சினிமாவும் நானும், இயக்குனர் மகேந்திரன் பகுதி 3
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post.html
இந்தப்புத்தகத்தில்
ஆரம்ப முதல் முடிவு வரை மகேந்திரனைப் பற்றி ஏராளமான விவரங்கள் அதுவும் நமக்கு
அல்லது குறைந்த பட்சம் எனக்குத் தெரியாத பல விவரங்கள் உள்ளன. அவற்றில்
சிலவற்றையாவது உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இதோ.
நெஞ்சத்தைக் கிள்ளாதே |
1.
மகேந்திரன்
என்றால் நமக்கு ஞாபகம் வருவது முள்ளும்
மலரும்,
உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆகிய படங்கள் தான். ஏனென்றால் இவையெல்லாமே வெள்ளிவிழாக் கொண்டாடிய படங்கள். மகேந்திரன்
முதல் படம் எது என்றால் "முள்ளும் மலரும்" என்று எல்லோரும் சொல்வீர்கள்
. ஆனால் அது அவர் முதன் முதலில் இயக்கிய படம்தான். அதற்கு முன்பு 25 படங்களுக்கு மேலாக கதை, திரைக்கதை வசனம்
எழுதியுள்ளார்.
2.
நடிகர் திலகம்
சிவாஜி நடித்து வெளிவந்த 'தங்கப்பதக்கம்',
மகேந்திரனின் கதைதான். அதற்கு மிகச்சிறந்த வசனங்களை எழுதியதும்
அவர்தான். தங்கப்பதக்கம் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டு அதனைத் வந்து பார்த்த
சிவாஜி ஆசைப்பட்டு பின்னர் திரைப்படமாக வந்தது. தங்கப்பதக்கம், கன்னடத்தில் ராஜ்குமார்
நடித்தும் “ஜஸ்டிஸ் செளத்ரி” என்று தெலுங்கில் NT.ராமராவ் நடித்தும், இந்தியில் ஷக்தி என்ற பெயரில்
திலீப் அமிதாப் நடித்தும் வெளிவந்தது. எல்லா இடங்களிலும் மிகப்பெரிய வெற்றி
பெற்றது.
3.
சிவாஜி நடித்த
"ரிஷிமூலம்" படத்தின் கதை வசனம் மகேந்திரன் தான்,
இதுவும் வெற்றிப்படமே.
4.
இவை தவிர,
வாழ்ந்து காட்டுகிறேன். நாம் மூவர், சபாஷ்
தம்பி, பணக்காரப்பிள்ளை, நிறைகுடம்,
மோகம் முப்பது வருஷம் போன்ற 25க்கும் மேற்பட்ட
படங்களுக்கு கதைவசனம் இவர்தான்.
5.
சினிமாவில்
வெற்றிப்படங்கள் எடுப்பதைவிட பெருமைக்குரிய படங்களை எடுக்க வேண்டும். அப்போதுதான்
தமிழ்ப் படங்கள் உலகம் செல்லும் என்கிறார்.
6.
சினிமாவின் அபாயக்
கவர்ச்சியில் படைப்பாளிகள் அமிழ்ந்து போகக் கூடாது என்கிறார்.
7.
இந்தியாவை உலக அரங்கில்
பெருமைப்படுத்திய இயக்குநர் சத்யஜித்ரே என்று சொல்லி அவர் இயக்கிய 'பதர் பஞ்சாலி' படத்தை சிலாகிக்கிறார்.
8.
அவருக்கு மிகவும்
பிடித்த மற்றொரு இயக்குநர் திரிபுராவைச்
சேர்ந்த "ஜோசப் புலிந்தநாத்".
9.
உலக அளவில் அவரை
ஈர்த்தவர்கள், இத்தாலிய இயக்குநர், பை சைக்கிஸ்
தீவ்ஸ் எடுத்த விக்டோரியா டிசிகா (1902-1974) அகிரா குரோசாவா,
சார்லி சாப்ளின்.
10.
தமிழில்
பெருமைக்குரிய படமாக அவர் குறிப்பிடுவது 1948ல்
வெளிவந்த "சந்திரலேகா".
11.
தமிழில் பிடித்த
இயக்குநர்கள், ஸ்ரீதர், பாரதிராஜா,
வீணை பாலச்சந்தர் (அந்த நாள்) பாலு மகேந்திரா,
மணிரத்னம் & பாலா.
12.
அவருக்குப்பிடித்த
படைப்பாளிகள், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கி.ராஜநாராயன்.
13.
முள்ளும் மலரும்
படத்தை ஒரு இயக்குநராக அல்லாது ஒரு ரசிகனாய் எடுத்தேன் என்று சொல்லி அதனால்தான்
அது ஒரு நல்ல யதார்த்த சினிமாவாக அமைந்தது என்கிறார்.
14.
அமெரிக்காவில்
பிராட்வே ஷோ என்று இன்னும் பிரபலமாக
விளங்கும் நாடகத்துறை தமிழ்நாட்டில் அழிந்து போனதைக் குறித்து ஆதங்கப்படுகிறார்.
15.
நாவலைப் படமாக்கும்
கலை வளர வேண்டும் என்று சொல்லும் இவரின் முள்ளும் மலரும்,
உமாசந்திரன் எழுதிய கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. அதேபோல்
உதிரிப்பூக்கள் மூலம் புதுமைப்பித்தனின் "சிற்றன்னை" என்ற கதை.
16.
மகேந்திரன் இயக்கிய,
மெட்டி, கண்ணுக்கு மை எழுது, ஊர்ப் பஞ்சாயத்து
ஆகியவை தோல்வி அடைந்தன.
17.
இவரின் நெஞ்சத்தைக்
கிள்ளாதே 1 வருடம் ஓடி மூன்று தேசிய
விருதுகளைப் பெற்றது.
18.
மோகன் சுகாஷினி
ஆகியோர் இந்தப் படத்தில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப் பட்டனர்.
19.
பொருந்தாக் காதலை
முன்னிலைப் படுத்தியதால் இவரது "பூட்டாத பூட்டுக்கள்" தோல்வியடைந்தது என்கிறார்.
20.
மகேந்திரனின் முதல்
வேலை 'இன முழக்கம்' என்ற திமுக பத்திரிகையில் உதவி
ஆசிரியர்.
21.
மகேந்திரன் 3
1/2 வருட காலம் துக்ளக்கில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். அதுவே
தன் வாழ்வின் மகிழ்ச்சி மிக்க காலங்கள் என்கிறார்.
22.
முள்ளும் மலரும்
படத்தின் 'செந்தாழம்பூவே' பாடலை எடுக்க தயாரிப்பாளர் வேணு செட்டியார் மறுத்துவிட, கமல்ஹாசன் உதவியுடன் தான் அது படமாக்கப்பட்டது.
23.
கைகொடுக்கும் கையில்
ஒரு முக்கிய இடத்தில் தயாரிப்பாளர் கதையினை மாற்றியதால் தான் தோல்வியடைந்தது
என்கிறார்.
24.
மகேந்திரன் கடைசியாக
இயக்கிய படம் "சாசனம்". NFDC -யால்
தயாரிக்கப்பட்ட அந்தப்படம் சென்னையில் மட்டுமே திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப்
பெற்றது. நாடெங்கிலும் திரையிடப்படாததற்கான காரணம் இவருக்கே தெரியவில்லை.
25.
இளையராஜாவின் இசை
தன் படங்களின் ஜீவன் என்கிறார்.
26.
ரஜினிகாந்தின்
எளிமையை வெகுவாகப் புகழ்கிறார்.
27.
இலங்கையின்
யாழ்ப்பாணம் சென்று தமிழர்களுக்கு திரைப்படம் எடுக்க மூன்று மாதம் பயிற்சி
எடுத்தார். துரதிர்ஷவசமாக அவர்கள் அனைவருமே போரில் கொல்லப்பட்டுவிட்டனர்.
28.
தனது யாழ்ப்பாணப்
பயணத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர் அவர்களைச் சந்தித்தது மிகவும்
மறக்க முடியாத நிகழ்வு என்கிறார்.
மகேந்திரன்
என்ற இயக்குநர் தமிழ் நாட்டின் கொடை என்பதில் சந்தேகமில்லை. தமிழ்த் திரையுலகம்
அவரை இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.
- முற்றும்.
நண்பரே,
ReplyDeleteதமிழின் மிக முக்கியமான அபூர்வமான இன்னும் சொல்லப்போனால் ஒரு குறிஞ்சிப் பூ போல உதித்தவர் மகேந்திரன். அவர் படங்களிலும் வணிக அம்சங்கள் நிறையவே உண்டு. இருந்தும் அவர் அதை வைத்து தனது வெற்றியை தீர்மானிக்கவில்லை என்பதே அவரை நான் இன்றும் வியப்பதன் காரணம். நல்ல பதிவு. தமிழின் ஒரு உன்னதமான இயக்குனரைப் பற்றிய தெளிவான பார்வைக்காக உங்களுக்கு பாராட்டுக்கள்.
ஆஹா இந்த விஷயத்தில் நம் இருவருக்கும் ஒத்த கருத்து இருப்பதில் மகிழ்ச்சி .நன்றி காரிகன் .
Deleteஅலெக்ஸாண்டர் அமெரிக்கன் கல்லூரி பழைய மாணவ்ர் -- இதுவும் அவரைப் பற்றிய இரு தகவல்கள் தானே.
ReplyDeleteஅமெரிக்கன் கல்லூரி மாணவர் என்பதை சொல்லாமல் இருப்பேனா ? இதன் முதல் பகுதியிலேய்யே சொல்லிவிட்டேன்.அலெக்சாண்டர் அவரது பெயர் என்பதை வேண்டுமென்றே தவிர்த்தேன்.நன்றி தருமி அவர்களே.
Deleteபல படங்கள் எடுத்துப் பெறக்கூடிய புகழைச் சில படங்களிலேயே எடுத்துவிட்டார் மகேந்திரன். காலம் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லையை வகுத்திருக்கிறது போலும். அதை மீறி மேலேற முடிவதில்லை.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
காலம் , எல்லை என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை செல்லப்பா .
Deleteஆர்பாட்டதில்லாத எழுத்து சார். :) உஙகளைப் போன்ற சிலாகிக்கும் ரசிகரைகளைப் பெற்ற மகேந்திரன் என்றும் தமிழ் திரைவுலகின் சிற்பிகளில் ஒவருவராகப் பேசப்படுவார். நன்றி!!
ReplyDeleteநன்றி!! பாஸ்கர்.
ReplyDelete