Monday, February 6, 2017

விடியற்காலையில் ஒரு விடியாமூஞ்சி !!!!!!!!!


இலங்கையில் பரதேசி பகுதி-2
Image result for Immigration counter at colombo, srilanka

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/01/blog-post_31.html
குடியுரிமைப் பகுதியில் அந்த அதிகாலையிலும் நாலு கவுன்ட்டர்கள் திறந்திருந்தன. அதில் மூன்றில் நடுத்தர வயது பெண்கள் இனிமையான புன்னகையுடன் உட்கார்ந்திருந்தனர். ஒன்றில் ஒரு கடுகடு மூஞ்சியோடு ஒரு ஆண் உட்கார்ந்திருந்தான். ஒரே வரிசையில் நின்று அவர்களில் ஒருவர் கூப்பிடும்போது செல்ல வேண்டும்.
Image result for Immigration counter at colombo, srilanka

அலாரம் அடிக்காமல் லேட்டாய் எழுந்து, காலையிலேயே மனைவியிடம் காஃப்பி கிடைக்காமல் சண்டை போட்டு, வெளியே வரும்போது கார் டயர் பஞ்சர் ஆகி இருப்பதை பார்த்து நொந்து, நடந்து பக்கத்தில் தெருவின் ஆரம்பத்தில் காஃபி குடிக்கப் போய் அந்தக் கடை பூட்டியிருப் பதைப் பார்த்து கடுகடுத்து, டாக்சி கிடைக்காமல் காலைப் பனியில் தும்மிக் கொண்டே நின்று, வந்த டாக்சியில் அரை மடங்கு அதிகமாக பணம் செலுத்தி, அலுவலகத்திற்கு   தாமதமாக வந்து, மேல் அதிகாரியிடம் அர்ச்சனை வாங்கிவிட்டு வந்தவனின் மூஞ்சி போலவே அவன் மூஞ்சி இருந்தது. அவனிடத்தில் நான் போகக்கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டே சிறிது நடுக்கத்துடனே நின்று கொண்டிருந்தேன்.
கரெக்டாக அவன் என் முன்னால் இருந்தவரைக் கூப்பிட, அப்பாடா நமக்கு மற்ற மூன்று பேரில் யாராவது கிடைக்கும் என நம்பிக்கையுடன் நின்றேன். என் முன்னால் இருந்தவருக்கும் அவனுக்கும் சண்டை மூள, அங்கு அவசரமாக வந்த நன்கு உடையணிந்த  ஒருவர் அந்தப் பயணியை அழைத்துக் கொண்டு ஒரு ரூமுக்குள் சென்றுவிட்டார். சடுதியாக அடுத்து நின்ற என்னைக் கூப்பிட்டான். நான் எங்கோ பராக்குப் பார்ப்பதுபோல அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்க்க, அவன் கொஞ்சம் சத்தமாகவே என்னைக் கூப்பிட, 'மி ? ' என்று சொல்லி என்னுடைய அதிர்ஷ்டத்தை நொந்த படியே அவனிடம் சென்றேன். இதோ தமிழ்ப்படுத்திய அந்த உரையாடல் உங்களுக்கு.
“உங்கள் பெயர்?”
“ஆல்ஃபிரட் தியாகராஜன்”.
“உங்கள் கடைசிப்பெயர்?” (Last Name)
“தியாகராஜன்”.
“அப்பாவின் பெயர்?”
“அதேதான்”.
“அப்ப ராஜசேகரன் என்பது?”
“அது என் நடுப்பெயர் “(Middle Name )
“இந்தியக் குடிமகனா?”
“ஆம் “
“இந்தியாவில் எந்தப் பகுதி?”
“தமிழ்நாடு”
“ஓ இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?”
“நியூயார்க்கிலிருந்து இல்லை சீனாவிலிருந்து”.
“சரியாகச் சொல்லுங்கள்”.
“நியூயார்க்கிலிருந்து கிளம்பி சீனா சென்று சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு இப்போது இலங்கை வந்திருக்கிறேன்”.
“நியூயார்க்கில் என்ன செய்கிறீர்கள் ?”.
“அங்குதான் வசிக்கிறேன்”
“இந்தியக்குடிமகன் என்று சொன்னீர்கள்?”
“ஆம். ஆனால் நியூயார்க்கில் பர்மனட் ரெசிடண்ட் (PR)”
“ஓ சீனாவுக்கு எதற்கு சென்றீர்கள்?”
 “இலங்கை வந்த காரணம் ?”
“சுற்றிப்பார்க்க”.
“ஓ எங்கெல்லாம் போகப் போகிறீர்கள்”.
“கொழும்பும் அதன் சுற்றுப்புறம் மட்டும்”.
“யாழ்ப் பாணம் போகப்போகிறீர்களா?”
“இல்லை”.
“நீங்கள் ஒரு பத்திரிக்கையாளரா?”
 “இல்லை ஆனால் பதிவர்”.
“பத்திரிக்கையாளர்கள் அல்லது மதத் தலைவர்களை சந்திப்பீர்களா? “
“இல்லை”.
“நியூயார்க்கில் இலங்கைத் தமிழரோடு தொடர்பு உண்டா”.
“உண்டு “
“விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நியூயார்க்கில் உள்ள யாரேனும் தெரியுமா?” –
 “தெரியாது”. (மன்னிக்கவும் மக்களே பொய் சொல்லிவிட்டேன்)
“அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் இங்கு யாரையாவது சந்திக்கச் செல்லியிருக்கிறார்களா?”
“ இல்லை”.
“எங்கே தங்கப் போகிறீர்கள் ?”
 “சமன்கா கெஸ்ட் ஹவுஸ் ?”
“அப்படி ஒன்றை கேள்விப்பட்டதில்லையே எங்கே இருக்கிறது ?”
“லவினியாவில்”
“எத்தனை நாட்கள்?”
 “நான்கு நாட்கள் மட்டும்”.
“இலங்கையிலிருந்து எங்கு செல்கிறீர்கள் ?”.
“சென்னைக்கு அதன்பின் அங்கிருந்து நியுயார்க்கிற்கு நேரடியாகச் செல்லவிருக்கிறேன்”.
“நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் , நீங்கள் எந்தவொரு மதத்தலைவரையோ பத்திரிக்கையாளரையோ சந்திக்க அனுமதியில்லை”


ஒரு புன்னகை இல்லை, வாழ்த்தும் இல்லை, ஒருவித சந்தேகத்துடனேயே பாஸ்போர்ட்டில் குத்தி அனுப்பினான்.
வரிசையில் இருந்த எல்லோருமே என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க நான் கம்பீரமாய் (?)நடந்து போனேன்.
போகும் வழியில் வரிசையாக டூட்டி ஃப்ரீ கடைகள் இருந்தன.  அந்தக் காலத்தில் இலங்கை செல்லும் மக்கள் இந்த மாதிரிப் பொருட்களை வாங்கி வருவதைப் பார்த்திருக்கிறேன். டிவி, மியூசிக் சிஸ்டம் போன்ற எலெக்ரானிக் பொருட்கள் தவிர குக்கர், பாத்திரங்கள் மற்றும் சூட்கேஸ்கள், பேக் பைகளும் இருந்தன.
வெளியே போகுமுன் என்னுடைய டாலர்களை இலங்கைப் பணமாக மாற்றிக் கொள்ள எக்சேஞ்ச் இடம் சென்றேன்.
ஐநூறு டாலர்களைக் கொடுத்தேன். பாஸ்போர்ட்டை ஒரு பிரதி எடுத்துவிட்டு கட்டுக் கட்டாக ஏராளமான பணத்தைக் கொடுத்தார்கள். அவ்வளவு பணத்தை மொத்தமாக நான் கையாண்டு வெகு நாளாகிவிட்டது. என்ன இது தவறுதலாக கொடுத்துவிட்டார்களா என்று திரும்பவும் கேட்டேன். “இல்லை சரிதான் ஒரு டாலருக்கு 145 ரூபாய்கள் என்று சொன்னதும் மிகுந்த ஆச்சரியமாகிவிட்டது. அதனால்தான் 500 டாலருக்கு மொத்தம் 72500 ரூபாய் கிடைத்தது. எண்ணக்கூட முடியாமல் அப்படியே நோட்டுக் கற்றைகளை பையில் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.
வெளியே வரும்போது காலை ஏழு மணியிருக்கும். நிறைய வாகனங்கள் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டு இருந்தன.
எனது துபாய் நண்பன் சையது அபுதாஹிர், சீனாவில் ஒரு நண்பரை ஏற்பாடு பண்ணியது போல கொழும்பிலும் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவன் பெயர் அம்ரி. ஏற்கனவே வாட்ஸ் அப்பில் அறிமுகமாயிருந்தோம்.
Related image

ஒரு ஓரமாக நின்று அம்ரியை எப்படிக்கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வித்தியாசமான கார் பக்கத்தில் நின்றது. அதில் இருந்து புன்னகையுடன் இறங்கிய அம்ரி, “ஹலோ சார்  வெல்கம் to  கொழும்போ”, என்றான்.
“தேங்க்யூ ஃபார் கம்மிங், தேங்க்யூ ஃபார் யுவர் ஹெல்ப்”, என்றேன்.
"பரவாயில்லை சார் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள் இதைக்கூட செய்யமாட்டோமோ" என்றான் தமிழில்.
 “அட நீ தமிழா”, என்றேன் மகிழ்ச்சியுடன்.      
தொடரும்
பின் இல்லை இல்லை புண் குறிப்பு :
“ஏலே சேகரு தலைப்பிலே விடியா மூஞ்சின்னு சொன்னது யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.
“அத எல்லாரும் கண்டுபிடிச்சிருப்பாங்களே   இந்நேரம் மகேந்திரா”
“அது நீதானே ?”
“செத்தாண்டா சேகரு”    



16 comments:

  1. அம்மணி எத்தனையோ முறை கேட்ட போது கூட இன்னும் நான் மாமோயார் ஊருக்கு போகாததுக்கு இதுவும் ஒரு காரணம்.
    அந்த கேள்வி பதில் தான்.

    ReplyDelete
    Replies
    1. என்னது அம்மணி ஊருக்கு இன்னும் போகலையா? உமக்கு ஒரு வாரம் வெஜிடேரியன் உணவை அம்மணி போட்டால் தன்னாலே ஊருக்கு போவீங்க

      Delete
    2. மாமியார் வீட்டுக்குப்போறேன்னு அங்க ஏதாவது ஏடாகூடமா சொல்லிட்டு மாமியார் வீட்டில் ( ஜெயிலில் ) அடைபடுவதை விட வெஜிடேரியன் எவ்வளவோ மேல் .

      Delete

    3. மாமியார் வீட்டிக்கு சென்று தூக்கு கயிறை முத்தமிட்டாலும் முத்தமிடுவாறே தவிர விசுவாசம் ஒரு வாரம் தொடர்ந்து வெஜிடேரியன் உணவை சாப்பிடமாட்டார்

      Delete
    4. ஆமாம் ஆமாம் அவர் ஒரு மாம்சபட்சிணிதான்.சுத்த சைவம் போல அவர் சுத்த அசைவம்.

      Delete
  2. "விசு" விசுவாசமனவர்ன்ல தப்ப நினச்சுட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. பாஸ்கர், விசு வாசமானவர்தான்.

      Delete
  3. பக்கத்து ஊரான லங்காவிலேயே ஒரு டாலர் 145....இங்கு...!!???
    விசு .பத்த வைச்சுட்டீங்களே..ஹிஹி...அத ஊதி.... ஊத்தி கழுவிட்டார் மதுரை.... அண்ன்ணன் பாவம்....

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் கவிச்சை வாடை போகமாட்டீங்குதே.

      Delete
  4. சில ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு முறை இலங்கைக்குச் சென்றிருக்கிறேன்
    அப்பொழுது இந்திய பணத்திற்கு இலங்கைப் பணத்தை தர மறுத்துவிட்டார்கள்
    கேட்டதற்கு We wont accept Indian money என்ற பதில்தான் கிடைத்தது

    ReplyDelete
    Replies
    1. ஐயோ இது எனக்கு தெரியாம போயிருச்சே , டாலர் இருந்தது வரமா சாபமா ?

      Delete
  5. // “இல்லை ஆனால் பதிவர்” //

    சிறப்பு...! மிகச் சிறப்பு...!!

    ReplyDelete
    Replies
    1. பதிவர் என்ற ஒன்றையே தகுதியாகவும் பெருமையாகவும் நினைக்கிறேன்.மற்றவர் என்னை பதிவர் என்று ஒத்துக்கொள்கிறார்களா என்பது வேறு கதை தனபாலன் .

      Delete
  6. அந்த இனி மையான புன்னகையுடன்இருந்த மூன்று பெண்மணிகளை இன்னும்சற்று வர்ணித்திருக்கலாமோ?
    இராய செல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. நடுத்தர வயதுன்னு சொல்லிட்டா அதோட விட்டுரனும் செல்லப்பா.

      Delete
  7. அந்த இனி மையான புன்னகையுடன்இருந்த மூன்று பெண்மணிகளை இன்னும்சற்று வர்ணித்திருக்கலாமோ?
    இராய செல்லப்பா

    ReplyDelete