பெரும்பான்மையான
எம் எல் ஏக்கள், எம்பிக்கள், கையில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றியிருந்தும்
நினைத்தது போல் உடனடியாக சசிகலா முதலமைச்சர் பதவியை அடைய முடியவில்லை.
ஜெயலலிதா இறந்து
போனதைத் தொடர்ந்து துக்கம் அடங்குவதற்குள், வர்தாப்புயல் மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரம்
வந்து தாமதப்படுத்தியது. ஒரு புறம் தீபா குடைச்சலைக் கொடுக்க இப்போது பன்னீர் என்ற
ருசி கண்ட பூனை புயலாக எழுந்துள்ளது. அது தவிர சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித்
தீர்ப்பும் வந்து இருந்த கொஞ்ச நஞ்சம் நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது
இப்போது
சசிகலா என்னதான் செய்யமுடியும் ?.
பரதேசியின்
பகிரங்க ஆலோசனைகள் :
1. உடனடியாக
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை துல்லியமாகக் கணக்கிட்டு அதனை எம்.எல்.ஏ. எம்பிக்களிடம்
தெரிவித்து அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாக உறுதி அளிக்கலாம். இதன் மூலம் அவர்கள்
திட்டுக்கு அடங்காவிட்டாலும் துட்டுக்கு அடங்கிப்போக வழியுண்டு. உள்ளே இருந்தாலும்
வெளியே இருந்தாலும் ஆட்சியை தொடர்ந்து நடத்தலாம்.
2. தீபாவிடம்
பேசி அவர் ஏன் தனியாக ஃபிளாட்டில் தங்க வேண்டும் போயஸ் கார்டனுக்கு வந்துவிடலாம் என்று சொல்லி அழைத்து வந்துவிட்டால்
போதும். பிறகு தானாக மற்றவை( ?) நடந்துவிடும்.
3. பன்னீர்
செல்வத்திற்கு ரகசியமாக மிடாஸ் ஆலையை எழுதி வைத்துவிட்டு, கண்ணீர் செல்வம், வெந்நீர்
செல்வம் ஆனதின் பின் இப்போது மிடாஸ் ஆலையின் அதிபராக தண்ணீர் செல்வமாக ஆகிவிட்டார்
என்று சொல்லி அவரை ஓய்த்துவிடலாம்.
4. எம்.எல்.ஏக்கள்
அனைவரிடமும் பத்தாண்டுக்கு பாண்டு எழுதி வாங்கி கட்சி மாற்றத்திற்கு தடை செய்யலாம்.
5. முடிந்தால்
மு.க.அழகிரிக்கு ஒரு ஆயிரத்தைக் கொடுத்து ( அட கோடிதான் பாஸ்) அதிமுக முதலமைச்சர் ஆக நிறுத்தி கருணாநிதியின் ஆதரவைப்
பெறலாம். அவர் படியவில்லையென்றால் மு.க.ஸ்டாலினை அதிமுக முதலமைச்சர் ஆக்கிவிட்டால்
எல்லாம் சரியாகி முடிந்து விடும்.
6. நடராஜன்
அவர்கள் பொங்கல் விழாவில் ஏற்கனவே தான் மாடு பிடித்த கதையைச் சொல்லியதால், தஞ்சாவூரில்
சிறப்பு ஜல்லிக்கட்டு ஒன்றை ஏற்பாடு செய்து
ஒத்த மாடோ இல்லை ஒரு தொத்த மாடையோ அடக்குவதற்கு ஏற்பாடு செய்து, மாவீரன் நடராஜனை
முதலமைச்சராக ஆக்கலாம்.
7. பேசாமல்
திமுகவுடன் அதிமுகவை இணைத்துவிட்டால், தீபா பன்னீர் இருவரையும் ஒரே சமயத்தில் கவிழ்த்து
விடலாம்.
8. கொடநாடு,
சிறுதாவூர், பையனுர் ஆகிய இடங்களை ஆக்ரமித்து அனுபவிக்கும் அனுபவத்தை வைத்து, ஆளுநர்
இருப்பிடமான ராஜ்பவனை ஆக்ரமித்து, சொந்தமாக்கி ஆளுநரின் பேரிலேயே எழுதிக் கொடுத்துவிடுகிறோம்
என்று சொல்லி முதலமைச்சர் ஆக அனுமதி வாங்கலாம்.
9. தேர்தல்
சமயத்தில் இருந்த டிரக்கில் பணத்தை நிரப்பி டெல்லிக்குச் சென்று சூப்ரீம் கோர்ட்டை
அதன் நீதிபதிகள் உள்பட விலை பேசலாம்.
Add caption |
10.
இதெல்லாம் ஒத்து வரவில்லையென்றால்,அருமையான
யோசனை ஒன்று. கட்சியைக் கலைத்து விட்டு தமிழ்நாட்டை தனியாகப்பிரித்து ,தமிழகத்தின்
பேரரசியாக முடிசூட்டிக் கொள்ளலாம். தனிநாடாகி விட்டால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு
செல்லாமல் போய் விடுமே. என்ன புனித ஜார்ஜ் கோட்டையின் டம்மி பீரங்கிகளைக் களைந்துவிட்டு
நிஜ பீரங்கிகளை நிறுவிவிட்டால் போதும். கமிஷனர் ஜார்ஜை படைத்தளபதியாக நியமித்தால் விசுவாசமாக
இருப்பார்.
11.
மூன்றாவது வரை மட்டுமே படித்திருக்கிறார்
என்பதனை மாற்றி ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்தை வாங்கிவிட்டால் முடிந்தது
பிரச்சனை டாக்டர் சசிகலா என்று மாற்றிக் கொள்ளலாம். ஏனென்றால் மறுபடியும் ஆரம்பப் பள்ளியிலிருந்து
ஆரம்பித்தால் நன்றாக இருக்காது.
12.
ஒற்றர் படைத்தலைவராக சுப்ரமணிய சுவாமியை
நியமித்து விடலாம். தா.
பாண்டியனை அரண்மனை பேச்சாளர் ஆக்கலாம்.
13.
அகழியை வெட்டி ஆழப்படுத்தி கூவத்தைவிட்டுவிட்டால்
ஒரு பயகிட்ட வருவானா?
14.
அந்தப்புரத்தை விரிவுபடுத்திவிட்டால் நடராஜன்
ஏன் கனடா பக்கம் போகப்போகிறார்?
15.
இளவரசி ஏற்கனவே இருப்பதால் வேறுயாருக்கும்
தனியாக இளவரசிப்பட்டம் சூட்டத் தேவையில்லை.
16.
சுதாகரனை இன்னும் கொஞ்சம் பின்னால் முடிவளர்க்கச்
செய்து பட்டத்து இளவரசனாக்கிவிடலாம்.
17.
வெளிநாட்டு பொறுப்புகளை நமது பிரதமரிடமே
கூடுதலாகக் கவனிக்கச் சொன்னால் அவர் உவகையுறுவார்.
18.
ஒத்துவரும் எம்.எல்.ஏக்களை அந்தந்த பகுதியின்
சிற்றரசர்களாக்கி விடலாம். தன் குடும்ப வாரிசுகளான திவாகரன், தினகரன் , பாஸ்கரன், வெங்கடேஷ்
ஆகியோரை, பல்லவ, சோழ, பாண்டிய, சேர மண்டலங்களின் மன்னர்களாக நியமித்துவிடலாம்.
19.
சிரிப்பதற்கு தடை: தமிழ்நாடு சசிநாடு என்று
மாற்றப்பட்டு உடனடியாக யாரும் யாரையும் பார்த்து சிரிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
யார்ட்ட? மீறி சிரித்தால் அவர்கள் தலைகள் கொய்யப்பட்டு கோட்டை வாசலில் தொங்கவிடப்படும்.
20.
விரைவில் முல்லைப் பெரியார் மற்றும் காவிரி
நீர்ப்பிரச்சனைக்கு கேரளா மற்றும் கர்நாடகா மீது படையெடுக்கப்படும், இலங்கையில் நடராஜன்
தலைமையில் தமிழீழம் அமைக்கப்படும் எனவும் தெரிகிறது.
அருமையான யோசனைகள்.
ReplyDeleteரமணி , நீங்க சீரியஸா எடுத்துக்க போறீங்க ?
Deleteஅப்படிப் போடுங்க...! ஹா... ஹா...
ReplyDeleteஎன்ன பண்றது நம்ம நாட்டோட நிலைமையை பார்த்து சிரிக்கிறதா அழறதான்னு தெரியலை.
Delete
ReplyDeleteஇதை ரத்தத்தின் ரத்தங்கள் வாசித்தால் நேர்பட பேசிவிடுவார்கள்!
ஓ அந்த ரிஸ்க் இருக்கிறதை நான் யோசிக்கவில்லையே சகோதரி .
Deleteஹஹஹஹ் 20 சூப்பர்....உங்க பதிவுகள் விட்டுப் போச்சு...
ReplyDeleteஇப்ப ஊட்டில கர்நாடகாவுக்கு நாங்க தண்ணி தரமாட்டோம்...எங்க ஊர்லருந்து தண்ணி வண்டிஞ்சு உங்க ஊரு அணைல வரது அப்புறம் மீண்டும் ஓடி ஹொக்கேனக்கல்ல கலந்து எங்க ஊருக்கு வரத நீங்க தடுப்பீங்களோ? ங்கொய்யாலே அப்ப நாங்க என்ன இளிச்ச வாயனுங்களானுட்டு ஊட்டில மோயர் ஆற்றில் தண்ணிய தடுத்து அணை போடனூம்னு சொல்றாங்களாம்னு ....எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை...
தமிழனுக்கு இன்னொரு பேர் இளித்தவாயன் என்பது.
Delete