Tuesday, October 27, 2015

வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?


         கடந்த  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய  ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம். சிறப்பாக   நடந்து முடிந்தது .அதில் அடியேன் பேசிய முன்னுரை இது.

மூச்சுக் கொடுத்த இறைவனுக்கும், தமிழ்ப்
பேச்சுக் கொடுத்த என் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த சபைக்கும் என்
வணக்கங்கள் பலப்பல

A

ஆனந்தம் விழாக்குழுவினர் குறிப்பாக கவிஞர் சிவபாலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.இங்கு கூடியிருக்கும், அனைத்து உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் வணக்கம். ஆனந்தம் நிகழ்ச்சியின் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் ஆனந்தம்.

பட்டிமன்றத் தலைப்பு - வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பது சுற்றமா? இல்லை நட்பா?.
நம்மூரில் திருமணத்திற்கு கொடுக்கும் பத்திரிகையில், ஒரு வரி இருக்கும். எனக்கு ரொம்பப்பிடித்த வரி அது. “சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறோம். தங்கள் நல்வரவை விரும்பும் இருவீட்டார்”,  என்று போட்டிருப்பார்கள். அதுவும் முஸ்லீம் வீட்டு பாய் கல்யாணம்னா, நம்ம நட்பூஸ்  கூப்பிடாமயே கூட வந்துருவாங்க. ஓசி பிரியாணி கிடைக்கும்ல.
ஒரு திருமணம் அல்லது எந்த ஒரு மங்கள நிகழ்வும் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டுமென்றால், ஒரு புறம் சுற்றம் இருக்க வேண்டும் மறுபுறம் நட்பு இருக்க வேண்டும். இந்த இரண்டும் சூழ்ந்திருந்தால் மகிழ்ச்சிதான். யோசித்துப் பாருங்க உங்க கல்யாணம் அப்படித்தானே நடந்தது.
ஆனா இந்த ஊர்ல அப்படியா நடக்குது, நாலு பேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி. கல்யாணம்னாலும் அந்த நாலு பேர்தான் கருமாதினாலும் நாலுபேர்தான்.
என்னனு கேட்டா “பட்ஜெட் கழுதைன்னு”, சொல்றான் என் நண்பன். என்ன கழுதையான்னு கேட்டேன் ?. ஆமாடா பட்ஜெட் இடிக்குது, பட்ஜெட் கடிக்குது, பட்ஜெட் உதைக்குதுனு சொல்றான். நல்லவேளை பட்ஜெட் பொண்டாட்டி மாதிரின்னு சொல்லல ஏன்னா அதுக்கும் நல்லாவே பொருந்தும்.


ஒரு நீண்ட கால நண்பனுக்கு போன் செய்தேன். அவன் சொன்னான், “மன்னிச்சுக்கடா உனக்கு உள்ளத்தில் இடம் இருக்கு. ஆனா என் இல்லத்துல இடமில்லை”.என்னாச்சு”,னு கேட்டேன். “மனைவி வந்தாச்சு, சுற்றமும் நட்பும், நொந்தாச்சு”,னு சொன்னான். அது சரிதான் மனைவி வந்ததும் முதல்ல கட்பண்றது அதத்தானே. “என்னடா Arranged Marriageல தான் இந்தப்பிரச்சனை. நீ காதல் கல்யாணம்தானே. அவள் உன் தோழிதானேன்னு”, சொன்னேன். “ ஆமாடா  அதையேன் கேட்கிற , கல்யாணத்துக்கு முன் தோழிதான் .ஆனா இப்ப காளி ஆயிட்டா”ன்னு சொன்னான். அதோடு காதல் கல்யானம்னாலே தோல்விதானேனு சொன்னான் .அதாவது காதல் பண்ணிட்டு கல்யாணம்  நடக்கலை னாலும் தோல்வி, நடந்தாலும் தோல்விதாணு சொன்னான். எனக்கு அதைப்பத்தி அவ்வளவா தெரியாது.நான் அர்ரெஞ்சிடு மேரேஜ்.
நம்மூர்ல ஒரு நம்பிக்கை உண்டு, காக்கா கத்துனா உறவுக்காரங்க வருவாங்கன்னு, ஒரு பையன் அவங்கப்பாவை  கேட்டானாம், “ஏப்பா காக்கா கத்துனா உறவுக் காரங்க நிசமா வருவாங்களா”,ன்னுஅப்பா சொன்னாரு, “ஆமடா காக்கா கத்துனா உறவுக்காரங்க நிச்சயமா வருவாங்க”. “அப்படியாப்பா அப்புறம் எப்ப போவாங்கப்பா?” “அதுவா உங்க அம்மா கத்துனா போயிருவாங்க”.
தூர இருந்த சேர உறவுன்னு சொல்வாங்க அது உறவுக்கு மட்டுமல்ல நட்புக்கும் பொருந்தும்னு சொல்றாங்க.
இப்படி உறவும் நட்பும் இப்ப பிரச்சினையா இருக்கு.
ஆனா நம்ம தலைப்பு, வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா? நட்பா? வாங்க உங்களோடு சேர்ந்து நானும் கேட்க ஆவலாயிருக்கிறேன்.
தீர்ப்போட திரும்பி வருவேன், வணக்கம்.


தீர்ப்பு அடுத்த வெள்ளிக்கிழமை  வெளி வரும்

11 comments:

  1. அருமை தோழரே... அருமை! சென்ற வருடம் இதே நிகழ்ச்சியில் அடேஎனும் பேசியது நினைவிற்கு வந்தது. அடுத்த வருடம் கண்டிப்பாக வர முயல்வேன்.

    நன்றாக துவக்கினீர், முடிவிற்காக காத்து கொண்டு..

    ReplyDelete
  2. அருமை நண்பரே.. இந்த வருடம் நண்பர் விசுவை விட்டு விட்டிர்கள்??

    ReplyDelete
    Replies
    1. சென்ற வருடம் நன்றாக பேசாததின் விளைவோ ..?

      Delete
    2. சென்ற வருடம் நன்றாக பேசியதின் விளைவுதான் , எங்கே எனக்கே உலை வந்துவிடுமோ என்றுதான் கூப்பிடவில்லை.

      Delete
    3. நண்பர் விசுவை பற்றி அந்த பயம் இருக்கட்டும்..

      Delete
  3. சிறப்பான முன்னுரை.
    வாழ்த்துக்கள்
    காணொளி எப்போது வருகின்றன

    ReplyDelete
    Replies
    1. நன்றி வரதராஜன்,விரைவில் வரும் என்று நம்புகிறேன்.

      Delete
  4. Sir, missed it; I should have attended. Probably, next time.... Looks like NJ Tamil Sangam is hosting FETNA-July 2016. Hopefully, I will get a chance to meet you there!

    ReplyDelete
    Replies
    1. Dear Peppin,
      You can meet me anytime at my Office in Manhattan or at my house in Queens,You do not have to wait until Fetna.

      Delete
  5. அருமையான அவைத்தொடக்கம் சிரிப்பு வெடிகள் பல அடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனிமரம் , பதிவேற்றம் செய்துவிட்டேன் .

      Delete