Tuesday, October 6, 2015

இரு பெண்கள் பாடிய அன்பு டூயட் !!!!!!!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் 26
இதோ இதோ என் நெஞ்சிலே
1978ல் வெளிவந்த "வட்டத்துக்குள் சதுரம்" என்ற படத்திற்காக இளையராஜா அவர்கள் இசையமைத்து வெளிவந்தது இந்தப்பாடல். பாடலைக் கேட்டுவிடுவோம்.

பாடலின் சூழல்:
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் நட்பினைப் பாராட்டும் பல பாடல்கள் உண்டு. ஆனால் அவை பெரும்பாலும் ஆண் நண்பர்களுக்கிடையேயான பாடலாகத்தான் இருக்கும். இரு பெண்கள் பாடும் பாடலாய் இருந்தால் அது பெரும்பாலும் போட்டிப் பாடலாகவோ, அல்லது ஒரு ஆணுக்காக போட்டி போடும் இரண்டு பெண்கள் பாடுவது போல்தான் வந்திருக்கிறது.ஆனால் இந்தப்பாடல் இரு பெண்களுக்கிடையே உள்ள நட்பினையும் அன்பினையும் வெளிப்படுத்தும் ஒரு வித்தியாசமான பாடல்.
பாடலின் இசையமைப்பு:

பாடலின் கருத்துக்கேற்றபடி ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் பாடப்படுவதால் துள்ளல் பாடலாக இசையமைக்கப்பட்டிருக்கிறது. பாடலின் மூட் நெகிழ்ச்சியை விட மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டிருப்பதால், பாடல் முழுவதும் உற்சாகம் ஆக்கிரமித்துள்ளது. எந்த ஒரு முன் இசையும் (Prelude) இல்லாமல் இதோ இதோ என்ற வரிகளோடு பாடல் ஆரம்பிக்கிறது. அந்த உற்சாக நடைக்கு தபேலா நன்றாக ஒத்துழைத்து அநேகமாக பாடல் முழுவதுமாக வருகிறது. முதலாவது BGM  வயலின் சோலோவுடனும் புல்லாங்குழல் இசையோடு வந்து முடிய முதல் சரணம் ஆரம்பிக்கிறது. 2-ஆவது BGM ல் கிளரி நெட்டும் மூன்றாவது BGM ல் வயலின் குழுமத்தையும் பயன்படுத்தியிருக்கிறார். இரு பெண்கள் பாடும் டூயட் வரிகளுக்கு இடையில் வரிகளையும் இரு குரல்களையும் இணைப்பது போல் புல்லாங்குழல் இசைக்கிறது. எளிய ஆனால் இனிய இசையமைப்பு.
பாடல்வரிகள்:
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
வசந்த்தின் மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

பாடலை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் எளிய வரிகளில் நட்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஓடமும் நீரின்றி ஓடாதம்மா,
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா - என்ற வரிகளும்
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளைபோல் துணை நீயம்மா - ஆகியவற்றைச் சொல்லலாம். வழக்கத்திற்கு மாறாக நான்கு சரணங்கள் கொண்ட பாடல் இது.
பாடியவர்கள்:
BS Sasirekha
பாடியவர்கள் இளையராஜாவின் ஆஸ்தான பாடகி S .ஜானகியும், BS சசிரேகாவும் இணைந்து பாடியுள்ளனர். உச்சஸ்தாயி போகும் போது ஜானகியின் குரல் மேலும் இனிமையாக ஒலிக்கிறது. BS சசிரேகாவின் குரல் மத்யஸ்தாயியில் இனிமையாக ஒலிக்கிறது. கொஞ்சம் உன்னிப்பாய் கவனித்தால் இந்த கான்ட்ராஸ்ட் புரியும்.
மொத்தத்தில் இளையராஜாவின் ஆரம்பகால கட்டத்தில் உருவான இந்தப்பாடல் வெகுவாக மறந்துபோன பாடல். ஆனால் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு நிச்சயமாய்ப் பிடிக்கும்.
மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம்.

தொடரும்>>>>>>>>>>>>>>>>>

11 comments:

  1. This song is the only saving grace of this lousy movie...If it's not for this song, the movie would have been forgotten. Haunting melody. Ilayaraja in the seventies is hard to ignore..

    ReplyDelete
    Replies
    1. You may be right. I have not seen this movie and now I will not even attempt after seeing ur comment.

      Delete
  2. அருமையான நெஞ்சம் மறக்காத பாடல்.

    ReplyDelete
  3. அருமையான பாடல்.. எளிய வரிகள் ஆனால் அவர்கள் நட்பின் ஆழத்தை, எண்ணத்தை சொல்லி விடுகிறது..
    நன்றி நண்பரே.

    ReplyDelete