் போலவே பல திருமணங்கள் செய்தவர்.
6.
கருணாநிதி, எம்ஜியார் போலவே நாத்திகர்.
7.
எம்ஜியார், ஜெயலலிதா போல சிவப்பு நிறமாக இருப்பது.
8.
எம்ஜியார், ஜெயலலிதா போல ரசிகர் மன்றங்களை கட்டுக்கோப்பாக நடத்தி வருவது.
9.
ஜெயலலிதா போல கொள்கை என்று ஒன்று இல்லாமல் இருப்பது.
10.
காதல் இளவரசன் ,
உலக நாயகன் போன்ற பட்டங்கள் பெற்றவர் (அதென்னங்க உலக நாயகன் ?)
11.
முத்தக் காட்சிகள் உட்பட எதையும் வெளிப்படையாகச் செய்பவர்.
12.
ரஜியினின் நீண்டநாள் நண்பர் (இது ஒரு நல்ல தகுதி!)
13.
ஆண் வாரிசு இல்லாதவர். (இது மிக மிக அவசியம்)
14.
இத்தனை சினிமாவில் கிடைக்காது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்கும் மக்களுடன்
உள்ள நெருக்கம்.
15.
சமூக எதிர்பார்ப்புகளுக்கோ, கட்டுக்கோப்புகளுக்கோ, சம்பிரதாயங்களுக்கோ அடங்காதவர்.
கமல்ஹாசனுக்கு அரசியலுக்கு வர தடையாக இருக்கும் தகுதிகள்:
1.
தமிழை நன்றாக உச்சரித்துப் பேசுவது.
2.
நேர்மையாக நடக்க முயல்வது.
3.
எதையும் வெளிப்படையாகப் பேசுவது.
4.
உள்ளூர்க்காரர் மற்றும் பச்சைத் தமிழன்.
5.
மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர். (என்றுதான் நினைக்கிறேன்)
6.
திராவிட இயக்க ஈடுபாடு உள்ளபவர்.
7.
எல்லா மதத்தினரையும் சகோதரராய் நினைப்பது.
8.
ரஜினியின் நண்பராய் இருப்பது.
9.
தன்மானத் தமிழனாய் இருப்பது.
10.
சாதி சார்ந்த இயங்காத தன்மை.
11.
பிராமண குலத்தில் பிறந்தும் அப்படி கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளாத தன்மை.
12.
கம்யூனிஸ்ட்களிடம் இருக்கும் நெருக்கம்.
13.
நல்ல ஆரோக்கியமான உடல் நலம்.
14.
பெரிதாக குடும்பச்சிக்கல் இல்லாமல் இன்னும் சிங்கிளாகவே இருப்பது.
15.
பெரிதாக எந்தக் குற்றச் சாட்டும் இல்லாதவர்.
16.
மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை.
வெளியே பார்ப்பதற்கு இதெல்லாம் இப்படியாக தெரிந்தாலும் , ஏதாவது
உள்குத்து ( Hidden Agenda) இருக்குமோ என்ற சந்தேகமும் அவ்வப்போது தோன்றுகிறது.பொறுத்திருந்து
பார்ப்போம்.
Add caption |
Namkku ethukkunga arasiyal ellam
ReplyDeleteஇப்படி ஒதுங்கி ஒதுங்கிப் போங்க , நாடு உருப்படும்
Deleteகுலத்துக்குப்பிறந்த கோடரிக்காம்பு என்பதும் ஒரு தகுதி
ReplyDeleteயு மீன் தமிழ்க்குலத்திற்கு ?
Delete//2. நேர்மையாக நடக்க முயல்வது.////
ReplyDeleteகமலிடம் நேர்மையா?
3. எதையும் வெளிப்படையாகப் பேசுவது.////
வெளிபடையாக பேசுபவர் என்று சொல்லும் போது ஜெயலலிதா மறைவுக்கு பின் என்று சொல்லி இருந்தால் சரியாக இருக்குமோ
///மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர். (என்றுதான் நினைக்கிறேன்)///
ஆளும் மத்திய அரசு கொள்கைகளை எதிர்ப்பவர் அல்ல
//மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை. ///
அப்படி போடுங்க அருவாளை.... இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை இதுதான்
"வெளியே பார்ப்பதற்கு இதெல்லாம் இப்படியாக தெரிந்தாலும் , ஏதாவது உள்குத்து ( Hidden Agenda) இருக்குமோ என்ற சந்தேகமும் அவ்வப்போது தோன்றுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்".என்றுதான் இறுதியில் சொல்லியிருக்கிறேன் தமிழா .
DeleteSuperb.....
ReplyDeleteநன்றி பிரபு.
DeleteSir
ReplyDeleteFew years back you wrote about newyork metro rail, when Chennai metro was opened. Please send the link, I want to re-read it.
http://paradesiatnewyork.blogspot.com/2015/07/blog-post_14.html
Deleteபல குடும்பங்களைக் கடந்து வந்துவிட்டபடியால், ஜெக்குப்பின் நடந்தமாதிரி பல வாரிசுகள் வந்துசண்டைபோடும் வாய்ப்புள்ளது...சிறப்பு
ReplyDeleteஇப்படி ஒரு பிரச்சனையை நான் யோசிக்கவே இல்லையே .
Delete