ஆர்.கே. நகர் தொகுதி

ஆர்கே நகர் கலவரம் சாரி நிலவரம், கட்சிகளை
அதிர்ச்சியிலும் மக்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதையொட்டி கட்சி சேராத
அமைப்பான மக்கள் முன்னேற்ற கலகம் என்ற மமக ( சரியாகத்தான் வாசிக்கிறீர்கள் அது
எழுத்துப்பிழையல்ல ) தேர்தல் ஆணையத்திற்கு சில தீர்மானங்களை நிறைவேற்றி
அனுப்பியிருக்கிறார்கள். அதன் நகலை சென்னை உயர்நிதிமன்றத்திற்கும், தேர்தல்
ஆணையத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும், பிரதமருக்கும், கலைஞர், சசிகலா மற்றும் ஒரு சிறப்பு
நகலை ஜெ சமாதிக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அதன் முக்கிய ஷரத்துகளை கீழே
பார்க்கலாம்.
1. ஆர்.கே.
நகர் இடைத் தேர்தலை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இதில் ஒரே வருத்தம் என்னவென்றால் இன்னொரு நாள் தள்ளி நிறுத்தியிருந்தால் 'ப' அணியினரும் கொஞ்சம் 'ப'
வை இறக்கி இருப்பார்கள்.
2. இடைத்
தேர்தலை நிறுத்தி வைப்பதை ஒரு நாள் முன்னர் மட்டுமே அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பணப்பட்டுவாடா
கொடுத்து முடிக்க வாய்ப்பிருக்கிறது.
3. இடைத்
தேர்தலை நிறுத்தி வைக்கும் முன் எல்லாக் கட்சியினரும் பணப்பட்டுவாடா
செய்துவிட்டனரா என்று உறுதி செய்து கொள்ள
வேண்டும்.
4. இடைத்
தேர்தலை குறைந்த பட்சம் மூன்று முறையாவது நிறுத்த வேண்டும். அப்போதுதான் ஒரு
ஆண்டிற்கான வருமானத்தை கல்லா கட்டலாம்.
5. ஒவ்வொரு
வாரமும் ஒவ்வொரு தொகுதியாக நடத்தினால் அடுத்த தொகுதிக் காரர்களும் வந்து பலன்
பெறுவார்கள்.
6. இடைத்
தேர்தல் பணத்தை பொருளாக அன்றி பணமாக மட்டுமே கொடுக்க வலியுறுத்துகிறோம்.
7. இடைத்
தேர்தலில் பணம் கொடுக்க முடியாத கட்சிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
8. இடைத்தேர்தலில்
கட்சிகள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை மமக மட்டுமே தீர்மானிக்கும். அதன்படி
ஆளுங்கட்சி 1 லட்ச ரூபாயும், எதிர்க்கட்சி 75 ஆயிரமும் மற்ற உதிரிக்கட்சிகள்
குறைந்த பட்சம் 50 ஆயிரமும் கொடுக்க வலியுறுத்துகிறோம்.
9. பணம்
கொடுக்கும் போது இட ஒதுக்கீடு முறை கொண்டு வருவதையும்,
வருமான அடிப்படையில்
கொடுக்க முனைவதையும் நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கிறோம்.
10.
அதோடு இடைத் தேர்தலை
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆண்டிற்கு முன்னால் அறிவித்து,
தொகுதியில் கட்சிகளை நலப்பணிகள் செய்யுமாறு ஊக்குவிக்க வேண்டும்.
11.
அறிவிப்புக்கு பின்
நலப்பணிகள் செய்யக் கூடாது எனும் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும். ஏனென்றால் ஜெயித்த பின் அவர்கள் அந்தப்பக்கமே
வரப்போவதில்லை.
12.
பணம்
கொடுப்பதற்காக வீட்டில் உள்ள நபர்களை
கணக்கிடும்போது வயிற்றில் உள்ள பிள்ளைகளையும் கணக்கில் சேர்க்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
13.
பணம் கொடுப்பதோடு
ஒரு வருடத்திற்கான சட்டை துணி மணிகள், பலசரக்கு
ஆகியவற்றை இலவசமாக கொடுக்க வேண்டும்.
14.
வேட்பாளர்கள் தங்கள்
தங்கள் தொகுதியில் தங்கியிருந்து தாங்கள் அடிக்கும் கொள்ளையில் மன்னிக்கவும்
தங்கள் வருமானத்தில் மாதா மாதம் குடும்பங்களுக்கு பங்கு தர வேண்டும்.
15.
இடைத் தேர்தலில்
போட்டி போடாமல் புறக்கணித்த கட்சிகளை அவர்களுடைய கஞ்சத்தனம் மற்றும் சுயநலப்
போக்கைக் கண்டித்து வன்மையாகக் கண்டிப்பதோடு தகுதி நீக்கம் செய்ய வேண்டுகிறோம்.
16.
அதோடு இந்த மாதிரி
இடைத் தேர்தலை நாடு
முழுதும் நடத்தினால் அதன் பலன் எல்லோருக்கும் பகிர்ந்து கிடைக்கும் என
கூறிக்கொள்கிறோம்.
17.
இடைத்தேர்தலில்
வாக்காளர்களுக்கு கிடைக்கும் பணத்திற்கும் வருமான வரி கட்ட வேண்டும் என நினைக்கும்
மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
18.
இடைத் தேர்தலில்
பணம் கொடுப்பதை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த முடிவுசெய்யும் மோடி அரசை
நாங்கள் கண்டிக்கிறோம்.
19.
இடைத் தேர்தலில்
பணம் கொடுப்பது என்பது டி மானிட்டை சேஷனை விட அதிகம் பலன் கொடுக்கும் என்பதை அரசு
புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சமத்துவ நிலை உருவாகும்.
20.
இனிமேல் பொதுத்
தேர்தலை முற்றிலும் தடைசெய்து தமிழ்நாடு முழுவதும் இடைத் தேர்தலாய் மட்டுமே
நடத்துமாறு வேண்டுகிறோம். நாங்களும் எந்த வேலையும் செய்யாது
பிழைத்துக் கொள்வோம்.
![]() |
வாழ்க ஜனநாயகம்
மன்னிக்க பணநாயகம்
முற்றும், இல்லை
அவலம் தொடரும்.
நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் .
நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் .
ஹா... ஹா... ஹா... ஹா...
ReplyDeleteஹா... ஹா... ஹா... ஹா... நன்றி
Deleteதொடரும் அவலம்... :(
ReplyDeleteமுற்றும் போடுவதற்கு ஒரு முழு மனிதன் கூட இல்லையே வெங்கட் நாகராஜ்.
Deleteரொம்ப பிராக்டிக்கலா சிந்திக்கிறீங்க...இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி
ஆனா நம்ம சுத்தி நடக்கிறது எல்லாம் ப்ராக்டிகலா இல்லையே செல்லப்பா , நீயே கொஞ்சம்
Deleteசொல்லப்பா