தோள் போராட்டமும் ஆள் மாறாட்டமும் பகுதி
3
இதன் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும்
இதன் 2-ஆம் பகுதியை படிக்க இங்கே சுட்டவும்
“இந்த சைக்கிள் அமெரிக்க வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குது”
“அமெரிக்கத்தத்துவமா? அது என்ன?”
“எவ்வளவுதான் முயன்று முயன்று பார்த்தாலும்,
அதே இடத்தில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் சேமிப்பு என்பது சுத்தமாக
இல்லை”.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
![]() |
Rod
பயிற்சி செய்யும் போது,
“என்ன அதற்குள் முடிச்சாச்சா?”
“ஆம் பத்து எண்ணம் கொண்ட 5 செட்டும் முடித்துவிட்டேன்”.
“சீட்டிங் செய்வது
போல் தெரிகிறதே”.
“பெண்கள்தான் ஆண்களை ஏமாற்றுவார்கள். ஆண்கள் பெண்களை
ஏமாற்றுவதில்லை”.
“அப்படியா?”
“ஆம் எங்கள் தமிழ் நாட்டில் ஏமாந்துபோன ஆண்கள்தான் அதிகம்”.
நீயும் அப்படித்தானா
?
“சேச்சே , நான்
ஏமாற மாட்டேன் ( அய்யய்யோ எப்படி இவளுக்கு தெரியும் ? ஒரு வேளை மூஞ்சி காட்டிக்கொடுக்குதோ
?)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
![]() |
உடற்பயிற்சி அறையில் இருந்த ஒரு படத்தில் ஆணின் படத்தில்
பலவித நரம்பு மண்டலங்களைக் குறித்து
விளக்கியிருந்தது. அதனைப் பார்த்துவிட்டுச் சொன்னேன். "எனக்குத்
தெரிந்து பெண்களுக்குத்தான் 'Nerves'
அதிகம். ஏன் இங்கே ஆண்கள் படமாகவே இருக்கிறது?”.
கிம் ஒரு முறை முறைத்தாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு முறை தெரப்பியின் போது:
“அம்மா கிம் போதும் நிறுத்து ரொம்ப வலிக்குது,
ஒரு பொண்ணு முன்னால நான் அழுதா அசிங்கமா இருக்கும்”.
“அது என்ன நீ எப்பவும் பொண்னு ஆணன்னு பிரிச்சே பேசற. யாருக்கு வலித்தாலும் அழுதால் என்ன
தப்பு”.
“சரிம்மா அதுக்காக ரொம்பப்போட்டு முறுக்காத,
நான் புதன்கிழமை அழமாட்டேன்”, என்று சொன்ன போது
சிரித்துவிட்டாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எனக்கு கிடைத்த அறையில் AC தரையை ஒட்டி இருக்கும். மற்றொரு அறையில் கூரையை ஒட்டி இருக்கும் ஒரு சமயம் ,பயிற்சி
செய்யும்போது AC உதவாமல் வேர்த்துக் கொட்டியது. அப்போது உள்ளே வந்த கிம்மிடம்,
"ஏம்மா AC
ஆட்களுக்கு போடமாட்டீங்களா? 'ரூஃபுக்கு போடுறீங்க இல்லை தரைக்கு போடுறீங்க'
என்றேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு முறை கைக்கு உறை போடாமல் வந்து மொபிலைசேஷன் பண்ணாள். கை
ஜில்லிட்டு இருந்தது.
“என்ன கை ஜில்லுனு இருக்கு”.
“சாரி”
"ஒரு வேளை
உள்ளே இருப்பது கோல்ட் பிளட்டா”.
“கோல்ட் பிளட்டா?”
“ ஆமா பின்ன இந்த முறுக்கு முறுக்கிறயே”.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்னொரு முறை வலியால் துடித்துக் கொண்டே சொன்னேன்,
“ நீ ஒரு painkiller என்று நினைத்தேன் ஆனால் நீ ஒரு Pain
giver.அதோடு நீ ஒரு சேடிஸ்ட்”.
“ சேடிஸ்டா எப்படி?” .
“நான் ஒவ்வொரு முறை தேங்க்ஸ் சொல்லும்போதும், Its my pleasure -னு சொல்றயே. என்னோட pain தான் உனக்கு Pleasureஆ, எங்க கடைவாயைக் காட்டு?”
“எதற்கு?”
“ ஏதாவது வேம்ப்பயர் பல் தெரியுதான்னு பார்க்கத்தான்”.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பயிற்சிக்கு முன் சொன்னேன்.
"இடது கையில் எக்சர்சைஸ்
செய்து செய்து போரடித்துவிட்டது, இன்றைக்கு வலதுகையில் செய்யவா?.
(ஏதோ ஞாபகத்தில்) “சரி ஓகே”
“என்னது வலது கையிலா”, சிரித்துக்
கொண்டே அடிக்க வந்துவிட்டாள் ஏனென்றால்
இடது கையில்தான் எனக்கு சர்ஜரி நடந்தது, அந்தக் கைக்குத்தான் தெரப்பி தேவைப்படுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
“ஏன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றன்னு கண்டுபிடிச்சிட்டேன்”
“ ஏன்?”
“உன்னோட ஐரோப்பிய ரத்தம்தான், என்னைப் போல அப்பாவிகளை டார்ச்சர் பண்ணத்தூண்டுது. உனக்குள்ளே இன்னும் ரேசிசம் இருக்குன்னு நினைக்கிறேன்”.
அவள் ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பந்தில் ஒரு பயிற்சி உண்டு. சுவற்றில் வைத்து,
உள்ளங்கையால் மேலும் கீழும் பின்னர் பக்கவாட்டில்
இருபுறமும், அதன்பின் வட்டமாக. அதனைச் சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.
நான் செய்ய ஆரம்பித்தேன். திரும்ப ஒரு ஐந்து நிமிடம் கழித்துவந்து கேட்டாள்.
“ இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?”
நான் சொன்னேன் பக்கத்தில் உள்ள மிகப்பெரிய இன்னொரு பந்தைப் பார்த்து,
“நல்லவேளை நீ இந்தப் பெரிய
பந்தை பார்க்கவில்லை”, என்றேன்.
எவ்வளவு முயற்சி செய்தும் இந்த சர்க்கிள் மூவ்மென்ட்ஸ் வரவில்லை, பந்து விழுந்து கொண்டே இருந்தது. பார்த்துக்
கொண்டிருந்த அவளிடம் கத்தினேன்.
“கெட் மி சம் கிரேஸி குளு (Crazy
Glue)”.
அவள் சத்தமாகச் சிரித்துவிட்டு, “யு ஆர் கிரேஸி”, என்று சொல்லிவிட்டுப்போய்விட்டாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கையின் ரேஞ்ச் வருவதற்காக ஒரு பயிற்சி உண்டு. சுவற்றில் ஒரு
சிறு மரப்பலகையில் சிறுசிறு படிகளாக வெட்டி வைத்திருப்பார்கள். அதில் இடது கையால்
சிறிது சிறிதாக ஏறி முடிந்த அளவுக்கு மேலே செல்ல வேண்டும்.
அதில் பயிற்சி செய்யும்போது வந்து கேட்டாள்,
"எப்படி போயிட்டிருக்குது”.
"ஐ ஆம் டூ ஷார்ட்"
சிரித்துக் கொண்டே “ஏன்?”
“ஆம் எவ்வளவு முயன்றாலும் மேலே எட்டவில்லை”.
சிரித்துக் கொண்டே
போய்விட்டாள். அடுத்த தடவை வரும்போது எக்கிக் கொண்டிருந்தேன்,
அவள் பார்த்தவுடன் சொன்னேன்,
"ஒரு ஸ்டூல் கொண்டு வா உடனே," என்றேன்.
முதுகில் ஒரு அடி கொடுத்துவிட்டுச் சென்றாள்.
மறுநாள் அதே பயிற்சி செய்யும்போது அவள் வருகையில் நான்
சொன்னேன்.
"ஐ ஆம் டூ ஷார்ட் " என்றேன்.
“அந்த ஜோக்கை அன்றே சொல்லிவிட்டாய்”.
“நோ நோ அதில்லை, ஐ ஆம் two ஷார்ட்”.
“ புரியவில்லை”.
நான் வலது கையால் பண்ணும் அளவு எண்ணிக்கைக்கு,
இடது கையில் 2படிதான் கம்மி என்று விளக்கியதும்
“யு ஆர் டூ ஷார்ட் பட் டூ ஸ்மார்ட்” என்று
சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
![]() |
ஒரு நாள் கையில் மோஷன் ரேஞ்ச்சுக்காக மொபிலைஸ் பண்ணும்போது வலி அதிகமாய்விட்டது.
தாங்க முடியவில்லை.
“போதும் போதும்”, என்று கத்தினேன்.
“மோஷன் வரவேண்டுமே”
நான் உடனே சொன்னேன். “அதுதான் என் பயமும் மோஷன்
வந்துவிடப்போகிறது”, என்று. அவள் வாய் விட்டு சிரித்துக் கொண்டே ஓடியே போய்விட்டாள்.
இன்னொரு முறை சொன்னேன், "மோஷன் முக்கியம்தான் ஆனால் முதலில் என் இம்மோஷனைப் பார் வலி
தாங்க முடியல" என்று சொன்னேன்.
சாகர் வருவதற்கு முதல் நாள், அவள் சொன்னாள்.
“ நான் உன் ஜோக்குகளை மிஸ் பண்ணுவேன்”. என்று. அடுத்த நாள்
சாகர் வந்து டேக் ஓவர் செய்ய, தற்செயலாய் அந்தப்பக்கம் வந்தவளிடம் சொன்னேன்.
"ஓம் ரீம் கிரீம், ஜிம் ரிம் கிம் (அவள் பெயர்) அப்ரா கடப்ரா".
“என்னாச்சு உனக்கு, மந்திரம் ஓதுற”.
“ இல்லை உன் கிம் மேஜிக் இன்னிக்கு மிஸ் ஆகிறது”. என்றேன்.
அதற்கு அடுத்த வாரம், சாகர் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போக,
கிம்தான் வந்தாள்.
“ஆஹா போனஸ்”
“ உனக்கா?” என்றாள்.
“இல்லை உனக்குத்தான்”
“எதற்கு”
"இன்னொரு முறை என்னை டார்ச்சர்
செய்யலாம்ல".
இப்படி முழு தெரப்பி நாட்களையும் திருவள்ளுவர் சொன்னதை
பின்பற்றி முடித்தேன்.
“என்னடா சேகரு கதைவிடுற திருவள்ளுவர் சொன்னதை பின்பற்றினயா ?”
“ஆமடா மக்கு மகேந்திரா, இடுக்கண் வருங்கால் நகுகன்னு அவர்தான
சொன்னாரு. நான் ஒரு படி மேல போய், மற்றவர்களையும் நகைக்க வச்சேன் “.
“நீ ஒரு சரியான காமடிரா”.
“ஆமடா என்னோட டிராஜடிய காமடியா மாத்திட்டேன்”.
-
முற்றும்.
ஓர்
அறிவிப்பு :
நண்பர்களே
, அலுவலக வேலையாக மெக்ஸிகோவில் உள்ள ஹ்வாடலஹாரா என்ற நகரத்திற்கு நாளை செல்கிறேன்.வரும்
ஞாயிரன்றுதான் திரும்பி வருவேன் .எனவே என் அடுத்த பதிவு அடுத்த வாரம்தாம் வரும்..உங்கள்
தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி
நீர் Painஐ Gainஆ மாத்திட்டிர் :) வெற்றி உடன் திரும்பவும் !!
ReplyDeleteநன்றி பாஸ்கர் .
Deleteதான் கஷ்டப்பட்டாலும் பிறர் சிரித்து வாழ வேண்டும் என்று நீங்கள் செய்த முயற்சி மிக அருமை
ReplyDeleteபோங்க மதுரைத்தமிழன் எனக்கு வெட்கமாக இருக்குது .
DeleteAnne! Kimmoda romba nerukkamaa aayitteenga pola irukke :)
ReplyDeleteஹி ஹி ஹிஹி , அதெல்லாம் ஒன்ணும் இல்லை .
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteவலி புரிகிறது...!
ReplyDelete//“யு ஆர் டூ ஷார்ட் பட் டூ ஸ்மார்ட்” // .....mm....m...!
ReplyDelete