Thursday, March 6, 2014

மனம் ஒரு குரங்கு! மனித மனம் ஒரு குரங்கு!


·        படிக்க புத்தகம் எடுத்தால் கொட்டாவி வருதா?
·        பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் நபரின் சட்டையில் அல்லது கோட்டில் நூல் ஏதாவது தொங்கிக் கொண்டிருந்தால் அதை இழுக்க வேண்டும் என்று நினைப்பு வருதா?
·        உங்கள் விரல்களை அதே கையில் உள்ள பெருவிரலால் எண்ணும் பழக்கமிருக்கா?. குறிப்பாக பாக்கெட்டில் கைவிட்டு எண்ணும்போது ஒரு விரல் குறைவது போல தோணி, படாரென்று கையை எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா?
·        பக்கத்தில் அல்லது எதிரில் உட்கார்ந்திருப்பவருக்கு ஏதாவது மச்சம் அல்லது மரு இருந்தால், தொட்டுப்பாக்கத் தோனுதா?
·        பஸ்ஸில் அல்லது ரயிலில் போகும்போது முன்னால் நின்று கொண்டிருக்கும் பெண்ணின் சடையை அல்லது கூந்தலை லேசாக இழுத்துப்பார்க்கனும்னு தோனுதா?
·        தெருவில் ஏதாவது கல்லை அல்லது உருண்டையாக ஏதாவது கிடந்தால் காலால் எத்திவிட மனசு துடிக்கிறதா?
·        பிறருடைய வீட்டுக்குச் சென்றால் அங்குள்ள ஏதாவது சின்னப்பொருளை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொள்ள ஆசையா இருக்கா?
·        கடிகாரத்தின் டிக்டிக் சத்தத்தோடு சேர்ந்து தாளம் போட ஆசையா இருக்கா?
·        புத்தகம் படிக்கும்போது, பத்து பக்கம் படித்தும் ஒண்ணும் விளங்காமல், மறுபடியும் முதலிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறீர்களா?
·        நகத்தை வெட்டும்போது சதையை வெட்டிவிடுவோம் எனப் பயப்பட்டிருக்கிறீர்களா?
·        உயரத்தில் இருந்து கீழே பார்க்கும்போது, விழுந்து பார்த்தால் என்ன என்று தோன்றுகிறதா?
·        ரெஸ்டாரண்ட் செல்லும்போது, பக்கத்தில் உள்ளவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து, அதையே ஆர்டர் செய்கிறீகளா
·        க்ரைம் நாவல் படிக்கும்போது பாதியிலேயே முடிவைப் படித்துவிடுவீர்களா?
·        வானத்தில் மேகங்களைப் பார்க்கும்போது அது ஏதாவது உருவங்கள் போலத் தெரிகிறதா?
·        உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் ஏற்கனவே நடந்தது போலத் தோன்றுகிறதா?
·        எந்தக் காரணமும் இல்லாமல் சில பேரைப் பிடிக்கவில்லையா?
 
மேற்கண்ட கேள்விகளில்   பலவற்றிற்கு அல்லது சிலவற்றிற்கு உங்கள் பதில் “ஆம்” என்றால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளவும். ஏனென்றால் எனக்கும் இப்படியெல்லாம் தோன்றுகிறது.


பின்குறிப்பு 
கடந்த  இரு ஞாயிற்றுக்கிழமைகளாக  சன் டிவியில் ஒளிபரப்பப்படும் கல்யாண மாலை பட்டிமன்றத்தில்  இந்த வாரம் அடியேன் பேசிய பகுதி  வருகிறது .

16 comments:

  1. உடனே தொடர்பு கொள்ளணும்...! ஒரே ஒரு கேள்வி --> எப்படிங்க இப்படியெல்லாம் தோணுது...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி DD.

      Delete
  2. போட்டோவில் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் எந்த வயதில் எடுத்தது?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இல்லை சகோதரி , அவர் கேட்டது இந்தப்பதிவின் ஆரம்பித்தில் இருந்த போட்டோவைப்பத்தி.

      Delete
    3. தமிழன் சகோ பாவம் இவருக்கு உங்கள பத்தி தெரியல ? நீங்க profile போட்டோவைத்தான் கேடிங்களா ?

      Delete
    4. சார் சும்மா fun . plz dont mind.

      Delete
    5. Pls feel free to comment.I am not that type.

      Delete
  3. ஆமாம்; இது இரண்டும் தோணுகிறது:

    · வானத்தில் மேகங்களைப் பார்க்கும்போது அது ஏதாவது உருவங்கள் போலத் தெரிகிறதா?
    · உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் ஏற்கனவே நடந்தது போலத் தோன்றுகிறதா?

    ReplyDelete
  4. நிஜமாவே கடைசி வரி செம ட்விஸ்ட் .நல்ல காமெடி!!.

    ReplyDelete
  5. சார் இன்னிக்கு கல்யாண மாலை பார்த்தேன்.
    பாப்பையாவின் இளமைக்கு இப்போ தான் ரீசன் தெரிஞ்சுது !
    பருப்புக்கு இனிசியல் , வனவாசம் பணவாசம் really superb!

    ReplyDelete
  6. பல சமயங்களில் தோன்றும் விஷயங்களை தொகுத்து தந்தமை நன்று..... :)

    நம்மில் பலருக்கும் இவற்றில் ஒன்றாவது நிச்சயம் தோன்றும்!

    ReplyDelete