வெயிட் எ நிமிட், இது கர்நாடக இசையா? இல்லை
ஜாஸ் இசையா என்று தம்பி விஷ் (விசு கர்னேலியஸ்)
கேட்பது காதில் விழுகிறது.
இது கர்னாடிக் பாதி ஜாஸ் பாதி என்று இரண்டும்
கலந்த கலவை. ஆனால் ஒரே மேடையில். இது நடந்தது நியூயார்க், குயின்ஸ் பகுதியில் என்னுடைய
பேட்டையான ஜமைக்காவில் இருக்கும் சென்ட்ரல் லைப்ரரியில். நவம்பர் 3, ஞாயிறன்று மாலை
3 மணிக்கு நடந்த இந்த நிகழ்ச்சியில் பரதேசி ஆஜர்.
'சரணம்' என்ற இசைக்குழுதான் இந்த ஃப்யூசன்
இசைச்சங்கமத்தை நிகழ்த்தியது. இந்தக்குழுவின் தலைவர் 'நிவேதிதா ஷிவ்ராஜ்,(www.niveditashivraj.com) ஒரு வீணை
வித்வான்.
இசை ஆசிரியரும் கூட. கர்நாடக இசையில் என்னுடைய குரு. சில காலம் இவர்களிடம்
பயில முயன்றபோது, பின்னர் "அதுக்கெல்லாம் ஞானம் வேணும்டோய்", என்று புத்தி
தெளிந்து கைவிட்டேன். ஆனால் என்னுடைய இசை முயற்சியிலும், என்னுடைய பாடல்கள் கம்போசிங்கிலும்
எனக்கு மிகுந்த உதவி செய்தவர். என்னுடைய கொள்ளுத்தாத்தா இயற்றிய கீர்த்தனைகளின் மூல
ராக ஆராய்ச்சியிலும் பேருதவி புரிந்தவர். எனவே
குரு பக்தியுடன் முன் வரிசையில் அமர்ந்தேன்.
அறிவித்தபடி சரியாக 3 மணிக்கு இசை நிகழ்ச்சி
ஆரம்பித்தது. ஒவ்வொரு பாடலும் நிவேதிதா அவர்களின் ஒரிஜினல் கம்போசிசன்.
நிவேதிதா தன்னுடைய தஞ்சாவூர் சரஸ்வதி வீணையுடன்
நடுநாயகமாக உட்கார்ந்திருந்தது, சாட்சாத் சரஸ்வதியே உட்கார்ந்திருந்தது போல் தெரிந்தது.
அவருடைய இடது புறத்தில் தபேலாவில் நரேனும், சற்றே பின்னால் சாக்சபோனுடன் மார்கஸும்
அமர்ந்திருந்தனர். அவரின் வலதுபுறம் அவருடைய
ஒரே மகள் சம்யுக்தா என்ற சாம் இருந்தாள்.
வாய்ப்பாட்டில் மட்டுமல்ல வாய்ப்பேச்சிலும்
வல்லவள். லா டிகிரி படிக்கப்போவதாக சொன்னதில் எனக்கு ஆச்சரியமேயில்லை. டிவி ஆன்கரான
சாம் ஏற்கனவே குயின்ஸ் பப்ளிக் டெலிவிஷனில் வரும் "இன்டியா டாக்ஸ்" நிகழ்ச்சியை
தொகுத்து வழங்குவதோடு, இப்போது ஃபாக்ஸ் டிவி (Fox Tv)யிலும் வேலை செய்கிறாள். அழகும்
திறமையும் ஒருங்கே பெற்ற பெண் இவள். வலது புறம் ஓரத்தில் ஜேசன் கிட்டாருடன் உட்கார்ந்திருந்தார்.
எலக்ரானிக் ஸ்ருதிப்பெட்டியிலிருந்து சுதியோசை கிளம்ப, எலக்டிரிஃபை செய்யப்பட்ட வீணையிலிருந்து
இனிய நாதம் எழுந்தது. குருஜியின் விரல்கள் வீணையில் நர்த்தனமாட, நரேன் தபேலாவை உருட்டினார்.
உதிரி போல உட்கார்ந்திருந்த மார்கஸ் கதிரி (கதிரி கோபாலகிருஷ்ணன்) போல வாசித்து ஆச்சரியமூட்டினார்.
ஜேசன் தன் கிடாரில், பேஸ், ரிதம் மற்றும் லீடை தேவைப்படும்போது மாற்றி மாற்றி பயன்படுத்த,
சாம் ஜதிகளை உதிர்க்க களைகட்டியது கச்சேரி.
Charnams performing at the Queens Battle of the Boroughs |
குறிப்பாக “ரெயின்” மற்றும் 'ஹட்சன் டிரைவ்'
ஆகிய இரு ராகமஞ்சரிகள் தலையாட்டவும் தாளம் போடவும் வைத்தன. இந்த நான்கு இசைக்கருவிகளும்,
ஜதியும் இனிமையாகவும் இதமாகவும் இணைந்து ஒலித்தது காதில் தேன்பாய்ந்தது போல் இருந்தது.
பி.ஏ சிஸ்டம் மிகச்சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருந்தது.
எந்தெந்த கருவிகள் எவ்வளவு அளவில் ஒலிக்க வேண்டும் என்பதை அமைப்பது மிகச்சிறந்த கலை.
தன் சொந்த பி.ஏ சிஸ்டத்தை அவ்வளவு கச்சிதமாக அமைத்தவர் குருஜியின் கணவர் ஷிவ்ராஜ்.
குடோஸ் ஷிவ். தபேலா தவிர மற்ற எல்லோர் முன்னாலும் இருந்த ஐபேடில் இருந்த நோட்சை எல்லோரும்
ஃபாலோ செய்தனர். இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் கர்நாடிக் கச்சேரியானாலும், கர்நாடகம்
காணாமல் போய் டெக்னாலஜி மயமாய் ஆகிவிட்டது .
வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரின் இதயத்தையும்
அள்ளிச் சென்றது அந்த இசைச் சங்கமம் என்னால் அது மிகையில்லை.
“ஆலிஸ் டல்லி ஹால்” (Alice Tully Hall), “லின்கன்
சென்ட்டர்” , “ஃபிளஷிங் டவுன் ஹால்” மற்றும் “சம்மர் ஸ்டேஜ்” ஆகிய நியூயார்க்கின் பெருமை
மிகு அரங்குகளில் பலமுறை நிகழ்ச்சிகள் நடத்திய இந்த 'சரணம் பேண்ட்' 2011ல் நடந்த
"நியூயார்க் அல்ட்டிமேட் பேட்டில் ஆஃப் தி போரோஸ்" போட்டியில் (NEW YORK
ULTIMATE BATTLE OF THE BOROUGHS CONTEST)முதலிடம் பெற்ற இசைக்குழுவாகும்.
சகோதரி நிவேதிதா ஷிவ்ராஜ் அவர்களின் இசைப்பணி
மேன்மேலும் தொடர வளர இந்தப் பரதேசியின் வாழ்த்துக்கள்.
அண்ணே, ஜாஸ் இசையும் சரி கர்னாடிக் இசையும் சரி, இரண்டையும் ரசிப்பவன் நான். ஜாழ் இசையை ரசிப்பதே ஒரு கலை. அது எல்லோராலும் முடியாது. அருமையான எழுத்து. மீண்டும் உமக்கு நன்றி. ஜாஸ் இசை என்றவுடன் நினைவிற்கு வருகிறது. என்னுடைய அக்காவின் மகள் ஹனா வசந்த் ஒரு அருமையான ஜாஸ் பியானோ வாசிப்பவள். லண்டன் நகரில் வசிக்கும் அவள் சில வருடங்களுக்கு முன்பு (Deep Purple ) புகழ் Jon Lord என்பருக்கு துணை பியானோ வாசித்து வந்தாள். இந்த ஹனாவை அவளின் முதல் பியானோ வகுப்புக்கு வேலூர் அருகில் உள்ள காந்திநகரில் பியானோ சொல்லி தரும் திருமதி வில்லியம்ஸ் அவர்களின் இல்லத்திற்கு நான் என்னுடைய சைக்கிலில் கூடி சென்றது இன்னும் நினைவிற்கு வருகிறது. ஹனா அவர்கள் Jon Lord வாசித்ததை இங்கே காணலாம்.
ReplyDeletehttp://jonlord.org/2008/09/02/air-on-a-blue-string/
அருமை!!!!!!!!!! அழகு!!!!!!!!!!!!! நன்றி!!!!!!!!!!!!!!!!
Deleteநிவேதிதா ஷிவ்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இனிமையான இசைச் சங்கமதத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்.
ReplyDeleteஇந்த இசையைக் கேட்க ஆசை.... ......
ReplyDeleteத.ம. 3
நன்றி வெங்கட் . இந்த யு டியுப்
Deleteலின்க்கில் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=zesQ1LBGXYI
எனக்கும் இசை ஞானத்திற்கும்
ReplyDeleteஎள்ளவும் சம்பந்தமில்லை
தங்கள் உண்டு என்பது
தங்கள் எழுத்தின் மூலம்
தெரிந்து கொள்ள முடிந்தது
பதிவு செய்துள்ள படங்கள் ஏனோ
தெரியவில்லை
தொடர்கிறேன்