அடியேன்
வேலை செய்யும் நியூயார்க், மிட்டவுன் மேன்ஹாட்டனில், பிராட்வேயில் உள்ள 29-ஆவது தெருவில்
ஒரு மசூதி இருக்கிறது. என் ஆபிசுக்கு ஒரு தெரு தள்ளி.
அந்தப்பக்கம்
அடிக்கடி போவதுண்டு. தம்பி விசு ஷாக் ஆக வேண்டாம். நான் மசூதிக்குப் போவதில்லை. அதன் அருகில் இருக்கும்
'சாந்தினி' ரெஸ்டாரண்டுக்கு செல்வதுண்டு. எல்லா நாட்களிலும் அங்கு தொழுகை நடக்கும்
என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் அந்தப்பக்கம் ஜேஜே என்று இருக்கும். முதன்முறை அங்கு
போகும்போது முஸ்லீம் மக்களில் இத்தனை நிறங்களா என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். கருப்பு,
பிரெளன், வெள்ளை என அத்தனை நிறங்களும், தலையில் தொப்பியைப் போட்டுக் கொண்டு தொழுகைக்கு
காத்திருப்பர். இங்கு ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் தொழுகை இடங்கள் இருக்கிறது
இங்கு
அமெரிக்காவில் எந்த மதத்தினரும் தங்கள் மதத்தைப் பின்பற்றவும், மசூதி, சர்ச், கோவில்,
தர்ஹா, குருத்வார், புத்தவிஹார் போன்ற வழிபாட்டுத்தலங்களை கட்டிக்கொண்டு அவரவர் கடவுள்களை
வணங்கவும் முழு சுதந்திரம் உண்டு (Freedom of Worship). பாகுபாடின்றி அனைவரும் வந்து
வாழும் சொர்க்க(?) பூமி என்று கூட சொல்லலாம்.
அப்படி
போகும்போது ஒரு நாள் கவனித்தேன் மேலே ARRAHMAN
Masjid என்று போட்டிருந்தது. ஆஹா ஒருவேளை அடிக்கடி நியூயார்க் வரும் நம் AR. ரகுமான்
கொடுத்த நன்கொடையில் கட்டப்பட்ட மசூதியாக இருக்குமென நினைத்தேன்.
அந்தப்பக்கம்
போகும்போதெல்லாம், "ஐயாமாரே AR. ரகுமான் என் இனமடா, அவர் பேசுவது என் மொழியடா,
அவர் வசிப்பது என் நாடடா,அவர் வாங்கிய ஆஸ்கார் மற்றும் கிராம்மி அவார்டுகள் எனக்கும்
சொந்தமடா" என்று உரக்க யாரிடமாவது சொல்லவேண்டும் என்று தோன்றும். ஒரு தடவை சாந்தினி
ரெஸ்டாரண்டில் அதனைப் பற்றிக் கேட்கும்போது 'ஙே' என்று முழித்தார்கள்.
நானும்
ஊர் சுற்றிப்பார்க்க வரும் நண்பர்கள் உறவினர்கள், புதிதாக என் ஆபிசுக்கு வேலைக்கு வரும்
“மென்பொருள் பொறியாளர்கள்” என அனைவரிடம் இதனைப்பற்றி சொல்லியிருக்கிறேன். அவர்களும்
நான் சொல்வதை அப்பாவிகளாய் கேட்டுக் கொண்டனர்.
ஆனால்
சமீபத்தில் விவரம் தெரிந்தவர்களிடம் (நம்மை விட விவரம் தெரிந்தவர்கள் உலகத்தில் அதிகம்
என்பதை நம்பவேண்டும்) கேட்டபோது தான் தெரிந்தது.
அது AR. ரகுமான் இல்லையாம், (ARRAHMAN) அர்ரஹ்மான் என்றால் “அளவற்ற அரு அருளாளனான அல்லா” (The
Most Gracious God) என்று அர்த்தமாம்.
இதிலிருந்து
கிடைக்கும் நீதி என்னவென்றால் கண்ணால் பார்ப்பதும் பொய், (நான் பார்த்தது), காதால்
கேட்பதும் பொய் (பிறர் என்னிடம் கேட்டது), நாமே
நினைப்பதும் பொய் (நாம் என்ன நாம், நான் என்று சொல்), தீர விசாரிப்பதே மெய்.
(முதல்ல அதச்செய்டா பரதேசி)
பிஸ்மில்லா
அர்ரகுமான் அர்ரஹீம், ஆமென்.
வித்தியாசமான விளக்கவுரை நண்பரே...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி கில்லர்ஜி.
Deleteதாணா, மாணா, ஒண்ணுங்கோ....
ReplyDeleteநன்றிங்கோ கில்லர்ஜி.
Deleteதகவலுக்கு நன்றி..
ReplyDelete"நம்மை விட விவரம் தெரிந்தவர்கள் உலகத்தில் அதிகம் என்பதை நம்பவேண்டும்", இதை சொன்னேன்.. :)
அதில் நீங்களும் ஒருவர் நண்பா .
Deleteயாரு நானு? விவரம்..?
Deleteஆனாலும் உங்களுக்கு காமெடி sense அதிகம் நண்பரே..
நீங்க விவரமான ஆளுங்க நண்பரே...!
ReplyDeleteநானா ? சொல்லவே இல்லை ?
Deleteவருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
ம்ம்ம் எல்லா மதங்களையும் ஆதரிக்கும் சுதந்திர நாடு சொர்கம்தான்...Secular என்று சொல்லாமலேயே........நம்ம நாடு Secular நாடு என்று சொல்லிக் கொண்டு......ம்ம்ம்ம்
ReplyDeleteஅப்போ நம்ம ஏஆர் ஆருக்கும் அதே அர்த்தத்தைக் கொள்ளலாமோ...ஹஹஹ்சும்மாதான்...
நண்பரே... எனது கனவில் வந்த காந்தி பதிவு காண்க...
ReplyDeletehttp://www.killergee.blogspot.ae/2014/11/1.html
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
ஏற்கனவே படித்து கமன்ட்சும் போட்டாயிற்று கில்லெர்ஜி .
Deleteஹா..ஹா.. கடைசியில இப்படி ஆச்சே..
ReplyDeleteவருகைக்கு நன்றி மணிமாறன் .
Deleteஹலோ! நண்பரே !
ReplyDeleteஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு