Thursday, March 27, 2014

நாக் அவுட் கேமும் கறுப்பசாமிகளும் !!!!!!!!!




போன சம்மர்லதான் இந்த விளையாட்டு பிரபலமாச்சு. இப்போ நேத்து, திரும்ப ஒரு சம்பவம் நடந்துபோச்சு. இப்ப விண்ட்டர் கிட்டத்தட்ட முடிஞ்சதால, இந்த விளையாட்டு திரும்ப ஆரம்பிக்கும்போல இருக்கு. ஆட்டைக்கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில மனுஷனைக் கடிச்ச கதை தெரியுமா, அதே கதைதான் இந்த நாக் அவுட் கேம்.
Victim of Knock out Game
நியூயார்க் நகரம் அஞ்சு பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கு. அதை போரோ (Borough) என்று சொல்வாங்க. மேன்ஹாட்டன், புரூக்ளின், பிராங்க்ஸ், குயின்ஸ் & ஸ்டேட்டன் ஐலண்டு ஆகிய அஞ்சுதான் அது. இதுல புரூக்ளின் & பிராங்க்ஸில நம்ம முன்னோடிங்க அதாங்க ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பசாமி சகோதரர்கள் அதிகம். இதுல ஒரு கஷ்டம் என்னன்னா நாம அவுகளை சகோதரரா நெனைச்சாலும், அவுங்க நம்மளை அப்படி நினைக்கிறதில்ல.

புரூக்ளினில் தான் (Brooklyn) இந்த விளையாட்டு பிரபலமாச்சு. கேம்பாய், X Box,வீடியோ கேம்ஸ், செல்போன் கேம்ஸ்னு ஆடி போர் அடிச்சுப்போன நம்ம  கறுப்பின பதின் பருவத்தினர் கண்டுபிடிச்ச கேம்தான் "நாக் அவுட்".


இந்த விளையாட்டோட ரூல்ஸ் ரொம்ப சிம்ப்பிள். ரெண்டு யூத் பந்தயம் கட்டுவாய்ங்க. பார்க்குற முத ஆள அக்கம்பக்கம் யாரும் இல்லன்னா ஒரு கும்மாங்குத்து.. குத்திது யூத்னாலும், குறைஞ்சது இரண்டு டூத்  போயிரும். ஒரே குத்துதான். ஒரே பஞ்ச்சில் எதிர் ஆள் விழுந்துரனும். அப்படி விழுந்தா குத்துனவன் ஜெயிச்சிட்டான்.  என்னத்த சொல்ல, ஒரே குத்துல வீழ்த்துறதால இதுக்குப்பேர் "நாக் அவுட்" (Knock out).
இப்ப விளங்கிருச்சா புரூக்ளின்லயும், பிராங்க்ஸ்லயும் நிறைய சம்பவம் நடந்து போச்சு. அப்படியே இது நாடு பூரா பரவி நிறையப்பேர் செத்தும் போயிட்டாங்க.

அதனால நான் இந்த கறுப்புசாமி விளையாட்டு வீரர்களுக்கான ஒரு பொதுவான வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் உங்க பக்கமே வரமாட்டேன். தலை வச்சு கூட படுக்க மாட்டேன். அப்படி தப்பித் தவறி வந்துட்டா, இந்தப் போட்டில என்ன பந்தயம் கட்டினீங்களோ, அத ரெண்டு மடங்கா கொடுத்துர்றேன். என்னை விட்டுறுங்க சாமி. பொக்கை வாயில நான் பட்டிமன்றம் பேசமுடியாது. அதோட எனக்கெல்லாம் பெரிய பஞ்ச் தேவையில்ல. ஒத்த விரல் ஆமா ஒத்த விரல் போதும், ஒனக்கு நாக் அவுட், எனக்கு நாக்கு அவுட் ஆயிரும். கொலைப்பழி ஆயிரும் சாமி, என்னைவிட்டுறு.


ஐயா கறுப்பசாமிகளா, உங்க அளவு கறுப்பில்லாட்டியும், நானும் கருப்புதான். (எங்கம்மா மட்டும்தான் அத ஒத்துக்கிரதில்ல)உங்கூர் டிஎன்ஏ உசிலம்பட்டியிலே இருக்கிற டிஎன் வோட ஒத்துப் போகுதுன்னு கண்டுபிடிச்சிருக்காய்ங்க. எங்கூர் தேவதானப்பட்டி அதுக்குப் பக்கத்து ஊர்தான். நீ என் இனமடா தயவு செய்து என்னை விட்டுவிடுடா.  உனக்கு கிடா வெட்டி பொங்கல் போடுறேன் .

8 comments:

  1. டிஎன்ஏ ஆராய்ச்சி எல்லாம் நடந்திருக்கா...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.
      DNA ஆராய்ச்சி உண்மையிலேயே நடந்த ஒன்று .

      Delete
  2. என்ன ஒரு வெறி.... புதுசு புதுசா வன்முறை கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்காங்க! :((((

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  3. ரொம்பவும் வருத்தப்படுத்துகிற விஷயமாகத்தான் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி NRI Girl

      Delete
  4. என்ஞாய் த சம்மர் ....அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. தம்பி நீங்களும் வாங்க , சேர்ந்து என்ஜாய் பண்ணலாம் .

      Delete