பிக் பாஸ் பதிவு 1
Juliana |
பிக் பாஸ் நிகழ்ச்சியைத்தொடர்ந்து
பார்ப்பவர்களுக்கு, ஜூலியோட என்ட்ரி ஞாபகமிருக்கும் என
நினைக்கிறேன். சிவப்புத்துணியைத் தலையில் கட்டிக்கொண்டு ஒரு பொதுவுடமைப் புரட்சிப்
பெண்ணாக வந்தார். கமல் கூட அதைப்பற்றிக் கேட்டது ஞாபகமிருக்கிறது.
ஜூலி உலகமெங்கும்
வாழும் தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த முகம்தான். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்
எழுச்சிப் போராளியாக அனைவரும் பாராட்டத்தக்க வீரப்பெண்ணாகத்தான் ஜூலியை நாம்
அறிந்திருந்தோம். ஜூலியைக் கொன்றுவிட்டார்கள் என்ற புரளி காதில் விழுந்த போது
பதறாதவர்கள் யாருமில்லை என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட
ஜூலி சற்றும் எதிர்பாராத விதத்தில்
பிக்பாசில் என்ட்ரி கொடுத்தது ஆச்சரிய அதிர்ச்சி. பெரும்பாலும் திரைத்துறையைச்
சேர்ந்த மற்ற போட்டியாளர் மத்தியில் ஜூலியைத் தேர்ந்தெடுத்த பிக்பாஸ் அடித்தது
மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று நினைத்தேன். ஜூலியை சாமான்யரின், சிறுபான்மையினரின்,
பொதுமக்களின் பிரதிநிதியாகத்தான் எல்லோரும் பார்த்தனர்.
ஆனால்
எவ்வளவுக்கெவ்வளவு ஜூலிக்கு மக்கள் ஆதரவு இருந்ததோ எவ்வளவுக்கெவ்வளவு அவர் மேல்
பரிவும் பாசம் காட்டினார்களோ, அதைவிட அதிகமான வெறுப்பையும் அவர் சம்பாதித்துக் கொண்டது
ஒரு நகைமுரண். எவ்வளவுக்கெவ்வளவு ஜூலி உள்ளே வரும்போது மகிழ்ச்சியடைந்தார்களோ
அவ்வளவுக்கவ்வளவு வெளியேறியதில் மகிழ்ச்சியடைந்தார்கள். ஜூலி ஏமாளியா?
இல்லை கோமாளியா?.
Arthi, Julie and Gayathri |
திரைத்துறையைச் சேர்ந்த காயத்ரி,
சிநேகன், ஆர்த்தி நமீதா மற்றும் சக்தியால் ஜூலியை அவர்களோடு சரிசமமாக
ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படுக்கை ஒதுக்குவதிலிருந்து இது ஆரம்பித்தது. அதோடு
ஆர்த்தியும் காயத்ரியும் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு எதிராக ஜூலியின் போராட்டம் அமைந்ததால் மேலும்
வெறுப்பு கொண்டனர். அவர்கள் தனியாக சந்திக்கும்போதெல்லாம் ஜூலியே அவர்களின்
பேச்சுடைத் தலைவியாக பேசுபொருளாக இருந்தார். இது ஜூலி போகும்வரை நீடித்தது.
அவர்களுடைய
ஒதுக்கி வைத்தல், நையாண்டி ஆகியவற்றை பொறுக்க முடியாமல் ஜூலி முதல் வாரம்
எப்பொழுதும் அழுது கொண்டுதான் இருந்தார். அவருக்கு ஆறுதலாய் இருந்தது பரணியும்
ஓவியாவும் மட்டும்தான். இந்த இருவரும் பிறரால் ஒதுக்கப்பட்டது அதன்பின் தான்
நடந்தது.
அழும்போதெல்லாம்
கட்டிப் பிடி வைத்தியம் செய்த சிநேகனும் அதனை போலியாகவே செய்தார். அதன்பின்
பெண்களுடன் சேர்ந்து கேலி செய்தது அநியாயம். பரணி பாடவேண்டிய கவிஞர் பெண்களுடன்
பொரணி பேசும் ஆளாக இருந்தது சகிக்கவில்லை. அதற்காகத்தான் அடிக்கடி அவர் சேலை
உடுத்தும்படி வந்ததோ.
முதல்
இரண்டு வாரங்களில் அதிகமான பேரால் நாமினேட் செய்யப்பட்டும் மக்களுடைய ஏகோபித்த
ஆதரவு இருந்ததால் காப்பாற்றப்பட்டார் ஜூலி. அதோடு அவருக்கு எதிராக இருந்ததால்தான்
ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். இதனை அறிந்து உணர்ந்து செயல்பட்டிருந்தால் ஜூலி
வெளியேறி இருக்க மாட்டார். முதல் இரண்டு வாரங்களில் இந்த பிக்பாஸ் டைட்டிலை
ஜெயிக்குமளவிற்கு அவர் ஒரு பலமான போட்டியாளராக இருந்தார் என்பதில் எந்த
சந்தேகமில்லை. ஆனால் அதுவரை
மக்கள் மனதில் நம்பர் ஒண்ணாக இருந்தவர் தன்னுடைய பச்சோந்தித்தனத்தால் அதளபாதாளத்தில் சரிந்தது
ஒரு எதிர்பாராத நிகழ்வு.
ஒடுக்கப்பட்டவர்
ஒதுக்கப்பட்டவரோடு ஒன்று சேருவது ஒரு இயற்கையான நிகழ்வு என்பதால் பரணி ஜூலிக்கு
ஆதரவுக்கரம் நீட்டினர். பேண்ட் ( Friendship Band) கூட கட்டிவிட்டார். தங்கையென
உருகினார். ஆனால் முதன்முதலாக ஒடுக்கியவர்களோடு இணைந்து உதவி செய்த பரணியை ஜூலி
ஒதுக்கியது அவர் செய்த மாபெரும் தவறு. மக்கள் யார் பக்கம் என அறியாமல் ஜூலி எடுத்த
முடிவு சுத்த பைத்தியக்காரத்தனம். அதனால் உள்ளே நாமினேட் ஆகாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் வெளியே மக்களின் ஆதரவு சரியத்துவங்கியது.
ஓவியா தவிர
எல்லோராலும் ஒதுக்கப் பட்ட பரணி, மன உளைச்சலில் உழன்று வெளியே போனால் போதுமென்று
செயல்பட்டு வெளியேறினார். வயிற்று வலியால் அவதிப்பட்ட ஜூலியை நடிப்பு என்று
எல்லோரும் ஒதுக்கிவிட, ஆதரவுக்கரம் நீட்டி அரவணைத்தவர் ஓவியா.
ஆனால் அப்போது அதனை
ஏற்றுக் கொண்டுவிட்டு அடுத்த நிமிடத்தில் ஓவியா மேலேயே பழிபோடும் அளவுக்கு
ஜூலி தரம் தாழ்ந்த நிகழ்வு அவள்மேல் இருந்த கொஞ்சநஞ்ச
அனுதாபத்தையும் தகர்த்தெறிந்து. ஆனால் யாருக்காக ஜூலி இதைச் செய்தாரோ அவர்களும்
ஒதுக்கிவிட, ஜூலி தன் இறுதிச்சமயத்தில் தன்னுடைய இயல்பை முற்றிலுமாக
இழந்து எப்போதும் ஒரு சோகநிலையிலேயே இருந்தார். ஜூலியின் செயல்களில் எது நடிப்பு
எது இயல்பு என்னும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு போனதால் மக்கள் முற்றிலுமாகக்
கைவிட்டுவிட்டார்கள்.
Snehan |
மாற்றம்
என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தேவைதான், ஆனால் அந்த மாற்றம் என்பது சுயநலமாக இருந்தாலும் பிறரினைப்
பாதிக்காமல் இருக்க வேண்டும்.
ஜூலி
மட்டும் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டிருந்தால் பிக்பாஸ் டைட்டிலை
வெல்லுமளவிற்கு சென்றிருப்பார். அவருக்கிருக்கும் தனிப்பட்ட திறமைகள் நன்றாகவே
வெளிப்பட்டன. பாடுவதைச் சொல்லவில்லை. பாடுவது கர்ண கொடூரமாக இருந்தது. ஆனால்
ஆடுவது நன்றாக இருந்தது. VJ போல ஆன்கரிங் செய்தது நன்றாக இருந்தது. நல்ல
பெயரில் தொடர்ந்து நிலைத்திருந்தால் வெளியே வரும்போது பெரிய ஸ்டாராகக் கூடிய
வாய்ப்புகள் அனைத்தும் இருந்தன. ஆனால் இப்போது ஓடி ஒழியக்கூடிய அளவில்தான் இருக்கிறது.
வெளியே
போகும்போது கூட காயத்ரி, சக்தி, சிநேகன், ஆகியோரின் அன்பையும் முழுமையாக பெற்றுவிட்டோம் என்று
நினைத்துத்தான் வெளியே போனார். கமல் போட்டுக் காட்டிய குறும்படம் கூட அவ்வளவு
தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஓவியா
அவருடன் நட்புக்காட்ட பல வாய்ப்புகளை வழங்கினார். அதில் ஒன்றையாவது பயன்படுத்தி
மாறியிருந்தால் மக்களும் மாறியிருப்பார்கள். இப்போது எவ்வளவுதான் மன்னிப்புக்
கேட்டாலும் டூ லேட்.
தன் சொந்த
இயல்பை விட்டு, சுயநலத்திற்காக சிறுபான்மையினரை வெறுத்து தவறான வழிகளில் ஈடுபடுதல்,
பொய்யான முறையில் செயற்கையாக நடத்தல் இவையெல்லாம் அழிவுக்கு
வழி என்பவை ஜூலியின் மூலம் நாம் கற்றுக் கொள்ளும்
பாடம். இப்போது ஜூலிக்கு எல்லாம் புரிந்திருக்கும் புரிந்து என்ன பயன்?
இப்போது
ஜூலி ஏமாளியா அல்லது கோமாளியா என்றால் கோமாளியாக்கப்பட்ட ஏமாளி என்பதுதான் என்
பதில் .
தொடரும்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள் .இந்தியர் அனைவருக்கும் குறிப்பாக விவசாய மக்களுக்கு இந்த அரசியல் வியாதிகளிடமிருந்து சீக்கிரம் சுதந்திரம் கிடைக்கட்டும் .
தொடரும்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள் .இந்தியர் அனைவருக்கும் குறிப்பாக விவசாய மக்களுக்கு இந்த அரசியல் வியாதிகளிடமிருந்து சீக்கிரம் சுதந்திரம் கிடைக்கட்டும் .
அட... நீங்களுமா...? ரைட்டு...!
ReplyDeleteஐம்பது நாள் பொறுத்துப்பார்த்துட்டு , நானும் ஜோதியில் ஐக்கியம் ஆயிட்டேன் போல
Deleteஅண்ணே .. நீங்க கூட இந்த சனியத்த பாக்குறீங்களா ? நம்பவே முடியல அண்ணே..
ReplyDeleteஒரு வேளை டெங்கு போல இது ஒரு தொத்து வியாதியா இருக்குமோ ?
Deleteஓடவும் முடியலை ஒளியவும் முடியலை
Deleteநான் julia roberts என்று நினைத்து படிக்க வந்தால் இங்கே என்னமோ எழுதி இருக்கீங்க
ReplyDeleteஜூலியா ராபெர்ட்சா? அது யாரு ?
Deleteஜூலி வாழ்க்கை காலி ஆனது பிக் பாஸில்...
ReplyDeleteஆமாம் ,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது .
Deleteநான் பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் பார்க்கிறேன். என் கண்ணிற்கு அது ஒரு மகா பரதமாக இராமாயணமாக தெரிகிறது. வித விதமான கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள் . பார்த்து படிக்க அங்கு விடயம் இருக்கத்தான் செய்கிறது.
ReplyDeleteஇப்படி ஒரு பார்வை இருந்தால் , நாம் நிச்சயமாக கற்றுக்கொள்ளலாம்.
Deleteemaliyaana komaali kadasi vari super...
ReplyDeleteநேரமிருந்தால் என் தமிழ் கவிதை blog பக்கம் செல்லுங்கள்...
அன்புடன் யாழினி வளன்
tamilkavithaigalyazhini.blogspot.in
வருகைக்கு நன்றி யாழினி .
Delete