Tuesday, December 24, 2013

இயேசுவே அன்பு மயம்- பாடல்

கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்கள்
இந்த நல்ல நாளில், அடியேன் எழுதி இசையமைத்த பாடலை இங்கே கொடுக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.  

http://www.youtube.com/watch?v=ceMP1atsGec
ராகம் : இந்தோளம்
பாடியவர் : விஜய் யேசுதாஸ்.
இசை கோர்ப்பு : ஜான் கருணாகரன்
குறுந்தட்டு : இயேசுவே நண்பன்
யு டியுப் அமைப்பு : T.H. ராஜபாஸ்கரன்

பல்லவி
இயேசுவே அன்பு மயம்
கிறிஸ்து  இயேசுவே அன்பு மயம்
இயேசுவின் அரசினிலே எங்குமே மகிழ்ச்சி மயம்
சரணங்கள்
1)
ஈசாயின்  அடிமரத்தில்  துளிர்த்ததன்பு
தாவீதின்  பரம்பரையில்  உதித்ததன்பு
பெத்தலைக்கொட்டடியில்  பிறந்ததன்பு
இத்தரை  மாந்தர்தம்மை  மீட்டதன்பு !

2)
கன்னிமரி  வயிற்றினிலே கருவானது 
கருணையின் மறு உருவாய் உருவானது   
இஸ்ரவேலை மீட்டெடுத்த  இனிய  அன்பு  
இம்மானுவேலவராய் இசைந்த அன்பு !


6 comments:

  1. சிறப்புக் கவிதை மிக மிக அருமை
    காணொளியைக் கேட்டு மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி .
      இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  2. அருமை......

    பாராட்டுகள் நண்பரே.....

    ReplyDelete
  3. நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  4. மீண்டும் ஒருமுறை கேட்டு இரசித்தேன்
    அற்புதம்.
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete