Add caption |
கடந்த அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில்
இலங்கைத்தமிழர் நடத்திய ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில்
அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம் சிறப்பாக நடந்து முடிந்தது .அதில் அடியேன் சொன்ன தீர்ப்பு
இது.
இருபுறத்தாரும் பேசியதை கேட்டுக் கொண்டிருக்கும் வரையில்
கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் இப்போது தீர்ப்புச் சொல்ல நிற்கும் போது தான் திண்டாட்டமாக இருக்கிறது. என்ன செய்வது ஆரம்பம்னு ஒண்ணு இருந்தா முடிவுன்னு ஒண்ணு
இருந்து தானே ஆகும்.
Man
is a social animal என்று சொல்வார்கள்.
உற்றார் உறவினர் சுற்றம் நட்பு
இவையெல்லாம் வாழ்க்கையில் அவசியங்கள் தான்.
கூடி வாழ்ந்ததால் கோடி நன்மைன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.
ஆனால் நம்ம அனுபவம்
அப்படியா இருக்கு? நம்ம சுற்றத்தார் அப்படியா நடந்துக் கிட்டாங்க. நாம அவங்களுக்கு
உதவி செய்றவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சி. ஆனால் நமக்கு கஷ்டம் வந்து நாம உதவின்னு நிக்கும்
போது சுற்றம் முழுசும் காணாமப்போயிருச்சி. அட பண உதவி வேணாம்
, ஆறுதலா இரண்டு வார்த்தை? அதான் கண்ணுக்கு எட்டின வரைக்கும் காணாமப்போயிட்டாங்களே.
நம்ம வீட்ல ஒரு நல்லது பொல்லாததுக்கு கூப்பிட்டா நாம நெனைக்கிறது. “இவங்களை
கூப்பிட்டுத்தான் ஆகனும், ஆனா வராட்டி நல்லதுன்னு நெனைச்சிருக்கீங்களா.
ஏன்னா குறை சொல்றது சுற்றம்தான்,
கோபிக்கிறது சுற்றம்தான், பிரச்சனை பண்றது அவங்கதான். Invitationல
பேரு இல்லை,
நேர்ல வந்து கூப்பிடல, பந்தியில கவனிக்கல, வாங்கன்னு கூப்பிடல இப்படி எத்தனை பிரச்சினை பண்ணுவாங்க. ஆனா நட்பு,
“டேய் நேரில வரமுடியல
இன்விடேஷனும் அனுப்ப முடியல, கண்டிப்பா வந்துரு”. வந்து சொல்லாமயே எடுத்துப்போட்டு வேலை
செய்றது நட்புதான்.
நாம வசதியாக இருக்கும்போது, நம்ம சுற்றம் சொல்வாங்க அவங்க எங்களுக்கு நெருங்கிய
சொந்தம்னு, நாம கஷ்டத்துல இருக்கும்போது அவங்க தூரத்து உறவு ஆயிருவாங்க.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைன்னு ஒரு பழமொழி இருக்கு.
இதுக்கு அர்த்தம், தப்புக்கண்டுபிடிச்சுக் கொண்டேயிருந்தா சுற்றமாக யாரையும்
சேர்க்க முடியாதுன்னு. ஆனா நான் நினைக்கிறேன் அதோட அர்த்தம் ஒரே ஒரு நல்ல
சுற்றத்தைக் கூட பாக்க முடியாதுன்னு.
பழைய கால புராணத்தில பாத்தோம்னா:
மகாபாரதக் கதையில,
துரியோதனன் கெட்டவன்தான். சகோதரத்துரோகம் செய்தவன்தான்.
ஆனா நட்புக்கு எப்பவுமே துரோகம் செஞ்சதில்லை. அதனாலதான் கர்ணன் அவனுடைய
உற்றம் சுற்றத்தை விட்டுவிட்டு தன் நட்புக்காக உயிரைக்
கொடுத்தான். ராமாயணக் கதையில,
ராமனை அவனுடைய உறவும் சுற்றமும் கைவிட,
அவனுக்கு நட்பாக இருந்த குகனும் சுக்ரீவனும் தான் உதவுறாங்க.
இயேசுநாதர் கூட தன்னை உண்மையாய் பின்பற்றவங்களை ,
நண்பர்கள் என்றுதான் அழைத்தார்.
நம்ம நெருங்கிய நட்பைத்தான், நாம சொந்தமாக நினைச்சு மாப்ளை மச்சின்னு கூப்பிடுறோம்.
சொல்லும்போது ஞாபகம் வருது காலேஜ்ல
படிக்கும்போது என் நண்பன் ஒருவன் என்னை மாப்ள மாப்ளன்னு கூப்பிடுவான். ஒரு நாள்
சொன்னான்,
டேய் Alfy உன்னை நான் மாப்ளேன்னு கூப்பிட்டு பேசும் போது எவ்வளவு
நெருக்கமா இருக்கு. நீயும் அதே மாதிரி இருக்க, நம்ம ராகவனை மாப்ளன்னு கூப்பிட்டதுக்கு அப்படிக்
கூப்பிடாதன்னு சண்டை போடுறான் ஏன்னே தெரியலன்னான். மாப்பிள்ளை அது ஒண்ணுமில்ல,
எனக்கு தங்கச்சி எதுவுமில்ல, அவனுக்கு ஒரு அழகான தங்கச்சி இருக்கு அதனாலதான்.
ஒரு நல்ல அப்பாவை பிள்ளைக எப்படி சொல்வாங்க எங்கப்பா எனக்கு
ஒரு friend
மாதிரிடா, என் அம்மா எனக்கு ஒரு நல்ல தோழி மாதிரி,
உண்மையான நெருக்கமான உறவைக்குறிக்க நட்பு என்றுதான்
சொல்றோம்.
Add caption |
இன்னிக்கும் எனக்கு ஏதாவது மனக்கஷ்டம்னா, என் நண்பர்கள் யாராவது
ஒருவனுக்கு போனைப் போடுவேன். என்னடா மாப்ள எப்படி இருக்கன்னு கேட்பான் ஒண்ணுமில்லடா
மச்சி, சும்மாதான் கூப்பிட்டேன். அட பரவாயில்லை சொல்லு உன் குரலே சரியில்லைடா.
- இந்த ரெண்டு வார்த்தை போடா வாடான்னு பேசிட்டு துயரத்தை இறக்கிவிட்டுட்டா
மனசு கலகலன்னு ஆயிரும். ரெண்டு பழைய கதையை பேசி வாய்விட்டு சிரிச்சிட்டா, எல்லாத் துயரமும்
மறந்துபோயிரும்ல.
கடைசியா ஒரு மூணு விஷயத்தை சொல்லி முடிக்கிறேன்.
1.
சுற்றம் எப்பொழுதும் நம்மிடம் எதிர்பார்க்கிறது, ஆனா நட்பு எப்பொழுதும் எதிலும் எதையும் நம்மிடம்
எதிர்பார்ப்பதில்லை.
2.
சுற்றம் என்பது சூழ்நிலைக்கேற்ப மாறுவார்கள். ஆனா நட்பு என்னைக்கும் மாறாதது.
3.
சுற்றத்திடம் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது, நட்பிடம் எதையும் தைரியமாக பகிர்ந்துகொள்ளலாம்.
எனவே வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது
என்றும் வாடாத நட்பூவே என்
தீர்ப்பூ என்று சொல்லி வாய்ப்புக் கொடுத்த நல்ல
உள்ளங்களுக்கு நன்றி சொல்லி அமைகிறேன், நன்றி வணக்கம்.
முற்றும்.
நாட்டாமை.. சரியான தீர்ப்பு...
ReplyDeleteநண்பேண்டா.
Deleteஅருமையான தீர்ப்பு. நம்ம நட்ப பாராட்டி அடுத்த பட்டிமன்றத்துக்கு அடியேனை அழையுங்கள். .
ReplyDeleteஉங்களுக்கு என் உள்ளத்தில் எப்போதும் இடமுண்டு தம்பி விசு .
Deleteவணக்கம்.
ReplyDeleteதீர்ப்பு நல்லாத்தான் இருக்கு, ஆமாம், விழா முடிந்ததும் வீட்டுக்குத்தானே போனீங்க?
கோ
வேற வழி?
Deleteஅருமையா இருந்த நட்ப தம்ம்பி என்று சொல்லி உறவாக்கிட்டிங்களே, படா கில்லாடி அண்ணே நீங்க..
ReplyDeleteதீர்ப்பே அதானே தம்பி , எனக்கு நட்புக்கள்தான் என்றும் நல்ல உறவுகள் .
Deleteஅருமையான தீர்ப்பு.... உண்மையான தீர்ப்பு...
ReplyDeleteநன்றி தனபாலன் .
Deleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉறவுகளை முடிந்தவரை நட்பாக மாற்ற முடிந்தால் என்றும் நலமே
முயற்சி செய்கிறேன் வரதா .
Delete//சுற்றத்திடம் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது, நட்பிடம் எதையும் தைரியமாக பகிர்ந்துகொள்ளலாம். //
ReplyDeleteஉண்மை
உண்மை அன்பு , நன்றி .
Deleteநாட்டாம, தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு சொல்ல வழி இல்லயே!!!
ReplyDeleteஅருமையான தீர்ப்பு, :)
நன்றி ஆரூர் பாஸ்கர்.
Deleteபெற்றோராக இருந்தாலும், மனைவி கணவன் என்றாலும், சகோதர சகோதரியாக இருந்தாலும், உறவாக இருந்தாலும் அதில் நட்பு நட்பூவாக இருந்தால் எல்லாமே இனிக்கும்! எனவே நட்பூ மலர்வதையே நாங்களும் ஓட்டு...இதைத்தான் அடிக்கடிச் சொல்லிவருவதும்...
ReplyDeleteஅருமை
நட்பு நட்பூவாக இருந்தால் எல்லாமே இனிக்கும்,உண்மை நன்றி .
Delete