FETNA
2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை
K.A குணசேகரன் |
சுறு
சுறுப்பாய் மேடை ஏறிய மனிதரைப்பார்த்ததும், அட K.A. குணசேகரன் இங்கே எங்கே வருகிறார்
? என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர்தான்
சிறப்பு விருந்தினர் அதோடு மணமகனின் நெருங்கிய உறவினர் என்று. இது நடந்தது 90 களில் மதுரையில் . மணமகன் எட்வின்
ராஜ்குமார், மதுரை சமூகப்பணி கல்லூரியில் படித்த போது என் சீனியர். K.A. குணசேகரன் அதன் பின்னர் புதுச்சேரி பல்கலைக்
கழகத்தின் நிகழ்கலைத் துறையின் தலைவரானார். தனித்துவமிக்க நாட்டுப் புறப்பாடகரான இவர் “தன்னானே” 'என்ற இசைக்குழுவை
நடத்திவந்தார். பறை, பம்பை , தவில், நாதஸ்வரம், உடுக்கை உள்ளிட்டப் பாரம்பரிய இசைக்கருவிகளை
இவரின் குழுவினர் வாசித்தால் மேடையே அதிரும், அதனை மேற்கொண்டு இவருடைய கணீர்க்குரல்
எல்லோரையும் கட்டிப்போட்டுவிடும். “மனுசங்கடா... நாங்க... மனுசங்கடா”, என்ற இவர் பாடும் பாடலைக் கேட்டு அதிர்ந்து உறைந்து போனவர்களில்
நானும் ஒருவன்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை
என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரி மற்றும் காமராசர் பல்கலைக்கழகம்
ஆகியவற்றில் பி.ஏ.(பொருளாதாரம்) எம்.ஏ (தமிழ் இலக்கியம்) படித்த இவர் நாட்டுப்புற நடனப்
பாடல்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். சென்னை தரமணியில் உள்ள
உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தை உயர்த்தும் வண்ணமாக எழுதியும் பாடியும் உலகமெங்கும்
இயங்கியவர் இவர். இவர் எழுதிய நூல்கள் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதுகலைப்
பாடத்திட்டத்திலும், புதுச்சேரி பல்கலைக் கழக தமிழ்த் துறையின் பாடத்திட்டத்திலும்
இடம் பெற்றிருக்கின்றன.
கடந்த 2017 ஜனவரி மாதம் எதிர்பாராதவண்ணமாக நம்மை விட்டு இவர்
மறைந்தாலும் , இவர் தம்முடைய பாடல்கள் மற்றும் படைப்புகள் மூலமாக என்றும் வாழ்வார்.
பழகுவதற்கு இனியவர். நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது (ஆகஸ்டு 1982-ஏப்ரல் 2017) அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என் பௌத்த ஆய்வினைப் பாராட்டியவர்களில் இவரும் ஒருவர்.
ReplyDeleteநல்லது ஐயா தகவலுக்கு நன்றி .வருகைக்கும் நன்றி .
Deleteமறந்து போன ஒரு மக்கள் கலைஞன். “இவர் எழுதிய நூல்கள் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதுகலைப் பாடத்திட்டத்திலும், புதுச்சேரி பல்கலைக் கழக தமிழ்த் துறையின் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றிருக்கின்றன”. மறக்காமல் இருப்பதற்கு குறைந்த பட்சம் இதுவாவது நீடிக்கட்டும்.
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான் , அவரின் புத்தகங்கள் மூலமாகவும் அவர் வாழ்வார் .நன்றி ஊரான்.
Deleteசோகம்தான் ,அவர் மறைந்த செய்தியுடன் தமிழ்மணம் திரட்டியும் முடங்கிப் போனதே :(
ReplyDeleteதமிழ்மணம் திரட்டி மீண்டும் உயிர் பெற்றுவிட்டதே பகவான்ஜி .ஆனால் குணசேகரன் ?
Deletek a குணசேகரன் k a பகவான்ஜி மனதில் மட்டுமல்ல ,எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் !
ReplyDeleteஇன்குலாப் எழுதிய மனுசங்கடா பாடலில் ,எவன் மயிரை பிடுங்கப் போனீங்க என்று ,அவர் அன்று கேட்டது ,இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது !
ஆமாம் , உணர்ச்சிகளை எழுப்பி புரட்சி படைக்கும் பாடல் அது
Delete