பிக்பாஸ்
பதிவு -3
இதற்கு முந்திய பத்திவைப் படிக்க இங்கே சொடுக்கவும்
http://paradesiatnewyork.blogspot.com/2017/08/blog-post_17.html
ஓவியா ஒரு சில
படங்களில் நடித்த நடிகை. சில ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் பெரிய நடிகைகள்
வரிசையில் இல்லாதவர். அதோடு வாய்ப்புகள் இல்லாத அல்லது முடிந்துபோன நிலையில்
இருந்த ஓவியா பிக்பாஸுக்குள் நுழைகிறார். தன்னுடைய வெளிப்படைத்தன்மையாலும்,
பிறரால் ஒதுக்கப்பட்ட நிலையாலும் மக்களால் ஆதரிக்கப்படுகிறார். ஆதரவு என்றாலும்
கொஞ்ச நெஞ்சமில்லை பிரம்மாண்டமான ஆதரவு. கோடிக்கணக்கான மக்கள் ஓவியா பேரை ஜெபம்
செய்ய ஆரம்பித்தார்கள். “ஓவியா ஆர்மி”, “ஓவியா பேரவை”, என்றெல்லாம்
ஆரம்பித்தார்கள். கட்சி ஆரம்பித்தால் முதலமைச்சர் ஆகிவிடும் அளவுக்கு தமிழ்மக்கள்
ஓவியாவை விரும்பினார்கள். இதெல்லாம் ரொம்பவே ஓவர். இவருக்கு இருக்கும் ஆதரவைப்
பார்த்தால் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தால் ஓவியாவை கொ.ப.செ யாகப் போடலாம்.
ஓவியாவிடம் பார்த்த நல்ல விஷயங்கள்:
1.
யாரைப்பற்றியும்
கவலைப்படாமல் தன் நிலை பிறழாது இயல்பாக இருப்பது.
2.
காலையில் எழுந்தது
முதல் ஆட்டம் பாட்டம் என அதிரடியாக இயங்குவது.
3.
ஒதுக்கப்பட்டவர்களுக்குக்குரல்
கொடுத்து அவர்களை அரவணைத்துச் செல்வது.
4.
ஆண்களோ பெண்களோ
தைரியமாக அவர்களை எதிர்கொள்வது.
5.
யாரையும் சட்டை
செய்யாமல் தன்போக்குக்கு இருப்பது.
ஓவியாவிடம் பார்த்த மோசமான விஷயங்கள் :
1.
சேர்ந்து வாழ
முயலாமல் எல்லோரையும் எல்லாவற்றையும் எதிர்ப்பது.
2.
எந்த வித சட்ட
திட்டங்களுக்கு அடங்காமல் தன் போக்கில் செயல்படுவது.
3.
கொஞ்சம் கூட அறிந்து
தெரிந்து கொள்ளும் முன் யாரோ ஒரு ஆரவ்விடம் காதலில் விழுந்தது.
4.
ஆரவ் விரும்புகிறாரா
இல்லையா என்று தெரியாமல், உரசுவது, மோதுவது மேலே விழுவது, படுக்கைக்குள் நுழைவது.
5.
கொஞ்சம் கூட
வெட்கமில்லாமல் எல்லோர் முன்னும் ஆரவ்வை அணைப்பது, கொஞ்சுவது.
6.
இரவும் பகலும் பிக்பாஸ் உட்பட எல்லோரையும் எதிர்த்தது.
7.
கார்ப்பெட்டில்
வைத்து இழுத்து ஜூலியைக் கீழே
தள்ளியது.
8.
எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது கிளாஸ் டம்ளர்களை
போட்டு உடைத்தது.
9.
பிறரை பயமுறுத்த
நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலை செய்வது போல் நடித்தது.
10.
காயத்ரி சொன்னதை விட
அதிக மோசமான 'F' வார்த்தைகளை பயன்படுத்தியது.
11.
டாஸ்க் எதுவும் செய்யாமல் அடம்பிடிப்பது.
என சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு
சமயத்தில் இது நடிப்பா, உண்மையா இல்லை
டாஸ்க்கா என்று தெரியாமல் எல்லோரையும் குழப்பி அடித்துவிட்டார். ஒரு சமயம் மனநிலை
பிறழந்துவிட்டதோ என்று நினைக்கவும் தோன்றியது நடுநிலையாக இருந்து பார்த்தால் அவர்
செய்த தவறுகள் ஏராளம். வெளியே வந்து கமலும் ஏன் அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சொல்லியும்
கேட்காமல் ஆரவ்வை காதலிக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் மீண்டும் சொன்னது
எரிச்சலைத்தான் தந்தது. இப்படி தீவிர ஒரு தலைக்காதலில் எந்த ஈர்ப்பினால்
ஈடுபட்டார் என்று நினைத்தால் சிரிப்பாகத்தான்
இருக்கிறது. வந்த முதல் வாரத்தில் தாடி வச்சிருந்தால் எனக்குப் பிடிக்கும்
என்று சொல்லி விளையாட்டாய் ஆரம்பித்தது அப்புறம் அவரைப் பைத்தியம் ஆகும் அளவிற்கு
போனது கிரேஸி. இதற்கும் ஆரவ் எனக்குத் தெரிந்து முதலிலிருந்தே உஷாராகத்தான்
இருந்தார். தனக்கு திருமண நிச்சயம் நடந்ததையும் குறிப்பிட்டிருந்தார். இருந்தும்
உன்னைத்தான் காதலிக்கிறேன் நீயில்லாமல் நான் வாழ முடியாது என்று சொல்பவரை எப்படி
நீங்கள் சப்போர்ட் செய்யமுடியும். காதலுக்கு துணைபோய் பின்னர் சாதலுக்கு துணை
போவது போல் ஆகிவிடுமே.
அதனால் நான் நினைக்கிறேன் ஓவியா
திரும்ப பிக்பாஸுக்குள் வரக்கூடாது. அதுவும் ஆரவ் இன்னும் அங்கே இருக்கும் சூழலில் ஓவியா வந்தால் அது பெரிய குழப்பத்தை
உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு இப்போது போட்டிக்கு பிந்துவும் சுஜாவும்
இருக்கிறார்கள். ஒரே
களேபரமாக சக்களத்திச் சண்டை ரேஞ்ச்சுக்குப் போய் பிரச்சனையில் போய் முடியும்
என்பதால் ஓவியா திரும்ப வரக்கூடாது மக்களே ஓவியாவை மறந்து உங்கள் சுயநிலைக்கு
வாருங்கள்.
தமிழ் மக்களின் இந்த மனநிலையை
என்னவென்று சொல்வது? எனக்கு அவர்களைக்
கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.
1.
மூன்று தலைமுறையாக
திரையில் பார்ப்பதை நிஜம் என்று நம்புகிறீர்களே? உங்களுக்கே இந்த அபத்தம் புரியவில்லையா?
2.
60 வருட முன்னால்
படித்தவர் அவ்வளவு இல்லாத காலம் தொட்டு, படிப்பவர் சதவீதம் வெகுவாக அதிகரித்தும்
இதே நிலைமை நீடிப்பது ஏன்?
3.
வெறும்
சினிமாக்கவர்ச்சி, முகக்கவர்ச்சி. பால் கவர்ச்சிக்கு ஆட்பட்டு நாட்டையே கையில்
கொடுத்து விட ரெடியாயிருக்கிறீர்களே? இது
நியாயமா?
4.
அது என்ன
எப்பப்பார்த்தாலும் அடுத்த மாநிலத்தில் இருந்து வந்தவர்களையே கொண்டாடுகிறீர்களே?
உள்ளூர்க்காரர்களை ஒதுக்கி விட்டுவிடுகிறீர்களே?
5.
நாட்டின் சட்டமன்ற
நாடாளுமன்ற ஓட்டுக்களின் சதவீதத்திற்கு மேல்
அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு ஓட்டளித்து விடுகிறீர்களே?
6.
எம்ஜியார்,
ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார்,
T.ராஜேந்தர், கார்த்திக் ஆகியவர்களைப் பார்த்தும்
கூட திருந்தாமல்,
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்
என்று பின்னால் செல்கிறீர்களே, உங்களுக்குக்
கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இருக்காதா?
7.
கிட்டத்தட்ட 50 வருடமாய் வருவேன் வரமாட்டேன் என்று தன் ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டு
சுயநலமாக மட்டும் யோசிக்கும் ரஜினிகாந்தா வந்து உங்களையும் நாட்டையும் காப்பாற்றப்
போகிறார்?
8.
எத்தனையோ வருடமாக
காத்திருந்து காத்திருந்து நொந்து போயிருக்கும் மு.க.ஸ்டாலினை விட உதயநிதிக்கு
அதிகம் கை தட்டுகிறீர்களே? (முரசொலி பவளவிழா)
9.
ஒரு சினிமாவையோ,
ரியாலிட்டி ஷோவையோ ஏன் வெறும்
பொழுதுபோக்காக மட்டும் பார்க்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்? தமிழ்ச் சமூகம் சினிமாக்கவர்ச்சியிலிருந்து மாற இன்னும் எத்தனை யுகம்
ஆகுமோ?
10.
அடப்போங்கய்யா ( நன்றி ரைசா) , இதுக்கு
மேலும் ட்ரிக்கர் (நன்றி சக்தி)பண்ணாம கொஞ்சம்
ஷட் அப் பண்ணுங்க( நன்றி ஓவியா ). அப்பறம்
வாயில எதாவது நல்ல வார்த்தை வந்துரும் ( நன்றி
காயத்ரி ).
பிக் பாஸ் தொடர் இத்தோடு முடிவு பெற்றது ஆளை விடுங்கப்பா.
ReplyDeleteபிக்பாஸ் முதல் ஷோவை தவிர மற்ற ஷோக்களை பார்க்கவில்லை நீங்கள் ஒவியா பற்றி சொன்ன பின் அவதான் நமக்கு ஏற்ற ஜோடி மாதிரி தெரிகிறது அதனலா அவர் கிட்ட என் பற்றி கொஞ்சம் சொல்லி வையுங்க பாஸ்
வருகைக்கு நன்றி மதுரைத்தமிழன் .ஓவியாவுக்கு ப்ரொபோஸ் பண்ற ஒரு கோடியே ஒன்பது லட்சத்து முப்பத்து மூன்று ஆயிரத்து முன்னூத்தி மூன்றாவது நபர் நீங்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .
Deleteமூன்று இடுகைகளையும் வாசித்தேன். நல்லா அலசியிருக்கீங்க. பாராட்டுகள்.
ReplyDelete1. ஓவியா திரும்ப வரமாட்டார், வரக்கூடாது. நல்ல பெயரோடு திரும்ப வராமலிருப்பதுதான் அவரது பிம்பத்துக்கு நல்லது. அவங்களோட குறைகளையும் சரியா சொல்லியிருக்கீங்க.
2. 'காயத்ரி', 'சக்தி' பற்றிய உங்கள் விமரிசனமும், மற்றவர்களைப்பற்றிய கணிப்பும் சரியானதே.
3. 'எப்படி இருந்த நான்' வசனத்தை நினைவுபடுத்துவது, 'ஜூலி'தான். அவரைப் பார்த்தாலே வெறுக்கும்படியான நிலையை அவர் உண்டுபண்ணிவிட்டார். 'அவன் திருந்திட்டேன்னு அவனே சொன்னான்' வசனத்தையும் அவர் நினைவுபடுத்துகிறார்.
குறையில்லாத மனிதர்கள் யார்தான் உண்டு. நம்மையே நாம் வெளியிலிருந்து பார்த்தால், இதுவரை நம்மைப் பற்றித் தெரியாத குறைகளை நாம் தெரிந்துகொள்ளலாம்.
நெல்லைத்தமிழன், உங்கள் உள்ளமும் என்போல் வெள்ளைத்தமிழனாக இருப்பது தெரிகிறது.
Deleteஇன்று மதுரைத்தமிழன் , நெல்லைத்தமிழன் என்று எல்லாத்தமிழனும் நியூயார்க் தமிழனின் தளத்திற்கு வந்தது கண்டு மகிழ்ச்சி .