காட்சி 1: டெல்லி விமானநிலையம்
-
அமெரிக்க அதிபரின் பிரைவேட் ஜெட் வரப்போகும் சமயம்.
மோடியின் கார் பவனி உள்ளே நுழைகிறது. முப்படைத் தளபதிகள் ஏற்கனவே வரிசையில் நிற்க,
மோடி அவரச அவசரமாக வந்து முன்னால் வரப்பார்க்கிறார். அமெரிக்கன் செக்யூரிட்டி ஆட்கள்
தடுக்க அங்கே ஒரே தள்ளுமுள்ளு. ஒபாமா மந்தகாச
புன்னகையுடன் இறங்கி வருகிறார்.
மோடி: ஆவோ ஆவோ பராக்
ஒபாமா: சற்றே அதிர்கிறார். அவரை மனைவி
தவிர இதுவரை யாரும் முதற்பெயர் சொல்லி அழைத்ததில்லை. மிஸ்டர் பிரசிடென்ட் அல்லது நெருங்கியவர்கள்
மிஸ்டர் ஒபாமா என்றுதான் அழைப்பார்கள். (மைன்ட் வாய்ஸ் -சரி விடு அப்புறம்
வைத்துக்கொள்கிறேன்)
உங்களை
மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
-மிச்செல்
அப்போது வர இருவரும் கைகுலுக்குகிறார்கள்.
மிச்செல் அங்குமிங்கும் தேடுகிறார்.
மோடி: என்ன தேடுகிறீர்கள்?
மிச்செல்: எங்கே உங்கள் மனைவியைக் காணோம்?
ஒபாமா: மிச்செல்
சும்மா இரு (அசடு வழிகிறார்)
மோடி: நானும் என் மனைவியும் சேர்ந்து
வாழவில்லை.
மிச்செல்: ஓ ஐயாம் சாரி, எத்தனை வருடங்கள்?
மோடி: நாற்பது வருடங்கள்.
மிச்செல்: ஓ, அப்ப கல்யாணமாகி எத்தனை வருடங்கள்
ஆகிறது?
மோடி: நாற்பது வருடங்கள்.
மிச்செல்: அப்ப வாழவேயில்லையா ?டிவோர்ஸ்
ஆகிவிட்டதா?
மோடி: இன்னும் இல்லை.
ஓபாமா: (அவசரமாக)-மிச்செல் கொஞ்சம்
சும்மா இரு.
(மைன்ட்
வாய்ஸ் :இந்த விஷயத்தையே நாற்பது வருடத்திற்குப் பின்னாலதான் சொன்னார்.)
காரில்
கருப்புக்கண்ணாடி மறைக்க மோடி ஒரு குத்து மதிப்பாக கை அசைக்கிறார் - அமெரிக்க கான்வாய் விரைகிறது.
காட்சி 2 ஜனாதிபதி மாளிகை:
ஒபாமா
அதே உடையில் வர, மோடி வேறு உடையில் வருகிறார்.
ஒபாமா: புன்னகையுடன், ஓ டிரஸ் மாத்தியாச்சா?
மோடி: ஹிஹி.
ஒபாமா: காருக்குள்ளேயே எப்படித்தான்
உடை மாற்றுகிறீர்களோ?
பிரனாப்
முகர்ஜி இறங்கிவந்து வரவேற்கிறார்.
பிரணாப்: வளரும் இந்தியாவிற்கு மீண்டும்
வருக.
ஒபாமா: மிகவும் குனிந்து கைகுலுக்க அணிவகுப்பு
மரியாதை நடக்கிறது.
காட்சி 3 பூங்கா:
மோடி
காத்திருக்க, ஒபாமா லேட்டாக வருகிறார்.
மோடி: எங்கே போனீங்க?
ஒபாமா: மகாத்மா காந்தி சமாதிக்குப்
போனேன். எனக்கு அவர்தான மானசீக குரு.
மோடி: ஓ அவரா, அவரை மறந்து ரொம்ப நாளாச்சு.
ஒபாமா: (மைன்ட் வாய்ஸ் :ஆனா கோட்சேவை
மட்டும் ஞாபகம் வச்சிருக்கீங்க.)
(அப்போது
தான் கவனித்து) ஆ மறுபடியும் உடை மாத்தியாச்சா?.
ஒபாமா: ( உடையை உற்றுப் பார்த்துவிட்டு)
- உங்க பேர் மோடி மோடின்னு எழுதியிருக்கே?
மோடி: அதுவா? உங்கள் அமெரிக்கன் செக்யூரிட்டிக்கு
என்னை அடையாளம் தெரியறதுக்காக என் பேர் எழுதின கோட், ஏர்போர்ட்டில தள்ளி விட்டுட்டாங்க.
ஒபாமா: (என்ன ஒரு அல்பத்தனம் என்று
நினைத்துக் கொண்டு). ஓ அப்படியா? அப்ப பேர் இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கனும். எங்கூர்ல
நாங்களெல்லாம் மத்தவங்களைத்தான் எழுத விடுவோம். நாங்களே எழுதமாட்டோம்.
மோடி: இதோட விலை இருபது லட்சம், ஆனா
(கோபத்துடன்) எல்லாரும் பத்து லட்சம்னு குறைச்சு சொல்றாங்க.
ஒபாமா: வெளில சொல்றது சரிதான்.
மோடி: என்ன சொல்றாங்க ?.
ஒபாமா: 'இந்தியா பணக்காரர்கள் வாழும்
ஏழை நாடு' என்று.
-அப்போது
ஆர்டர்லி தேனீர் கொண்டுவருகிறான். தேனீர்,
பால், சர்க்கரை எல்லாம் தனித்தனியாக இருக்கிறது. ஒபாமா எடுக்கப்போக, மோடி அவரைத் தடுத்து,
தானே டீ போடுகிறார்.
ஒபாமா: (இலேசாக உறிஞ்சி விட்டு)-சூப்பர்-இப்படி
ஒரு டீயை நான் வாழ்நாள்ல சாப்பிட்டதேயில்லை.
மோடி: நான் முதல்ல டீக்கடைதான் வச்சிருந்தேன்.
கப்பில சாப்பிடறதவிட சாசரில் ஊத்தி அப்படியே உறிஞ்சி அடிச்சா இன்னும் சூப்பரா இருக்கும்.
(ஒபாமா
அப்படியே டிரை பண்ண மூக்கில் புரையேறி, கோட்டில் சில துளிகள் சிந்திவிடுகிறது).
-(மோடி
மைண்ட் வாய்ஸ்: என்ன இந்த ஆளுக்கு டீக்கூட
சாப்பிடத்தெரியல)
ஒபாமா: (மைண்ட் வாய்ஸ் - இதென்ன நாய்
குடிக்கிற மாதிரி குடிக்கிறார்.)
மோடி: சரி அணுசக்தி ஒப்பந்தம் எப்ப
போடலாம்?
ஒபாமா: அதுல சிக்கல் இருக்குன்னு மன்மோகன்
சொல்லி நிறுத்திவச்சிட்டாரே.
மோடி: அதெல்லாம் பரவாயில்லை.
ஒபாமா: உங்க கட்சிஅப்ப அதைத்தீவிரமா
எதிர்த்துச்சே. இப்ப எதிர்க்க மாட்டாங்களா?
மோடி: என்ன விவரம் தெரியாதவரா இருக்கீங்க
- நான் கட்சியை கைப்பத்தி ரொம்ப நாளாச்சு. அதுனால ஒரு பிரச்சனையில்லை.
ஒபாமா: ம்ம் இந்திய அரசியல்ல இது சகஜமப்பா.
அது சரி யூனியன் கார்பைடு மாதிரி விபத்து நடந்து பிரச்சனையாகி விட்டால், நஷ்டஈடு கொடுக்க
நாங்க தயாரில்லை.
மோடி: அதைப்பத்தி கவலைப்படாதீங்க.
அதுக்கு ஒரு ஐடியா வச்சிருக்கிறேன். இங்க உள்ள இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகளில் சில பாலிசி
எடுத்துக்கங்க. நஷ்ட ஈடை அவங்களே கொடுத்துடப்போறாங்க. பாதிய இந்திய அரசாங்கம் கொடுத்துர
ஏற்பாடு செய்றேன்.
ஒபாமா: அப்ப முடிவு எடுத்துரலாமா?
மோடி: ஆமா வந்ததுக்கு ரெண்டு மூணு
கையெழுத்துக்கூட போடாட்டி எப்படி?
அணு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ஒபாமா: (மைண்ட் வாய்ஸ் - என்ன இது இப்படி
வலிய வந்து வலையில் விழுறாங்க.)
காட்சி-4 குடியரசு அணிவகுப்பு:
முதலில்
மோடி, பின்னர் ஒபாமா அதன் பின்னர் பிரணாப் வர அணிவகுப்பு தொடங்குகிறது.
மோடி: எப்படி எங்க ராணுவ வலிமை?
ஒபாமா: எது அந்த சர்க்கஸ் வித்தையா?
மோடி: என்னாது
சர்க்கஸ் வித்தையா?
ஒபாமா: ஆமா, பைக்கில் பத்துபேர் ஏறி
சாகசம் செய்தார்களே அதைத்தானே சொல்றீங்க?
மோடி: இல்லீங்க, பீரங்கி, ஏவுகணைகள்,
ராக்கெட் லாஞ்சர்கள்.
ஒபாமா: அதுவா எல்லாம் அரதப்பழசு. அதெல்லாம்
போன நூற்றாண்டிலேயே நாங்க கண்டுபிடிச்சுட்டோம்.
மோடி: (ஜெர்க் ஆகிறார்)
ஒபாமா: பேசாம அதுக்கு ஒரு ஒப்பந்தம்
போட்டு, நவீன ஆயுதங்கள் எல்லாம் எங்கள்ட்டயே வாங்கிக்கங்க.
மோடி: காட்டுங்க எங்க கையெழுத்து போடனும்?
ஆமா பாகிஸ்தானுக்கு அதே ஆயுதங்களைக் கொடுப்பீங்களா?
ஒபாமா: சிரித்துக் கொண்டே -அவுங்களுக்கு
ஏற்கனவே கொடுத்துட்டோம்.
மோடி: ஐயையோ?
ஒபாமா: எங்களுக்குப் பணம்தான் முக்கியம்,
கேட்டா ____________க்கும் கூட விற்போம்.
மோடி: அடப்பாவிகளா?
மோடி: அங்க பாருங்க, அதான் குஜராத்
வண்டி.
ஒபாமா: யாரு அது முன்னால கட் அவுட்ல
-காந்தி சின்னவயது போட்டாவா?
மோடி: இல்லை அது சர்தார் வல்லபாய்
படேல்.
ஒபாமா: ஆமா காந்தியும் குஜராத்தானே.
மோடி: ஆமா ஆமா. அப்படித்தான் நினைக்கிறேன்.
ஒபாமா: முழு வண்டியிலும் அவரோட ஒரு
சிறுபடம் கூட இல்லையே.
மோடி: (மகாத்மா காந்தி, இந்திரா காந்தி,
ராஜீவ் காந்தி, சோனியா காந்தின்னு எல்லாக் காந்திகளையும் மறந்து ஒழிக்கிறதுதான் எங்க
வேலை.) வந்தமா ரெண்டு கையெழுத்துப் போட்டமான்னு போயிக்கிட்டே இருக்கணும் என்ன?
ஒபாமா:
(மைண்ட் வாய்ஸ் மோடி பயங்கர கேடியா இருக்காரே.)
காட்சி-5 : பிரதமர் வீடு
மோடி
வீட்டில் உட்கார்ந்து கொண்டு டிவி பார்க்கிறார். அதில் ஒபாமா இந்தியப் பள்ளி ஒன்றில்
உரையாடுவது வருகிறது.
ஒபாமா: மதச்சார்பு இல்லாமலிருந்தால்தான்
இந்தியா வளரும்.
மோடி: (கொஞ்ச நேரம் தனியா விட்டேன்.
வச்சுட்டான்யா ஆப்பு.) ஹலோ உள்துறையா? ஒபாமாவோட தாஜ்மகால் டிரிப்பை கேன்சல் பண்ணிட்டு ஊருக்கு அனுப்பிவிடுங்க. ரொம்ப டேமேஜ் பண்றாரு.
முற்றும்
உங்க என் எங்களுக்கு தெரியுமே ... அண்ணே ... நக்கலின் திரு உருவமே .. எப்படி இது ... ஒரே பதிவில் டெல்லியில் உள்ள எழுபது தொகுதியையும் கவர் பண்ண மாதிரி ஒரு கிண்டல்...
ReplyDeleteவிசுவுக்குப்பக்கத்தில் நான் சிறு கொசு அம்புட்டுத்தேன்
Deleteயாரையும் காயப்படுத்தாமல் அதே நேரத்தில் மிக அருமையாக எழுதப்பட்ட நகைச்சுவை பதிவு
ReplyDeleteதங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி மதுரைத்தமிழன் .
Delete20 லட்சம்... என்னவொரு வருத்தம்...! ஹா... ஹா...
ReplyDeleteசெம நக்கல்...
தங்கள் வருகைக்கும், ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteநல்ல நகைச்சுவையான எழுத்து...
ReplyDeleteமிக அருமை.
தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பா.
Deleteஎன்னாது .. .? மோடிக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ? பின்ன ஏன் அடுத்தவன் பொண்டாடிக்கு 100 புடவை வாங்கி தந்தாரு?
ReplyDeleteநல்ல நகைச்சுவை..... ரசித்தேன்.
ReplyDeleteThanks Venkat.
ReplyDelete