Monday, July 1, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 1 : உன் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து !!!!!!!!!!!!!

               
      இதுவரை கூவம்தான், உலகத்திலேயே நாற்றமுடைத்துன்னு எண்ணியிருந்தது அன்றோடு தகர்க்கப்பட்டது. அது ஒரு  திங்கள்கிழமை.வந்த புதிது.  அவசர அவசரமாக வேலைக்குச் செல்ல, சப்வே பாதாள ரயில் நிலையத்தில் இறங்கினேன். மேன்ஹாட்டனுக்கு செல்லும் 'E' ரயிலில் காலை வேளையில் உட்கார இடம் கிடைப்பது, அமெரிக்கன் விசா கிடைப்பதை விடக்கடினம்.
                 சத்தமில்லாமல் வந்து நின்ற 'E'ரயிலில் ஒரு காலி கம்பார்ட்மென்ட் பார்த்தேன். ஆஹா ஆல்ஃபி , இன்று உனக்கு அதிர்ஷ்ட நாள்றா என்று எண்ணிக்கொண்டே ,சட்டென்று ஏறிவிட்டேன். சடுதியாக கதவுகள் மூட, வண்டி வேகமெடுத்தது. அப்போது தான் அது நடந்தது. எனது நாசியை  ஏதோ என்னோமோ செய்தது. ப்ப்ப்ப்ப்பா ஒரு மோசமான குடலைப் புடுங்கும் நாற்றம் முகத்தில் அறைந்தது, உன் நாத்தம் என் நாத்தம் இல்ல அது உலக நாத்தம். காலையில் சாப்பிட்ட பிரட்டும், ஜெல்லியும் நெஞ்சுவரை வந்துவிட்டது. (இட்லி, தோசை மறந்திருந்த நாட்கள் அவை .என் மனைவி பிள்ளைகள் இன்னும் சென்னையிலிருந்து வந்து சேரவில்லை.) விரைவாக நகர்ந்து  கேரேஜின் மறு மூலைக்குச்சென்றேன் .ஆனாலும் நாற்றம் விடாது தொடர்ந்தது.
          தலையைச் சுற்றி மயக்கம் வந்துவிடும் போல் இருந்தது. அப்போதுதான் கவனித்தேன், வண்டியின் ஒரு பகுதியில் ஒரு மூட்டை கிடந்தது. எவனோ ஒரு நீசப்பய, அழுகுன குப்பையைக் கொண்டு வந்து உள்ளே போட்டு விட்டானோ என்று நினைத்த போது, அந்த மூட்டை மெதுவாக  ஸ்லோ  மோஷனில் சற்றே நகர்ந்து. பின் எழுந்தது. ஐயையோ அது மூட்டை இல்ல, ஒரு முழு மனுசப்பய என்று தெரிந்தது. பைத்தியக்காரனோ என்று நினைத்த போது உள்ளமும் உடலும் நடுங்கி  ஏசியிலும் வேர்த்துக் கொட்டியது. நீசப்பய, இல்ல இல்ல நாறப்பய, நாதாரி வேற எடமே கிடைக்கலயா?
            கூட்டம் நிறைந்த ரயிலில், ஒரு கேரேஜ் மட்டும் காலியாக இருப்பது ஏன் என்று யோசிக்க மாட்டியா? என்று நேரந்தெரியாமல் என் மைன்ட் வாய்ஸ் வேறு கண்டித்தது. அடுத்து என்ன நடக்குமோ, என்று பல அதீத கற்பனைகள் வந்துபோனது. அப்போது அந்த உருவம் எழுந்து நின்றது. எது முன், எது பின் என்று தெரியாத ஒரு உருண்டை உருவம் . உற்றுப்பார்த்தால் ,ஐயையையையையையோ அது நாறப்பய இல்ல, நாச்சிறுக்கி.


நாற்றம் தொடரும்.


          

11 comments:

  1. சஸ்பென்ஸ் ஆக முடிச்சு இருக்கீங்க. அடுத்து என்னவென்று படிக்க ஆர்வாமாய் உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பகுதி ,வரும் திங்கள்கிழமை .

      Delete
  2. சுவாரசியமாக.... எழுத்து நடையும் அருமை...!

    ReplyDelete
  3. அனுபவ்மே அனுபவித்த ??????


    ReplyDelete
  4. அனுபவ்மே அனுபவித்த ?????

    ReplyDelete
  5. my mind started appreciating mother Theresa

    ReplyDelete