Thursday, September 21, 2017

அற்புத எழுத்தாளர் அசோகமித்திரன்!


FETNA  2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை

அசோகமித்திரன்
            தமிழ் கூறும் நல்லுலகம் கொடுத்த சிறந்த படைப்பாளர்களுள் அசோகமித்திரன் குறிப்பிடத்தகுந்தவர். இவரது இயற்பெயர் ஜெகதீஷ் தியாகராஜன். 1931-ல் செகந்திராபாத்தில் பிறந்த அவர் தன் 20 வயது வரையில் அங்குதான் இருந்தார். 1952ல் தந்தை இறந்தவுடன் என்ன செய்வது என்று திகைத்த போது, தந்தையின் நண்பரான பிரபல இயக்குனரும் பத்திரிகையாளருமான S.S.வாசன் அவர்களிடமிருந்து  சென்னையில் இருந்த அவருடைய ஜெமினி ஸ்டூடியோவில் வேலை செய்ய அழைப்பு வந்தது. இதுவே படைப்புலகில் அவருக்கு நிகழ்ந்த திருப்புமுனை. அங்கு இருந்த 10 வருடங்களில் அவருடைய எழுத்துத் திறமை பீறிட்டுக்கிளம்பியது. 
Image result for MY years with boss

    படவுலகின் அனுபவங்களை “இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா”, என்ற பத்திரிகையில் பத்திகளாக எழுத ஆரம்பித்து பின்னர் அது புத்தகமாக வெளிவந்தது. அதன் பெயர் "மை இயர்ஸ் வித் பாஸ்"( My years with Boss). S.S.வாசனைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் என்று சொல்லத்தேவையில்லை. அதன்பின்னர் அவருடைய படைப்புகள் மளமளவென்று வெளிவந்தன. இருநூறுக்கு மேற்பட்ட  சிறுகதைகளையும் பன்னிரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். சிறந்த கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதுவதிலும் வல்லவரான இவர் "கணையாழி" என்ற சிறப்பான இலக்கிய இதழின் ஆசிரியராக பலகாலம் பணியாற்றினார். தன் சொந்த அனுபவத்துடன் கற்பனை கலந்து நகைச்சுவையுடன் எழுதுவது அவரது தனிக்கலை. அதோடு எளிய நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவதும் அவரது சிறப்பம்சம். விரைவிலேயே அவருடைய படைப்புகள், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டன. 
Add caption
     என்னை மிகவும் கவர்ந்த அவர் எழுதிய "18-ஆவது அட்சக்கோடு" ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதனைப்பற்றிய என்னுடைய பதிவைப் படிக்க  இங்கே சொடுக்கவும் (http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post_11.html) தன்னுடைய படைப்புகளுக்காக பல விருதுகளைப்  பெற்ற இவர்,  "அப்பாவின் சிநேகிதர்" என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இந்திய நாட்டின் உயரிய விருதான 'சாகித்ய அக்காடெமி' விருது வென்றார். கடந்த மார்ச் 2017ல் தனது 85-ஆவது வயதில் அவர் இந்த உலகைவிட்டு மறைந்து போனாலும் தமிழ் உள்ளவரை அவரின் நினைவும் புகழும் நிலைத்திருக்கும் என்பது உறுதி.

தி.ஆல்ஃ பிரட் தியாகராஜன், நியூயார்க்.  

(www.paradesiatnewyork.blogspot.com)

6 comments:

  1. அருமையான எழுத்தாளர் பற்றிய சிறப்பான கட்டுரை....வாழ்த்துகள்!!

    ReplyDelete
  2. உங்கள் பரிந்துரைப் படி "18-ஆவது அட்சக்கோடு" வாசித்துவிட்டேன். எளிய நடை.

    அதீத ஜோடனைகள் இல்லாமல் செல்வதால், கதையை மேம்போக்கான வாசிப்பு செய்ய இயலாது. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆரூர் பாஸ்கர்.

      Delete
  3. சித்தப்பாவைப் பற்றிய உங்கள் அருமையான எளிமையான நினைவஞ்சலிக்கு எங்கள் நன்றி. எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அவர்கள் கொடுத்த சுட்டியின் உதவியால் இங்கே வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி கீதா , தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete