Monday, May 12, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி பகுதி-1 டர்க்கிஷ் பணிப்பெண் கொடுத்த டர்க்கிஷ் டிலைட் !!!!!!!!!!

செறிவான வரலாறு உடைய இஸ்தான்புல்லுக்கு போக வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு எப்போதுதான் நனவாகுமோ என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான், என் மனைவி சொன்னாள், "போறதுனா போய்ட்டு வாங்க, இதுதான் உங்களுக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு”, என்று.

துள்ளிக்குதித்த நான் காசை உடனே கறந்துவிட்டு, வழக்கம்போல் எக்ஸ்பீடியாவில் (Expedia.com) புக் செய்தேன். துருக்கி ஏர்லைன்சில் நியூயார்க் JFK விமான நிலையத்திலிருந்து துருக்கி இஸ்தான்புல்லுக்கு டைரக்ட் பிளைட். ஏப்ரல் 26 மாலை 6.50க்கு கிளம்பி அடுத்த நாள் காலை 11.50க்கு சென்று சேர்ந்தது. மொத்தம் கிட்டத்தட்ட 11 மணி நேரம் பிளைட்.

கொஞ்சம் இடைவேளைக்குப் பின்னர் பெரிய போயிங் விமானப்பயணம். எனக்கு விண்டோ சீட், கிரீஸுக்கு செல்லும் வெள்ளைக்கார தம்பதிகளை எழுப்பிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தேன். முதல் பல்பு என்னன்னா, முன்னால் பொருத்தப்பட்டிருந்த டிவி எனக்கு மட்டும் வேலை செய்யவில்லை.

ஹோஸ்டஸ்களிடம் இருமுறை சொல்லியும், கண்டுகொள்ளாமல் சிலிப்பிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தார்கள். சரிதான் முழுப்பயணமும் மொக்கையாப்போறது என்று நினைத்து வருத்தத்துடன் கண்களை மூடி உட்கார்ந்திருந்தேன். எக்ஸ்யூஸ் மி என்று விளித்து, ஒரு அப்சரஸ் எதிரே நின்றாள். இது கனவா அல்லது நனவா  என்று திடுக்கிட்டு விழித்தேன் .சூடான சிறிய டவல் ஒன்றைக் கொடுத்தாள். என்னடாது அசடு அவ்வளவு மோசமாவா வழியுது என்று நினைத்துக்கொண்டே பார்த்தால், அட எல்லோருக்கும் தான் தருகிறார்கள். சரிவிடுன்னு நினைத்து டவலை விரித்து முகத்தைத் துடைத்தேன். சரியான சூடு, சுட்டுறுச்சு, படக்குன்னு எடுத்துட்டேன். இது ரெண்டாவது பல்பு. யாரும் பாக்குறாங்களான்னு பக்கத்தில் பார்த்தா, அங்கு உட்கார்ந்திருந்த மாபெரும் வெள்ளைக்காரப் பெண், "டூ ஹாட் இஸ் இட்?",  என்று புன்னகைத்தாள்.  இப்ப என்ன ஒன்னைக் கேட்டமா?, என்று கடுப்புடன் முகத்தைத் தொட்டுப்பார்த்தேன். ஏற்கனவே கருமூஞ்சி இப்ப கருகருமூஞ்சியா ஆயிருக்கும்னு நெனைச்சி ரொம்ப வருத்தமாப் போச்சு.

திரும்பவும் அதே பெண் ஒரு தட்டில் சிறுசிறு மிட்டாய்களை கொண்டு வந்து கொடுத்தாள். அந்த சிறு மிட்டாய்களுக்கும் சிறு சிறு கவர்  போட்டு ஒரு சிறிய கப்பில் போட்டு கொடுத்தாள். நம்மூர் ஜூஜூபியில் சில பாதாம் பிஸ்தா பருப்புகளை போட்டுச் செய்த மாதிரி இருந்தது. "டர்க்கிஷ்  டிலைட்" ( Turkish  Delight) என்று பெயர் சொன்னார்கள். நன்றாகவே இருந்தது. சைஸ்தான் சின்னதா இருந்ததே என்று வருத்தப்படும்போது, என்னோட சுகர் ப்ராப்ளம் ஞபாகம் வர சரிவிடு போதும் போதும் என்றேன்.

விண்டோ சீட் ஆசைப்பட்டு வாங்கினாலும், சிலசமயம் ஏண்டா வாங்கினோம் என்றிருந்தது. ஏன்னா ஒரு பாத்ரூம் போகனும்னா கூட குறைஞ்சது ரெண்டு பேர் வழி விடனும்.

என் சீட்டில் ஏதோ உறுத்த, பார்த்தால் ஒரு மெல்லிய துணிச் செருப்பு. பாலித்தின் உறையில் இருந்தது. ஆஹா என்று அதனைப்பிரித்து, என் ஸ்னீக்கரை கழற்றி ஓரமாய்  வைத்துவிட்டு மாட்டிப் பார்த்தேன். உரலுக்குள் விரல் விட்டமாதிரி, கொஞ்சம் பெரிதாக இருந்தது. சீட்டில் இன்னொரு பெளச் இருந்தது. உள்ளே தூங்குவதற்கு கண்ணில் போடும் மறைப்பு (Blind Fold) ஒரு டூத்பிரஷ் ஒரு சிறிய பேஸ்ட் டியூப் மற்றும் லிப் பாம்  ஆகியவை இருந்தன. ஆனா நேரம் மாறி மாறி வருவதால் எப்ப பல் விளக்கனும்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.அதோடு ஒரு நல்ல ஷாலும் (Shawl) இருந்தது. டர்க்கி டவல் போல இது டர்க்கி ஷால் என்று நினைத்துக் கொண்டேன்.  

கொஞ்ச நேரத்தில் அந்தப்பெண் குடிக்க என்ன வேண்டும் என்று கேட்டாள். விஸ்கி, வைன், ரம், பியர் என பல வகைகளோடு கோக் மற்றும் பலவகை ஜூஸ்கள் இருந்தன. நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லையே. "டயட் வாட்டர்" என்றேன். "வாட்". என்றாள்.

"ஜஸ்ட் வாட்டர் வித்தவுட் ஐஸ்" என்றேன். ஓ இவன் அந்தக் கேஸ் என்று நினைத்தாளோ என்னவோ, ஒரு நமட்டுச் சிரிப்புடன் தண்ணீர் கொடுத்தாள்.
அவளிடம் மிகவும் கோபமாக, "பிளீஸ் இந்த டிவியை பிளீஸ் சரி செய்யுங்க பிளீஸ்", என்றேன். ஏழு ப்ளீஸ் போட்டுப் பேசுவதுதான் கோபமாகப் பேசுவதா என்று நீங்கள்  நினைப்பது எனக்குத்தெரிகிறது. என்னவோ தெரியலை அழகான பெண்களிடம் கோபப்படமுடியவில்லை.

சற்று நேரம் அங்குமிங்கும் பராக்குப் பார்த்தேன். பக்கத்தில் உள்ள டிவியும் எனக்குத் தெரியவில்லை. ஸ்கீரின் கார்ட் ( Screen Guard) போட்டிருப்பார்கள். அவரவருக்கு மட்டும்தான் தெரியும். சிறிது நேரத்தில் என் டிவியை எனக்குத் தெரியாமல் யாரோ நோண்டுவது தெரிந்தது. ரிமோட் ஆப்பரேஷன் மூலம் ரீலோட்  பண்ணி,ரீஸ்டார்ட் பண்ணினார்கள். பளிச்சென்று ஸ்கீரின் வந்தது. காதுகளில் இயர்போனை மாட்டிக் கொண்டு டச் ஸ்க்ரீனில் பிரெளசினேன்.

நியூஸ், டிவி, மேப் மற்றும் என்டர்டைன்மென்ட்  பட்டன்கள் இருந்தன. என்டர்டைன்மென்ட் பட்டனை தட்டினால், பிளாக்பஸ்டர், காமெடி, டிராமா மற்றும் வேர்ல்ட் சினிமா என்று இருந்தது. தமிழ் கூட இருக்குமோ என்று எண்ணி வேர்ல்ட் சினிமாவை தட்டினேன். இதோ "சென்னை எக்ஸ்பிரஸ்". ஆனால் இந்தி வெர்ஷன். பக்கத்தில் பார்த்து தொட்டுக்காண்பித்து பெருமையாக, "என் நேட்டிவ் பிளேஸ்", என்றேன். வாட் என்று கண்விரித்த அந்த கிரீஸ் பெண்ணிடம், நத்திங் என்றேன். (உன்னால் அவங்க ஸ்கீரினை பாக்க முடியலைன்னா அவங்களாலும் உன் ஸ்கீரினை எப்படி பார்க்க முடியும் முட்டாளே).

பிளாக்பஸ்டரை நோண்டியதில் "புக் தீஃப்" என்ற ஹிட்லர் கால பீரியட் ஃபிலிம் ஒன்றிருந்ததைப் பார்த்தவுடன், நன்றாக உட்கார்ந்து படத்தை ஆரம்பித்தேன். படத்தில் நேசப்படைகள் அந்தக் கிராமத்தை குண்டுபோட்டுத் தவிடு பொடியாக்க, என் விமானம் பெரும் ஆட்டம் போட்டது. என்ன 3D எஃபக்டா இருக்குமோ என்று நினைத்த போதுதான் எமர்ஜென்சி லைட் எரிந்தது. எனக்கு அவசரமாக பாத்ரூம் வேறு வந்தது.

தொடரும் >>>>>>>>>>>>>>


14 comments:

  1. ///செறிவான வரலாறு உடைய இஸ்தான்புல்லுக்கு போக வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு எப்போதுதான் நனவாகுமோ என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான், என் மனைவி சொன்னாள், "போறதுனா போய்ட்டு வாங்க, இதுதான் உங்களுக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு”, என்று. ///

    கம்பெனி விஷயமா போவதாக நீங்கள் சொன்னதாக ஞாபகம்.... ஒருவேளை உங்க கம்பெனி ஒனர் உங்கள் மனைவிதானோ என்ற சந்தேகம் வருகிறது

    ReplyDelete
    Replies
    1. இஸ்தான்புல்லில் எங்கள் கம்பெனிக்கு எந்த வேலையும் இல்லை மதுரைதமிழன் .

      Delete
  2. ///அந்தப்பெண் குடிக்க என்ன வேண்டும் என்று கேட்டாள். ///
    சரியான லூசுப் பொண்ணா இருக்கும் போலிருக்குதே மூஞ்சியை பார்த்தவுடனே வாட்டர் வித்தவுட் ஐஸ்" கொண்டு இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் அந்தப்பெண் லூசுதான் .

      Delete
  3. ///விஸ்கி, வைன், ரம், பியர் என பல வகைகளோடு கோக் மற்றும் பலவகை ஜூஸ்கள் இருந்தன. நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லையே.///

    கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது நீங்க சொல்றது சரிதான் .

      Delete
  4. ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. அதான் தப்பிச்சிட்டேனே, வருத்தப்படாதீங்க திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  5. கல்லூரி நாட்களில் இஸ்தான்புல் இளசுகள் என்று ஒரு படம் பார்த்த நாள் நினைவிற்கு வருகிறது. என்சாய் மாடி!

    ReplyDelete
    Replies
    1. அடடா தம்பி , நீயும் பார்த்திட்டியா. அட என்னைத்தவிர எல்லாரும்
      பார்த்திட்டாய்ங்க போல .

      Delete
  6. பதினோரு மணி நேரம் தொடர் பயணமா? நடுவில் ஏதாவது ஊரில் ஸ்டாப் உண்டா?

    ஹா ஹா, நீங்கள் பிளீஸ் பிளீஸ் போட்டு பேசியதால் தான் உங்க டிவியை சரி செஞ்சாங்க...

    ReplyDelete
    Replies
    1. இது டைரக்ட் பிளைட் ஆனதால் நடுவில் ஸ்டாப் கிடையாது .
      ஆனா நான் பிளீஸ் போட்டாலும் கோபமாய்தான் போட்டேன், ஹி ஹி .

      Delete
  7. அடுத்த பயணம் துவங்கிவிட்டதா.... உங்கள் பதிவு மூலம் நானும் இஸ்தான்புல் பயணிக்கப் போகிறேன். அடுத்த பகுதிக்கான காத்திருப்பு கொஞ்சம் திக்திக்திக்.....

    ReplyDelete
    Replies
    1. வழித்துணைக்கு நீங்களும் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் பயணம் தொடங்கிவிட்டது.தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete