Thursday, July 18, 2013

வங்காளிகள் நம்ம பங்காளிகளா?


போன வாரம் சாப்பிட அஞ்சப்பர் போயிருந்தேன்.அங்க புதுசா ஒரு பையனைப்பார்த்தேன்.ஆஹா இந்த ஸ்பானிஷ் ,பிலிப்பினோ ஆட்கள்  போய் ஒரு தமிழ்ப்பையன் கிடைச்சான் போலன்னு ஆர்வமா எந்த  ஊருன்னு கேட்டேன் ? அவன் புரியாமல் முழித்தான்.அப்புறம் சொல்றான் , அவன் பங்களாதேஷியாம்.
ஏய் ஏய் ஏய், உங்களுக்கு நாடு கொடுத்ததே நாங்கதான் என்று சொல்லத்தோன்றியது. இந்த பங்களாதேஷ் ஆளுங்க அலும்பு தாங்க முடியல பாஸ். இந்த 'லாட்டரி விசா' வந்தாலும் வந்துச்சு. அடிச்சுதுரா லக்கி பிரைஸ்னு, பாதி பங்களாதேஷ் ஆளுங்க அமெரிக்காவிற்கு அதிலும், நியூயார்க் நகரத்திற்கு வந்து குவிந்து விட்டனர். ஒரு அஞ்சே  வருஷத்தில், பல இந்திய, பாகிஸ்தான் ஏரியாக்களை தமதாக்கிக் கொண்டனர்.

ஞாபகமிருக்கிறதா, 1971 என்று நினைக்கின்றேன். முஜிபுர் ரகுமான் தலைமையில் முக்திவாஹினி புரட்சிப்படை, இந்திராகாந்தி தைரியமாய் அனுப்பிய இந்திய ராணுவத்தின் துணையோடு பாகிஸ்தானை முறியடித்து “பங்களாதேஷ்” என்று  தனி நாடாகியது. ஆனா அங்க  ஒண்ணும் சரியில்லை போல தெரியுது .

படிச்சவன் படிக்காதவன், குஞ்சு குளுவான், நண்டு சிண்டு, புளு பூச்சினு எல்லாம் இங்க வந்து குமிஞ்ச்சிருச்சுக. இந்த லாட்டரி விசாவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் மை லார்ட்.  முதல்ல எங்க ஏரியா ஜமைக்காவில் உள்ள ஹில்சைட்  அவென்யூவில் ஒவ்வொரு கடையா பிடிச்சாய்ங்க. இந்தியக்கடைகள் போய், பாகிஸ்தான் கடைகள் வந்த மாதிரி, இப்போ பாகிஸ்தான் கடையெல்லாம் போய், பூரா பங்களாதேஷ் கடைகள் ஆயிப்போச்சு. பாம்பே பஜார் இப்போ டாக்கா பஜார்னு ஆயிருச்சு.

 மிக நீண்ட ஹில்சைட் அவென்யூவில் 140வது தெருவிலிருந்து, 200-வது தெருவரை இப்போ முச்சூடும் பங்களாதேஷ் கடைகள்தான். ரெஸ்டாரண்ட், பலசரக்கு, ஜவுளி, ஃபார்மசி, ஃபர்னிச்சர் எல்லாமே அவிங்கதான். அதே மாதிரி ஜாக்சன் ஹைட்சும், இந்திய நகைக்கடைகள் தவிர 90 சதவீதம் பங்களாதேஷ் கடைகளா மாறிப்போச்சு.

 ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்போ, மேன்ஹாட்டனில் என் அலுவலகம் இருக்கும் 'பிராட்வேயில்' ஒரு 20 கடை அவங்க கடை ஆயிப்போச்சு. பனியன், ஜட்டி, ஹோசியரி, ஃபர்பியூம்ஸ், வாட்ச்சஸ் என்று, இது எப்பூடின்னு  கேட்டா, அவங்க அசோசியேஷன் ஒன்னு இருக்காம். ஜமாத் மாதிரி, அதுல மெம்பர் ஆயிட்டா ஒரு லட்சம் டாலர் வரை குறைஞ்ச வட்டியில பணம் கொடுத்து உதவுவாங்க. இவுங்களுக்கு படிப்பும் அதிகம் இல்லாதனால எல்லாரும் பிஸினஸ்ல இறங்கிர்ராய்ங்க. அதோடு கடையில எல்லாம் அவங்க மொழில போர்டு வச்சிராய்ங்க. அநியாயம் .

இந்த சம்பளத்திற்கு வேலை செய்து சாகறது தமிழன் ஒருத்தன் மட்டும்தான் அதுலயும் ஒரு டாலர் மத்தவனுக்கு ஈயமாட்டான். தமிழ்ச்சங்கங்கள் எல்லாம் நஷ்டத்துலதான் நடத்துறாங்க.
இதுல எனக்கு என்ன இவ்வளவு ஆத்திரம்னு  கேக்கறீங்களா? இவய்ங்க என்னை இந்த ஏரியாவுல எங்கே பார்த்தாலும் பங்களாதேஷியா ? என்று கேட்டு உயிரை எடுக்கிறாய்ங்க, ஏன்னா கிட்டத்தட்ட  நம்மள மாதிரியே அவய்ங்க இருக்கிறாய்ங்க. ரொம்ப உயரம் கிடையாது, பிரவுன் நிறம்,  மீசைன்னு நம்ம செளத் இண்டியன் மாதிரியே இருக்காய்ங்க.
இதுக்கு ஒரு கதை கேள்விப்பட்டேன். உண்மையான்னு தெரியல. அந்தக் காலத்தில சோழ அரசன் படையெடுத்துப்போய், இந்தப்பகுதிகளை வென்று, தன் மகனான இளவரசனை இந்தப் பகுதிக்கு அரசனாக்கி, அவனுக்குப் பாதுகாப்பாக தன்னுடைய படைகள் ஒரு லட்சம் பேரை அங்கு விட்டுவிட்டு வந்தாராம். அவர்கள் அங்கேயே கல்யாணம் முடித்து பலுகிப் பெருகி கலந்துவிட்டனர். இதுதான் வங்காளிகளும் நம்ம பங்காளிகள் ஆன கதை.
தினமும் ஒரு நாலு பேராவது என்னை வங்காளியா  என்று கேட்டுக் கடுப்பு ஏத்துகிறார்கள்.இல்லைடா இல்லைடான்னு மூஞ்சியிலேயே குத்தத்தோணுது. இதுல கேட்கிறவன் எல்லாம் ஆம்பிளைங்களை மட்டும்தான். பங்களாதேஷ் பெண்கள் பார்த்தால், மரியாதை கலந்த ஒரு புன்சிரிப்போடு, விலகி வழிவிடுகிறார்கள். அவங்க கேட்டாலாவது ஆமாம்னு சொல்லலாம் . நான் என்னத்தை சொல்ல. நேத்து சப்வேயில் ஒருத்தன், இல்லைன்னாலும் நம்பாமல் வங்காள மொழியில் பேசி உயிரை எடுத்தான். இப்பதான் வந்திருப்பான்  போல. இன்னொரு வங்காளி என்னைப்பார்த்ததும் எழுந்து உட்கார இடம் கொடுத்தான். நானும் வசதியாக உட்கார்ந்து, சிப்ஸ் பாக்கெட்டையும் வேணும்னே தமிழ் புத்தகத்தையும் எடுத்து வைத்தவுடன் கலவரமாய்ப் பார்த்து முறைத்தான். போடா என்று இன்னும் வசதியாக பின் நகர்ந்து உட்கார்ந்தேன். 

 இந்தக் கடுப்போடு வீடு வந்து சேர்ந்து, என்னை எப்படி மாற்றினால் இவய்ங்க பங்களாதேஷி  என்று கூப்பிடமாட்டார்கள் என்று எண்ணியபடி படுத்ததில், மீசை எடுத்த மாதிரியும் என்மனைவி அதைப்பிடிக்காமல் டைவர்ஸ் செய்த மாதிரியும் கனவு வந்தது. அதிர்ந்து எழுந்து பார்க்கையில் என் மனைவி பக்கத்தில்தான் படுத்திருந்தாள். அவளுக்கு என்னை விட்டால் வேற வழியில்ல. எனக்கும் அவளை விட்டால் வேற வழியில்லன்னு ஒரு பெருமூச்சு விட்டுட்டு  எழுந்து, என் தோட்ட ஊஞ்சலில் உட்கார்ந்து பல் விளக்கிக் கொண்டிருந்தேன்.

பக்கத்தில் கொஞ்சம்நாள் காலியாக இருந்த வீட்டுக்கு யூஹாலில் (U-Hal) சாமான்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. ஆஹா புது நெய்பர் என்று எண்ணி, பல் விளக்கிக் கொண்டே, என் வீட்டு கேட்டருகில் நின்று வேடிக்கை பார்த்தேன். அப்போது வீட்டினுள்ளிருந்த நல்ல தென்னிந்திய உருவம் வெளியே வந்தது. ஆஹா தமிழோ அல்லது தெலுங்கோ என்று பார்த்தபோது, அந்த ஆள்  புன்சிரித்து, “அஸ்ஸலாம் அலைக்கும், பெங்காலியா  ?”  என்று கேட்டான். எனக்கு வந்த ஆத்திரத்தில் திட்டுவதற்கு வாய் திறக்க ,வாய் குழறி பேஸ்ட் நுரை மொத்தமும் சட்டையில் கொட்டியது.

15 comments:

 1. நண்பா சேகரு (இனிமேல் தம்மை அப்படிதான் அழைக்க போகிறேன்.), வங்காள மக்களை ஒன்றும் சொல்லாதிர்கள். பாவம். வருடத்தில் 6 மாதம் அவர்கள் மீன்களை சாப்பிடுவார்கள், மீதி 6 மாதம் மீன்கள் அவர்களை சாப்பிடும். என்ன செய்வார்கள் பாவம்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. பை ஆல் மீன்ஸ் , ஐ மீன் வாட் ஐ மீன்.
   நான் அவய்ங்கள விடுவதா ? அவய்ங்கில்ல என்னை விடமாட்டீங்கறாய்ங்க .

   Delete
 3. Dubai la mattum ennavam..! Inkayum niraya Bengali than irukkanka.. ennai pathalum urge kelviya Kerry kadupethuvanka...

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ , அங்கேயுமா ?

   Delete
 4. சரி அதை விடுங்க அண்ணே! அஞ்சப்பர் விருந்து எப்படி இருந்தது? அதை சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. பங்களாதேஷி பரிமாறிதனாலே ஒன்னும் சுரத்தில்ல போங்க தம்பி .

   Delete
 5. நமக்கு விசாவிற்கே லாட்டரி என்றால் இவர்களுக்கு லாட்டரி விசாவா?

  ReplyDelete
  Replies
  1. அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க ,நம்ம இன்ஜினீயர்கள் , எல்லாம் கிரீன் கார்டுக்கு ஐந்து முதல் பத்து வருடங்கள் காத்திருக்கையில் , ஸ்கூல் கூட முடிக்காதவனெல்லாம் , வரும்போதே கிரீன் கார்டுல வராய்ங்க .

   Delete
 6. லாட்டரி விசாவில் வெந்தது வேகாததும் எல்லாம் வருதா? நம்மாளுங்க தான் மவுண்ட் ரோடில் விடிய விடிய காத்திருக்கினாவ, கொடுமை. அமெரிக்கா மட்டுமில்லை, புற்றில் இருந்த ஈசல் கிளம்பியது போல கிளம்பி, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என போறாங்க. பெரும்பான்மையானோர் கல்வித் திறனற்றோர். ஏற்கனவே அங்கு மக்கள் தொகை பிதுங்கி வழியுதாம், பலர் அசாமுக்கு வந்து அங்கு அசாமியர் - வங்காளிகள் கலவரம் நடந்தது. பலர் மியன்மார் போய் அங்கு மியன்மாரி - வங்காளிகள் கலவரம் வேறு. சக மதக் காரன் சவுதிகளே வங்காளிகளை பணிக்கு எடுப்பதை நிறுத்திப்புட்டானுவ, இதில வங்கதேசம் கடல் மட்டம் உயர்வால் பாதி தண்ணீருக்குள் போய் விடுமாம், சோ நிறைய பேரை அமெரிக்காவில் எதிர்ப்பார்க்கலாம், குற்றங்களும் பெருகலாம். வங்கதேசிகள் திராவிட தொடர்புடையவர்கள். ஆதி திராவிடரும் - மங்கோலியரும் கலந்த இனம். உயர்சாதி வங்காளிகள் மட்டும் ஆரியர், ஆங்கிலேயேர், முகாலயர் கலப்புடையோர். சோழர் காலத்தில் தமிழர் அங்கு ஆக்கிரமித்தமை உண்டு, லட்சம் பேர் போனது உண்மையா அறியேன்?! கனடாவில் அண்மையில் ஆங்கில அறிவுடைய, கல்வி நன்கு கற்றோருக்கு விசா எனக் கூறியதால் தப்பித்தோம் பிழைத்தோம் சாமியோவ்.

  ReplyDelete
  Replies
  1. ஐயோ , நிரஞ்சன் இவ்வளவு விஷயம் இருக்கா?

   அப்ப வீட்டிலே டிஜிட்டல் செக்யூரிட்டி சிஸ்டம் போட்டுரவேண்டியதுதான் .

   இந்த திராவிட தொடர்பு பற்றி மேலும் தெரிஞ்சால் பகிர்ந்து கொள்ளவும் .

   Delete
 7. Sir Vanakkam, Naan Kuda Hill sidela tha irruken in belle rose. New to new york. Ennakum intha doubt irrunthu, shock to see so many benagali here.

  ReplyDelete
  Replies
  1. தம்பி பாஸ்கி, இப்பவே பஸ்கி எடுக்க ஆரம்பிச்சுருங்க

   வெல்கம் டு நியூயார்க் .

   தொடர்பு கொள்ளுங்கள், சந்திக்கலாம் .

   Alfred_rajsek @yahoo .com

   Delete
 8. அது என்னங்க லாட்டரி விசா ..?

  ReplyDelete
 9. The US Green Card Lottery Program, known as DV (Diversity Visa) Lottery program, is to obtain the status as a permanent legal resident of the USA. This program runs each year and provides 50,000 "Green Cards" to applicants randomly selected in a lottery process.The Immigrant Diversity Visa Lottery has been established in the 1996 Immigration Act in order to give immigration opportunity to natives from countries other than the main source of immigration to the U.S.A. This official U.S. government program aims to diversify the American population by creating an immigration opportunity to live, work and study in the U.S.A. This is not available for India.

  ReplyDelete