Thursday, November 13, 2014

நியூயார்க்கில் “சம்போ சிவசம்போ” !!!!!!!!!!!



         “நியூயார்க் தமிழ்ச் சங்கம்”, தீபாவளித்திருநாளை முன்னிட்டு போன சனிக்கிழமை (நவம்பர்  8, 2014) அன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். ஃபிளஷிங்  ஏரியாவில் உள்ள 'ஹிண்டு டெம்ப்பிள்' பக்கத்தில் உள்ள ஒரு பள்ளி ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடந்தது.வழக்கம்போல் பரதேசி அங்கு ஆஜர். ஆல்பர்ட் செல்லதுரை , வனஜா பார்த்தசாரதி , ரங்காவின் மனைவி புனிதா, சிவபாலன் ஆகியோர்  வரவேற்றனர்  .

          நிகழ்ச்சிக்கு முன்னால் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் பழைய ஃபோட்டோக்களை போடுவதாக பொருளாளர் ரங்கா அவர்கள் கூப்பிட்டுச் சொன்னதினிமித்தம் சீக்கிரமாக போய் உட்கார்ந்து கொண்டேன். (பொருள் உள்ளவர்களைத்தான் பொருளாளராக போடுவாங்க போலிருக்கு !!!!!!!!!!). மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்க, மேலிருந்து இறங்கிய ஸ்கிரீனில், சில பழைய போட்டோக்களைக் காண்பிக்கத்துவங்கினர். பாண்டிய மன்னர்கள் ஆரம்பித்து வளர்த்த முதல், இடை, கடைச் சங்கங்களுக்குப் பின்னர் உடனே ஆரம்பிக்கப்பட்டது, “நியூயார்க் தமிழ்ச் சங்கம்” தான் போலிருக்கு, 1970-களில் எடுத்த படங்கள் அவை.  
            கோட் சூட் அணிந்து மறக்காமல் தொப்பியையும் அணிந்த எம்ஜியார் படம் வந்தது. தமிழ்ச்சங்க மக்கள் அவரை ஜான் F.கென்னடி ஏர்போர்ட்டில் வரவேற்று அப்போதிருந்த தலைவர் வீட்டில் விருந்து கொடுத்த படங்கள் வந்தன. எல்லாப்படங்களிலும் எம்ஜியார் அவருடைய டிரேட் மார்க் புன்னகையில் இருந்தார். ஏர்போர்ட்டில் கையில் ஒரு சிறிய பெட்டியுடன் இருந்தார். அந்தப்பெட்டிக்குள் என்ன இருந்தது என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தது.
      அதன்பின் இளமையான “கலைஞர் கருணாநிதி” (அப்போதைய முதலமைச்சர்) வந்த படங்கள், ஜெமினி கணேசனுக்கு கொடுத்த வரவேற்பு, சங்கக்கூட்டத்தில் உரையாற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய படங்கள் காட்டப்பட்டன. பின்னர் அவையே மறுபடியும் மறுபடியும் மறுபடியும் காட்டப்பட்டன. “ஐயையோ போதும் நிறுத்துங்க”, என்று கத்துவதற்குள் நிறுத்திவிட்டனர். (இன்னும் நிறைய போட்டோக்களை போட்டிருக்கலாம் ரங்கா. )
           தலைவர் விஜயகுமார், செயலாளர் ராம்மோகன், ​​​​​​​​​​பொருளாளர் ரங்கா எல்லாரும் பரபரவென அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேடையில் மூன்று சிறுமிகள் தோன்றினர். யாரும் எதிர்பார்க்காத போது, எந்த அறிவிப்பும் இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தான "நீராரும் கடலுடுத்த" பாடலை அவர்கள் பாட, சடாரென்று எழுந்து நின்றேன். சபையும் எழுந்து நின்றது. ஆங்கிலத்தில் எழுதி வைத்துப்பாடினாலும் உச்சரிப்புப் பிழையின்றி நன்றாகவே பாடினர். அதன்பின்னர் எல்லோருமே உட்கார்ந்து விட ஒரு மஞ்சள் மலர் வந்து (ஸ்ருதி) வந்து அமெரிக்க தேசீய கீதம் பாட அனைவரும் திரும்பவும் எழுந்து நின்றோம்.
           அதன்பின்னர் தலைவர் விஜயகுமார் வந்து "இருளை நீக்கி ஒளி கொண்டுவரும் பண்டிகையே  தீபாவளி" என்று சொல்லிய அதே நிமிடத்தில் எல்லா ஃபோகஸ் லைட்களும் எரிந்து இருளைப் போக்கியது ஒரு ஆச்சரிய கோ இன்சிடென்ஸ்.
           நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஒரு நீலதேவதை (லாரன் ஜோசப்) "நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்" என்ற பாடலை கரோயோக்கி ஸ்டைலில் பாடி அப்ளாஸ் அள்ளினார்.

Bhairavi

அதன்பின்னர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்த அந்தப் பெண்ணை பார்த்து “அட “நாதஸ்வரம்” தொடரில் மலராக நடிக்கும் பெண்”, என என் மனைவி சொன்னாள். “பைரவி” என்று அறிமுகப்படுத்தினார்கள். மலரின் சாயலில் இருந்ததால், அப்படியே நினைத்து  விட்டாள் போல. நல்ல கருநாடக ஸ்டைலில் ஆக்சென்டில் இன்னொரு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார், அதன்பின்னர் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் 'அலெக்ரா' பாடலைப்பாடி அசத்தியபோது, கர்நாடக ஆக்சென்ட் கொஞ்சம் கூட இல்லை.
                   தமிழ்த்தாயின் பாட்டை விட இந்தப்பாட்டுக்கு நிறைய பிராக்டிஸ் செய்திருப்பார் போல. இன்னும் சில பாடல்கள் பாடப்பட்டன. கடைசியாக பைரவி தவிர மற்ற மூன்று பேரும் மெட்லி என்று பல பாடல்களை பாடி ஹைபிச்சில் திணறி தொண்டை கட்டி போதுமடாசாமி  என்று இறங்கி வந்தனர். மெட்லி  மேட்லி ஆகி கொஞ்சம் பேட்லி ஆகிவிட்டது.

    
அதன்பின்னர் பரதநாட்டிய உடையில் ஒரு பத்துபேர் மேடையேறினர். விக்னேஸ்வரி அவர்களின் மாணவிகளாம். விக்னேஸ்வரி அவர்கள் வந்து ஒரு புதிய முயற்சியாக மகாபாரதக் கதையை ஒரு 20 நிமிடத்தில் நாட்டியத்தில் நடத்த விருப்பதாக அறிவித்தார். தவறு இருந்தால் மன்னிக்கும்படியும் கூறினார். அவருடைய உச்சரிப்பிலிருந்து அவர் ஒரு இலங்கைத்தமிழர் என்று தெரிந்தது. 


அவருடைய மாணவிகள், அபிநயத்திலும், கண் அசைவிலும்,  நளினத்திலும் மிகச் சிறப்பாக டி கைதட்டல்களை அள்ளினர். குறிப்பாக சகுனியின் சூது விளையாட்டு மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் ஒரு மாணவியின் தாயும் கலந்துகொண்டு வெகுசிறப்பாக ஆடினார்.
  1. YG Mathuvanthi

                       கடைசியாக Y.G. மதுவந்தியின் "சம்போ  சிவசம்போ” நாடகம் அரங்கேறியது. கதையின்   களம் நியூயார்க்.


                    நியூயார்க்குக்கு மேற்படிப்பு படிக்க வரும் மதுவந்தி தன் நண்பர்களோடு தங்குகிறார். ஒரு ரூமில் அவரும் அவள் கிளாஸ்மெட்டும் (மாயா) இருக்க இன்னொரு பெட் ரூமில் ஒரு ஆர்டிஸ்ட் பெண்ணும், செஃப் ஆக வேலை செய்யும் ஒருவரும் இருக்கிறார்கள். இதற்கிடையில் சாஃப்ட் வேர் வேலைக்கு வரும் ஒருவனுக்கு தங்கள் ஹாலில் உள்ள கவுச்சை வாடகைக்கு விடுகிறார்கள். இது ஒரு டிபிக்கல் நியூயார்க் சீன். ஆனால் மதுவந்தியின் அப்பா, சுரேஸ்வர் ஊரிலிருந்து இங்கு வர, ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருப்பதை தப்பாக எடுத்துக்கொள்வார் என்பதால் ஆகாஷூம் மாயாவும் திருமணமானவர்கள் என்ற பொய்யைச் சொல்ல, அதன்பின் பொய் மேல் பொய் சொல்லி நன்றாக மாட்டிக் கொண்டு முழிக்க, இது எப்படி சால்வ் ஆகிறது என்பது தான் நாடகத்தின் கதை.

Sureshwar
       சுரேஸ்வர் குழந்தை நட்சத்திரமாக, அன்புக்கு நான் அடிமை, பொல்லாதவன், அலைகள் ஓய்வதில்லை, ராணுவ வீரன் போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட, மலையாளம் மற்றும் இந்திப்படங்களில் நடித்தவர். பின்னர் சின்னத்திரையிலும் மர்ம தேசம், விடாது கருப்பு, சித்தி, போன்ற பல சீரியல்களில் நடித்தவர். Y.G.மகேந்திரா நாடகக்குழுவில் பல  ஆண்டுகள் நடித்து இப்போது முதன்முதலாக இந்த நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார். விளம்பரங்களில் M.S.விஸ்வநாதன் இசை என்று போட்டிருந்ததை பார்த்துவிட்டு,”எங்கே அவரைக்காணோம் என்று என் பக்கத்தில்  உட்கார்ந்திருந்த ஒரு அப்பாவி கேட்டார்.
                       மேலிருந்து மறுபடியும் இறங்கிய ஸ்கிரீனில், நாடகத்தின் பெயர் நடிகர்கள் , தொழில் நுட்ப வல்லுனர்கள் பெயர் எல்லாம் காட்டப்பட்டு, நாடகத்துக்கு இசையமைத்த M.S. விஸ்வநாதன் அவர்கள் 'சம்போ அவர்கள் சிவசம்போ' என்ற அவர் இசையமைத்து  பாடிய “நினைத்தாலே இனிக்கும்” பாடலைப் பாடினார். பாடலின் நடுவில் "ரஜினி ஆடும் காட்சி நடைபெற, அரங்கத்தில் விசில் பறந்தது. (ஆமாம் இந்த விசிலடிக்க எங்கே போய் கற்றுக் கொள்வது?) பின்னனிக்குரலுக்கு 'பாஸ்கி' உதவியிருந்தார்.

நாடகத்தின் சிறப்பு அம்சங்களை கீழே தருகிறேன்.
1.    நாடகம் நடக்கும் களம் நியூயார்க், அதுவும் நியூயார்க்கில் அரங்கேறியதால் எல்லோருக்கும் மிகவும் பிடித்தது.
2.    சீன் செட் அமைப்புகளில், நியூயார்க் வீடு, டைம் ஸ்கொயர் சப்வே 42-ஆம் தெரு ஆகியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
3.    நாடகம் முழுவதும் கேலியும் கிண்டலும் நிறைந்த நல்ல வசனங்கள். ஹரி ராமகிருஷ்ணன் முதன் முதலாக எழுதியிருக்கிறார்.
4.    சீன் மாற்றங்கள்  மிக விரைவாக செய்யப்பட்டன.
5.    சுரேஸ்வரின் நடிப்பு மேடை நாடகத்துக்கு கச்சிதமாக இருந்தது. கதை எழுதியவரும் டைரக்ஷனும் இவரே.
6.    Y.G. மதுவந்தியின் நடிப்பும் ஓகே.
7.    துணை நடிகர்களில் பெரும்பாலோர் சிறப்பாகவே நடித்தனர்.

குறைகள்:
1.    லோக்கல் ஆட்களின் நடிப்பு சோபிக்கவில்லை. குறிப்பாக மாயா கேரக்டர் மற்றும் ஆகாஷின் அப்பாவாக நடித்தவர்கள்.இந்த விஷயத்தில் டைரக்ஷன் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.
2.    'ஏகான்' கேரக்டர், தான் US-ல் பிறந்து வளர்ந்ததாக முதலில் சொல்லிவிட்டு பின்னர் திருச்சியில் பிறந்ததாக சொல்வார். அதோடு இங்குள்ளவர்கள் பயன்படுத்துவது போல் இல்லாமல் பிறந்த தேதியைச் சொல்வார்.
3.    அரவான் அரவாணிகளைக் கேலி செய்தது கொஞ்சம் விரசமாக இருந்ததோடு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல. நம் சினிமாவிலும் நாடகத்திலும் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இப்படிப்பிறந்தது அவர்கள் தவறல்ல.
4.    கிளைமேக்ஸ் சீனில் சுரேஸ்வர் பேசுவது கொஞ்சம் நீண்டுவிட்டது. இன்னும் அதை க்ரிஸ்ப் ஆக்கலாம்.
      
ஆனால் மொத்தத்தில் நாடகம் ரசிக்கும்படியாக இருந்தது.சிரித்துக்களித்து வெளியே வந்த எங்களுக்கு சுவையான தீபாவளி விருந்தும் (காரைக்குடி நியூஜெர்சி)  விஜயகுமார் கையால் பரிமாற, உண்டு முடித்து வெளியே வந்தேன்.

ஒரு நல்ல மகிழ்ச்சியான மாலைப் பொழுதைக் கொடுத்த நியூயார்க் தமிழ்ச்சங்க்கத்திற்கு என்னுடைய நன்றிகள்.

25 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. முதல் பொருள் முதல்.
    பொருள் உள்ளவர்கள் தான் பொருளாளர்கள் ஆவர்கள் என்பது ஒரு மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கையை ஒழிக்க தான் நானும் சில நிறுவனங்களில் பொருளாளர் ஆனேன்.

    முன்னால் முதல் அமைச்சர்களின் படங்கள் பிரமாதம். இந்த காலத்தில் இந்த மாதிரி பெரிய ஆட்களை சங்க தலைவர்கள் சந்திக்க முடியுமா என்பது கேள்வி குறி. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    அந்த பரத நாட்டு ஆசிரியை என்ன "கதைத்தார்கள்" ? ஏதும் விளங்கியதா அந்நாட்டு பெட்டை ஒன்றை கலியாணம் முடித்து, அவர்கள் கதைப்பதை புரியாமல் முழித்து கொண்டு இருக்கும் ஒருவன் என்ற முறையில் கேட்டேன்.

    இங்கு பிறந்தேன் என்று சொல்லிவிட்டு பிறகு அங்கு பிறந்தேன் என்றாரா? அண்ணே , நாடகம் போனா ரசிக்கணும் , ஆராய கூடாது.

    மகேந்திரன் அவர்களின் புதல்வி நல்ல நடிப்பு என்றீர்கள், புலிக்கு பிறந்தது ஆயிற்றே .. அதினால் தான்.
    ஆகா மொத்ததில் எங்களையும் அங்கே அழைத்து சென்றீர்கள்.
    சம்போ ....சிவ சம்போ !

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது, தவறுகள் என் பார்வையில் பட தவறுவதில்லை .
      ஆனால் குறை சொல்லும் நோக்கத்தில் இல்லை , குறைகள் நிறைகள் ஆக வேண்டும் என்ற நல்ல (? ) நோக்கத்தில்தான் தம்பி விசு.

      Delete
    2. என்ன செய்வது, தவறுகள் என் பார்வையில் பட தவறுவதில்லை .
      ஆனால் குறை சொல்லும் நோக்கத்தில் இல்லை , குறைகள் நிறைகள் ஆக வேண்டும் என்ற நல்ல (? ) நோக்கத்தில்தான்...
      மிகச் சரி... :)

      Delete
  3. MGR அவர்கள் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தை நியூ யார்க் தமிழ்ச் சங்கத்துக்கு போட்டுக் காட்டினார் என்று அறிகிறோம்.

    குறைந்த புகைப்படங்களே நமக்குக் கிடைக்கபெற்றதால், அவற்றை மீண்டும் காட்ட நேர்ந்தது. அன்றைய தலைவர் திரு ஹென்றி சேகர் அவர்கள் எமக்கு அனுப்பி வைத்த அரிய பொக்கிஷங்கள் அவை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி .அந்தக்காலம் மட்டுமில்லை , அதன்பின் போன ப்ரோக்ராம் வரை எடுத்த ஏராளமான புகைப்படங்கள் உங்களிடம் இருக்குமே, அதைக்க்காட்டியிருக்கலாமே என்றுதான் சொன்னேன் ரங்கா.

      Delete
  4. நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி நிகழ்ச்சிகளை நடுநிலையாக தொகுத்து வழங்கிய உங்கள் கட்டுரை மிக அருமையாக இருந்தது! நல்ல வர்ணனையாக அமைந்த உங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete
  5. நியூயார்க் தமிழ்ச் சங்கம் கொண்டாடிய தீபாவளி கொண்டாண்டத்தை நல்ல நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! ( அது ஏன் தீபாவளி முடிந்து இரண்டு வாரம் கழித்து கொண்டாடினீர்கள் என்று தெரியவில்லை.)
    த.ம.2


    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி தமிழ் இளங்கோ.பிறந்த நாள் உட்பட எல்லா விழாக்களையும் வாரக்கடைசியில்தான் கொண்டாடுவோம் .அப்படி எல்லோருக்கும் வசதியாக வந்த நாள்தான் இது

      Delete
  6. நல்ல வர்ணனை.. ஆரம்பம் முதல் முடிவு வரை தந்ததற்கு நன்றி..

    ReplyDelete
  7. பரதேசி இல்லாமல் ஈஸ்ட்கோஸ்டில் எந்த விழாவும் நடக்காது போல இருக்கே....... எனக்கொரு சந்தேகம் விழா நடத்துபவர்கள் உங்ககிட்ட அப்பாயிண்ட்மென்ட் முதலில் வாங்கிவிட்டு அப்புறம்தான் விழாவிற்கான தேதியை குறிப்பார்கள் என நான் கேள்விபட்டது உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. தமிழா , ஊரறிந்த விஷயத்த கேட்டு தெரிந்து கொள்ளவேண்டுமா? இவர் சரின்னு சொன்னவுடன் நேர்த்தி குறிப்பார்கள். அதுதானே முறையும். இடுக்கு எல்லாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

      Delete
    2. வந்த நானூறு பேரில் என்னை நாலு பேருக்குத்தான் தெரியும் . இதில என்னைக்கேட்டு தேதி குறிப்பார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர் .

      Delete
    3. அந்த நாலு பேரும் Chief Guests, சங்கத்தின் முக்கிய நபர்கள்..சரியா? அப்போ நண்பர்கள் சொன்னது சரிதானே..

      Delete
    4. பொருளாளரையும் அண்ணனுக்கு நன்றாக தெரியும்.

      Delete
    5. பொருளாளரை தெரிந்து வைத்து என்ன செய்ய,பொருள் சேர்ப்பது எப்படி என்று தெரியவில்லையே ?

      Delete
    6. அதற்கு நீங்கள் நண்பர் விசு அவர்களை கேட்க வேண்டும்..

      Delete
    7. அட பாவி !
      நெற்றி வேர்வை மானிட்டரில் பட நானே இங்கே "ஜான் ஏறி முழம் சறுக்கி" கொண்டு இருக்கேன் . என்னிடம் என்னத்த கேட்க்க?

      Delete
    8. ஒரே குழப்பம்.. :D
      John ஏறுனா John தானே சறுக்க முடியும்.. எப்படி வேறு ஒருத்தர் சறுக்குறாரு?

      Delete
  8. அது எப்படிங்க உங்களால் பொறுமையாக இந்த மாதிரி கூத்துக்களை(பாட்டு டான்ஸ்)பார்த்துகிட்டு உட்கார முடியுது.... உண்மையை சொல்லுங்க பாட்டு டாண்ஸ்பார்க்கதான் போறீங்களா இல்லை அங்க வருகிற தேவதைகளை பார்க்க போறீங்களா??? எதுக்கும் உங்க வீட்டுகார அம்மாகிட்ட இதைப்பற்றி கேட்கனும்

    ReplyDelete
    Replies
    1. இந்த விளையாடிற்கு நான் வரவில்லை . எங்க வீட்டில் பிரச்சனை வரும் .

      Delete
    2. ரெண்டுக்கும்தான் , அவளுக்கும் இது தெரியும் .

      Delete
  9. http://sthirunavukkarasar.blogspot.in/2014/11/blog-post_10.html
    Instead of repeating same photos, they could have shown photos of this kind.

    ReplyDelete