Thursday, November 6, 2014

நியூயார்க்கில் மில்லியனர்கள், பில்லியனர்கள் மற்றும் சல்லியனர்கள் !!!!!!!!!

 1. Michael Bloomberg- Former Mayor 
         இந்தியாவில் நாம் லட்சம் என்பதனை ஆங்கிலத்தில் Lakh என்போம். ஆனால் அமெரிக்காவில் Lakh என்றால் ஒருவருக்கும் தெரியாது. இங்கு ஆயிரம், பத்தாயிரத்திற்குப் பின்னர் 90 ஆயிரம் தாண்டி, நூறாயிரம் என்றுதான் சொல்வார்கள். அதன்பின்னர் ஒரு மில்லியன் என்பார்கள். ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும். இங்கு கோடியும் கிடையாது. மில்லியனுக்கு அப்புறம் பில்லியன், டிரில்லியன் என்று போகும். பில்லியன் என்பது 1000 மில்லியன் ஆகும்.
சரி விஷயத்திற்கு வருவோம். ஃபோர்ப்ஸ் (Forbs) மேகஜின் சமீபத்தில் அமெரிக்காவில் வாழும் 400 பெரும் பணக்காரர்களைப் பட்டியலிட்டது. அதில் 53 பெரும் பணக்காரர்கள் நியூயார்க்கில் வாழ்கிறார்கள். அவர்களின் ஆவரேஜ் மதிப்பு ஆறு பில்லியன் டாலர்கள். இதில் நியூயார்க்கை மிஞ்சிய கலிபோர்னியாவில் வாழ்பவர்கள் 93 பில்லியனர்கள். (தம்பி விசு இதில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் அவர் பெயர் எப்படி விடுபட்டுப்போனது   என்று   விளங்கவில்லை)
கீழே நியூயார்க்கின் முதல் 10 பில்லியனர்களைப் பட்டியலிடுகிறேன்.

1) David  Kosh - $ 42 பில்லியன்
David Koch-crop-2007.jpg
David Kosh
2) Michael Bloomberg - $36 பில்லியன் (முன்னாள் மேயர்)

இவர்   மேயர்   ஆனதால்  பில்லியனர் ஆகவில்லை .பில்லியனர் ஆக இருந்ததால்  மேயர்  ஆனார் .

3) Carl Icahn - $26 பில்லியன்
4) Ronald Perelman - $14.5 பில்லியன்
5) Rupert Murdoch - $ 14.2 பில்லியன்  ( Media baron)
 1. Rupert Murdoch
  Owner of the following
  Times Magazin,New York Post,Fox Network,Direct TV,20th Century Fox( Produced Titanic, Avatar etc),Wall Street Journal,Time Warner, CNN and Star TV Network
  *6) John Paulson - $ 13.7 பில்லியன்
7) James Simons - $ 12.5 பில்லியன்
8) Stephen Schwartzman - $ 10.6 பில்லியன்
9) Samuel Newhouse - $ 10.6 பில்லியன்
10) Leonard Lauda - $ 8.2 பில்லியன்

இந்த லிஸ்டை படிச்சு மண்டை காஞ்சு போச்சு .

மகேந்திரன்: ஏலேய் சேகரு, மில்லியனர் மற்றும் பில்லியனர் பற்றிச் சொன்ன சரி, அதென்ன சல்லியனர்?
பரதேசி : சல்லியனர் என்றால் சல்லிக்காசுகளை அதாவது பென்னிகளை மட்டுமே வைத்திருப்பவர் என்று அர்த்தம்.
மகேந்திரன்: அது யாருடா அந்த சல்லியனர்?

My Penny Collection 

பரதேசி :வேறுயாருமல்ல 'பஞ்சப்பராரி' என்று செல்லமாக அழைக்கப்படும் பரதேசியான நாந்தேன்.
மகேந்திரன் : -15 வருஷமா நியூயார்க்கில நீ சேத்து வைச்சது வெறும் சல்லிகளையா, போடா சல்லிப்பயலே.

பரதேசி: ???????????????

23 comments:

 1. ஹா ஹா.... கடைசி பாரா சூப்பர்....

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்கூல் பையன்.

  ReplyDelete
 3. தகவலுக்கு மிக நன்றி..
  நண்பர் விசுவின் category இதுக்கு எல்லாம் மேல மேல... :)

  ReplyDelete
  Replies
  1. நெசமாத்தான் சொல்றீகளா ?
   அப்ப விசு அதையும் தாண்டி டிரில்லியனர்னு சொல்லுங்க !!!!!!!!

   Delete
  2. அதுக்கு எல்லாம் மேல மேல...

   Delete
  3. நீங்கள் பேசுவது மணல் கயிறு டைரக்டர் "விசு" பற்றி தானே...

   Delete
  4. எனக்கு தெரிஞ்சதெல்லாம்
   ஒரே விசு அவர்தான் விசு Awesome

   Delete
 4. ஃபோர்ப்ஸ் (Forbs) மேகஜிங்காரனுக்கு இந்தியனை கண்டாலே பிடிக்காது அதனாலதான் பரதேசி சாரையும் விசு சார் பேரையும் மறைச்சுட்டாங்க

  ReplyDelete
  Replies
  1. ஐயா... இங்க பணத்தை பற்றியும் பணக்காரர்களை பற்றியம் பேசுகின்றீர்கள். இங்கே என் பெயர் எப்படி வந்தது? உங்கள் கிண்டலுக்கு ஒரு அளவே இல்லையா?

   Delete
 5. பரதேசி கையில் வைத்து இருப்பது Penny அல்ல எல்லாம் தங்ககாசுகள் எங்கே தங்க காசு என்று சொன்னால் மதுரைத்தமிழன் வந்து கொள்ளை அடிச்சுடுவானோ என்று பயந்து இப்படி சொல்லுகிறார்

  ReplyDelete
  Replies
  1. ஐயா மதுரைத்தமிழா உங்க ஊரில் காப்பர்தான் தங்கமா ?

   Delete
  2. ஐயா, நண்பா, உங்க ஊரில் பாப்பர் தான் ப்ரெசிடெண்ட்டா?

   Delete
 6. நான் கடந்த வாரம் நீயூயார்க் தமிழ் சங்க ஆட்களை சந்திக்க நேர்ந்தது அப்போது பேச்சின் ஊடே உங்களுக்கு பரதேசியை தெரியுமா என்று தெரியாத்தனமா கேட்டுடுட்டேன் அதற்கு அவர்கள் பலமாக சிரித்து அதன் பின் சொன்னார்கள் அவரை தெரியுமா என்று கேட்காதீர்கள் காரணம் நீயூயார்க்கில் உள்ள தமிழரில் மல்டி மில்லியனர் இவர் ஒருவர்தான் என்று சொன்னார்கள்.. அதன் பிறகுதான் தெரிந்து கொண்டேன் பரதேசி என்று பெயருக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்று. அதனால் மக்களே நீங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பினால் இவர் நிச்சயம் உங்களுக்கு உதவுவார்...

  ReplyDelete
  Replies
  1. என்ன ஆச்சரியம் பாருங்கள்.. நீங்கள் நியூயார்க்கில் கேட்டீர்கள்..
   நான் வாஷிங்டன்னில் கேட்டேன்.. இங்கேயும் அதே பதில் தான் சொன்னார்கள்..

   Delete
  2. அடே டே, சொன்ன நம்ப மாட்டீங்க. இங்க மேற்கு கடற்கரையில் உள்ள தமிழ் நண்பர்களிடம் "பரதேசி" எனக்கு வேண்டபட்டவர் என்றேன். அனைவரும் உடனே என்னை தலைவரே என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

   Delete
  3. தமிழ் நாட்டில் தொழில் துவங்க பரதேசி பணம் தருவார். அனால் தொழில் நடத்த மின்சாரம் யார் தருவார்கள்?

   Delete
  4. தலைவர் விசு வாழ்க.. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க..வாழ்க..

   Delete
  5. நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் அப்படி யாரும் ஏமாந்தவர்கள் இருப்பது போல் தெரியவில்லையே ? எல்லோரும் உண்மை பேசும் நல்லவர்கள் ஆச்சே.

   Delete
 7. பரதேசி கையில் வைத்து இருப்பது Penny அல்ல எல்லாம் தங்ககாசுகள் எங்கே தங்க காசு என்று சொன்னால் மதுரைத்தமிழன் வந்து கொள்ளை அடிச்சுடுவானோ என்று பயந்து இப்படி சொல்லுகிறார்

  ReplyDelete
  Replies
  1. நண்பர் alfy அவர்களே.. உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே..!!!
   தகவலுக்கு நன்றி மதுரைத்தமிழன் அவர்களே...

   Delete
  2. நண்பா நீங்கள் என் "நண்பா" ஆச்சே நீங்களுமா ?

   Delete
 8. ஹாஹா... உங்கள் கையில் இருப்பது தங்கக் காசுகள் என்பது எங்களுக்கும் தெரிந்து விட்டதே!

  ReplyDelete