Tuesday, March 28, 2017

அழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே !!!!!!

இலங்கையில் பரதேசி பகுதி -7

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_21.html

Image result for colombo town hall
Town Hall 
          கொழும்புவின் டவுன் ஹால் மிக அழகிய கட்டடம். வாஷிங்டன் DC  யில் உள்ள கேப்பிடல் பில்டிங் போல தூரத்திலிருந்து தெரிந்தது. ஆனால் கிட்டப் போய்ப் பார்த்ததில் அவ்வளவு பிரமாண்டம் இல்லாவிட்டாலும் , மிகஅழகிய வடிவத்தில் சிறிதாக இருந்தது.
          நம்மூர் சென்னையின் ரிப்பன் பில்டிங் போன்று, இங்குதான் கொழும்பின் மேயர் அலுவலகம் இருக்கிறது. கொழும்பின் முனிசிபல் கவுன்சிலும் இங்குதான் கூடுகிறது. விகார மகா தேவி பார்க்கின் முன்புறம் இது அமைந்திருக்கிறது. ஐரோப்பியக் கட்டிடக்கலையை கட்டியம் கூறும் கட்டடம் இது . இந்த பில்டிங் வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.
Image result for Professor Patrick Geddes
Professor Patric Geddes
          1921ல் ஸ்காட்லாந்தின் பிரசித்தி பெற்ற நிபுணர், பேராசிரியர் பேட்ரிக் கெட்டஸ் (Professor Patric Geddes) கொழும்பில் கவுன்சில் பில்டிங், மேயர் அலுவலகம், பொது ரிசப்ஷன் ஹால், பொது நூலகம் ஆகியவை கட்டப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
          கொழும்பிற்காக ஒரு பொது நூலகம் அமைக்க, 1925ல் Dr.W.ஆர்தர் சில்வா என்பவர் தன் பெரிய கட்டிடத்தை அளித்தார். அந்தக் கட்டிடத்தின் பெயர் "ஸ்ரீனிவாசா" என்பது. அது தான் இப்பொழுது மேயருக்கான அரசாங்க வீடாக இருக்கிறதாம்.
          அதன்பின் 1922ல் கொழும்புவின்  முனிசிபல் கவுன்சில் தங்கள் பில்டிங்கை கட்டுவதற்கு வரைபடங்கள் தேவை என்பதை ஒரு போட்டி போன்று அமைத்து உலகமெங்கும் தெரிவித்தனர். அதன் மூலம் மொத்தத்தில் 32 டிசைன்கள் வெவ்வேறு கட்டிடக் கலை நிபுனர்களால் உலகமெங்கிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றுள் 'ரால்ஃப் பூட்டி' என்ற கம்பெனியிலிருந்து, ஆர்க்கிடட் S.J.எட்வர்ட்ஸ்  அவர்கள் தயாரித்த வரைபடம் தேர்ந்த்தெடுக்கப்பட்டது.
          1924 மாதம் அப்போதிருந்த மேயர் தாமஸ் ரெய்ட் இதற்கு அடிக்கல் நாட்டினார். A.A. காம்மன் என்ற கம்பெனி அதனை கட்டுவதற்கு பொறுப்பெடுத்து ஆகஸ்ட் 1928ல் நான்கு வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதிருந்த கவர்னர் சர். ஹெர்பர்ட் ஸ்டான்லி இதனைத் திறந்து வைத்தார்.
          முழுக்கட்டிடத்திலும் மேலிருந்த டூம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. சுற்றிலும் இருந்த கொரிந்தியன் தூண்கள் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 360 அடி நீளமும் 168அடி அகலமும் கொண்டது இந்தக்கவின்மிகு கட்டிடம். பிரிட்டிஷ் அரசால் பல தீமைகள் இருந்திருந்தாலும் இது போன்ற பல நன்மைகளும் நடந்திருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
          வெளியே வந்தோம் ."அம்ரி அதோ இளநீர்" என்று கூவினேன். பார்க்கின் அருகில் ஒரு பெட்டிக் கடையின் முன்னால் இளநீர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ரோட்டைத் தாண்டி அங்கு சென்றோம். மிகச்சிறியதாக இருக்கின்றனவே”, என்றேன். "இல்லை சார் நீர் அதிகம் இருக்கும்", என்றான். “எனக்கு ஜெல்லி வேண்டும்”, என்றேன். அம்ரிக்கு ஜெல்லி என்றால் புரியவில்லை.
               நியூயார்க்கில் இளநீர்கள் சம்மர் நேரத்தில் ஃபிளாரிடா மாநிலத்திலிருந்து ஏராளமாக வந்திறங்கும். இந்திய மற்றும் கயானா கடைகளில் கிடைக்கும். ஒன்று 4 டாலர் முதல் 5 டாலர் வரை. உள்ளே இருக்கும் வழுக்கையைத் தான் இங்கே ஜெல்லி என்று  சொல்லுவார்கள். அம்ரிக்கு புரியாதலால் வழுக்கை என்று சொன்னேன். அந்த வார்த்தையும் அவனுக்குப் புரியவில்லை என்றாலும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்து கொண்டான்.  

      உடனே எனக்கு ஒரு பாடல் ஞாபகம் வந்தது. "அழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே, அருகில் ஒருத்தன் உருகி நிற்கிறான் குமரி அழகிலே ". ஆஹா அந்தப் பாட்டை சிறிது சத்தமாகவே பாடிக்கொண்டு அம்ரி பின்னால் போனேன். அம்ரிக்கு அந்தப் பாட்டுக் கூடத் தெரியவில்லை சின்னப்பையன். ஆமாம் கொஞ்சம் பழைய பாட்டுத்தான். இதனை படிக்கும் உங்களுக்குக் கூட தெரியுமா என்று தெரியவில்லை. இதோ அந்தப் பாடலின் கிளிப் உங்களுக்காக.

          அங்கு போய் கடையின் உள்ளே அம்ரி செல்ல, வெளியே நடந்து வந்தாள் ஒரு பெண். அட மீண்டும் அந்தப் பாடலைப் பாடினேன். ஒரு விதமான அரிவாளோடு அந்தப் பெண் வருவதைப் பார்த்து பாடலை நிறுத்திவிட்டேன். பதமான அரிவாளால் மூன்றே மூன்று சீவலில் இளநீரின் நீர் கொப்பளிக்க என்னிடம் கொடுத்தாள். என் கழுத்தைத் தடவிப்பார்த்துக்கொண்டேன். இவ்வளவு சிறிய கழுத்துக்கு ஒரே சீவு போதும்.கொஞ்சம் தள்ளி  நின்று கொண்டேன்.

Image result for Girl selling Tender coconuts in colombo

              
  அப்படியே வாயில் வைத்து உறிஞ்ச, "தேவாமிர்தம் ஜீவாமிர்தம் தந்தாள்" என்ற பாடல் நியாபகம் வந்தது. அட மனசுக்குள்ள தான் பாஸ் . சும்மா சொல்லக் கூடாது அந்த மாதிரி சுவையுள்ள இளநியை என் வாழ்நாளில் என்றுமே குடித்ததில்லை. உருவத்தில் சின்னதாக இருந்தாலும் குவாலிட்டி மற்றும் குவான்டிட்டி இரண்டும் சிறப்பாகவே இருந்தன. ரெண்டு சாப்பிட வேண்டும் என நினைத்து வந்த எனக்கு ஒன்றிலேயே நெஞ்சு வரை நிறைந்து விட்டது, வயிறும் உப்பிவிட்டது. விலையும் சகாயம்தான்.
          மதிய நேரத்தில் சுகமாக இருந்தது. காற்றும் சிலுசிலுவென்று அடிக்க ஏகாந்தமாக ஒரு சிறு தூக்கம்  போட்டால் நன்றாக இருக்கும். ஆனால் ஊர் சுற்ற வந்திருக்கும் இடத்தில் ஓய்வாவது ஒழிச்சலாவது, இன்னும் எத்தனையோ இடங்களைக் கவர் பண்ண வேண்டியதிருக்கிறதே என்று நினைத்துவிட்டு நடையைக் கட்டினோம்.
          “ஏலேய் சேகரு”
          “ வாடா மகேந்திரா என்னடா என்னா விசேஷம் ஊரில”.
          “ஊர் விசேஷத்தைவிடு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாம            கடந்து போயிட்டியே”.
          “என்னடா முக்கியமான விஷயம்”.
          “அதாண்டா பாட்டுப் பாடினயே”
           “ ஆமாம் அதுக்கென்னடா?”
          “ இல்லை எளனியை வெட்டிக் கொடுக்க வந்தது பொன்னுன்னு சொன்னல்லே”
          “ ஆமாம்”
          “அதுல கொழும்பு வீதின்னு சொன்னது நிஜம்,
          “ஆமாம்”
          “இளநி வித்ததும்  அதை நீ வாங்கினதும் சரிதான்”
          ”ஆமாம்”
         “பொண்ணு வித்ததும் நீ சொன்ன”
          “ அட         ஆமாண்டா எல்லாம் சரிதான்”.
          “இல்ல, அவ அழகியா இல்லையான்னு சொல்லலயே”
         “அடப்பாவி மகேந்திரா நீ அதைக் கேக்கறயா? அட அமாவாசையில் பொறந்தவனே. எல்லாத்துக்கும் ஒரு கவலைன்னா  உனக்கு வேற ஒரு கவலை”.
“இல்லை நீ பாட்டு பாடினாயே”
          “இல்லடா அவ அழகியில்ல”
“அடப்போடா சப்புன்னு போயிருச்சு”.
          “ஆமா அவ தமிழா சிங்களமா?”
சிங்களம் தான்”.
          “ஓ அதனாலதான்டா”
“சரிசரி நான் பிஸியாக இருக்கேன். போனை வச்சிரேன்”
லைனை ஏன் விரசா கட் பன்னென்னா மக்களே அவன் பாடலின் அடுத்த வரியைப் பத்தி கேட்டிடக்  கூடாதில்லே அதனாலதான் .

- தொடரும்.

12 comments:

  1. அழகி ஒருத்தி இளநி விற்கும் பாடலை அறிவேன்! ஆனால் அந்தப் படத்தில் ஹூ இஸ் தி பிளாக் ஷீப் பாடல் மற்றும் இலங்கையின் இளம் குயில் தான் ஃபேமஸ்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் ஸ்ரீராம் , ஆனால் நான் கொழும்பு வீதியில் இளநி சாப்பிட்டதை அல்லவா சொல்ல வந்தேன்.

      Delete
  2. அழகி ஒருத்தி இளநீ விற்கும் பாடலை அறிந்தேன்...
    சீவுன சீவுல கழுத்தை தடவிப் பார்த்தீங்களா... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. அதை வேற ஏன் திரும்பவும் நியாபகப்படுத்துறீங்க குமார் .இப்ப நினைச்சாலும் ஜிவ்வுங்கிது .

      Delete
  3. மகேந்திரன் என்னுயை கூடப் பிறவா சகோதரனாகத்தான் இருக்க வேண்டும் அதனால்தான் என்னை போல கேள்விகள் கேட்க்கிறார்

    ReplyDelete
    Replies
    1. ஐயா சாமி நீங்க வேற கேட்க ஆரம்பிச்சுடாதீங்க , நான் அம்பேல்.

      Delete
  4. சீவும் போதோ கேட்டு இருக்கனும் நங்கை நீங்கள் எந்த மொழி பேசுகின்றீங்க என்று))

    ReplyDelete
    Replies
    1. நங்கை என் தமிழ் பேசும் தங்கை அல்லவென்று பார்த்தவுடன்தான் தெரிந்துவிட்டதே தனிமரம்.

      Delete
  5. சிங்களத்து சின்னகுயிலே.. அதைத்தாண்டி சத்தியமா வேற இலங்கை பாட்டு எதுவும் தெரியாது ஆபிசர் சார் ! :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா பாஸ்கர் , என்ன இது சின்னப்பிள்ளைத்தனமான இருக்கு .

      Delete
  6. இளநீர் குடிக்கறப்ப தேவார்மிதம் ஜீவாமிர்தம் பாடல் நினைவுக்கு வருதுன்னா ரொம்ப ஜிலு ஜிலுப்பா இருந்திருக்குமே ?

    அது மூன்று முகம் படத்தின் பாடல் என்று நினைக்கிறேன். சங்கர் கணேஷ் இசை.

    ReplyDelete
    Replies
    1. பாடலின் ஆராய்ச்சிக்குள் போகவில்லை காரிகன் .ஆனால் நீங்கள் சொன்னதும்தான் நியாபகம் வந்தது , ஆமாம் அது சங்கர் கணேஷ்தான் .

      Delete