Monday, March 3, 2014

சீறி வரும் பாம்பும்!!!!!!!!!!! சிரித்து வரும் பெண்ணும்!!!!!!!!!!!!

டிசம்பர் 1976, தேவதானப்பட்டி
       அதிகாலை சிலுசிலுவென்று குளிர் அடித்தது. கொடைக்கானலிலிருந்து இறங்கிய குளிர்காற்று கீழே மஞ்சளாறை தழுவிவிட்டு வீட்டுக்குள் வந்திருக்குமோ என எரிச்சலாய் இருந்தது. அதன் அடிவாரத்தில்தான் என் அழகிய கிராமம். காலை வெளிச்சம் வந்துவிட்டது என்பது என் கண்களைத்திறக்காமலே தெரிந்தது. உள்ளே ஈரச்சாம்பல் அலுமினியப் பாத்திரங்களை உரசும் சத்தம் சரக் சரக் சரக் என்று கேட்டது. அம்மா பாத்திரங்களை விளக்கும் சத்தம். 



       சில்லிட்ட கால்களை மூட போர்வையை எடுத்து காலில் உதைத்து போர்த்த முயன்றேன். போர்வை எட்டவில்லை. உதைத்து உதைத்துப் பார்த்துவிட்டு, முடியாமல் வேண்டா வெறுப்பாக கண்களைத் திறந்து போர்வையை தூக்கிப்பார்த்தேன். அது என்ன பளபளவென்று? மீண்டும் போர்வையை உயர்த்தி உற்றுப் பார்த்தேன். "அ...ம்....மா பா...ம்...பு".  என் கத்தலைக் கேட்டு அம்மா விரைவாக ஓடிவந்து பார்க்க ஒரு சிறிய நல்ல பாம்பு படத்தைத் தூக்கி நிற்க, விளக்கமாற்றை எடுத்து ஒரேபோடு. எனக்கு குளிர்போய் வேர்த்துவிட்டது. அதனை அப்படியே ஒரு குச்சியில் எடுத்து வெளியே போய் சாக்கடையில் எறிந்துவிட்டு அம்மா உள்ளே வர, "வெளியே" போயிருந்த அப்பாவும் வந்து சேர்ந்தார். நான் எட்டாவது படிக்கும் சமயம் என்று ஞாபகம். என் தம்பிகள் இருவரும் நடந்தது ஒன்றும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மகேந்திரன்தான் "ஏண்டிவில்லா குட்டியை கொன்னுட்டேயில்ல, தாய்ப்பாம்பு உன்னை சும்மாவிடாது" என்று பயமுறுத்தியதால், தொடர்ந்து பாம்புக் கனவுகள் வந்து தொல்லை கொடுத்தது. அம்மா பள்ளிவிட்டு வந்து வீட்டைச் சுத்தமாக பெருக்கி எடுத்து, சமையலறையில் சாணி போட்டு மெழுகி, வீடு பூரா சாம்பிராணிப் புகை போட்டார்கள்.
ஜனவரி 1978 அரசு மேல் நிலைப்பள்ளி, தேவதானப்பட்டி
       பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அறிவியல் பரீட்சைக்குப் படிப்பதற்காக காலையில் நான் சீக்கிரம் வகுப்புக்குச் சென்று படிக்கச் சென்றேன் .  என் பெஞ்சின் கீழ் (ப்பல்லாம் முன் வரிசை  பெஞ்ச்தான்) உள்ள கட்டையில் சுற்றிக்கொண்டிருந்தது  ஒரு பாம்பு. என்ன பாம்பு என்று ஆராயாமல்அட்டண்டரை கூப்பிட்டு வந்து பார்த்தால் பாம்பைக்காணோம். தாய்ப்பாம்புதான் என்னைத் தேடி வந்திருக்குமோ என்று ஒரே திகிலாய் இருந்தது?

மார்ச் 1980 தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளி, காந்திகிராமம்
       வழக்கம்போல் காலை 4.30க்கு எழுந்து,( ப்ளீஸ் நம்புங்க )  கூட்டு வழிபாடு முடித்தோம். அதன் பின் 5 மணி முதல் 6 மணி வரை, ஸ்டடி டைம் முடித்து சுகாதார மந்திரியான நான் என் குழுவைக் கூப்பிட்டுக் கொண்டு, ஹாஸ்டலைச் சுற்றிப் பெருக்கப் போனேன்.( ஆஹா சுகாதார மந்திரின்னா பெருக்கிற வேலையா , இது நல்லா  இருக்கே    , டே சும்மா இர்றா) அங்கே மரத்தடியில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டு படுத்திருந்தது ஒரு பாம்பு. எடுத்தேன் ஒரே ஓட்டம். என்னோட மந்திரி சபை உறுப்பினர்கள்தான் அதை அடித்துப்  போட்டதை அப்புறம் வந்து சொன்னாங்க. அப்போதுதான் மகேந்திரன் சொன்னது உண்மையோ என்று ஒரு சந்தேகம் எழுந்தது.

நவம்பர் 1983 வாஷ்பர்ன் ஹால் - அமெரிக்கன் கல்லூரி, மதுரை
       ஒருநாள் இரவு வாட்ச்மேன் ராஜேந்திரனிடம் கண்ணைக் காட்டிவிட்டு (2 ரூபாய் லஞ்சம்) நானும் ராமராஜூம் இரவுக்காட்சி “நீயா?” பார்த்துவிட்டு திரும்பும்போது, நன்றாக வளர்ந்திருந்த ஒரு பாம்பு சரசரத்து குறுக்கே சென்றது. விதிர்விதிர்த்து விட்டேன். "ஏண்டா பாம்புக்கு இவ்வளவு பயப்படுற”, என்று கடிந்து கொண்டான் ராமராஜ்.  அவனுக்கு நடந்த விஷயம் ஒன்றும் தெரியாது. இச்சாதாரிப் பாம்போ என்று திகிலாய் இருந்தது.  
       அப்போதுதான் ஒரு நாள் ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்ததைப் பார்த்தேன். "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே" என்று. ஆசிரியர் கொடுக்கிற அட்வைசையே கேட்கமாட்டோம் , இந்த ஆட்டோக்காரன்   அறிவுரையை கேட்போமா  நாங்க.

ஜனவரி-1987 காதுகேளாதோர் பள்ளி, சிவகாசி.
       என் முதல்வேலையான இங்கு, ஒரு நாள், இரவு உணவை முடித்துக் கொண்டு என் சைக்கிளில் என்னுடைய வீடு, இல்லை, ரூம், அதுவுமில்லை ஷெட் என்று வைத்துக் கொள்ளலாம். அப்போதெல்லாம் பேச்சலர்களுக்கு வீடு  கிடைக்காது? இப்போது அவர்களுக்கு மட்டும்தான் வீடு கிடைக்குதாம் என்ன அநிநாயம் பாருங்க. வேலை முடித்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போதுசாட்சியாபுரம் சுடுகாட்டைத்தாண்டி ,பளபளவென்று ஆமாம், பார்த்துவிட்டேன். பாம்பேதான் .சரசரவென்று சத்தம் கேட்க, துரத்துகிறதோ என்ற பயத்தில் பெடலை ஓங்கி மிதித்துப் பின் கால்களை பாரில் வைத்துக் கொண்டு ரூம் வந்து சேர்ந்தேன். அன்று  இரவு  முழுவதும் நாகராஜன் கனவில் தொல்லைகள் கொடுத்தான். அந்த வேலையை அத்தோடு விட்டு விட்டு கிருஷ்ணகிரி பக்கத்தில் உள்ள மாதேப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன்.
ஜூன் 1988 - நற்கனி சமுதாயத்திட்டம் ,வேர்ல்ட் விஷன் ஆஃப் இந்தியா
       தங்கியிருந்த பழைய சாராயக்கடையில் (வேறு ஒண்ணும் கிடக்கல)அந்தப்புரம் இந்தப்புறம் என்று சுற்றிலும் மாந்தோப்புகள். எனவே பாம்புகள் அதிகம். இரவில் வரும்போது கேன்வாஸ் ஸ்னீக்கர்களை வலுவாக தட்டிக் கொண்டுதான் வரவேண்டும். பாம்புகள் போய் விடும் என்று ஒரு நம்பிக்கை . பக்கத்து கிராமங்களில் வாரத்திற்கு ரெண்டு பேராவது பாம்பு கடித்து செத்துவிடுவார்கள். காலைக்கடன் முடிக்க வெளியே போகும்போது பாம்புகளோடு தான் வாக்கிங். கழுவுவதற்கு கிணற்றில் கற்படிக்கட்டுகளில் இறங்கினால், கடைசி இரண்டு மூணு படிக்கட்டில் காலைத்தட்டி சத்தமிடும் போது, பாம்புகள் நீருக்குள் இறங்க, பதட்டத்துடன் கழுவியும் கழுவாமலும் (கருமம்டா சாமி)வந்துவிடுவேன். வேர்ல்ட் விஷன், பாம்புக்கடிக்கு ஊசிபோட எங்களுக்கு டிரைனிங் கொடுத்தது. வேண்டாமென்று சென்னை வந்தேன்.
நவம்பர் 2000  வேளச்சேரி, சென்னை
       சல்லிசா கிடைக்குதுன்னு வாங்கிட்டேன். ஆனா மழைக்காலம் வந்தால் வேளச்சேரி தண்ணீர்ச்சேரி ஆகி எங்கள் வீடு மிதக்கும். பாம்புகள் நீந்தி விளையாடி மகிழும். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 'மலரும் நினைவுகள்' பார்க்க குட்டிப்பாம்பு ஒன்று வந்தது. நடுஹாலில் படம் எடுத்து அசையாமல் இருக்க, பக்கத்து வீட்டுக்கார நாயுடு மனைவி வந்து பயபக்தியுடன் ஆரத்தி எடுத்தார்கள். பார்த்தால் அந்த சின்ன வயது போர்வையில் பார்த்த அதே சைஸ், அதே படம். வீட்டுக்கு வந்திருந்த என் மனைவியின் பெரியம்மா பெண் பரிமளா ஏய் கொஞ்சம் இரு இருன்னு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பொடேரென்று போட்டு கொன்றுவிட்டாள். நாயுடு மனைவி ஏதோ தெலுங்கில் திட்டிவிட்டு, புதைத்து சிறிய சமாதி எழுப்பி, ஊதுபத்தியெல்லாம் பொருத்தி  வைத்தார். அப்போதுதான் பார்த்தேன் அருகில் ஏரிபோல் தேங்கியிருந்த தண்ணியில் ஒரு பாம்பு எட்டிப்பார்க்க, என் தம்பி கல்லை விட்டு எறிய என்னைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நீந்திச்சென்றது. தாய்ப்பாம்புதான் என்று நாயுடம்மா சத்தியம் பண்ணினாள்.
தப்பித்து நியூயார்க் வந்தவுடன் இங்கெல்லாம் பாம்புகளே இல்லையென்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
Add caption
மார்ச் 2014, நியூயார்க்
       நேற்று அதிகாலையில் குப்பை எடுத்துவைக்க வெளியே வந்தபோது, பக்கத்து வீட்டு ஆப்பிரிக்க சகோதரர் எதையோ கவலையோடு தேடிக்கொண்டிருந்தார். அவர் வீட்டில் நிறைய செல்லப்பிராணிகள் வளர்த்து வருகிறார். குட்மார்னிங் சொல்லி "என்ன தேடுகிறீர்கள்" என்று கேட்டேன் .”என் பாம்பை”, என்று சர்வ சாதரணமாச் சொன்னார்.


முற்றியது.

18 comments:

  1. ///ஒரு சிறிய நல்ல பாம்பு படத்தைத் தூக்கி நிற்க,//

    யாரு படத்தை தூக்கி நின்னுச்சு சில்க் ஸ்மிதா படத்தையா?

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு பாம்பு படமே தேவலை .

      Delete

  2. இத்தனை பாம்பு வந்தும் உங்களை ஒரு பாம்பு கூட படம் எடுக்கலையா? இந்த மூஞ்சியை போய் படம் எடுக்கிறதா என்று போயிருக்கும் போல ஹூ.ஹீ

    ReplyDelete
    Replies
    1. ஆமா இந்த அப்பாவி மூஞ்சியைபார்த்தா கடிக்க மனசு வருமா ?

      Delete

  3. என்ன பாம்புக்கு நீங்கள் பயந்தவரா? நான் எல்லாம் பாம்பு கூட வாழ்க்கையே நடதுகிறேன். எங்க வீட்டு பாம்பு கொத்தாது. பூரிக்கட்டையை மட்டும் அப்ப அப்ப எடுக்கும். அமெரிக்க வந்த பாம்பாச்சை அதனாலதான் இப்படி ரொம்ப அட்வான்ஸா இருக்குதுங்க

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்லவே இல்ல. எதுக்கும் ஒரு நடை நியூ ஜெர்சி வந்து பார்த்து நேர்ல ஒரு வார்த்தை கேட்டுட்டாப்போச்சு

      Delete
  4. பாம்பு படம் எடுத்தது மாதிரி எழுத்துகளின் அளவு (Font Size) ஏன் இப்படி...? தலை சுத்துது சாமீ...!

    ReplyDelete
    Replies
    1. புரியவில்லை font சைஸ் ரொம்ப பெரிசா இருக்கா ?
      உங்கள் ஆலோசனை தேவை .

      Delete
    2. font size கொஞ்சம் பெரிதாகதான் இருக்கிறது.. 12 சைஸ் சரியான அளவு என்பது என் கருத்து

      Delete
    3. தங்கள் ஆலோசனைக்கு நன்றி .

      Delete
  5. செம சுவாரஸ்யம் சார்... எனக்கு இப்பவே காலுக்குக் கீழே ஏதோ படம் எடுத்து நிக்கிற மாதிரி ஒரு பீலிங்...

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி .

    ReplyDelete
  7. ஆமாம் ...சீறும் பாம்பை பற்றி மட்டும் எழுதி விட்டு எஸ்கேப் ஆகிட்டிங்க...சிரிக்கும் பெண்ணை பற்றி சொல்லவே இல்லை......என்னாது சின்ன புள்ளைதனமா இருக்கு ...

    ReplyDelete
    Replies
    1. சிரிக்கும் பெண்ணே சீரும் பெண்ணாயிருச்சு அதான்பா விஷயம் .

      Delete
  8. நெய்வேலியிலும் நிறைய பாம்புகள் உண்டு... சிறுவயதில் கிடைத்த சில அனுபவங்கள் எழுதி இருக்கிறேன்.........

    பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்!

    ReplyDelete
  9. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete