சீனாவில் பரதேசி -5
இதன் முதல் நான்கு பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்
பகுதி 1
: http://paradesiatnewyork.blogspot.com/2016/02/blog-post_22.html
பகுதி 4: http://paradesiatnewyork.blogspot.com/2016/03/blog-post_14.html
Beijing Tourist Bus |
மிதுளா
வந்து என் அருகில் உட்கார்ந்தது எனக்கு திகைப்பாக
இருந்தது .
"என்ன என் பக்கத்தில்
உட்கார்ந்து விட்டாய்?
“உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று ஏன்
உட்காரக்கூடாதா?”
“இல்லை இல்லை,
உட்கார், உன் ஹஸ்பன்ட் தனியாக
உட்கார்ந்திருக்கிறாரே”,
“ஹஸ்பண்டா ?”,
என்று கேட்டுவிட்டு பகபக வென்று சிரித்தாள்.
"ஓ நீங்க
புதிதாக திருமணம் ஆகி ஹனிமூனுக்கு இங்கே வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்".
"ஹனிமூனா?"
மேலும் சிரிக்க சிரிக்க அவள் முகம் இரத்தச் சிவப்பாக மாறியது
வேடிக்கையாக இருந்தது.
"ஓ அப்ப
காதலர்களா?"
"நோநோ நோ,
இல்லவே இல்லை" என்று மறுத்துவிட்டு அவள் சொன்னாள்.
இருவரும் சார்ட்டர்டு
அக்கவுன்ட் முடித்து பெங்களூர் HCL-ல்
ஆடிட்டர்களாக வேலை பார்க்கிறார்கள். ஷங்காயில் ஒரு ஆண்டிறுதி கான்ஃபிரஸீக்காக
கம்பெனி சார்பாக போகிறார்கள். போகிற வழியில் பீஜிங்கில் ஓரிரு இடங்களைப்
பார்த்துவிட்டு, இங்கிருந்து புல்லட் டிரைனில் ஷங்காய்
போய்விட்டு அப்படியே அங்கிருந்தே பெங்களூர் போய்விடுவதாக பிளான். வேறு வேறு ரூமில்
தங்கியிருந்ததும் பின்னர்தான் தெரிந்தது.
அதன்பின் முழுவதும் என்கூடவே
இருந்தாள்.
பஸ் வந்து ஒரு இடத்தில் நின்றுவிட்டு, அங்கிருந்து எங்களைப் போகச் சொல்லிவிட்டு மதிய உணவுக்குள் கீழே வரும்படி
சொன்னார்கள்.மேலே பெரியதாக இருந்த நுழைவாயிலில் நுழைந்து, அங்கிருந்த கேபிள்
காரில் ஏறி மலையில் இருந்த ஒரு உயரமான இடத்திற்குச் சென்றவுடன் எதிரே பிரமாண்டமான, மதில் சுவர் அந்த மலை முழுவதும் வளைந்து வளைந்து சென்றது.
மேலே
ஏறுவதற்குள் அதனைப்பற்றி சில குறிப்புகள்.
Stone in the entrance |
சீனப்பெருஞ்சுவரைப் பற்றி சில
குறிப்புகள்.
1.
சீனப் பெருஞ்சுவர்
என்பது உலக அதிசயங்களுள் ஒன்று.
2.
இது கல்,
மணல், செங்கல் மற்றும் மரம் ஆகிய பொருட்களைக்
கொண்டு கோட்டைச்சுவர் போலக் கட்டப்பட்ட அமைப்பு.
3.
ஸ்டெப்பி
சமவெளியிலிருந்து தாக்க, கொள்ளையடிக்க வரும்
நடோடிகளைத் தடுப்பதற்காகவும், வெளிநாடுகளிலிருந்து வரும்
பொருட்களைத் தடுத்து சுங்க வரி விதிக்கவும் பயன்பட்டது. பெரும்பாலும் பாதுகாப்பு
நோக்கத்திற்காக கட்டப்பட்டது.
4.
கி.மு.7-ம் நூற்றாண்டு அதாவது கிட்டத்தட்ட 2700 ஆண்டுகளுக்கு
முன் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து கட்டப்பட்டு வந்தது.
5.
இபோதுள்ள
பெரும்பாலான சுவர் மிங் டைனாஸ்டியில் கட்டப்பட்டது.
6.
சுவர்களில்
ஆங்காங்கு கண்காணிப்புக் கோபுரங்கள் படை வீரர்கள் தங்குமிடம்,
படைக்கலங்கள் வைக்குமிடம் குதிரை லாயம் ஆகியவை இருக்கின்றன.
7.
சில்க் ரோட் என்று
சொல்லப்படும், உலகமெங்கிலும்
இருந்து சீனாவுக்குச் செல்லும் பாதையில் வரும் வணிகர்களை ஒழுங்குபடுத்தவும்,
வரிவசூல் செய்யவும் பயன்பட்டது.
8.
சீனாவின்
கிழக்கிலே உள்ள டான்டாங் (Dandong) என்ற
இடத்தில் ஆரம்பித்து மேற்கிலே உள்ள
லாப்லேக் (Loplake) என்ற மங்கோலியாவின் உள்ளே உள்ள
இடம் வரை பரவியுள்ள இந்தச் சுவர் 22,000 கிலோமீட்டர்
நீளமுள்ளது (அடேங்கப்பா). இதில் சுவர், சுரங்கப்பாதை,
மலைப்பாதை என்று எல்லாம் அடக்கம்.
நாங்கள் போன இந்தப் பகுதிக்கு
"முட்டியானியூ,
(Mutianyu) என்று பெயர். மேகமும் வழிவிட நீல விதானம் பளபளக்க மேலே ஏறிச்
சென்றோம். மொத்தம் 10 வாயில்கள் அதோ அந்த முகடுதான் 10ஆவது வாயில். மொத்தம் 4400 படிகள் மேலே சென்றது. கூட
வந்த மிதுளா உற்சாகமாக ஏறத்துவங்க, கூடவந்த
முகேஷ் தன் இளமையைக் காண்பிக்க ஓடத்துவங்க, நானும் அவளோடு ஈடு கொடுத்து ஏறினேன். "ஆர் யூ ஓகே ?" என்றாள்.
"ஐ ஆம் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட் ஹ எபட் யூ". என்றேன்.
With Mithula |
மூச்சு வாங்குவதை
மறைத்துக்கொண்டே, மூச்சு முழுவதுமாகப் போவதற்குள் முட்டியானியூ
சுவரைப் பற்றி சில குறிப்புகள்.
1.
முட்டியானியூ என்பது சீனப்பெருஞ்சுவரின் ஒரு பகுதி.
2.
பீஜிங்கிலிருந்து
சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இது ஹூவாய்ரோ (Huairar) வட்டாரத்தைச்
சார்ந்தது.
3.
நன்றாக பராமரிக்கப்பட்ட
சுவர்களில் இது தலையாயது. தலைநகரையும் பேரரசின்
சமாதிகளையும் காக்க அமைக்கப்பட்டது.
4.
சமாதிகளை ஏன்
பாதுகாக்க வேண்டுமென்றால், பேரரசர் அரசிகளை, அரச குடும்பத்தினரை புதைக்கும் போது
அவர்கள் பயன்படுத்திய விலையுயர்ந்த வைரம், தங்கம்,
வெள்ளி ஆபரணங்களையும் பொருட்களையும் அவர்களுடனேயே புதைக்கும் சீன வழக்கம் இருந்ததால்.
5.
முதன்முதலில் ஆறாவது நூற்றண்டின் இடையில் கட்டப்பட்ட இந்தச்
சுவர் மிங் டைனாஸ்டி காலத்தில் தளபதி ஷூ டா
(General Xu Da) அவர்களின்
மேற்பார்வையில் சூடாக கட்டி முடிக்கப்பட்டது.
6.
கிபி 1404ல்
முற்றிலும் செப்பனிடப்பட்டு, கிபி 1569
முழுவதுமாக புதிப்பிக்கப்பட்டது. அது தான் இன்று வரை நிலைத்திருக்கிறது.
7.
இந்தச் சுவர் முற்றிலும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டு 7 முதல்
8.5 மீட்டர்கள் உயரமும் 4-5 மீட்டர் அகலமும் கொண்டவை. இது மற்ற சுவர்களிலிருந்து முற்றிலும்
வித்தியாசம் கொண்டது.
8.
2250 மீட்டர் நீள
பாதையில் மொத்தம் 22 வாட்ச் டவர்கள்
இருக்கின்றன.
9.
பல தலைவர்கள்
இங்கு வந்திருக்கிறார்கள். 2014ல் ஒபாமாவின் மனைவி மிசெல் ஒபாமாவும் இரு மகள்களும் வந்தனராம்.
10.
முட்டியானியூ என்ற
பெயர் இதன் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தின் பெயரிலிருந்து வந்தது.
முட்டியானுவில் ஏறி ஏறி முட்டி
வலித்தது. அப்போது வழியில் கோவாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைப் பார்த்தோம். பங்களூர் ஆடிட்டர் பையன் முகேஷ் வெகு தூரத்திற்கு முன்னேறிச் சென்று விட நானும் மிதுளாவும் பின்னால்
நடந்தோம். குளிர் போய்
நன்றாக வேர்க்கத்துவங்கியது.
மிதுளாவும் பின் தங்கி விட , நான்
ஆண் என்பதைக் காண்பிக்க வேர்க்க விறுவிறுக்க
மேலும் கொஞ்சம் நடந்தேன். அப்போது வழியில் வந்த கோவாவைச்
சேர்ந்த அந்த இந்தியப் பெண், எங்கே உங்க மகனையும் காணேம் மருமகளையும் காணோம் ? என்று கேட்டாள் .
-தொடரும்.
//எங்கே உங்க மகனையும் காணேம் மருமகளையும் காணோம் ? // எதுக்கு பேரன் பேத்திகளை பத்தி விசாரிக்காம விட்டாங்க ?. ஐயோ.. ஐயோ.. முடியல!
ReplyDeleteநான் சொல்லனும்னு நெனைச்சேன் நீங்க சொல்லிடிங்க :)
Deleteஇந்த நண்பா யாருன்னு தெரியலையே ?
Deleteநானே தான் ஐயா...முதலில் நண்பர் பாஸ்கர் சொன்னது சரியாக பட்டது.. அதனால் அப்படி சொன்னேன்..
Deleteஉண்மையில் உங்கள பார்த்து அவங்க "இந்தா தம்பி ஏன் மம்மி டாடி விட்டு தனியா வந்த? "
ReplyDeleteஅப்படி தான் கேட்டு இருக்கணும்..!!! ஹும் அவங்களுக்கு கண்ணுல வேர்த்து இருக்கும் :)
என்ன இருந்தாலும் நண்பனுக்கு தெரிஞ்சது , வேற யாரோ ஒருவருக்கு எப்படி தெரியும் ?
Deleteபரவாயில்லை விடுங்க நண்பா, இதுவும் கடந்து போகும்.
அவங்களுக்கும் தெரிஞ்சு இருக்கும்.. இருந்தாலும் கண்ணுல வேர்த்துதுல சரியா தெரிஞ்சு இருக்காது..
Deleteஅவங்களுக்கு கண்ணுல வேர்த்துது, எனக்கு காதுல புகை வந்தது.
Deleteஆஹா, நல்லாத்தான் கேட்டிருக்காங்க!
ReplyDeleteஉங்களுக்கு அதில என்ன அவ்வளவு சந்தோஷம் கந்தசாமி ?
Deleteஹ்ம்ம் .... நானும் தான் கணக்கு பிள்ளை. நமக்கு இந்த மாதிரி யாரும் டிக்கட் கொடுத்து அனுப்பலையே...
ReplyDeleteஐயா எனக்கு யாரும் மண்டபத்தில இருந்து வந்து டிக்கட் வாங்கி தரல , நான் பாதி, மீதி என் பாரியாள் போட்டாள்.
DeleteInteresting.....
ReplyDeleteWhat would be the thickness of the Great Wall approx.?
7 முதல் 8.5 மீட்டர்கள் உயரமும் 4-5 மீட்டர் அகலமும் கொண்டவை.
Deleteகடைசியில் வந்த கேள்வி! :))) ஹாஹா!
ReplyDeleteஉங்களுக்கு என்னா அவ்வளவு சிரிப்பு ?
Delete