எழுபதுகளில்
இளையராஜா :பாட்டு 29
கண்மணியே
காதல் என்பது
இளையராஜா
இசையமைத்த “ஆறிலிருந்து அறுபது வரை” என்ற படத்தில் வரும் பாடல் இது. ரஜினிக்கு
அமைந்த படங்களிலேயே "ஆறிலிருந்து அறுபதுவரை" ஒரு வித்தியாசமான படம்
என்பது போல அவருக்கு அமைந்த சிறந்த டூயட் பாடல்களில் இதுவும் ஒன்று என்று
சொல்லலாம்.பாடலைக்கேட்போம்.
பாடலின்
சூழல்:
காதலனும்
காதலியும் பாடும் பாடல், காதலில் ஆரம்பித்து, கல்யாணம் வரை நீளும் பாடல் இது.
இசையமைப்பு:
Add caption |
ரயில்
பயணம் செய்யும்போது பாடுவது போல் அமைக்கப்பட்ட இந்தப் பாடலில் வாழ்க்கைப்பயணம்
ஆரம்பிப்பது போல் பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது. காதலில் ஆரம்பித்து,
கல்யாணம் பின் பஞ்சனை என்று பாடலும் பயணம் செய்கிறது. கேட்பவர்களும்
அதனுடன் பயணம் செய்யும் ஒரு சுகமான
அனுபவம் இந்தப்பாடல் மூலம் கிடைக்கிறது.
டிரம்சில்
பயணம் ஆரம்பிக்க, எக்கோ எஃபக்டுடன்
கிடார் லீட் ஒலிக்க வழக்கம்போல் வயலின் குழுமம் இசைக்க, பெண்குரலில்
"கண்மணியே காதல் என்பது" என்று ஒரு நீண்ட BGM வருகிறது.
ஆண்குரல் பெண்குரல் கோரஸ்கள் இணைக்கப்பட்டு முடியும்போது முதல் சரணம்,
"மேளம் முழங்கிட” என்று ஆரம்பிக்கிறது. முதல் சரணம் முழுவதும்
பாடும் குரல்களுக்கு மேலேயே கோரஸ்குரல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. 2-ஆவது BGM-ல் தவில், நாதஸ்வரம் முழங்க அநேகமாக
திருமணம் நடக்கிறது என்று நினைக்கிறேன். அதன்பின் முதலிரவு சீனாகத்தான்
இருக்கவேண்டும். 2-ஆவது சரணம் அதனை உறுதிப்படுத்த, ஒரு நல்ல இசைப் பயணம் அருமையாக முடிகிறது.
பாடலின்
வரிகள்:
கண்மணியே காதல் என்பது கற்பனையோ,
காவியமோ, கண் வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை
இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
,பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம்
ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில்
தோன்றிடும்
ஆசையில்
பாடிடும் எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன்
குலுங்க,
சிந்தும்
புன்னகை
நான் மயங்க
ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
பாலும் கசந்தது
பஞ்சனை
நொந்தது
காரணம் நீ அறிவாய் ,தேவையை
நான் அறிவேன்
நாளொரு வேகமும்
மோகமும் தாபமும்
வாலிபம் தந்த
சுகம் இளம் வயதினில் வந்த
சுகம்
தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்
Ilayaraja with Panchu Arunachalam |
பாடலை
எழுதியவர் பஞ்சு அருணாசலம் அவர்கள். பாடலின் மெட்டுக்கு அதிகமாக வார்த்தைகள்
தேவைப்படும் இந்தப்பாடலுக்கு பொருத்தமான வார்த்தைகளை கச்சிதமாக அமைந்திருகிறார்.
"காதல் என்பது கற்பனையோ, காவியமோ,
கண் வரைந்த ஓவியமோ", என்பதில் அவரின்
கவித்துவம் வெளிப்படுகிறது. ஆயிரம் காலம் என்பது அவர் அடிக்கடி பயன்படுத்தும்
வார்த்தைதான்.மற்ற வரிகளும் ஆங்காங்கே அமைதியாக அமர்கிறது.
பாடலின்
குரல்கள்:
Ilayaraja with Janaki and SPB |
SPB,
ஜானகி பாடிய இன்னுமொரு மறக்க முடியாத டூயட் பாடலிது. இந்தப்பாடலைப்
பாடுவதற்கு நிறைய மூச்சு வேண்டும். இவ்விருவருக்கும்தான் அந்தப்பிரச்சனையே
இல்லையே. அதோடு இந்தப்பாடலில் வரும் ஆண், பெண் கோரஸ்கள், ஹம்மிங்குகள்
இவர்கள் குரலுக்கு மெருகூட்டுகின்றன. மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் காதலன்
காதலிபாடும் அந்த மூடை மெட்டும் இவர்களின்
குரலும் நன்றாகவே வெளிப்படுத்துகின்றன.
இந்தப்
பாடலின் வரிகள் போல, ஆயிரம் படங்கள் கண்ட இளையராஜாவின் இசையும் ஆயிரம் காலமும் வாழ்ந்திருக்கும்
என்பதில் சந்தேகமில்லை.
-
அடுத்த மாதம் இன்னுமொரு பாடலின் மூலம் சந்திக்கும் வரை விடைபெறுவது
பரதேசி அட் நியூயார்க்.
-தொடரும்.
ரசனையான பாடல்...
ReplyDeleteமிகச்சரி திண்டுக்கல்லார் அவர்களே
Deleteஎனக்கும் பிடித்த பாடல்...
ReplyDeleteநம் எல்லோருக்கும் ஒரே ரசனைதானே இருக்கமுடியும் வெங்கட்
Deleteஅருமை நண்பரே..
ReplyDeleteமிகவும் நன்றி நண்பா
Deleteராம் லட்சுமணன் படத்தின் விழியில் உன் விழியில் ஓர் பூ பூத்ததோ பாடலைப் பற்றி எழுதுங்கள். கேட்க அம்சமாக இருக்கும்.
ReplyDeleteஏனோ இந்தப் பாடல் சற்று இழுவையாக போரடிக்கும்.
எனக்குப்பிடித்த பாடல் உங்களுக்கு பிடிக்காமல் போனது வருத்தம்தான் .ஆனால் நீங்கள் சொல்லிய பாடல் எனக்குப்பிடித்த பாடல் தான். ஆனால் அந்தப்பாடல் எண்பதுகளில் வெளிவந்த பாடல் என்பதால் இந்தப்பகுதியில் இடம் பெற வாய்ப்பில்லை காரிகன்.
Deleteஅந்த படங்களில் தெரியும் ..இளமையை பாருங்கள்..
ReplyDeleteஅற்புதமாயில்லை?
ஓஹோ நீங்கள் ரஜினியைப்பற்றி சொல்கிறீர்களா செல்வா?
Deleteஎனக்குப் பல்வேறு நினைவலைகளை மீண்டும் கொண்டு வரும் ஒரு பாடல்! நன்றி ஐயா!
ReplyDelete