ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை சர்ச்சுக்குப்
போவதற்கு என்னுடைய வேனை சூடுபண்ணிவிட்டு, டிரைவ் வேயிலிருந்து வெளியே எடுக்க முயன்றேன்.
மறுபுறம் 2 சிறுமிகளும் 2 சிறுவர்களும் சிறிய சைக்கிள்களில் நின்றிருந்ததை நான் கவனிக்காமல்
வெளியே எடுத்துவிட்டேன். அவர்களுடைய சைக்கிள்கள் பாத்வேயில் தடைபண்ணப்பட்டதை அவர்களால்
பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. வண்டி வழியில் இறங்கும் போது, என் வேன் கண்ணாடியை இறக்கிவிட்டு, "சாரி" என்றேன். அதற்கு
F.யு என்று சொன்னது ஒரு சிறுமி. அவள் வயது 5
வயது முதல் 7 வயதுக்குள் இருக்கும். எனக்கு ஒரே அதிர்ச்சி. ஆனால் அவளுக்கு அந்த
வார்த்தையை சொல்வதற்கு எந்தத் தயக்கமுமில்லை.
அமெரிக்காவில் அதுவும் நியூயார்க்கில் கெட்ட
வார்த்தைகள் சரளமாக வெளிவரும். நம்மூரிலாவது கோபம் வந்தால்தான் பேசுவார்கள்.இங்கே சாதாரணமாகவே
அப்படித்தான் பேசுவார்கள். ஏனென்றால் இங்கே திரைப்படங்கள், தெருக்கள், பள்ளிகள் எல்லாவற்றிலும்
ஒருவருக்கொருவர் சரளமாக F வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். வீட்டிலும் கணவன் மனைவி
அப்படியே பேசுவதால் பிள்ளைகளும் அதைத்தான் பேசுகின்றனர்.
அன்று முழுதும் சர்ச்சில் இருக்கும்போது கூட
அந்த வார்த்தையும் முகமும் அடிக்கடி வந்து போனது. சே நம்மூரில் பெண்கள் அதுவும் சிறுபெண்கள்
இப்படியெல்லாம் பேசமாட்டார்கள் என நினைத்தேன். என் வளர்ந்தபெண் பிள்ளைகள் இந்த மாதிரி
வார்த்தைகளை ஒருவேளை வெளியில் பேசுவார்களா என்ற பயம் எழுந்தது.
“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா”, என்றார் பாரதியார்.நாட்டையும்,
நதிகளையும் மொழிகளையும் தாயாக மதிப்பது நம் இந்திய குறிப்பாக
தமிழக பாரம்பரியம். ஆனால் பெண்களை இரண்டாம் தர குடிகளாகத்தான் நாம்
வீட்டில் மதிப்பதாக, பெண்விடுதலை (Women's Lib) காரர்கள் சொல்லுவார்கள்.
“மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு
நல்லது வேண்டும்.
பெண்விடுதலை வேண்டும்
பெரிய
கடவுள் காக்க வேண்டும்”
என்றெல்லாம் பாடியுள்ளோம் .ஆனால் நம்மூரில் ஒருபக்கம் ஈவ்
டீசிங் இருந்தாலும் மறுபக்கம் ஆடம் டீசிங் இருப்பதை மறுக்க
முடியாது .
ஒரு சில நாட்கள் கழித்து டைனிங் டேபிளில்
அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஏதோ ஒரு
காரணத்திற்கு “ஷிட்” (shit) என்ற
வார்த்தையைச் சொல்லிவிட்டேன். என் இரு மகள்களும் என்னை ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள்.
"என்னாச்சு?" என்றேன்.
"டாடி,
என்ன இப்படிப் பேசுகிறீர்கள்", என்றாள் பெரியவள்.
“ஏன் எப்படிப்பேசிவிட்டேன்”.
"டாடி உங்களுக்குத்
தெரியாது ?" என்றாள் சின்னவள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“இந்த வார்த்தை உங்கள் வாயில்
வருமென்று நாங்கள் நினைக்கவில்லை”, என்றாள் பெரியவள்.
விஷயம்
என்னவென்றால்
, shit என்று நாம் சர்வசாதாரணமாக இந்தியாவில் பயன்படுத்தும்
வார்த்தையை நான் சரளமாக சொன்னபோது, அந்த வார்த்தை கெட்ட
வார்த்தை அதனை பயன் படுத்தக்கூடாது என்று என் இரு மகள்களும் என்னை பிடிபிடி என்று
பிடித்துவிட்டனர்.
எனக்கு அவமானமாய் இருந்தாலும்,
ஒரு புறம் பெருமையாக இருந்தது.
பரவாயில்லை இந்த வார்த்தையே கெட்ட வார்த்தை என்றால் மற்ற F & B வார்த்தைகளை மறந்தும்கூட என் பிள்ளைகள் சொல்லமாட்டார்கள் என்று.
சில நாட்கள் கழித்து விஜய் டிவியில் நீயா
நானா நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெண்கள் ஒருபுறமும் பெற்றோர்
மறுபுறமும் உட்கார்ந்திருந்தனர். கோபிநாத் எடுத்த தலைப்பு ,”பெண்கள் தாங்கள் உடை
உடுத்துவதை மற்றவர் விமர்சனம் செய்தால் என்ன சொல்வீர்கள் என்று?.
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல, ஒரு
பெண், “F. off என்று சொல்லுவேன்”, என்று சொன்னாள்.
பெற்றோருக்கு முன்னால், அந்த வார்த்தையை சொல்வதற்கு
அவளுக்கு அச்சமோ கூச்சமோ கொஞ்சம் கூட இல்லை.
நான் இந்தப்பக்கம் வந்தபிறகு ஒரு
வேளை பெண் விடுதலை கூடிப்போச்சோ?.
அண்ணே .. நம்ம ஊர் ரொம்ப முன்னேறி போச்சு. இது எல்லாம் ஒண்ணுமே இல்ல. நீங்க ஒரு வேலை பண்ணுங்க. இனிமேல் நம்ம ஊர் பக்கம் போகாதீங்க !
ReplyDeleteகரெக்ட் நம்ம ஊர் ரொம்பத்தான் முன்னேறிப்போச்சு.
Deleteஅப்ப ஊருக்கு போக வேணாம்னு உண்மையிலேயே சொல்றீங்களா ?
கெட்ட வார்த்தையை ஆங்கிலத்தில் சொன்னால் அது எத்தனை நவீனமகிவிடுகிறது? அடேட என்னாமா இங்கிலீஷ் பேசுறான் என்று பெருமைப் படுபவர்களும் இங்கே உண்டு. திட்டினாலும் ஆங்கிலத்தில் திட்டு என்று ஒரு புதிய பொன்மொழியே சொல்லலாம்.
ReplyDeleteதிட்டினாலும் ஆங்கிலத்தில் திட்டு என்பது பொன்மொழியல்ல அது புண் மொழிதான்.நன்றி காரிகன் .
Deleteஎன்னத்த சொல்ல... சீரழிந்து விட்டது...
ReplyDeleteமிகவும் வேதனையாக இருக்கிறது .நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteஉண்மையே..
DeleteIt only means "Go away" right?! Why are you making a big deal out of it? LOL
ReplyDeleteLet me explain a little bit..
The fact is we still treat women unequally. If a guy used that word "fuck off" in the same neeyaa naanaa show, it would have been considered "offensive word" and would have been "edited" for sure. But when a girl does that it is a whole different story. It "turns on" Gopinath" and all the "sex starved guys" and so they ENJOY hearing that.They dont get offended at all. Moreover they do get a "tiny orgasm" while hearing that! So they let it go!
I think, you are the part of the problem here. You moved to US long time ago. But you still not adjusted yourself to the "developments" and the "freedom" women "earned" in the past two decades or so.You just dont really understand the "mentality" the current "IT generation"!
BTW, your favorite writer Charunivedita writes such things so casually. It never bothers you because he is a MAN and so are you! :) See, you are the part of the problem and so you would never find a solution!
Dear Varun,
ReplyDeleteIt bothers me whoever says bad words whether it is male or female because of my parents taught me that they are bad words .I like Charu except the usage of bad words and I have informed him also.
May be I am from the old school and not able to come out of it.
But If you consider that as a development, I dont' want that development at least for my children.
Will they say the same thing in Tamil ?
can it be used in a temple or church or any worship place?
They are still unparlimentary words in the whole world.
Alfy: I understand how you feel. I was only defending for the heck of it. But I am trying to understand why they do what they do.
ReplyDeleteThey learn this from movies or the novels they read or from an internet chat. They think it is cool. They start using it as they think it is cool. They hardly speak in Tamil and you dont find "similar thing" in Tamil movies or novels.
Sometime ago, an aunty (mid-thirties) was saying that she does not want to cook. He does not like getting tired or getting sweat. She was pretty serious! She was also saying that if she gets busy in the kitchen and gets tired she could not get engaged in sex or please her husband or herself later. This was also in a "neeyaa naanaa" show. Only people live in west find these things odd (like you do) but they dont (people live in TN) and they take it easy.
மாதொரு பாகன் கதையை தமிழ் பெண்மணிகள் எல்லாம் சாதாரணமா எடுத்துக்கிறாங்க. இதில் என்ன தப்பு இருக்கு? என்பதுபோல் பேசுறாங்க. சாதாரணமாக "தேவடியா முண்டை" வசனம் அதில் இருக்கு. They do not find that offensive. They say it is fine to go sleep with someone if husband is "infertile". Not sure whether they think this is the correct solution for such a problem. I was trying to suggest them another solution. "Divorce him and go find a guy who is not infertile and then marry him!". Dont sleep around when you are married to someone. They did not like that. They think they should live that husband and sleep around for the "child" which he could not provide. I get confused..
"ஆறு அதும் ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழம் எது ஐயா அந்த பொம்பள மனசு தான்யா"
DeleteF word or shit words ஒகே ஆனால் ஸ்டுபிட் என்று சொல்வதுதான் மிக தவறு என்று இங்குள்ள குழந்தைகள் நினைக்கிறார்கள்.
ReplyDeleteஇந்த பதிவை படிக்கும் போது கடந்த மாதத்தில் என் வீட்டில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு வெள்ளிக்கிழமை இரவு நான் என் மனைவி மற்றும் என் பெண் மூவரும் படம் பார்க்கலாம் என்று நினைத்து அர்னால்ட் நடித்த படத்தை போட்டோம் அந்த படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் அதில் F word அதிகம் பயன்படுத்தப்பட்டது உடனே என் மனைவி ச்சீ என்ன படம் என்று சொல்லி அதை அணைத்தாள் அதை பார்த்த என் பெண் சொன்னது டாடி அம்மா இதைப் போய் பெரிய விஷயமாய் எடுத்துக்கிறாள் அந்த வார்த்தை எங்கள் ஸ்கூலில் உள்ள குழந்தைகள் மிக சர்வசாதரணமாக உபயோக்கிறார்கள் என்று எனக்கு அது ஆச்சிரியமாக படவில்லை காரணம் நான் பலதரப்பட்ட மக்களை தினசரி நேரடியாக சந்திப்பதாலும் நான் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் காலேஜ் இருப்பாதாலும் அது போன்ற வார்த்தைகளை கேட்டு பழகி போய்விட்டது யதார்த்தமான உண்மை என்னவென்றால் இந்த வார்த்தைகளை நமது குழந்தைகள் வீட்டில் பேசுவதில்லை ஆனால் பள்ளிக்கூடங்களில் சர்வசாதாரணமாக உபயோகிக்கிறார்கள் இந்தியக் குழந்தைகள் நன்றாகவே நடிக்கின்றனர் ஆனால் உங்களை போல உள்ளவர்கள்தான் இன்னும் அப்பாவியாக இருக்கின்றீர்கள் அதனால்தான் இவ்வளவு அதிர்ச்சி உங்களுக்கு. இன்னும் சொல்ல நிறைய இருக்கு நம் இந்திய குழந்தைகளைப் பற்றி.....
சரி விடுங்க , எனக்குத் தெரியாமலேயே இருந்துவிட்டுப்போகட்டும்.
DeleteIt is funny, if you say, "Hey you gained some weight". It is the most offensive thing for a girl. Most of them will start crying. They will say, you are rude. They might not talk to you any more.
ReplyDeleteIf you say, he/she is A GAY. They will correct you. They will say, you should not say A GAY. You should say, He/she is gay.
But it is okay to use, F**K off or F**k up or anything of sort. A girl who worked with me casually say "mother f**ker"! She is a doctor now! Please dont you think only "low class" people use such words. High class girls use them very casually too.
MT is correct. Indian girls do casually say "f words" but only at school or when they are out with friends for a movie. When they are home, they are dady's little innocent girl. LOL
BTW, exceptions are there. I am not saying all Indian girls use f-word when they get out of home!
Looks like, I am too alienated from our country.
DeleteThanks for educating me.
ஆல்பி சார்
ReplyDeleteசினிமாவிலோ கதையிலோ இந்த வார்த்தைகளை சந்திக்கும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். நேரில் ஒரு நபர் நம்மையோ யாரையோ சொல்லும்போது நிஜம் நம்மை மிகவும் சுட்டு விடும் . அந்த அனுபவம்தான் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. நம் ஊர் மதுரைப் பக்கம் 'தக்காளி ' என்ற உச்சரிப்பில் ஒரு வார்த்தையை சொல்லாமல் பெரும்பாலோனோர் பேசமாட்டார்கள். பாரதிராஜா அவர் படத்தில் நேடிவிட்டி என்ற பெயரில் பெரிய நடிகரையே சொல்ல வைத்திருப்பார். விமர்சனத்திற்கு உட்பட்டது என்றாலும் அந்த வார்த்தை இப்போது சாதாரணமாகி விட்டது . நியூயார்க்கில் நீங்கள் சொன்னது சாதாரண வார்த்தையாக இருக்கும் . பெண் விடுதலை இப்படிப் பேசும் வார்த்தைகளிலும் உண்டா !?
சரியாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteகுறிப்பாக அந்த வார்த்தைகள் நம்மீது கோபத்துடன் வீசப்படும்போது , பெரும் மன உளைச்சலை உண்டு பண்ணுகிறது
தில்லியில் பெரியவர்களோ, சிறியவர்களோ, அக்காவை இழுக்காது இருப்பதில்லை நண்பரே. சில சமயங்களில் பெண்களும் பேசுவதை கேட்பதுண்டு. அதை அவர்கள் தவறாகவும் நினைப்பதில்லை......
ReplyDeleteதக்காளிதானே?
ReplyDeleteபரதேசி என்பது கூட எங்க ஊரில் கெட்ட வார்த்தை. உங்க பெயரிலேயே அதை நீங்க வைத்துக்கொள்ளவில்லையா? அதுபோலத்தான் நண்பா
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான்
Deleteதமிழ்ப்பையன் வருகைக்கு நன்றி